(Reading time: 26 - 51 minutes)

யூரியா?... அவங்க யாரு?... என்ற ஷன்வியின் கேள்விக்கு

அவங்க முகிலன் அண்ணாவோட வருங்கால மனைவி... என்றான் அவ்னீஷ்...

ஓ... அப்போ அவங்களுக்கு தெரியுமா ரிகா பற்றி எல்லாம்?...

ஹ்ம்ம்... இவங்க காதல் தெரியாது... ஆனா அவங்க வந்தா அண்ணிக்கு நியாபகம் வரலாமில்லை... ஏன்னா, மயூரி அண்ணி தான் ரிகா அண்ணி கூடவே இருந்தாங்க... அதனால அவங்க வரணும் சவி... என்றான் கவலை மிக...

முகிலன் சார் கிட்ட சொல்லி, அவங்ககிட்ட தகவல் சொல்லிட்டீங்களா??

இல்ல சவி... இனி தான் அண்ணன் பேசணும்னு சொன்னார்...

அப்புறம் என்னங்க... விடுங்க... எல்லாம் சரி ஆயிடும்...

ஹ்ம்ம்... அப்படித்தான் நம்புறோம் டா எல்லாரும்... என்று அவன் சொல்லி முடிக்கவும், அவனுக்கு முகிலன் அழைத்தான் போனில்...

என்ன அண்ணா சொல்லுங்க... என்று கேட்டவனிடம், ஆதியிடம் ஸ்கூலில் மீட்டிங்க் இருக்குன்னு சொல்லிட்டோம் டா... அதனால ஆதி அங்கே வரும்போது ரிகா அங்கே இருக்கும்படி ஷன்வியை பார்த்துக்க சொல்லிடு... என்றவன், ஆமா, நீ இன்னும் அங்கே தான் இருக்கியா?... சீக்கிரம் வந்துடுடா... பாய்... என்றபடி போனை வைத்தான்...

முகிலன் சொன்னதை ஷன்வியிடம் சொல்லிவிட்டு ஹ்ம்ம் உன்னை கஷ்டப்படுத்துறேனா சவி... என்று கேட்டான்...

லூசா வனீஷ் நீங்க?... அதெல்லாம் எதுவுமில்லை... நீங்க என்ன இல்லாத மீட்டிங்கையா உருவாக்க சொன்னீங்க... இருக்குற மீட்டிங்கில் அவங்க இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்க்குறபடி நான் பண்ணனும்... அவ்வளவு தானே... இது உங்க அண்ணன் சம்மந்தப்பட்டது மட்டுமில்லை... என் தோழி சம்மந்தப்பட்டதும் கூடத்தான்... சரியா... என்றவள் முகம் கோவத்தில் ஜொலிக்க,

ஹ்ம்ம்... கோபத்திலும் அழகா தாண்டி இருக்க.. என்றவன் அவள் பக்கம் நெருங்க...

போதும்... போதும்... கிளம்புங்க... என்றபடி அவனை தள்ளிவிட்டு ஓடி விட்டாள் அவள்...

டுத்த அரை மணி நேரத்தில் தயாராகணும் சீக்கிரம் கிளம்பு ஷன்வி எனக்கு தனக்குத் தானே சொல்லிக்கொண்டவள் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தாள்...

இவள் குளிக்கச் சென்ற நேரத்தில், வீட்டின் வாசலில் கார் நிற்க, பாட்டி வந்து பார்த்து விட்டு,

அடடே, வாங்க தம்பி... உள்ளே வாங்க... என்று உபசரித்தார்...

நான் உள்ளே போயி பார்க்குறேன் பாட்டி... என்று சென்றவன், அறைக்கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றான்...

உள்ளே சென்றவன் அப்படியே பிரமித்து தான் போனான்... ஏனெனில், அவன் தங்கையின் முகத்தில் என்றும் இல்லாத அளவு ஆனந்தம்... புது சுடிதார், இருபுறமும் கொஞ்சம் முடி எடுத்து கிளிப் போட்டு விரித்து விட்டிருந்தாள் தோகையென தன் கூந்தலை...

வாங்கண்ணா... வாங்க... என்று உபசரித்தவள், சாரிண்ணா... நான் உங்க போன் இப்போதான் பார்த்தேன்... சாரிண்ணா... என்றவள், அவன் இன்னும் தன்னை ஒரு அதிசயமாய் பார்ப்பதை உணர்ந்தவள், என்னண்ணா, என்னாச்சு.... ஏன் அப்படி பார்க்குறீங்க?... என்று கேட்டாள்...

ரிகா... உனக்கு எல்லாமே நியாபகம் வந்துட்டாடா?... நீ இவ்வளவு சந்தோஷமா இருக்குறதைப் பார்க்குறப்போ ரொம்ப நிறைவா இருக்குடா...

ஹாஹா... அய்யோ.. அய்யோ... நீங்க வேற, எனக்கு எதுவும் நியாபகம் வரலை அண்ணா... பட், நான் எதையோ தொலைச்ச மாதிரி சோகமா இருக்குற அளவுக்கு எனக்கு எதுவும் நடக்கலைன்னு தோணுச்சு....

இல்ல ரிகா... என்று அவன் பேச ஆரம்பித்த போது, இருங்கண்ணா... நான் சொல்லி முடிச்சிடுறேன்... என்று மீதியையும் தொடர்ந்தாள்...

என்னைக் கடத்தினவங்க, நான் சந்தோஷமா இருக்க கூடாதுன்னு எங்கிட்ட பொய் சொல்லியிருக்கலாமேண்ணா... நான் யாரையோ காதலித்தேன்னு... ஹ்ம்ம்... அப்புறம் என் உளறல், ராம் ராம் னு... அதானே அடுத்த உங்க சந்தேகம்... என்று அவள் விழியால் கேட்க, அவனும் ஆமாம் என்றான்...

இங்க பாருங்க அண்ணா... எனக்கு சின்ன வயசில இருந்தே ஸ்ரீராமர் என்றால் உயிர்... நான் அடிக்கடி அவர் பேரை தான் சொல்லிட்டிருப்பேன் எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்து... அதுவும் நான் தொட்டதுக்கெல்லாம் அவர் பேரை தான் சொல்லுவேன்... சோ ராம் நு நான் சொன்னது என்னைப் பொறுத்தவரைக்கும் கடவுள் தான் அப்படிங்கறது என்னோட அசைக்கமுடியாத நம்பிக்கை... அப்பறம், ஹ்ம்ம்.. அந்த அபி நேம்... ரைட்... என்னோட ஸ்ரீராமுக்கு அடுத்து நான் நேசிச்ச அடுத்த விஷயம் பரத நாட்டியம்... அதுல அபிநயம் கொண்டு வருவது லேசுப் பட்ட காரியம் இல்லைன்னு மத்தவங்க சொல்லி கேள்வி பட்டிருக்கேன்... நான் அரங்கேற்றம் பண்ணிணப்போ கூட என் ஃப்ரெண்ட்ஸ், என் குரு எல்லாரும் உனக்கு அபிநயான்னு பேரு வச்சிருக்கலாம் போல... உனக்கு அபிநயம் நல்லாவே வருதுன்னு சொல்லுவாங்க... கூடவே என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அபின்னு கூட என்னை கிண்டல் பண்ணியிருக்காங்க... ஹ்ம்ம்.. அடி மனசில பதிஞ்ச அந்த விஷயங்கள் தான் சுயநினைவு இல்லாத நாட்களில் நான் சொல்லியிருக்கேன்... சோ, இதுல எங்க இருந்து காதல் வந்துச்சு.. அதெல்லாம் என்னை கடத்தினவங்க, என்னை ஏமாற்ற செஞ்ச சதி... அதை நானும் நம்பி, எவ்வளவு நாள் சந்தோஷத்தை தொலைச்சிருக்கேன்,... சே... ஏன் ஷன்வி கூட, நேற்று இரவு, எங்கிட்ட வந்து அவ்னீஷின் அண்ணனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டா... நான் முடியாதுன்னு மறுத்துட்டேன்... காரணம் நான் ஒருத்தரை காதலிச்சேன்னு அவங்க சொன்ன பொய்யை நம்பி...  அப்புறம் தான் நைட் முழுக்க யோசிச்சேன்... சோ, எல்லாமே பொய் அப்படிங்கிற முடிவுக்கு வந்துட்டேன்... ஹ்ம்ம்... அப்பறம் ஏன் ஆதியையே நீ கல்யாணம் பண்ணிக்கக்கூடாதுன்னு நீங்க கேட்டீங்கன்னா, என்னோட பதில், எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்துக்க விருப்பமில்லை... இதற்கு மேலும் என்னிடம் கல்யாணப் பேச்சு பேசமாட்டீங்கன்னு நம்புறேன்... அப்புறம் இனி நான் ஹேப்பியா இருப்பேன்... நீங்க ஆசைப்பட்ட பட்டாம்பூச்சியா... சரிதானே அண்ணா...  என்றவள், அச்சச்சோ... மறந்தே போயிட்டேன் பாருங்க... எதும் சாப்பிட்டீங்களாண்ணா... இருங்க காபி கொண்டு வரேன்... என்றவள் மான் போல் துள்ளி செல்ல, ஹரியோ, தள்ளாடியபடி அங்கேயே அமர்ந்து விட்டான்....

என்ன சொல்கிறாள் இவள், இவளுக்கு நினைவு வரவில்லை சரி, ஆனால், அவள் அன்று உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வேளையில் சொன்னவை எல்லாவற்றிற்கும் இப்படி ஒரு காரணம் இவள் சொல்வது போல் இருக்க முடியுமா?..., எப்படி இது சாத்தியம்?...  இவள் முகத்தில் இத்தனை சந்தோஷத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லையே... இவள் ஆனந்தமாய் இருப்பதை பார்த்து நான் நிம்மதிதானே அடைய வேண்டும்... ஆனால் எனக்கு ஏன் உள்ளூற பயம் பரவுகிறது...??? என் தங்கைக்கு ....... என்று அடுத்த வார்த்தையை ஒரு மருத்துவனாய் யோசிக்கவே அவனுக்கு வலித்தது... எனில் அண்ணணாய் யோசித்தால்???...

இந்த நிலையில் இவள் ஆதியையோ, ஆதி இவளையோ பார்ப்பது சரியில்லை... என்று முடிவெடுத்தவன், சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து கிளம்பினான்...

காரில் ஏறிய உடனே முகிலனை தொடர்பு கொண்டு எவ்வளவு சீக்கிரம் மயூரியை வரவழைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வரவை என்றான்... மேலும் ரிகா அவனிடம் நடந்து கொண்ட முறையையும் தெரியப்படுத்தினான்... முகிலனும் மயூரிக்கு அழைத்தான் சற்றும் தாமதிக்காமல்...

முகில்... சொல்லுங்க... எப்படியிருக்கீங்க?... என்ற மயூரியிடம் அனைத்தையும் கொட்டியவன், அவளின் பதிலை எதிர்பார்த்திருந்தான்...

நான் உடனே வரேன்... என்றாள்... மயூரியும்...

நாமும் காத்திருப்போம்... மயூரியின் வரவை எதிர்நோக்கி...

இவர்களின் திட்டம் நிறைவேறுமா??... கோதை முடிவு செய்த அடுத்த வேலை என்ன?...  ரிகாவின் மாற்றம் ஹரிக்கு ஏன் பயத்தை கொடுத்தது?... மாற்றம் கொண்ட சாகரியை ஆதர்ஷ் பார்க்க நேர்ந்தால் என்ன ஆகும்???... மயூரி ஊட்டிக்கு வருவாளா?...  இதற்கெல்லாம் பதில் அடுத்தடுத்து வரும் வாரங்களில் சொல்கிறேன்.... ஹ்ம்ம்... மீண்டும் அடுத்த வார சீதை-ராம் காதல் நதியில் சந்திக்கலாம்...

தொடரும்

Go to episode # 18

Go to episode # 20

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.