(Reading time: 30 - 60 minutes)

வேலை வேலை என்று எல்லோரும் ஓடிக்கொண்டிருந்த போது, ஓரு சிறு மாறுதலுக்காக அனைவரும் அன்று கடற்கரைக்கு செல்ல முடிவெடுத்தனர்… வந்தும் 6 நாட்கள் மேலாகிவிட்டது… வார கடைசியும் ஆனதால், கண்டிப்பாக இன்று வெளியே சென்றாக வேண்டும் என்று கிளம்பிய போது ஆதர்ஷ் கண்டிப்பாக வர வேண்டும் என்று ஃபாரீனர்ஸ் கூறி விட, வேறு வழியில்லாமல் அவன் கிளம்ப முனைந்த போது, முகிலனின் சார்பாகவும் ஒருவர் வந்தால் நன்றாக இருக்கும் என்று செல்வம் சொன்ன போது முகிலன் சற்றும் தயங்காமல் பத்மினியை அனுப்பி வைத்தான்… அவளுக்கு தான் அந்த ப்ரோகிராமிங்க் லேங்குவேஜ் சரளமாக வரும்… அத்தோடு இப்போது அவர்கள் அந்த லேங்குவேஜில் தான் அடுத்தகட்ட ப்ராஜெக்ட் வேலையை துவங்க வேண்டும் சென்னை சென்று…

ஆதியிடம், வேலையை முடித்தவுடன் அவள் தனியே வீட்டிற்கு சென்று கொள்கிறேன் என்று கூறினாலும் நீ காதில் போட்டு கொள்ளாமல் அவளை வீட்டிற்கு அழைத்து வந்து விடு மச்சான்… உன்னிடம் வேறு அதிகம் பேசியதில்லை… ஒரு தடவை தான் இதற்கு முன் சென்னையில் சந்தித்திருக்கிறீர்கள்… இங்கு வந்திருந்த போதும், ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொண்டதில்லை… அதனால் லேட் ஆனாலும் அவளையும் அழைத்து வா… சரியா… பார்த்துக்கொள் மச்சான்…. உன் தங்கையின் தோழி வேறு… ஹ்ம்ம்.. வரேண்டா… என்று சென்றுவிட்டான் முகிலன்…

முகிலனின் வார்த்தைகள் ஆதிக்கு சிரிப்பையும் யோசனையையும் கொடுத்தது…

மயூரியோ, சாகரியிடம், ஆதி அண்ணா நல்லவர் பத்மினி, நீ அவருடனே வீட்டிற்கு வந்துவிடு, வேலை சீக்கிரம் முடிந்தால் கடற்கரைக்கு வந்துவிடுங்கள் சரியா என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்…

சாகரிக்கு மயிலின் வார்த்தைகள் இதத்தை கொடுத்தது…

ஆதியின் அலுவலக அறையில், சாகரி, மற்றும் இரண்டு வெளிநாட்டு நண்பர்களும் இருந்தனர்… அதில் ஒருவர் ஆண்… ஒருவர் பெண்…

அவர்கள் கேட்டபடி, ஆதி வேலையை ஆரம்பிக்க, சாகரி அவனுக்கு உதவினாள்…

நொடிப்பொழுதில் அவர்களுக்கு அவன் பதில் அளிக்கும் விதமும், அவர்களிடம் உரையாடிக்கொண்டே அவன் கணிணியில் வேலை செய்யும் விதமும் அவளை ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தது…

நாடு நாடாக பறந்து கொண்டிருக்கும் தன்னவனுக்கு நிற்க கூட நேரம் இல்லையென்ற உண்மை அவளுக்கு உரைத்தது அப்போது… தனக்காகவே தன்னைப் பார்க்கவே சென்னையில், கோவிலில் நேரம் கழிக்கின்றான் என்ற நிதர்சனம் அவளுக்கு புரிந்தது அன்று…

இவ்வளவு தூரம் தனக்காக நேரம் ஒதுக்கும் தன்னவனுக்கு நான் என்ன செய்தேன்… ????... ஒன்றுமே இல்லையே… என் மேல் அவ்வளவு காதலா ராம் உங்களுக்கு…. பல கோடி வருமானம் தரும் தொழிலை எல்லாம் எனக்காக ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடன் செலவழிக்கின்றீர்களா உங்களின் பொன்னான நேரத்தை…

கண்களில் தேங்கி வழியும் காதலுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் சாகரி… எதேச்சையாக திரும்பியவனின் பார்வை அவளை மொய்க்க, அவளோ கண்ணீர்த்துளிகளை அவனிடத்தில் மறைக்க முயன்று தோற்றாள்…

சரி ஆதர்ஷ்… கிட்டதட்ட முடித்துவிட்டோம்… மீதியை நாளைக்குப் பார்த்துக்கலாம்… என்று விடைப்பெற்றனர் வெளிநாட்டு நண்பர்கள் இருவரும்…

கிடைத்த தனிமையில் ஆதர்ஷ் அவளிடம் பேச முயற்சிக்க, அவளோ சட்டென்று அறையை விட்டு வெளியேறினாள்…

என்னாயிற்று என்னவளுக்கு??.. அப்போதோ அவளின் கண்களில் நீர்… இப்போதோ மௌனத்திரை… ஏன்?... உடம்பிற்கு எதுவும்… என்று யோசித்தவன் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவளைத் தேடி சென்றான்… காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்தவளைக் கண்டதும் அவனுக்கு சற்று நிம்மதி உண்டாயிற்று… விரைந்து சென்று காரை எடுத்தவன், அவளிடம் பேச வாயெடுத்த போது, இப்போ நாம எங்கே போகிறோம் என்று கேட்டாள்… வீட்டிற்கு தாண்டா… என்று அவன் பதிலளித்ததும், கடற்கரைக்குப் போகணும் இப்போ… என்றவளிடத்தில், டைம் ஆச்சுடா… அவங்களும் அப்பவே வீட்டிற்கு போயிட்டாங்களாம்… நாம இன்னொரு நாள் அங்கே போகலாம் என்றவனிடத்தில் ப்ளீஸ் போகணுங்க என்று கைகூப்பினாள் அவள் இறைஞ்சி… சடன் பிரேக் போட்டு நிறுத்தியவன், என்ன காரியம் டா செய்யுற நீ?... சீதை என்னாச்சும்மா… என்றபடி அவளிடம் கேட்க, அவளோ பதில் சொல்லாது விழிகளில் கெஞ்சிக்கொண்டிருந்தாள் போகலாம் என்று…

டற்கரை மணலில் அலையடிக்கும் சத்தத்தின் நடுவே அமைதியே உருவாக அமர்ந்திருந்தாள் சாகரி… ஆதியும் அவளருகில் நின்று கொண்டிருந்தான்… வந்து 10 நிமிடம் ஆனது… அவளிடம் ஒரு மாற்றமும் இல்லை… மெல்ல அவளிடம் பேச்சு கொடுத்தான்…

சீதை… என்னம்மா… என்னாச்சுடா…. எதுவென்றாலும் சொல்லுடா…

…..

இங்கே உட்காருங்க என்று கை காட்டினாள் தனதருகே…

அவனும் பெரிய இடைவெளி விட்டு அமர, அவளுக்கு வலித்தது இன்னும்… எனக்காக இன்னும் எத்தனை தியாகம் தான் நீ செய்யப் போகிறாய் என்று உள்ளத்தில் கேட்டுக்கொண்டாள்… 

என்னம்மா… சொல்லுடா… ஏன் இப்படி இருக்குறடா…

.....

ப்ளீஸ்டா… கஷ்டமாயிருக்குடா… வலிக்குதுடா… என்று அவன் சொன்னதும் அவள் வெடித்தாள்…

எனக்கும் வலிக்குது ராம்… உங்களுக்கு என்னால எதுவுமே செய்ய முடியலையேன்னு வலிக்குது… எனக்காக பல கோடி இழப்பு உங்களுக்கு வந்ததுன்னு இன்னைக்கு தானே தெரிந்தது எனக்கு… அந்த வெளிநாட்டு பெண் கேத்ரின் மட்டும் சொல்லலைன்னா எனக்கு எதுவுமே தெரியாம போயிருக்குமே… அதை கேட்டபொழுது எனக்கு எப்படி வலித்ததுன்னு உங்களுக்கு தெரியுமா?... எதுக்கு இப்படி என்னை காதலிக்கிறீங்க… நான் என்ன செஞ்சேன் அப்படி உங்களுக்கு….???... விரல் நுனி பட்டால் கூட என் உணர்வோட விளையாடுற மாதிரி இருக்குமென்று இப்பவரை தள்ளி தானே இருக்கறீங்க….. இந்த காதலுக்கு நான் தகுதியானவள் தானா ராம்?... என்று கைகளில் முகம் புதைத்து அழுதவளை அதீத காதலோடு பார்த்திருந்தான் ராம்…

நீ என்ன செய்யவில்லை சீதை… உயிரையே என் மேல் வைத்திருக்கிறாய்… இதை விட நீ என்ன செய்யணும் எனக்கு புதிதாய்… ஒவ்வொரு நிமிடமும் நொடியும் என்னை உன் மனதினுள் வைத்து பூஜிக்கின்றாயே அதற்கு நான் எந்த விதத்தில் தகுதியானவன்???... சொல்லுடி… பல கோடி இழப்பு எனக்கு ஒன்னும் பெரிதில்லை… உன்னை விட… உன்னுடன் இருக்கும் நொடிகளை விட… இன்று போனால் நாளை சம்பாதித்துவிடுவேன்…. உன்னை இழந்தால் நான் நடைபிணத்திற்கு சமம்… என்று அவன் சொல்லி முடிக்கும் முன்,

அய்யோ… அப்படி சொல்லாதீர்கள் என்று கதறி மன்றாடினாள் அவள்…

நீயும் அப்படி சொல்லலாமாடி?... உன் காதல் மட்டும் போதும் சீதை எனக்கு… என் வாழ்நாள் உள்ள வரை உன்னை திகட்ட திகட்ட காதலிக்கணும்டி.... காதலிக்க அனுமதி தருவாய் தானே என் ச…. சாகரி…

சுவாசிக்க அனுமதி கேட்பீங்களா ராம்???... என்று சட்டென்று சொன்னவளிடம் என்ன சொல்லுவான் அந்த காதலன்???...

அவளின் அந்த காதல் தாலாட்டில் அவன் தள்ளாடினான் வானத்தில் மேகம் போல…

உங்க மடியில்…. நா….ன்….    என்று திக்கிக்கொண்டிருந்தவளிடம்,

பாருடா… என் மடியில் நீ தான் படுத்திருக்கிறாய் நான் உன் பக்கத்தில் அமர்ந்தது முதல் என்றான் அவனது முழங்கால்களை மடித்து கட்டிப்பிடித்துக்கொண்டு….

தான் கேட்க நினைத்ததை சொல்லும் முன், அவன் சொல்லிவிட்ட பதிலில் அவளுக்கு  கோபம் வரவில்லை… மாறாக சிரிப்பு தான் வந்தது வெட்கத்துடன்…

அச்சச்சோ என் ராமிற்கு கால் வலிக்குமே… நான் இப்போ என் ராமை மடி தாங்கிக்கிறேன் என்று அவளது முழங்கால்களை மடித்து இறுக்கிக்கட்டிக்கொண்டாள்… அவனே மடி மீது சாய்ந்திருப்பது போல்…

அந்த கார் கால இரவில், காந்தர்வ திருமணம் செய்தது போல் உணர்ந்தனர் இருவரும்..…. அலையின் சத்தம் அவர்களுக்கு இசைவாத்தியங்களாய் இசைத்தது சங்கீதமாய்….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.