(Reading time: 16 - 31 minutes)

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 02 - புவனேஸ்வரி கலைச்செல்வி

ஹாஸ்பிட்டலில் இருந்த சங்கமித்ராவின் எண்ண அலைகள் ஷக்தி எனும் கரையை தொட்டு விளையாடி கொண்டிருந்தன .. இந்த இரண்டு வருடங்கள் வாழ்க்கை எவ்வளவு மாறிவிட்டது ? என்று எண்ணி வியந்தாள் மித்ரா .. மீண்டும் அந்த நாட்கள் வாழத்தான் முடியாது எனினும் அசைப்போட்டுத்தான் பார்ப்போமே .. காசா பணமா ? என தனக்குள்ளேயே கேள்வி எழுப்பியவள் அன்றைய நினைவுகளில் மூழ்கினாள்....

ஷக்தி- சங்கமித்ராவின் காதல் கதை இனிதே இங்கு தொடங்குகின்றது ...

துபாய் ....

Ithanai naalai engirunthai

ரபரப்பான அந்த அபு டாபி நகரத்தில் அனைவரும் தத்தம் வேலையில் மூழ்கி  இருந்தனர் ... வெள்ளிகிழமை என்பதால் பலரும் தங்களது இறை  தொழுகைக்கும் தயாராயினர் .. இப்படி நிற்கவும் நேரமில்லாமல் அதிவேகமாய் இயங்கி கொண்டிருந்த நகரத்தில் அந்த ஹாஸ்டலில் தனதறையில் கண் மூடி படுத்திருந்தான் ஷக்தி ... வாரத்தில் ஆறு நாட்களுமே காலில் சக்கரம் கட்டியது போல வேலை செய்பவனுக்கு வெள்ளிகிழமை ஒருநாள்தான் ஓய்வு .. சில நேரம் சனிக்கிழமையும் விடுமுறை தந்தாலும் அவனை ஆபீசிற்கு வரவழைத்து வேலை வாங்குவது உண்டு .. ஆனால் அதற்கு துவண்டு போகாதவன் நம் ஷக்தி ..  சொந்த தேசத்தை விட்டு இங்கு வந்ததே வேலைக்காகத்தானே? அப்படி இருக்கையில் தேடி வரும் வேலையை ஏன் தட்டி கழிக்கவேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ள கடும் உழைப்பாளி அவன் ...

எப்பொழுதும் விரைவாக எழுந்துவிடுவதே பழக்கமனதாலோ என்னவோ விடுமுறை என்றாலும் 7 மணிக்கு மேல் அவனால் உறங்க முடியவில்லை .,. இருந்தாலும் இப்பொழுதே எழுந்து என்ன செய்ய போகிறோம் என்று எண்ணியவன் கண் மூடி படுத்திருந்தான் ..

கண்மூடி படுத்திருந்தாலும்  அவனின் எண்ணவோட்டங்கள் பின்னோக்கி  சிவகங்கைக்கு சென்றன .. நான்கு  வருடங்களுக்கு முன்பு அவன் இப்படி உறங்கி கொண்டிருந்தால் அவன் வீட்டில் என்ன நடக்கும் தெரியுமா ? வாங்க பார்ப்போம்...

சிவகங்கை ...

காலை மணி 7 என்பதை அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிவிப்பதற்கு  கடிகாரமோ, அலாராமோ, கைப்பேசியோ, கொக்கரக்கோ என்று கூவ சேவலோ கூட அவசியமே இல்லை .. ஷக்தியின் தாயார் திவ்யலக்ஷ்மி தன் இனிய குரலால் பாடும்  கந்த ஷஷ்டி கவசம் தான்  அனைவருக்கும் அலாரம்..

காலைகடன்களை முடித்துவிட்டு வீடு முழுக்க சாம்பிராணி புகையை போட்டு கொண்டு இருந்தவர், ஓர கண்ணால் தன் மகளை பார்த்து ரகசியமாய் புன்னகைத்து கொண்டார் .. " அப்படி என்னதான் அண்ணன் மேல பாசமோ தெரியல " என்ற மனதிற்குள் சொன்னவர் வேண்டுமென்றே அவளின் எதிரில் வந்து நின்றார்.... என்னதான் புத்தகத்தில் கவனம் இருந்தாலும் தன் தாயை கவனிக்க தவறமாட்டாள் நம் சக்தியின் தங்கை முகில்மதி . காலையில் எழுந்ததுமே காலை கடன்களை முடித்து விட்டு மங்களகரமான தோற்றத்துடன்  கந்த சஷ்டி கவசம் பாடி, இறைவழிப்பாட்டுக்கு பின் அனைவருக்கும் காபி போட்டு அவர்களை தயார் படுத்தி, காலை உணவு சமைக்கும் தாயின் சுறுசுறுப்பையும் புன்னகை மாறாத முகத்தையும் பார்த்து அவள் வியக்காத நாள் இல்லை ...

நம்ம முகில்மதி மட்டும் என்ன சும்மாவா ? பொதுவாகவே " அம்மா இன்னும் அஞ்சு நிமிஷம் தூங்கிக்கிறேனே " என்று அம்மாவிடம் பேரம் பேசி அதிகாலை குட்டி தூக்கம் போடும் பருவத்தில் தன் தாயாருக்கு அந்த கஷ்டமே தராமல் தானாகவே எழுந்து, காலையிலேயே படிக்க ஆரம்பித்துவிடும் முகில்மதியை பார்த்து திவ்யலக்ஷ்மியும் வியக்காத நாள் இல்லை .. அதை விட அதிசயமான விஷயம் அவள், ஷக்தி மீது காட்டும் பாசம்தான் .. இயல்பாகவே குறைவாக பேசும் ஷக்தி முகில்மதியிடம் மட்டும் விதிவிலக்கு காட்டவில்லை. எனினும் அவன் தன் மீது வைத்திக்கும் அளவு கடந்த அன்பை அவளால் உணர முடியும் .. இது வரை ஷக்தி அவளை திட்டியதில்லை, திட்ட விட்டதும் இல்லை .. அவளின் தேவையை கேட்காமலே செய்து தரும் அண்ணன் மீது அலாதி ப்ரியம் அவளுக்கு ...

சக்தியின் உறக்கம் களைந்து போக கூடாது என்பதில் அவனுக்கு கவலை இருக்கிறதோ இல்லையோ  அவளுக்குத்தான் அதிகம் அதில் கவலை ..அதனாலேயே பள்ளி பேருந்து வரும்வரை அவனின் அறை வாசலிலே அமர்ந்து படித்து தன் தமையனின் உறக்கத்திற்கும் காவல் இருப்பாள் முகில்மதி .. அன்றும் அப்படித்தான் தன் தாயார்  எதிரில் நிற்பதை வைத்தே அவரின் நோக்கத்தை உணர்ந்து கொண்டவள் பொறுமையாய் நிமிர்ந்து புருவம் உயர்த்தினாள்....

" என்ன ? "

" நகருடி !"

" முடியாது போங்கம்மா .. "

" ஹே நகருடி சாம்பிராணி புகை காட்டனும் "

" அதை தினமும் தானே காட்டுறிங்க ? நாளைக்கு பார்த்துக்கலாம் .. நீங்க பக்கத்து ரூமில் தூங்குதே அந்த கழுதையை எழுப்புங்க " என்றாள்.

" எந்த கழுதை மதி ? " என்று அங்கே வந்தார் அவளின் தந்தை லக்ஷ்மிநாராயணன்....

" குட் மோர்னிங் அப்பா "

" குட் மோர்னிங் மதி செல்லம்"

" செல்லமாம் செல்லம் .. உங்க பொண்ணு பண்ணுற வேலையை பாருங்க .. என்னை உள்ள போக விட மாட்டுறா ?" என்று புகார் தந்தார் திவ்யலக்ஷ்மி ..

" மதியை பத்திதான் உனக்கு தெரியுமே லக்ஸ்.... உன் பையன் எழுந்திரிக்காமல் நீ அந்த ரூமுக்கு போக முடியாது ...விடு நாளைக்கு பார்த்துக்கலாம் "

" நேத்தும் உங்க பொண்ணும் நீங்களும் இதேதான் சொன்னிங்க ! "

" அப்படியா மதி குட்டி ? எனக்கொன்னும் ஞாபகமில்லையே "

" எனக்கும் தான்பா " என்று ஒத்துபாடினாள் முகில்மதி ..

" அப்பாவும் பொண்ணும் கூட்டு சேர்ந்தாச்சா ? அவதான் ப்ளஸ் 2 படிக்கிற சின்ன பொண்ணு .. நீங்களும் அவ கூட சேர்ந்து லூட்டி அடிக்கிறிங்களே? "

" அதில் உனகென்னமா பொறாமை ? போ போ அந்த கழுதையை எழுப்பு .. இன்னொரு விஷயம் தப்பி தவறி  கூட அவன் ரூமில் இருக்கும் சாம்பிராணி புகை ஷக்தி அண்ணா ரூமுக்கு போக கூடாது .. அப்பறம் அண்ணா எழுதுருச்சுரும் ... "

" ச்ச்சி போடி அண்ணன் பைத்தியம் " என்று அலுத்துக்கொண்டு சென்றாலும் மனதளவில் தன் மகளின் பாசத்தை எண்ணி பூரித்து கொண்டார் திவ்யலக்ஷ்மி .. ஒரு புன்னகையுடன் அடுத்த அறைக்கு சென்றவர், முகில்மதி சொன்ன அந்த " கழுதையை " எழுப்பினார் ..

" கதிர் ....கதிர் .... "

" எழுந்துட்டேன் மம்மி ... நீங்க போங்க "

" அடி விழும் .. ஜாடையா என்னை அனுப்பி வெச்சிட்டு மறுபடியும் தூங்கலாம் பார்க்குறியா ? படவா ...எழுந்திரு டா "

" ம்ம்ம் " என்று முனகிக்கொண்டே எழுந்த கதிரேசன், ஷக்தியை விட ஒரு வயது இளையவன், முகில்மதியின் நண்பனுக்கு இணையானவன் .. சோம்பல் முறித்தவன், தன் தாயை பார்த்து " குட் மோர்னிங் அம்மா "  என்று சலுட் அடித்தான் ..

" அம்மா "

" என்னடா ? "

" அந்த சாம்பிராணியை அங்க வெச்சிட்டு இங்க வாயேன்"

" எதுக்கு "

" வாம்மா "

" வேலை இருக்குது  டா கண்ணா "

" நீ இப்படி கேள்வி கேட்குற நேரம் வந்துட்டு போய்டலாம் அம்மா "

" சரி சொல்லு "

" இங்க உட்காரேன் "

" ஷாபா..உட்கார்ந்தாச்சு இப்போ சொல்லு "

" ...."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.