(Reading time: 26 - 51 minutes)

சாரிம்மா... நான் முகிலன் மயூரி விஷயத்தை கேட்டது தப்போன்னு தோணுது....

என்ன ஹரி... இப்படி பேசுற?... அவனுக்கு ஒரு மாதத்திற்கு தான் நீ இளையவன், பொறுப்பான தம்பியா உன் கடமையை செய்வேன்னு பார்த்தா, நீ இப்படி பேசுற?... நல்ல வேளை அவன் இங்க இல்ல,.. இருந்திருந்தான்னு வை, உன்னை ஒரு வழி பண்ணியிருப்பான் நீ பேசினதுக்கு...

இல்லம்மா... அவன் முன்னாடியே அவன் கல்யாணம் நடக்குறதுல இருக்குற பிரச்சினையை பேசினது தான் ஒரு மாதிரி இருக்கு...

அப்படி எல்லாம் எதுவுமில்லை ஹரி... ஆரம்பத்துல எல்லாரும் மூடி மூடி தான் மறைச்சோம்... அப்பறம் அவனுக்கும் ஒருநாள் தெரிய தானே வேணும்னு முடிவெடுத்து ஆதி தான் அவனுக்கு தெரியப்படுத்தினான்... ஹ்ம்ம்... அதுக்குப் பிறகு அவனுக்கு அந்த கவலையே வராமல் ஆதி தான் இப்போ வரை பார்த்திட்டிருக்கான்... ஆனால், அவன் மனசுல இருக்குற கவலை எனக்கு மட்டும் தான் தெரியும்... தெரிஞ்சு என்ன பண்ண? என்னால எதுவுமே செய்ய முடியலையே ஹரி... என்றவர் கண்கள் கலங்க...

ஹரி அவரின் கைகளை பிடித்துக்கொண்டு... அம்மா... எல்லாருக்கும் ஆதி பொறுப்பென்றால், அவனுக்கு நான் பொறுப்பும்மா.... இனி சீக்கிரமே நம்ம வீட்டில் கெட்டிமேள சத்தம் கேட்கும்... என்று சிரித்தான்...

அவரும் அடுத்து செய்யவேண்டியவற்றை முடிவு செய்துகொண்டார்...

ஹரி... நீ மும்பைக்கு கொஞ்ச நாள் கழித்து தான் வருவேன்னு அப்பாகிட்ட சொல்லிட்டியா?...

அப்பா என்று சொன்னதுமே அவன் உடல் விறைத்தது... அதன் காரணம் அவருக்கு தெரியாதே... அவன் மௌனம் அவருக்கு எதுவோ சரியில்லை என்று உரைக்கும் முன், அவனே தன் மௌனத்தை கலைத்தான்...

ஆதி சொல்லியிருப்பான்மா... என்று கள்ளமில்லாமல் சிரித்தவனை பார்த்த அந்த தாயுள்ளத்தில் அவனுக்கென்றே நிறைந்த பாசம் பொங்கியது...

இப்படித்தான், அவனை முதன் முதலில் பார்த்தபோதும், சிரித்தான் ஹரி... அந்த சிரிப்பில் தான் அவருக்கு அவன் மீது எல்லையற்ற நேசம் உண்டானது... அதும் தாயில்லாப் பிள்ளை என்று தெரிந்த பின், மேலும் அந்த நேசம் பெருகியது...

அதை இப்போதும் கண்களிலும் முகத்திலும் பிரதிபலித்தவர், அவனை அருகே அழைத்தார்... பக்கத்தில் வந்தவனின் நெற்றியில் முத்தமிட்டு, என் கண்ணே பட்டுடும் போல இருக்கு... அவ்வளவு அழகா சிரிக்கிற ஹரி... இரு வரேன் என்று சொல்லி, மகனுக்கு திருஷ்டி கழித்தார்...

வன் கண்கள் குளமாக நிரம்பி, வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்த நேரம், அடடா, இங்க ஒரு படமே ஓடிருக்கே... மிஸ் பண்ணிட்டேனே... எல்லாம் இந்த அனு பிசாசுனால தான்.. சே... என்று சலித்துக்கொண்டே வந்தான் முகிலன்...

டேய்... இவ்வளவு நேரம் எங்கிட்ட வாங்கினது பத்தாதா உனக்கு?... என்று கையில் பூரிக்கட்டையுடன் வந்தாள் அனு...

அம்மா... அம்மா... பாருங்கம்மா... இந்த அனுவை... என்று தாயின் பின் மறைந்துகொண்டு செல்லம் கொஞ்சினான் முகிலன்...

டேய்... ஏழு கழுதை வயாசாகுது... இன்னும் என்ன அம்மா பின்னாடி போய் ஒளிஞ்சுக்குற?.... வாடா இங்கே...

போடி... நான் வரமாட்டேன்... வந்தா நீ அடிப்ப... இரு இரு என் மயூ கிட்ட சொல்லிக்கொடுக்குறேன் பாரு...

அடேங்கப்பா... அவகிட்ட சொல்லிட்டா மட்டும் என்ன பண்ணிடுவா மகாராணி... டேய்... போடா... இந்த பில்ட் அப் எல்லாம் இங்கே வேண்டாம்.... என்று அவள் நாத்தனார் சண்டைக்கு தயாரான போது, சரி சரி... அதெல்லாம் கல்யாணம் முடிந்த பின் பார்த்துக்கலாம்... முதலில் கல்யாணம் நடக்குறதுக்கு என்ன வழின்னு பாருங்க என்று கூறினார் கோதை....

ஹ்ம்ம்... கரெக்டா சொன்னீங்கம்மா... இப்போதான் நீங்க என் செல்ல அம்மா... என்றபடி அவரின் தோள் சுற்றி கைப் போட்டுக்கொண்டான் ஹரி...

ஹேய்... லூசு அனு... என்ன சொன்னியே... இங்கே பாரு... இவன் இன்னும் மாறவே இல்லை... என்ற முகிலன் அனுவிடம் கண்ஜாடை காட்டி ஹரியைப் பார்க்க சொன்னான்...

அதைப் பார்த்த அனு, சிரித்துக்கொண்டே, ஹாஹா... ஆமாடா தம்பி, இவன் எப்பவும் இப்படித்தான்... என்றாள் சிரிப்பை நிறுத்தாத வண்ணம்...

நான் என்ன செஞ்சேன் என்ற பாவனையில், ஹரி தன்னைப் பார்த்துக்கொள்ள, அவனுக்கும் சிரிப்பு உதித்தது தன் செயலை எண்ணி...

அவன் சிறுபிள்ளையிலிருந்தே இப்படித்தான்... கோதை எதாவது சொன்னால் போதும், உடனே, ஹ்ம்ம்... கரெக்டா சொன்னீங்கம்மா... இப்போதான் நீங்க என் செல்ல அம்மா... என்று சொல்லி அவரின் முந்தானை நுனியில் விரல் விட்டு சுற்றிக்கொள்வான்... பின் தன் விரலைச் சுற்றியுள்ள புடவையை எடுக்காமலே அவரின் விரல்களை பற்றிக் கொள்வான்...  

பின் அவனுக்கு போதும் என்று தோன்றும் வரையில் அவரின் கைகளை விடமாட்டான்... அவரும் சீக்கிரம் கைகளை உருவிக்கொள்ள மாட்டார்... ஆதி, முகில், ஹரி மூவருக்கும் பள்ளியில் வைத்து சாப்பாடு அள்ளித்தரும்போதும் சரி, வெளியில் எங்கேயும் சந்தித்துக்கொள்ளும்போதும் சரி, அவனின் இந்த பழக்கம் மட்டும் மாறவேயில்லை இப்போது வரை... வளர்ந்த பின், அவரின் தோள் சுற்றி கை போட்டுக்கொண்டான்...

வெகு நாள் கழித்து கோதையை சந்தித்ததும், அவனுக்குள் இருந்த நேசம் மீண்டும் வெளிவந்துவிட்டது...

நமட்டுச் சிரிப்புடன், தாயின் அருகில் நின்றிருந்தவனின் முகம் பற்றி அணைத்துக்கொண்ட கோதை, அவங்க கிடக்குறாங்க... நீ எப்பவும் எனக்கு செல்ல பையன் தான்... என்றபடி சிரித்துக்கொண்டார்...

ப்போது அங்கு வந்த ஆதி... ஹ்ம்ம்... டேய்... ஹரி... இதுக்குத்தான் உன்னை அடிக்கடி இங்கே வான்னு சொல்லுவேன்... நீ தான் மும்பையே கதின்னு அங்கேயே இருந்துட்ட... அம்மா உன்னை ரொம்ப தேடினாங்கடா... அவங்க புடவையில இப்படி விரல் சுத்தி, தோள் மேல கைப் போட்டுக்க என் செல்ல பையன் ஹரி இல்லைன்னு எத்தனை தடவை மனசுக்குள்ள ஏங்கியிருக்காங்க தெரியுமா?... என்று கேட்க,

என்னை தேடினீங்களாம்மா என்ற கவலையுடன், கோதையைப் பார்க்க, அவர் மௌனமாக வேறு புறம் திரும்பி கொண்டார்... அதுவே அவனுக்கு வேண்டிய பதிலை சொல்ல,

சாரிடா ஆதி... இனி அம்மாவ ஏங்க விட மாட்டேன்... என்று ஆதியிடம் சொல்லியவன், சாரிம்மா... இனி உங்களை கவலைப் படவிடமாட்டேன்... என்று அவர் இரு கைகளையும் பிடித்துக்கொண்டான்...

அடடா... இவங்க தொல்லை தாங்கலைப்பா... ஆனா ஊன்னா, சென்டிமெண்ட் சீன் கிரியேட் பண்ணிடுறாங்க..... என்று அலுத்துக்கொண்ட முகிலனின் தலையில் செல்லமாக தட்டினான் ஆதி...

நீ அடங்கவே மாட்டல்லடா... என்றபடி சிரித்த ஆதி, அம்மா... நீங்க கூப்பிட்டீங்கன்னு அவ்னீஷ் சொன்னான்... சொல்லுங்கம்மா... என்று கேட்டான் தாயிடம்...

நான் கூப்பிடவே இல்லையே என்றபடி அவர் முகிலனைப் பார்க்க, அவன், அச்சச்சோ அம்மா, தெரியாத மாதிரி முழித்து அவங்கிட்ட காட்டி கொடுத்துடாதீங்கம்மா... என்று கண்ஜாடையில் கெஞ்சியவன், அங்கே அந்த நேரம் ஆதியை தேடி வந்து கொண்டிருந்த அபியை காட்டி ஏதோ சைகை செய்தான்...

அவரும் புரிந்து கொண்டு, இல்லப்பா, வந்து, நீ வெளியே போகும் போது, அபியை ஸ்கூலில் விட்டுடுன்னு சொல்லுறதுக்கு தான் கூப்பிட்டேன்ப்பா...  என்று ஒருவழியாக சமாளித்துவிட்டார்...

அப்பாடா... தப்பிச்சோம்ப்பா... சாமி.... என்றபடி முகிலன் ஹரியைப் பார்க்க, அவன் கோதையின் கைகளை லேசாக அழுத்தினான்...

இதுக்காம்மா இவ்வளவு யோசனை... கூப்பிட்டு போறேன்மா...

இல்லப்பா... அவ ஸ்கூலில் இன்னைக்கு மீட்டிங்க்... நீ அவளை விட்டுட்டு கொஞ்ச நேரம் அங்க இருக்க வேண்டிய நிலை வரும்... அதான்...

பரவாயில்லைம்மா.. என் குட்டிமாவை விட, நேரம் எனக்கு பெரிசில்லைம்மா... என்றபடி சென்றுவிட்டான் பூஜையறைக்கு...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.