பொழுது விடிந்து விட்டதை உரைத்த ஆதவன் மெல்ல தன் கதிரொளியால் பூமியெங்கும் வெளிச்சத்தைப் பரப்பினான்... அறைக்கதவு தட்டப்படும் ஓசைக் கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தவன், தன்னோடு இறுக்கியிருந்த தன்னவளின் புகைப்படத்தை விலக்க மனமில்லாமல் விலக்கி பாதுகாப்பாய் எடுத்த இடத்தில் யாருக்கும் தெரியாமல் வைத்தான்...
கதவைத் திறந்ததும் என்ன அண்ணா, எவ்வளவு நேரம் கதவை தட்...... என்று சொல்லிக்கொண்டே போனவனுக்கு அதற்கும் மேல் தன் தமையனை பார்த்த பிறகு வார்த்தை வரவில்லை... ஆதர்ஷின் சிவந்த விழிகள் அவன் இரவெல்லாம் உறங்கவில்லை என உரைத்தது... அவனின் வீங்கிய கண்கள் அவன் நிலையை அப்பட்டமாக அவ்னீஷிற்கு தெரிவித்தது...
சொல்லு அவ்னீஷ்... என்ன விஷயம்?... என்றவனிடம், ஒன்னுமில்லைண்ணா, அம்மா கூப்பிட்டாங்க... அதான்... என்று இழுத்தான் சின்னவன்...
நீ போ... நான் குளிச்சிட்டு வரேன்...
சரிண்ணா... என்றவன் அமைதியாக அவனைக் கடந்து சென்று முகிலனிடம் சொன்னான் ஆதர்ஷைப் பற்றி...
கேட்ட முகிலனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை...
நான் இதை எதிர்பார்த்தேன் தான்... என்ற ஹரீஷின் பதில் கேட்டு இருவரும் புரியாமல் விழித்தனர்...
என்னடா டாக்டர் சொல்லுற?...
ஆமாண்டா.. முகிலா... இனி நமக்கு வேலை ஜாஸ்தி... ஆதி இப்போதான் தன் காதலை உணர ஆரம்பிச்சிருக்கான்... சீக்கிரமே அது அவனுக்கு நல்லதை நடத்தி கொடுக்கும்... அதற்கு துணையா நாமும் இருக்கணும்... என்னடா சரிதானே?...
சரிடா டாக்டர்... உன் பிளான் என்னன்னு முதலில் சொல்லு...
ஆமா... ஹரீஷ் அண்ணா.. உங்க பிளான் சொல்லுங்க... நானும் என்னால முடிஞ்ச உதவியை செய்யுறேன்... என்றான் அவ்னீஷும்...
அவர்களிடம் தன் ஆரம்ப கட்ட திட்டத்தை விவரித்தான் ஹரீஷ்....
அவன் சொல்லி முடித்ததும் முகிலன் கேள்விக்கணையை தொடுக்க ஆரம்பித்து விட்டான் ஹரீஷிடம்...
ஏண்டா... அவசரக்குடுக்கை... கொஞ்சம் பொறுமையா இருடா... நீ முதலில் நான் சொன்னதை செஞ்சிட்டு வா... போ... - ஹரி
என்னமோ சொல்லுற?... சரி செய்யுறேன்... மகனே... நீ சொன்ன பிளான் மட்டும் ஒழுங்கா நடக்கலையோ... நீ தீர்ந்தடா... சொல்லிட்டேன்... என்றபடி முகிலன் சென்றான்...
அவ்னீஷ் நீயும் ரெடியா?... - ஹரி
ரெடி ஹரீஷ் அண்ணா... என்றவனும் முகிலனைப் பின் தொடர்ந்து சென்றான்...
அவர்கள் இருவரும் சென்றதும் தங்கைக்கு அழைத்தான்... ரிங் சென்றதே தவிர, மறுமுனை அழைப்பை ஏற்கவில்லை... மீண்டும் அழைத்தான்... மறுபடியும் அதே நிலைதான்... சரி இதற்கு மேல் முயற்சிக்க வேண்டாம் என்றவனும் அங்கிருந்து அகன்று விட்டான்...
அம்மா....
என்னப்பா... முகிலா... ?
இங்க வாங்கம்மா... உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்... என்ற முகிலனை கேள்வியாக பார்த்த கோதையிடம், என்னம்மா இப்படி பார்க்குறீங்க?... நான் முகிலன் தான்... இதோ வராளே இந்த குரங்கு அனு இல்ல... என்று அங்கு வந்து கொண்டிருந்த தன் தமக்கையை கை காட்டினான்... முகிலன்...
டேய்... வாலில்லாத குரங்கே என்னடா... சொன்ன?.. அம்மாகிட்ட நீ இப்போ?...
வேறென்ன சொல்லுவாங்க... உன்னைப் பற்றி உண்மையை சொன்னேன்... இல்லம்மா... என்று அன்னையையும் அவன் உடன் சேர்த்துக்கொள்ள...
அம்மா... இதெல்லாம் அநியாயம்... வரவர நீங்க உங்க பையனுக்கே சப்போர்ட் செய்யுறீங்க... அப்புறம் நான்... என்று அவள் முடிக்கும் முன்பே,
ஆ... சொல்லு... நீ... என்ன செய்யப்போற?... உன்னால என்ன செய்ய முடியும்?...
என்னவேணா செய்வேண்டா...
ஆமா... ஆமா... அதான் பார்த்தேனே... நாம எல்லாரும் ஆதி விஷயத்துல என்ன செஞ்சு கிழிக்கிறோம்னு... என்றவன் தன் திட்டத்தை அமல் படுத்த ஆரம்பித்தான்..
அதுவரை அவர்கள் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கோதைக்கும் அவன் பேச்சு முறை வித்தியாசமாக பட,... என்றும் போல் மகன் நடவடிக்கை இல்லையே... இன்று என்னாயிற்று என்ற எண்ணத்துடன், சொல்ல வந்ததை நேரடியா சொல்லு முகிலா... என்றார்...
அம்மா... ஆதிக்கு அந்த பொண்ணு ரிகா சரியான மேட்ச்ன்னு எனக்கு தோணலை...
முகிலா... நீ என்ன சொல்லுறேன்னு புரிஞ்சு தான் பேசுறியா? என்றவர் குரலில் நீ அப்படி சொல்லியிருக்க வேண்டாமே என்ற ஆதங்கம் தெரிந்தது...
அதை உணர்ந்து கொள்ளாமல் இருக்க அவன் ஒன்னும் ஜடமில்லையே... இருப்பினும் அவன் திட்டத்தை செயல்படுத்தியாகி வேண்டுமே... எனவே மனதிற்குள் சாரிம்மா... இன்னும் கொஞ்ச நேரம் தான்... பொறுத்துக்கோங்கம்மா... என்று மானசீகமாக கோதையிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு மேற்கொண்டு பேசலானான்...
புரிஞ்சு தான்மா பேசுறேன்... என்ற முகிலனிடம்,
ஆமா... நீ புரிஞ்சு கிழிச்ச... என்று கோபம் கொண்டாள் அனு...
அனு.. நீ சும்மா இரு... கொஞ்சம்.. என்றான் முகிலன் தமக்கையிடம்...
நான் ஏண்டா சும்மா இருக்கணும்?... நீதான் லூசாட்டம் உளறிட்டிருக்குற... நீ முதலில் சும்மா இரு... போ... என்று அனு சொல்லிக்கொண்டிருக்கும்போதே கோதையின் அதட்டல் அங்கே ஒலித்தது...
அனு... எதுவும் பேசாதே... என்ற கோதையின் குரலில் முகிலனே சற்று ஆடித்தான் போனான்...
இருந்தாலும், இதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொண்டால், பின்பு அவனுக்கு வேண்டிய தகவல்களை அவன் எப்படி பெற முடியும்?... அவர்கள் திட்டம் தான் என்னாவது??...
அம்மா.. இந்த லூசு இப்படித்தான் மா.. விடுங்க... நான் சொன்னதை யோசிச்சுப்பாருங்க... உங்களுக்கே சரின்னு படும்...
லூசாடா நான்... என்று வாயைத் திறக்க முயன்ற அனு, கோதையின் பார்வையில் அடங்கினாள்...
முகிலா... நீ ஏன் ரிகா ஆதிக்கு மேட்ச் இல்லைன்னு சொல்லுற?...
உண்மையிலே அந்த பொண்ணு ஆதிக்கு சுத்தமா சரிவரமாட்டாம்மா... அந்த பொண்ணைப் பார்த்தா ரொம்ப அமைதியா தெரியுறா... பேசவே காசு கேட்பா போல... அதுமட்டும் இல்ல, ஆதிக்கு என்ன பொண்ணா கிடைக்காது... அவன் ஹ்ம்ம் சொன்னா நான் நீ ன்னு போட்டி போட்டு பொண்ணு கொடுக்க க்யூவில் நிற்பாங்க... இந்த பொண்ணு வேண்டாம்மா... என்றான் மிக சாதாரணமாக...
உலகமே தலை கீழா நின்னாலும் ஆதிக்கு அவள் தான் மனைவி... அவனுக்கென்று பிறந்தவள் அவள் தான்... என்றார் கோதை அழுத்தம் திருத்தமாய்...
என்னம்மா நீங்க?... என்னமோ ஆதியே சொன்னமாதிரி சொல்லுறீங்க... அவ தான் அவனுக்கு மனைவின்னு... போங்கம்மா... காமெடி பண்ணாதீங்க.... என்றான் இன்னும் சில நிமிடங்களில் தனக்கு வேண்டிய பதில் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்புடன்...
ஆமா... அவன் தான் சொன்னான்... அவன் தான் சொன்னான்... மேற்கொண்டும் எதுவும் சொல்லாமல் விட்டுட்டான்... என்றவர் கண்களில் நீர் உருவாக, அதை மென்மையாக துடைத்தவன், அம்மா.. இப்போ எதுக்கும்மா அழறீங்க?... என்றான் எதுவும் தெரியாதது போல்...
Mayuri Rigavoda diary konduvaruvala
waiting for next ud meera
Thanks for ur comment :)
mayoo vantha enna nadakumnu next epi la therinjidum da...
Thanks for ur comment :)
shanvi-avneesh
hari -gothai relationsp nice romba alaga iruku......
anu-mukil sandai potukurathu nice.....
rika nadikiralo
mayu epo varuva
eagerly waiting 4 nxt episd
mayoo on the way...
Thanks for ur comment meenu :)
Marupadiyum Rika yedo maraika aarambichitaa pola iruku
Thanks for ur comment :)
Happy New Year :)
very interesting!
Mukil mrgla ena prblm
Rigaku nejamave ethum niyabagam varaliya
Illa riga niyabagam varatha mathri nadikrala
rikavuku niyabagam vanthuvitathu... ava maraikira... :)
thanks for ur comment agi :)
Avneesh-shanvi nice pair..
Hari and mukilan super.. Ennama plan panranga
Harish nala amma pillai
Riga-mayu meeting eppadi irukka poguthu
Thanks for ur comment Keerthu :)
Mayuri - Sagari meeting epadi pogumnu therinjuka romba arvama iruku.
Ninga keta kelvigalukana pathilagalai arinthuk kola kathirukiren :)
Thanks Thenu :)