(Reading time: 7 - 14 minutes)

 

ஷெஷாங்கன் நம்பிக்கை

நம்புகின்றாள் நறுமீன் நல்லவன் நானென

மாலையிட்டால், மணந்து கொண்டால்

மங்கையவள் மனைவியாவாள்,

மனம் கனிவாள், காதல் கொள்வாள்.

பண்பானவள் பாவை

பாசம் அவள் தேவை

ஒழுக்கம் அவள் முறைமை (15)

 

இன்னார்க்கு இன்னார்மேல்

இக்கணம் இக்காரணமாய்

இடைப்படும் என வரைபடாத

வளியன்ன  பிடிபடா காதலும்                   

திருமணம் என்ற ஒற்றை நிகழ்வில்

காட்டாறாய் கட்டுண்டவர் மேல் களம்காணும்.

மணநிகழ்வை நம்பினான் மன்னவன். (16)

 

நறுமீன் நினைவுகள்

நல்லவேளை நான் பிழைத்தேன்!

நயவஞ்சகன் ஷெஷாங்கன்

நயனங்களில் நான் அழகில்லை

நாடவில்லை அதனால் அவன் என்னை

நடனமாடினாலும், நாமம் {tooltip}நல்லரவு{end-link}நல்ல பாம்பு{end-tooltip} என்றாலும்

நாகம் நாகம் தான்

இவன் சகவாசம் சர்வ நாசம்தான். (17)

 

பொழுது புலரும்

புதுவழி மலரும்

அண்ணன் வருவார் மறைந்து

{tooltip}அதர்{end-link}வழி{end-tooltip} பகர்வார் முனைந்து                         

தப்பவும் தாயகம் திரும்பவும்

புது வியூகம் புனைந்து.

இன்று முடிந்தது சிறைவாசம்; நாளை பயணம் யூத தேசம். (18)

 

தென்றலின் நிலை

எதிர் எதிர் திசையில்

இருவர் மனம் பயணம்

அறிந்த சந்திரன் மௌனம்

தென்றல் மனமோ ரணம் ரணம்.

தூங்கவில்லை ஷெஷாங்கன்; காதல் காரணம்

நாடவில்லை நித்திரை நறுமீன்; குரோதம் காரணம்

வீசவில்லை தென்றல்; சோகம் காரணம்.(19)

 

ஷெஷாங்கன் மண ஏற்பாடு செய்தல்

{tooltip}இசைஇ{end-link}இசைந்து{end-tooltip} {tooltip}இ{end-link}இந்த{end-tooltip} இசை

{tooltip}நசைஇ{end-link}விரும்பி{end-tooltip} {tooltip}இ{end-link}இந்த{end-tooltip} நங்கை                           

{tooltip}இ தலை{end-link}இத்தலைவனை{end-tooltip} நாடி {tooltip}இ{end-link}இங்கு{end-tooltip} இணையும்            

{tooltip}வதுவி{end-link}மணமுடித்து{end-tooltip} {tooltip}இல்{end-link}இல்லறம்{end-tooltip}  {tooltip}இ{end-link}இங்கு{end-tooltip} காணுமின்.              

{tooltip}இ நம்பி{end-link}இதை நம்பி{end-tooltip} {tooltip}இ நம்பி{end-link}இந்த ஆண்மகன்{end-tooltip} {tooltip}நகைஇ{end-link}மகிழ்ந்து{end-tooltip}

{tooltip}இ இட்டிடை{end-link}இவள் சிறு இடை{end-tooltip}  இறுக்கி சுற்ற {tooltip}இ{end-link} இங்கு{end-tooltip}                               

காஞ்சிப்பட்டுடை {tooltip}இ பொழுது{end-link}இப்பொழுது{end-tooltip} {tooltip}தருவி{end-link} கொண்டு வா{end-tooltip}                

{tooltip}இ{end-link}இந்த{end-tooltip} கார்குழலி {tooltip}இட்டிலங்க{end-link}அணிந்து விளங்க{end-tooltip} இலகு நிறை          

{tooltip}மா எழிலி{end-link}மிக அழகான{end-tooltip}மணிமுடி {tooltip}இ பொழுது{end-link} இப்பொழுது {end-tooltip} செய்வி        

{tooltip}இ{end-link}இந்த{end-tooltip}மலரன்னாள் {tooltip}இ{end-link}இங்கு{end-tooltip} மாலையிட  

            

{tooltip}ஈ சூழும்{end-link}தேனீக்கள் மொய்க்கும்{end-tooltip} மாலை இரண்டிங்கு இடுக

                

இஷணம் இக்கணம் செய்க

{tooltip}இ{end-link}இந்த{end-tooltip} பெண் என் கண் நறுமீன்                          

இவன் உடன் மண ஆயத்தம்.

{tooltip}இ செப்பி{end-link}இதை சொல்லி{end-tooltip} {tooltip}இ செய்து{end-link}இதை செய்து{end-tooltip}                        

இரும்புருகி இசையாகி இனித்திருந்தான் இவன்

{tooltip}இ அறியான்{end-link}இவன் அறியான்{end-tooltip} {tooltip}இ{end-link}இந்த{end-tooltip} உண்மை {tooltip}இ{end-link}இந்த{end-tooltip} மங்கை             

இருண்டிருந்தாள் இவன்பால் {tooltip}இகம்{end-link}உலகம்{end-tooltip} கொள்ளா கோபத்தால் என்பதாய். (20)     

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.