(Reading time: 30 - 60 minutes)

 

தாலாட்டுதே வானம்

தள்ளாடுதே மேகம்

தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்

இது கார்கால சங்கீதம்…”

அவர்களின் மோன காதல் அலையில் மீது ஆடிக்கொண்டிருந்த இருவரின் உள்ளமெங்கும் ஒரு ராகம் தான் ஒலித்துக்கொண்டிருந்தது… நான் உன்னை காதலிக்கின்றேன் என… இத்தனை நாள் இல்லாத புது விதத்தில் அவர்கள் இருவரின் கருவிழி மீன்களும் காட்சியளித்தன மயக்க கோலத்தில்…. அவனது காதல் தந்த மயக்கத்தில் அவள் விழிகள் மேலே உயர்ந்து மேலே நட்சத்திரமும் உள்ளதென்று அறிவுறுத்த, அவன் விழிகளோ கொஞ்சமும் அசராமல் விழி உயர்த்தாமல் மேலே என்ன நான் பார்ப்பது, கீழே என்னருகில் ஒரு பெண்நட்சத்திரம் சித்திரமாய் இருக்கிறதே நான் ரசிக்க… இதுவே சிறந்தது.. எனக்கானதும் கூட… என்று உரைக்க… தங்களின் இந்த வேகமான எண்ணத்தில் என் உள்ளம் உங்களுக்காக “என் ராம் என்ற நாதத்தை எழுப்புகிறதே…

அலை மீது ஆடும் உள்ளமெங்கும் ஒரே ராகம்

நிலை மீறி ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம்

மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்

கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்

எண்ணம் ஒரு வேகம்அதில் உள்ளம் தரும் நாதம்…”

என் சீதைஎன்று அவனும் என் ராம் என்று அவளும் உருக, இருவரும் காதலில் கரைந்து காணாமல் போயினர்… காலையில் அவர்கள் அலுவலகத்திற்கு வந்த நினைவு வந்தது…

இரு கண்கள் மூடி செல்லும்போதும் ஒரே எண்ணம்

அவன் குடித்துவிட்டு வைத்த டம்ளரில் யாரும் அறியாமல் அவளும் தண்ணீர் ஊற்றி குடித்தாள்… அதை அவன் கண்டு கொண்டதையும் தெரியாமல்…

ஒரு சங்கில் தானே பாலை உண்ணும் ஒரே அன்னம்….

அவன் அதை சொல்லிக்காட்டியதும், அவனின் இந்த உவமை அவளுக்குள் உவகை கொடுக்க, நம் சொந்தம் சொர்க்கத்தில் முடிவாகியது என்றாள்…

சொர்க்கத்திலே இது முடிவானது

உண்மை தான் சீதை… உன்னுடன் இருக்கும் என் நாட்கள் அனைத்துமே சொர்க்கம் என்று முடிவு செய்யப்பட்டவை தான்…

சொர்க்கம் என்றே இது முடிவானது

நீ கற்று கொடுக்கும் காதல் எனக்கு வேதம் போன்றது… அதில் என் கடவுளாக நீ… உன் காதல் எனக்குள் கீதம் போல என்றும் ஒலிக்கும்…

காதல் ஒரு வேதம்அதில் தெய்வம் தரும் கீதம்….”

ஒருவரை ஒருவர் அணைத்து முத்தங்கள் பரிமாறிக்கொள்ளவில்லை… விரலோடு விரல் சேர்த்து கொள்ளவில்லை… தோளோடு தோள் சாய்த்து கதை பேசிக்கொள்ளவில்லை… எனினும் குறிப்பறிந்து இருவரும் நடந்து கொள்ளும் விதம், அவர்களை நெஞ்சோடு கிளத்தல் செய்ய வைத்தது..

இந்த தன்னிகரில்லா காதலுக்கு நிகர் எதுவும் இல்லை காதலைத் தவிர…

மீண்டும் அடுத்த வார சீதா-ராம் காதல் நதியில் சந்திக்கலாம்…

தொடரும்

Go to episode # 14

Go to episode # 16

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.