(Reading time: 16 - 31 minutes)

 

தே நாள் சென்னையில்,

அந்த அடுக்குமாடியில், இரண்டாம் தளத்தில் தன் தாயிடம் அடம் பிடித்து கொண்டிருந்தான் ஷாந்தனு

" ஷாந்தனு  கீழ போகலாம் வா "

" நோ மம்மி ... அழகு வரட்டும் .. அவன் வந்து சாக்லட் தந்தாதான் ஸ்கூல் போவேன் "

" பெரியவங்களை அவன் இவன்னு சொல்ல கூடாது ராஜா .. அம்மா செல்லம்ல .. இப்போ நீ சமத்தா போனா ஸ்கூல் முடிஞ்சு வரும்போது அம்மா நிறைய சாக்லேட் தரேன் " என்று கெஞ்சினாள் வர்ஷினி ..

" இல்ல நீ பொய் சொல்ற .. "

" யாரு பொய் சொல்றாங்க பிரின்ஸ் ?? " என்று சிரித்துக்கொண்டே வந்தான், நம் ஷாந்தனு  " அழகு " என்ற அழைத்த மதியழகன் ..

" ஹை அழகு " என்று குதித்தவன் ஓடி வந்து மதியழகனின் கழுத்தை கட்டி கொண்டான் ...

" என்ன பெரிய மனுஷா , பொய் கிய் நு பேசிகிட்டு இருந்திங்க ? "

" நீ எங்க போன? சாக்லேட் கொடு"

" என்ன பழக்கம் இது ஷாந்தனு  ??? " என்று கடிந்து கொண்ட வர்ஷினியை  பார்த்து புன்னகைத்தான் மதியழகன் ..

" கம் ஆன் அக்கா .. இதுல என்ன இருக்கு .. பசங்களை அவங்க போக்கில் விடுங்க .. அவன் வளர வளர யாருக்கு என்ன மரியாதை தரனும் , எதை எப்போ செய்யணும்னு அவனுக்கே தெரியும்.. பசங்களின் வளர்ச்சி தெளிந்த நீரோடை மாதிரி ... அதை சுதந்திரமா விடாம இப்படி குடத்தில் அடக்கி வைக்க கூடாது .. என்ன நான் சொல்றது ? " என்று சிரித்தபடி ஷாந்தனுவிடம்  ஹை 5 கொடுத்தான் மதியழகன் ..

" ஹ்ம்ம் அட்வைஸ் அழகன்னு சொல்றது சரியாகத்தான் இருக்கு போங்க "

" ஹா ஹா நீங்க மட்டும் தான் சொல்லல. நீங்களும் சொல்லியாச்சா ? எல்லாம் என்  நேரம் ,,,சரி என்ன சொல்லுறாங்க என் வைப் ?? "

" ஹ்ம்ம் புதுசா ஒன்னும் இல்ல.. நேத்து ஒரு பக்கோடா செஞ்சு எடுத்து வந்தாங்க பாருங்க செம்ம ருசி ... "

" நான் இல்லனாதான் மேடம் ருசியா சமைக்கிறா .. நான் வந்த கழனி தண்ணிய எடுத்து ஊத்துறா , கேட்டா அப்போதான் நல்ல சமையலுக்காக நான் கல்யாணம் பண்ணிப்பேனாம்.... ஓவரா இல்ல... கல்யாணம் பண்றது ஒரு பெண்ணை வேலைக்காரியா நடத்துறதுக்குதானா என்ன ? "

" ஓஹோ அப்போ உங்க வருங்கால மனைவியை கிச்சன் பக்கம் விடமாட்டிங்களா ? "

" அவளுக்கு பிடிச்சா விடுவேன்.. இல்லேனா நோ .. அதுக்க்காகத்தன் நானே சமையல் கத்துக்குறேன் "

" ஹ்ம்ம் கொடுத்து வெச்ச பொண்ணு "

" சத்தமா சொல்லாதிங்க மஞ்சு காதுல விழுந்துட போகுது .."

" அட போங்க பாஸ் .. பாட்டியை போயி பொண்டாட்டி  ரேஞ்சுக்கு கொஞ்சுறிங்க? நம்ம அபார்ட்மண்ட் ல உள்ள பலபேரு உங்களுக்கு கல்யாணம் ஆச்சுன்னு நெனைச்சிருகாங்க"

" இப்போ நான் ஸ்கூலுக்கு போகவா வேணாமா? " என்று இடுப்பில் கை வைத்து முறைத்தான் ஷாந்தனு ..

" அச்சோ ஷாந்து செல்லத்துக்கு கோபமா ? வரகூடதே ! சரி இரு அழகு உன்னை ஸ்கூலுக்கு கூட்டிடு போறேன் வா "

" அச்சோ வேணாம் அழகன் .. நீங்களே இப்போதானே வந்திங்க ? ஸ்கூல் பஸ் வந்திடும் .. "

" அட இங்க இருக்கு ஸ்கூலு, அதுக்கு நாங்க டிராப் பண்ண மாட்டோமா ? மாமா ஆபீஸ் கு போகணும்ல .. நீங்க அவரை பாருங்க அக்கா"

" .. "

" என்ன அக்கா ? "

" இல்ல நாங்க இங்க குடி வந்தே 3 மாசம் கூட ஆகலை ஆனா அதுக்குள்ள எப்படி இவ்வளவு பாசமா இருக்கீங்க ? "

" ஓ மை டியர் ச்வீட் சிஸ்டர் .. என்ன பீலிங் ஆ .. இது பாருங்க அக்கா .. இந்த உலகத்துல எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்காமல் தனிதனியா வாழம்னு நினைச்சிருந்தா கடவுள் நம்மளை வேற வேற  கிரகத்துல  படைச்சிருப்பரே.. இப்படி ஒண்ணா படைச்சிருப்பரா ? நிரந்தரமில்லாத வாழ்க்கை அக்கா இது . இதில் அன்பை கொடுக்கவும் , வாங்கவும் எதுக்கு யோசிக்கணும் "

" இப்படி பேசி பேசியே ஆர் ஜே ஆகிட்டிங்களா தம்பி ? "

" வாவ் .. பாருடா .. நீங்க கூட இப்படிலாம் பேசுவிங்களா ? அப்போ எங்க ரேடியோ ஸ்டேஷன் ல ஆளு வேணும்னா உங்களை ரெக்கமண்ட் பண்றேன் .. இப்போ ஷாந்தனு குட்டி கூட ஸ்கூலுக்கு போறேன் ....டாட்டா "

இதுதான் மதியழகன் ,.... பெயருக்கு ஏற்ற தோற்றம் அதை விட அதிகமான அறிவு .. சமூக சிந்தனை அதிகம் அதே நேரம் மிக இயல்பானவன் .. நம்ம தேன்நிலாவின் கரம் பிடித்து வருங்காலத்தில் தேன்நிலவு போகப்போவதும் நம்ம மதியழகன்தான் !

ஷக்தி - மித்ரா போன் என்ன பேசுனாங்க ? வைஷ்ணவி எப்படி ஷக்தி துபாய் போறதுக்கு காரணமானாள் ? நம்ம நிலவும் மதியும் எப்படி இணையும் ? அதை தொடர்ந்து வரும் எபிசொட் பார்ப்போம் நன்றி ​_/\​_

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:777}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.