(Reading time: 30 - 60 minutes)

 

ரில் அத்தை மாமா நல்லாயிருக்காங்களா, என்ன சொன்னாங்க மயூரி கல்யாணம் பற்றி…

மென்னகையோடு அவள் கேள்விக்கு சிரித்தவன், நல்லாயிருக்காங்கடா…. என்றவன் மயூரி திருமண விஷயத்தை பற்றியும் சொன்னான்…

சரிங்க… காத்திருப்போம்… நாம… என்றவள் அவனுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசினாள்….

சித்து நந்து எப்படியிருக்காங்கடா???

அதை ஏன் கேட்குறீங்க இரண்டு பேரும் மயிலுக்கு கிஃப்ட் எல்லாம் கொடுத்து அசத்திட்டாங்க…

நிஜமாவா?... என்ன கிஃப்ட் டா??? என்று கேட்டவனிடம் அந்த மழலைகளின் செயலை விவரித்தாள் அவள்… மயிலுக்கே மயில் கொடுத்துட்டாங்க என்று சிரித்தாள் உற்சாகமாக…

அவனிடம் எந்த பதிலும் வராது போகவே அவனை நிமிர்ந்து பார்த்து என்ன என்று புருவம் உயர்த்தி கேட்க, சிரிச்சே என்னை வசமிழக்க செய்கிறாய்…. ஏணடிப் பெண்ணே… நான் பாவமடி… வேண்டாம்டா… என்னை மேலும் உருக வைத்து உன்னிடம் இழுக்காதே சீதை… ப்ளீஸ்… என்று கெஞ்சினான் தன் மனதினுள்…

அவளுக்கு அது புரிந்ததோ என்னவோ, ராம்…. நான் உங்களுடையவள்…. காலம் முழுவதும் உங்களோடு வாழணும்… திகட்ட திகட்ட உங்களை காதலிக்கணும்… காதலிப்பேன்…. என்று கனிவாக சிரிக்க அது அவன் மனதினை மெல்லிய இறகால் வருடியது போல் இருந்தது…

ஏங்க… இங்கே தமிழே பேச மாட்டாங்களா?..

மாட்டங்க மயூ… ஹிந்தி தான்…. தமிழர் வாழும் பகுதிகளில் வேணும்னா பேசுவாங்க…

ஓ…. அது எங்கே இருக்கு?...

இப்போ அந்த கேள்வி அவசியம் தானா?... ஒழுங்கா கிடைச்ச நேரத்தில் காதலிக்காம நீ என்ன இப்படி கேள்வியா கேட்டுட்டே இருக்குற???

இப்போ மட்டும் உங்களை காதலிக்காமலா இருக்குறேன்… என்றவளை முறைத்தவன்,

ஆமாம் தாயே… நீ காதலிக்குற லட்சனத்தை வெளியில் சொல்லாதே… காதலிக்கிறாளாம்… இப்படி நூறு அடி இடைவெளி விட்டு இருந்து கொண்டு காதலிக்கிறாளாம்… போடி…. கடுப்பேற்றாதே…

டீ யா?... சரிதான் வெளியூர் வந்ததும் குளிர் விட்டு போச்சு போல… இல்லை…

ஆமா… குளிருதுன்னு சொன்னா மட்டும் இப்போ என்ன பண்ணிடப் போற நீ.. பக்கத்துல வந்து உட்கார போறியா?... இல்லல்ல… போடி… பேசாதே…

சரி… போறேன்… நீங்க அப்புறமா வாங்க…. நிதானமா…

ஹேய்… மயூ… சும்மாடி… உங்கிட்ட விளையாண்டேண்டா…

ஓ… விளையாட்டு… இது… நம்பிட்டேன்…

சரி சரி விடு… ஆமா பத்மினி எங்கே?...

அவளா.. வந்த வேலையைப் பார்க்க போயிருக்கா… நாமும் போகலாமா?...

அடடா… டிரெயினிங்க் நடத்துற இடத்துக்கு தானே நாமும் இப்போ போயிட்டிருக்கோம்…. என்றவன் அடுத்த சில நிமிடத்தில் மும்பையில் இருந்த அந்த மிகப்பெரிய கட்டிடத்திற்குள் நுழைந்தான் மயூரியுடன்…

முகிலன் மற்றும் ஆதி அலுவலகத்திலிருந்து மொத்தம் பத்து பேர் வேண்டியிருந்தது… திறமையானவர்களின் பெயர் பட்டியலை தேர்ந்தெடுத்த போது காதலை மனதில் வைத்து இருவரும் தேர்வு செய்யவில்லை… ஆனால் அதில் மயூரி-சாகரி பெயர் வந்ததில் பெண்களை விட ஆண்கள் இருவருக்கும் தான் அதிக சந்தோஷம்… வருங்கால மனைவி, தற்போதைய காதலி… இருக்கப்போகும் 15 நாட்களும் தத்தமது காதலிகளுடன் செலவழிக்கலாமே தங்களது பொன்னான நேரத்தை… அந்த குஷியில் தான் இருந்தனர் ஆதியும் முகிலனும்…

பெண்கள் இருவருக்கோ, தினேஷ் என்ன சொல்வான் என்ற பயமும் இருந்தது… அதிலும் மயூரிக்கு திருமண ஏற்பாடு எதுவும் தெரியாது… ஆனால் சாகரிக்கு எல்லாமே தெரியும்… ஆதலால் அவள் தான் அதிகம் பயந்தாள்… கூட வேலைப் பார்ப்பவர்கள் வருவார்கள் என்ற போதிலும் அங்கே இருவரது காதலர்களும் இருப்பார்களே.. எப்படி அண்ணன் இதற்கு ஒப்புக்கொள்வார் என்று கவலையுற்றாள் சாகரி…

அந்த கவலையே உனக்கு வேண்டாம் என்பது போல், பத்திரமாக போயிட்டு வாங்க, நீங்கள் வேலை செய்யும் துறையில் வெளியூர் பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று… அதனால் பத்திரமாக போயிட்டு வாங்க… என்று இருவரிடமும் ஒருங்கே கூறியவன், சாகரியை தனியே அழைத்து,

நீ கவலைப் படாதேம்மா… எனக்கு உங்கள் இருவரின் மேல் நம்பிக்கை நிறைய உள்ளது… அதை விட உங்களின் வருங்கால கணவர்களின் மேலும் அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது… வேலையை நல்ல படியாக கற்றுக்கொண்டு வாருங்கள்… என்று கூறி வழி அனுப்பி வைத்தான்…

சாகரி நீ எப்போ வருவ?

சீக்கிரம் வந்திடுவேன் சித்து….

ஹ்ம்ம்… கண்டிப்பா போகணுமா?

ஆமா சித்து கண்ணா…

சரி.. போயிட்டுவா… டாட்டா…

டாட்டா… சித்து… வரேன்… என்றபடி அவள் நகர…

மயில் நந்துவிடம், மயில் நாங்களும் உங்க கூட வரட்டுமா?

இல்லடா நந்து… நாம இன்னொரு நாள் டூர் போகலாம்… இது வேலை விஷயமா போறோம்டா…

நாங்க எப்படி உங்களை பார்க்காம இருப்போம்… எங்களுக்கு கஷ்டமாயிருக்குமே… என்று சொன்ன நந்துவிடம்,

நீங்க இரண்டு பேரும் இப்படி இருந்தா நாங்க எப்படி அங்கே வேலை நல்லா செய்ய முடியும்… அப்புறம் எங்க ஹெட் எங்களை திட்டுவார்… பரவாயில்லையா என்று சாகரி கேட்டதும்..

அச்சோ… சாகரி… நாங்க ஹேப்பியா தான் இருக்கோம் பாரு… நீங்க வாங்கிட்டு வரப்போற கிஃப்ட் பத்தி தான் யோசிச்சிட்டிருக்கோம் இல்ல நந்து என்று தங்கையையும் உடன் அழைக்க,

அவளும் ஆமாம் மயூ-பத்மினி… அண்ணன் சொன்னது காதுல விழுந்தது தானே… ஒழுங்கா வேலைப் பார்த்து எங்க இரண்டு பேரோட பெயரையும் காப்பாற்றணும்… சரியா?... வரும்போது நல்ல கிஃப்ட் ஆ அண்ணனுக்கு வாங்கிட்டு வாங்க… அண்ணனுக்கு பென் 10 டாய்ஸ் நிறைய வாங்கிட்டு வாங்க… அவனுக்கு அது தான் ரொம்ப பிடிக்கும்… சரியா?..

கண்டிப்பா உங்க பெயரை காப்பாற்றுவோம்… பென் 10 தானே… நிச்சயமா வாங்கிட்டு வரோம்… என்று இருவரும் ஒரு சேரக்கூறி குட்டீஸ்களை அணைத்து முத்தமிட்டு கிளம்பினர்…

நம்பிக்கை என்பது உதட்டளவில் மட்டுமல்ல உள்ளத்திலும் இருக்கிறதென்று நிரூபித்துவிட்டான் தினேஷ்…

அதைக் காப்பாற்ற துடிக்கும் மயூரி மீதும் தப்பில்லை… காதலியுடன் சிரித்து அருகருகே அமர்ந்து பேச கூட முடியாது போகின்றதே என்று நினைக்கும் முகிலனின் மீதும் தப்பில்லை…

காதலில் உள்ளங்கள் இணைகிறதென்றால் திருமணம் அவர்களின் அந்த காதலை அங்கீகரிக்கிறது ஊரறிய, உறவறிய…

அந்த அங்கீகாரத்திற்காக காத்திருப்பது தவறேதும் இல்லையே… அதை தான் மயூ செய்கிறாள்… ஆனால் அதற்கும் ஒரு அளவு இருக்கிறதென்று புலம்புகிறான் முகிலன்…

அவன் அவளிடம் எல்லை மீற நினைக்கவில்லை… எல்லைகளை உடைத்துவிட்டு வரவும் சொல்லவில்லை… ஆனால் அதே நேரத்தில் மற்ற காதலர்களைப் போல் கொஞ்சமாவது அவளும் சிரித்து பேசியிருக்கலாம்…

அவளுக்கோ பயம்… அவனருகில் இருந்தால் அவளை மறந்து போகிறாள் தான் அவளும்… அதனால் தான் சிரிக்க கூட மறுக்கிறாள் இங்கு வந்த இரண்டு நாட்களாய்…

அந்த கோபத்தில் தான் அவன் சில வார்த்தைகளை சிதற விடுவது… இன்றும் அது போல் தான் கடுப்பேற்றாதே என்றான்… ஆனால் அது அவளுக்கு வலித்திருக்கும் என்று அவன் அறியாமல் இல்லை… இருந்தாலும் என்ன செய்வது கோபமோ காதலோ அவளிடத்தில் தானே அவன் காட்ட முடியும்…

இவர்கள் கதை இங்கே இப்படியிருக்க, சாகரி-ஆதி கதையோ வேறு மாதிரி இருந்தது… அவர்களுக்கு அந்த கவலை எல்லாம் சிறிதும் இல்லை போலும்… கண் ஒன்று மட்டுமே போதும் காதலிக்க என்று யாரும் பார்த்திடாத வண்ணம் கண்களால் விசாரிப்பதும் காதல் கீதம் இசைப்பதுமாய் இருந்தனர்…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.