(Reading time: 30 - 60 minutes)

 

ந்து இது அவளுக்குப் பிடிக்கும்தானே???

நிச்சயமாய் அண்ணா… ரொம்ப பிடிக்கும்…

ஹ்ம்ம்…. எனக்கென்னவோ அவ மறுபடியும் நம்ம மேல கோச்சிக்கப் போறான்னு தோணுது…

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைண்ணா… நீ குழப்பிக்காதே…

இல்ல நந்து…………. என்று மீண்டும் ஆரம்பித்தவனின் வாயைப் பொத்தியவள்

பேசாமல் இருண்ணா… ப்ளீஸ்… எதுக்கு வீணா யோசிச்சு உன்னைக் கஷ்டப்படுத்திக்குற?? அந்த நூலை எடு… அந்த ஃபெவிகாலை எடு… என்று தங்கை கேட்க கேட்க ஒவ்வொன்றாக எடுத்துக்கொடுக்க ஆரம்பித்தவன், மெதுவாக அவனையும் அறியாமல் அவளுடன் சேர்ந்து அந்த பரிசை செய்ய உதவினான்…

செய்து முடித்ததும் அதைப் பார்த்த சித்துவிற்கு எப்படி பேச என்றே தெரியவில்லை…

எப்படிண்ணா இருக்கு என்று கேட்ட நந்துவிடம் சூப்பரா இருக்குடா நந்தும்மா அழகா… என்றான்….

ம்ம்…. தேவையில்லாம அப்பவே குழப்பிக்கிட்டிருந்தல்ல, இப்ப பார்த்தியா, நல்லாயிருக்குன்னு நீயே சொல்லுற….

ஆமாடா… நந்தும்மா… முதலில் இது அவளுக்கு பிடிக்குமோன்னு யோசித்தேன்…. பட்… இப்போ நோ டவுட்… என் நந்து குட்டி, அழகா பண்ணிட்டாளே… யாராவது பிடிக்கலைன்னு சொல்லிடுவாங்களா என்ன?....  என்றான் பெருமையோடு…

ஹ்ம்ம்…. நான் மட்டும் பண்ணியிருந்தா அசிங்கமா தான் இருந்திருக்கும்… என் சித்து அண்ணனும் சேர்ந்ததால் தான் நல்லா வந்திருக்கு…. என்றாள் வற்றாத பாசத்துடன்….

அண்ணனும் தங்கையும் இங்கே என்ன பண்ணுறீங்க என்றபடி அங்கே காவ்யா வர, அவளின் பின்னே தினேஷும் வருவதைப் பார்த்த நந்து அவசரமாக அதை மறைத்து வைத்தாள்…

என்ன மறைக்குறீங்க இரண்டு பேரும்…. காட்டுங்க… என்று காவ்யா கேட்க…

ப்ளீஸ்மா… நாளைக்கு பார்த்துக்கோயேன்…. ப்ளீஸ்மா… ஒரு நாள் தானே… அட்ஜஸ்ட் பண்ணிக்கோ மா…. என்று சித்து கெஞ்ச…

நீ எதுக்குண்ணா கெஞ்சுற?... காட்ட முடியாதும்மா… நாளைக்கு உனக்கு தெரிஞ்சிடும்… அப்போ பார்த்துக்கோ… நீ வா அண்ணா… என்றபடி தன் அண்ணனின் கைப்பிடித்து அழைத்துச்சென்றுவிட்டாள் நந்து…

அடேயப்பா… உங்க பொண்ணு பேசிட்டுப் போறதைப் பார்த்தீங்களா???... அண்ணன் மேல என்ன பாசம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!...... ஹ்ம்ம்….

நீ ஏன் அதுக்கு ஹ்ம்ம் கொட்டுற கவி….. அவ அண்ணன் அவ பாசம் கொட்டுறா உனக்கென்ன???

அதானே… எனக்கென்ன வந்தது….

ஆனா… உன்னைப் பார்த்தா அப்படி ஈசியா விடுபவள் மாதிரி தெரியலையே…

உங்களுக்கு ஏன் தெரியாது… ஆளைப் பாருங்க… ஆளை…

கூல் டா கவி… உனக்கு தான் எல்லாமுமா நானிருக்கேனே… இன்னும் என்னடா….. என்று கணவன் சொன்னதில் குளிர்ந்து தான் போனாள் காவ்யா… இருந்தும் அதைக் காட்டிக்கொள்ளாமல்…

சரி சரி வாங்க நீங்க இப்ப உங்க பாசத்தைக்கொட்டணுமில்ல…. போகலாமா என்று கேட்க,

போகலாமே என்றவன் சிரித்தபடி மனைவியின் கைப்பிடித்து வெளியில் அழைத்துச்சென்றான்…

என்னங்க இது எப்படியிருக்கு???

உன் செலக்ஷன் என்னைக்குடி தப்பா போயிருக்கு… என்னைப் பார்த்த பின்னும் உன் செலக்ஷன் நல்லாயில்லைன்னு யாரும் சொல்லிடுவாங்களா என்ன???

ஆமா… ஆமா…. சொல்லமாட்டாங்க தான் என்று சிரித்தவள், ஆங்காங்கே கற்கள் பதிக்கப்பட்டு வண்ணப் பூக்கள் பிரிண்டட் செய்த வேலைப்பாடு மிகுந்த நீலநிறப்புடவையை தேர்ந்தெடுத்து தன் மேல் வைத்து காட்ட, இமைக்காமல் அவளைப் பார்த்திருந்தான் தினேஷ்…

என்னங்க…. உங்களைத்தான்…. என்று பலமுறை அழைத்ததும் பூலோகத்துக்கு வந்தவன்…. கவி, வானத்திலிருந்து தேவதை ஒன்று இறங்கி வந்த மாதிரி இருக்குடி… அசத்துறடி…. என்றான் கண்ணடித்தபடி…

போதும் போதும்…. இது பொது இடம்… சும்மாயிருங்க…. என்று வெட்கம் கொண்டாள் அவளும்…

இதென்னடி கொடுமையாயிருக்கு… என் பொண்டாட்டி…. நான் ரசிக்கிறேன்…

அதான் பார்த்தேனே நீங்க ரசிச்ச லச்சனத்தை….

அடடா…. நான் கண்ணடிக்கத்தானே செஞ்சேன்…. நீ என்னமோ முத்தம் தந்த மாதிரி போதும் சும்மாயிருன்னு சொல்லுற…. என்றான் அவளிடம் வம்பிழுத்தபடி….

வீட்டுக்கு வாங்க…. உங்களை பேசிக்கிறேன்…. என பொய்யாக முறைத்தபடி சென்றாள் காவ்யா…

றுநாளின் விடியல் அனைவருக்கும் மிக ரம்யமாக துவங்கியது…

கணவனின் கையணைப்பில் இருந்த காவ்யா அவனது உறக்கம் கெடாதவாறு மெல்ல எழுந்து குளித்து முடித்து தன் குட்டி செல்வங்களை எழுப்ப சென்றபோது, நந்துவும் சித்துவும் சாகரி வீட்டிற்குள் நுழைவதையும், கையில் எதையோ வைத்திருப்பதையும் கண்டாள்…

அப்படி என்ன கையில் இருக்கு என்று எண்ணியவளின் யோசனையை, அதை அங்கே போய் பார்த்தால் தெரிந்து விடப் போகிறது என்ற தினேஷின் குரல் கலைத்தது…

ஹ்ம்ம்… வாங்க போகலாம் என்று இருவரும் செல்ல, அங்கே நந்துவையும் சித்துவையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள் மயூரி….

மயில்… இது உனக்குத்தான்… நானும் அண்ணனும் செஞ்சோம்….. ரொம்ப நல்லாயிருக்குமான்னு தெரியாது…. பட்… உனக்குப் பிடிக்கும்னு தோணுச்சு அதான்… என்று நிறுத்தியவள், சாகரி மட்டும் எங்களுக்குப் பிடிச்ச ஃப்ரெண்ட் இல்லை… நீயும் தான்… அவ எப்பவும் துருதுருன்னு இருப்பா… நீ மட்டும் அமைதியா இருப்பியா… அதான் உன்னைப் பேச வைக்கிறதுக்கு, உன் அமைதியை உடைக்கிறதுக்கு தான் நாங்க உன்னை அடிக்கடி வேலை சொல்லுறதும், உங்கிட்ட சண்டைக்கு வர்றதும்… என்று நந்து சித்துவைப் பார்க்க….

ஆமா மயில்… அது உன்னை நாங்க எங்களோட ஜாலியா சேர வைக்கிறதுக்குதான்… பட்… அது உன்னை கஷ்டப்படுத்தியிருக்கும்னு நாங்க நினைக்கவே இல்லை… அன்னைக்கு ஊரில் கூட உன்னை தண்ணீரில் தள்ளிவிட்டது எங்க மயில் அப்படிங்கிற உரிமையில தான்… ஆனாலும் நாங்க செஞ்சது தப்பு தான்… சாரி மயில்…

மன்னிச்சிடு… எங்களுக்கு நீயும் சாகரியும் ஒண்ணுதான்… வேற வேற இல்லை… இந்த கிஃப்ட் உனக்குத்தான்…. வாங்கிக்கோ… என்றபடி அவளிடம் கொடுத்தனர் இருவரும்….

வாங்கி பிரித்து பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல், இருவரையும் கட்டியணைத்துக்கொண்டு மாறி மாறி முத்தமிட்டாள்…

அதைப் பார்த்துக்கொண்டிருந்த சாகரி, தினேஷ், காவ்யா மூவரும் சில மணித்துளிகள் சிலையென நின்றனர்… பின் என்ன பரிசாக இருக்கும் என்ற எண்ணத்தில் மயூரி அருகில் இருந்ததை எடுத்துப்பார்த்தனர்…

அழகான மயில் ஒன்று தோகை விரித்து ஆடுகிறது…. அருகே இரண்டு குருவிகள் அவளிடம் பேச நிற்கிறது… ஆனால் கோபம் கொண்ட மயிலோ அன்று என்னை வேலை வாங்கி திட்டீனீர்கள் அல்லவா உங்களோடு பேச மாட்டேன் என்றபடி தோகையை திருப்பிக்கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றதும் அங்கே மழை வந்து குருவிகள் இரண்டும் நனைந்து நடுங்குகிறது… பதறிப் போன மயில், குருவிகளின் பக்கத்தில் வந்து மழை தான் வருகிறதென்று தெரிகிறதல்லவா… என்னிடம் வருவதெற்கென்ன என்று கேட்கிறது…

நீதான் பேசாமல் செல்கிறாயே… அதான் எங்கள் மேல் கோபம் என்று நினைத்தோம் என்று சொல்லி, மன்னிப்பு கேட்டன இரண்டு குருவிகளும் நாங்கள் அன்று செய்தது தவறு தான் என…. நான் திட்டி பேசாதீர்கள் என்று சொன்னால் பேசாமல் போய்விடுவீர்களா என்னைவிட்டு என்று மயில் கேட்கும் முன், போகமாட்டோம்… என்று அவளருகே ஓடி வந்தன குருவிகள்… அவைகளை தன் தோகைக்குள் அள்ளி அணைத்துக்கொண்டு ஆடுகிறது உற்சாகமாய் மீண்டும் அந்த வண்ண மயில்…

மழலையரின் பிள்ளை மொழி ஓவியம் அவர்களைப் போலவே மிக அழகாக ரசிக்கும்படி இருந்தது… கூடவே பஞ்சினால் செய்த மயில் போன்ற பொம்மையும், குருவிகளும்… பார்க்கவே கண்களுக்கு குளிர்ச்சி தருவனவையாய் நிறைவாய் இருந்தன இரண்டு பரிசுப்பொருட்களும்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.