(Reading time: 9 - 17 minutes)

 

ன்ன சார் சொல்லுறீங்க ஆருவோட அப்பா அம்மா இவ கூட இலையா இப்ப இந்த நிலைமையில இவ கூட யாரவது இருக்கணுமே சார் சரி நான் பாத்துக்கிறன்”. என்றவன் அவளை தூக்கிக் கொண்டு தனது காரில் ஏறினான் அவளை பின்னிருக்கையில் படுத்தி விட்டு மெதுவாக காரை தனது வீட்டை நோக்கி செலுத்தினான்.

வன் தனது வீட்டை அடைந்திருந்தான் காவலாளிகள் வந்து கதவை திறந்து விட்டனர். அந்த பங்களா ஒரு குட்டி அரண்மனை என்றே சொல்லலாம் மிகப் பெரிய பூந்தோட்டம் சிறு செந்தாமரைத் தடாகத்தோடு காணப்பட்டது. கார் போர்ட்டிக்கோவில் வந்து நின்றது.. அவளை கையில் ஏந்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் முராரி கிருஷ்ணன். அவளை தனதறைக்குள் தூக்கி சென்று கட்டிலில் படுத்தினான்.

அலுமேழுப் பாட்டி எனக்கு ஒரு கப் பால் கொஞ்சம் சூடு கம்மியா எடுத்துட்டு வாங்கா.”

“சரிப்பா ஆமா அந்த பொண்ணு.......”

“அவ..... நீங்க பால் எடுத்திட்டு சீக்கிரம் வாங்க”

“சரிப்பா”.

அவளுக்கு இளம் சூட்டில் மெதுவாக பாலைப் புகட்டினான். பின்னர் அவள் தலையை தன் மடியில் ஏந்தி மெதுவாக தலையை தடவிக் கொடுத்தான்.  

சிறிது நேரத்தில் அவனது பெயரை முனகினாள் அவள் “க்ரிஸ்...... “

“என்னம்மா..... என்னடா வேணும் ஆரும்மா.......”

“க்....ரி.....ஸ்.... எ... எப்பிடி க்ரிஷ் அ....அப்பிடி ஒரு வார்த்தையை என்னைப் பார்த்து கேட்க முடிஞ்சுது நான் நான் அப்பிடி பட்டவளா க்ரிஸ். என்னோட அம்.... அவள் அரை மயக்கத்தி புலம்பினால் யாதவ் யாத...”அவனால் அவளது வேதனையை தாங்க முடியவில்லை

அவளை அள்ளி அனைத்துக் கொண்டான். “உஷ்.... ஒன்னுமில்லடா ஒண்ணுமில்ல நீ படுத்துக்கோ இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லாம் சரியாகிடும் என்னோட செல்லம் இல்ல பேசாமல் தூங்குடா” அவனது பேச்சுக்கு கட்டுப் பட்டு துயின்று போனாள் அவள்.

அவள் தலையை மென்மையாக வருடிக் கொடுத்தவாறே இருந்தான் மனேஜருக்கு எப்பிடி இவ வாமினியோட தங்கி இருக்கிறது தெரியும். உடனே மனேஜரை தொடர்பு கொண்டான். அவரிடம் அவளது பெற்றோருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று அவர்களின் தொலை பேசி இலக்கத்தை கேட்டான். அவரிடம் இருந்து தனக்கு தேவையான தகவல் கிடைக்கிறதா என்று அறிய முற்பட்டான்.

“இல்ல தம்பி எனக்கு அவங்களோட போன் நம்பர் எல்லாம் தெரியாதப்பா ஜோதிராமநோடதும் அவ மகள் வாமிநிஜோடதும் தான் இருக்கு.”

“அது எப்பிடி சார் வேலைக்கு சேரும் போது அவங்களோட முழுத் தகவலையும் சேகரிச்சிட்டு தானே சேர்ப்பீங்க. அப்போ அவங்க வீட்டு அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் வாங்கிருப்பீங்க தானே எப்பிடி இவளோட தோழியிநோடதும் அவங்க அப்பாவோடதும் விலாசத்தை வச்சிக்கிட்டு இவளை வேலையில சேர்த்திக்கிட்டீங்க? இவ எப்பிடி பட்டவ என்று தெரியாமல்”

இதனை சொல்லும் பொது அவனுள் வலித்தது அனால் வேறு என்ன செய்ய முடியும் அவரிடம் இருந்து தகவல் அறிய வேண்டும்!

“ஒரு நாலு நாலரை வருஷம் முன்பு வாமிநியோட அப்பா  ஆரபிக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்து தர முடியுமான்னு கேட்டார். அவன் என்னோட தூரத்து உறவு. இவளும் தனக்கு மகள் மாதிரி தான் இவ என்னோட பொறுப்பு நீங்க பயப்பட தேவை இல்ல ரொம்ப நல்ல பொண்ணு, என்று சொல்லிஏதாவது உதவி பண்ண சொல்லி கேட்டான். இந்த பொன்னை பாத்ததும் நல்ல பொண்ணு என்று தெரிஞ்சு போச்சு தம்பி உடனே உங்க அப்பாகிட்ட சொல்லி வேலைக்கு சேத்திட்டன். இவளும் இப்ப மட்டும் ஒரு குறை சொல்ல முடியாத அளவுக்கு வேலை பாக்கிறா” என்றார். தனக்கு தெரிந்த விபரங்களை கூறிவிட்டு வாமினியின் போண் நம்பரை கொடுத்து விட்டு தொடர்பை துண்டித்தார்.

வன் யோசனையோடு வாமினியின் நம்பரை டயல் செய்தான் அவனது தொலைபேசி அழகாய் சினுக்கியது.

ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே

வண்ண மாலைகள் சூட வந்தால்

தங்க தேரிலே..... அவன் ஒரு முறை ஆருவை பார்த்து விட்டு போனை தனது காதுக்கு பொருத்தினான்.

“அம்மா.... எப்பிடிம்மா இருக்கீங்க? அப்பா எப்பிடி இருக்கார் கண்டி வெதர் அவருக்கு செட் ஆகிடிச்சா?”

“.....................”

“இல்லம்மா நன் வீட்டில தான் இருக்கன்”

“..................”

“எனக்கொன்றும் இல்லம்மா ஐம் ஓகே என்னோட .....” தாயிடம் இப்போதைக்கு ஆருவைப்பத்தி சொல்ல மனமின்றி அவசர வேலை இருப்பதாக சொல்லி தொடர்பை துண்டித்தான்.(அவங்கப்பா வீட்டிலையும் வேலையிலையும் அவனுக்கு ஒரு ஸ்பை வச்சிருக்கிற விஷயம் தம்பிக்கு தெரியாதில்ல. நீங்க நினைப்பது சரிங்க ஒன்னு வேலைக்கார அலுமேலுபாட்டி மத்தது மனேஜர் சார்)

ன்னம்மா சிவா உன் பிள்ளை ஆரபியை வீட்க்கு கூட்டி வந்ததை பத்தி ஏதாவது  சொன்னானா?”

“இல்லங்க..... அத பத்திப்பேசாம போனை வச்சிட்டாங்க ஆனா ஏதோ சொல்ல வந்தான். “

“ம்... அவன் சொல்ல மாட்டாண்டி பாப்போம் இன்னும் எத்த காலம் அவரு நம்ம கிட்ட தன்னோட காதலை மறைக்க போறாரு என்று கூடிய சீக்கிரம் குட்டு உடைபடும் நீ பொறுத்திருந்து பாரு. நம்ம மருமகள் சீக்கிரம் நம்ப வீட்டுக்கு வந்திடுவா போ “

“சரிங்க இனியாவது அவனுக்கு ஒரு நல்லது நடா நக்கு சந்தோசம் தாங்க நீங்க மருந்து எடுத்துகிட்டீங்களா?”

“இந்தாங்க முதல்ல மாத்திரையை போடுங்க.” என்று அவரது மருந்து வகைகளை எடுத்துக் கொடுத்து விட்டு –கிச்சினுக்குள் நுழைந்தார் சிவா என்கிற சிவகாமி.

“ஹலோ”

“மினி நான் க்ரிஸ் பேசுறேன்.”

தொடரும்!

Episode # 02

Episode # 04

{kunena_discuss:755}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.