(Reading time: 26 - 51 minutes)

ங்க பாருடி... இங்க... என்று ஷன்வியின் வீட்டு வாசலில் செடிகளின் மறைவில் நின்று கொண்டு மாடியில் இருக்கும் அவளிடம் கைஜாடை காட்டி போனில் பேசிக்கொண்டிருந்தான் அவ்னீஷ்...

அய்யோ... எங்க தான் இருக்குறீங்க... என்றபடி பார்வையை சுழற்றியவள் அவனைக் கண்டு கொண்டாள்...

ஹ்ம்ம்... பார்த்துட்டேன்.. இருங்க வரேன்... என்றபடி அவன் இருக்குமிடம் சென்றாள் மெல்ல யாருக்கும் தெரியாமல்...

செடிகளின் இடையில் நின்றிருந்தவனின் அருகே சென்றவள், உங்களை யாரு இப்போ வர சொன்னா?... ரிகா பார்த்தா அவ்வளவுதான்... பாட்டி வேற இருக்காங்க... என்ன நினைப்பாங்க?... என்றபடி அவனை முறைக்க...

ஏண்டி... ஒருத்தன் இந்த ஊட்டி குளிரில், காலையிலேயே கிளம்பி வந்துருக்கானே... என்ன ஏதுன்னு கேட்போம்னு தோணுதாடி உனக்கு?... அதை எல்லாம் விட்டுட்டு யார் வர சொன்னா?... என்ன நினைப்பாங்கன்னு கேட்டுட்டிருக்குற?... இங்க நான் குளிரில் விறைச்சிடுவேன் போல, என்னை கொஞ்சமாச்சும் நினைச்சு பார்த்தியாடி...?... பெருசா சண்டைக்கு வந்துட்டா?... நான் ஒன்னும் திருடன் இல்லடி... உன்னப் பொண்ணு பார்த்துட்டு போனவன், நமக்கு கல்யாணம் பேசி முடிக்க போறாங்க... அந்த நினைப்பாவது உனக்கு இருக்கா இல்லையா???... என்றவன் அவள் அமைதியாக இருக்கவும், ஹ்ம்ம்.. ஹ்ம்ம்... இது சரி வராது நான் கிளம்புறேன் என்றபடி நகர்ந்தவனின் கைகளைப் பற்றியவள்,

வனீஷ்... சாரி... ப்ளீஸ் கோபம் வேண்டாமே.... என்றாள் கண்களில் கெஞ்சுதலோடு...

அவளின் கை கொடுத்த ஸ்பரிசம், அவளின் வனீஷ் என்ற அழைப்பு, அவளின் கெஞ்சல் எல்லாமே அவனை தடுமாற வைத்தது...

அவள் அந்த தடுமாற்றத்தை உணர்ந்தாலோ என்னவோ, அவனின் கை விடாதபடி, பின்புறமிருந்த தோட்டத்தின் வழியே அந்த அவுட்-அவுசிற்குள் அழைத்துச் சென்றாள்...

நீண்ட நெடிய மூச்சுக்களை விட்டு, அப்பாடா யாரும் பார்க்கலை.. என்றவள் அப்போது தான் தன் எதிரே தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் அவ்னீஷின் பார்வையில் இடம் பொருள் மறந்தாள்...

அவன் அவள் அருகில் நெருங்கி வர, அவள் மெல்ல பின் நகர்ந்தாள்... அவனின் குறுகுறு பார்வை அவளை எதுவோ செய்தது...

அவள் பின் நகர, நகர, அவன் முன்னே தொடர்ந்து சென்றான்... ஒரு கட்டத்தில் செல்ல இடமில்லாது அவள் சுவற்றை ஒட்டி நிற்க, அவளை நெருங்கி நின்றவன், தன் இரு கையையும் அவள் இருபுறமும் ஊன்றி அவளை மேலும் திக்குமுக்காட வைத்தான் அவ்னீஷ்...

மெல்ல அவள் புறம் சாய்ந்தவனின் மார் மீது கை வைத்து தள்ள முயற்சித்தாள் அவள்... மலர் தள்ளி மலை சாய்ந்திடுமா என்ன?...

அவன் சற்றும் அசையாதிருந்திருந்தான்... ப்ளீஸ் வ......னீ.......ஷ்... வே.......ண்....டாம்.... என்று அவள் ஒருவழியாக சொல்லிவிட,

அவளையேப் பார்த்திருந்தவன், கலகலவென்று நகைத்தான்... பின், இதற்கு தான் இப்படி எல்லாம் செய்தேன் என்றான்... 

அவள் குழப்பமாய் பார்க்க, சவி செல்லம், நீ இப்போ என்னை எப்படி கூப்பிட்ட?... அந்த ஸ்பெஷல் பெயருக்குத்தான் இத்தனையும்.... என்றான் கண்ணடித்தப்படி...

அவன் காதல் சொல்ல நொடியிலிருந்து அவள் அவனை தனிமையில் அப்படி தான் அழைத்துக்கொள்வாள் மனதிற்குள்...  இன்று அதை வெளியே அவனிடமே சொல்லியதில் அவளுக்கு வெட்கம் உண்டானது...

அவளின் வெட்கத்தில் சற்று கரைந்தவன், ஹ்ம்ம்... என்னை ஏண்டி இப்படி பண்ணுற?... என்று கேள்வி கேட்டான் அவளிடம்...

நான் என்ன பண்ணினேன் என்ற பாவனையில் அவள் முகம் நிமிர்த்த,

ஹ்ம்ம்... சொல்லவா சவி... என்றவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி அவள் விழிகளுக்குள் பார்க்க, அவள் விழியோ காதல் ரசத்தை பொழிந்தது... இப்படி நீ பண்ணினா என்னால எப்படி சவி.... என்னால முடியலைடி... என்றவன் வார்த்தைகள் உள்ளே போக...

மௌனமாய் விழி தாழ்த்தியவள் அவனை இறுக அணைத்துக்கொண்டாள்... அவனுக்கு உவகையா அதிர்ச்சியா பரவசமா... தெரியவில்லை... புரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை அவன்... அவனும் அவளை தழுவிக்கொள்ள, அப்படியே நின்றிருந்தனர் இருவரும்...

பூஜை வேளை கரடியாக, அவ்னீஷின் கைப்பேசி சிணுங்க, பட்டென்று பதறி விலகினாள் ஷன்வி... அவளை கைப்பிடித்து நிறுத்தியவன், சே... யாருடா.. இந்த நேரத்துல, மனுஷனை நிம்மதியா காதலிக்க கூட விடாம... என்றபடி போனை பார்த்தவன் முகத்தில் ஈயாடவில்லை..

என்னடா எங்க இருக்குற?....

ஷ... ஷ..ன்..... வி வீட்டில் தாண்ணா...

ஓ... காலையிலேயே வீட்டிற்குள் கூப்பிட்டு வச்சு உபசரிக்கிறாங்களா பாட்டி உன்னை...

அய்யய்யோ இல்ல அண்ணா, பாட்டிக்கு தெரியாது நான் வந்தது... பின்னாடி தோட்டத்தில்.... ஷன்வியும் நானும்...

டேய்.... உன்னை அங்க போய் என்ன செய்ய சொன்னோம்... நீ என்ன செஞ்சிட்டு இருக்குற?...

அய்யோ... அண்ணா நாங்க சும்மா பேசிட்டு தான் இருக்குறோம்...

ஹ்ம்ம்... யாரு நீ?... நம்பிட்டேண்டா ஈஷ் ராசா... சரி உன் காதல் வேலையோட சேர்த்து நீ போன வேலையும் முடிச்சிட்டு வா... அப்புறம் மகனே, இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆகலை... சோ... அண்ணன் பேரை காப்பாற்றுடா... சரியா...

கண்டிப்பா காப்பற்றுவேன் அண்ணா... கவலையேப் படாதீங்க...

ஹ்ம்ம்... சரிடா.. சீக்கிரம் வந்துடு வீட்டுக்கு...

ஹான்... என்ன அண்ணா... டவர் கிடைக்கலை... நான் அப்பறம் பேசுறேன்...

டேய்... டேய்... நடிக்காதடா... பேசி முடிச்சிட்டே வந்து தொலை... பட் சீக்கிரம் வந்து சேர்...

சரிண்ணா...

ஹ்ம்ம் இது மட்டும் உனக்கு கேட்டுச்சு போல... டவர் அதுக்குள்ளயா கிடைச்சிட்டு... படவா... என்று சிரித்தபடி போனை வைத்தான் முகிலன்...

யாருங்க... போன்ல.. என்ற கேள்விக்கு முகிலன் என்று பதில் சொன்னவன், உங்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும் சவி என்றான்...

என்னங்க சொல்லுங்க... என்றவளிடம், விலாவாரியாக இல்லாவிட்டாலும், ரத்தின சுருக்கமாக சொல்லாமல், ஓரளவு தெளிவாகவே சொல்லி முடித்தான் ரிகாவைப் பற்றி...

வனீஷ் என்னால நம்பவே முடியலை... ரிகா லவ் பண்ணது ஆதி சாரையா?... ஆனா அவ எதுக்காக பிரிஞ்சா அவரை?... ஏன்?... ஹ்ம்ம்... ஹரீஷ் அவளுக்கு அறிமுகம் ஆனது அவளோட விபத்தில் தானா?... நல்ல வேளை அவளைக் காப்பாற்றி என்கிட்ட ஒப்படைச்சார்... தேங்க் காட்... என்றவள், ஆனா வனீஷ், அவ ஏன் ஆதி சாரைப் பிரிஞ்சான்னு எப்படி கண்டுபிடிக்கிறது... அவளும் தன்னோட மொத்த நியாபகத்தையும் தொலைச்சிட்டாளே... இனி என்ன பண்ணுறது?... என்று வருத்தத்துடன் அவள் கேட்க, அவன் ஒரே வார்த்தையில், பதில் சொன்னான் மயூரி என்று...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.