(Reading time: 21 - 42 minutes)

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் – 08 - புவனேஸ்வரி கலைச்செல்வி

வனும் சென்றுவிட்டானா ?? இப்போது நான் என்ன செய்வேன் ?? வெளியில் அவன் இன்னும் நிற்பானே " என்று என்று எண்ணி மேசை மீது சாய்ந்து அழுதாள் ... அப்போது மீண்டும் செல்போன் சிணுங்கவும் இயலாமையில் அதை பார்த்தவள், சட்டென போனை தூக்கி எறிந்தாள் .... ( அய்யயோ போன் போச்சே ... கவலை வேணாம் அது ஸ்மார்ட் போன் இல்ல .. நோக்கியா போன் தான் ... )

அவள் போனை எறிந்த வேகத்தில், பேட்டரி, சிம் என்று தனித்தனியாய் சிதறியது அவளின் கைப்பேசி .. சிதறி விழுந்தது சாட்சாத் கதிரேசனின் காலடியில்தான் ... ஆம், அவளின் அழுத முகத்தை பார்த்தவனுக்கு அவளை அப்படியே விட்டு செல்ல மனம் வரவில்லை ...

" அவள் தான் உன்னிடம் உதவி கேட்கவில்லையே ? ", " கேட்டால்தான் உதவ வேண்டுமா ? " , " ஒரு பெண்ணிடம் நீ அவமானப்பட்டு நிற்க போகிறாய் !!", " இருக்கட்டும் உதவி செய்வது எனது இயல்பு .. அது ஆணாய் இருந்தால் என்ன பெண்ணாய் இருந்தால் என்ன ? " ...... இப்படி தன் மனதிற்குள் எழுந்த வாதங்களையும் பிரதிவாதங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு மீண்டும் காவியதர்ஷினியை காண வந்தவன், அவள் கோபத்துடன் செல்போன் தூக்கி எறிவதை பார்த்து ஸ்தம்பித்து தான் போனான் .. இதுவரை அவளிடம் அவன் நேரடியாக பேசவில்லை எனினும் தன்னோடு பனி புரிபவலை பற்றி கொஞ்சம் கூட அறியாதவன் இல்லை கதிர் .. அதுவும் காவியா அவனை பின்தொடர்ந்து தான் வந்தாள் என்று என்னும் பலரோ அவன் தடுத்தாலும் விடாமல் அவளைப் பற்றி அவ்வப்போது பேசுவதும் வழக்கமே . இதுவரை கேள்வி பட்ட வரையில் அவள் வேலையில் திறமையானவள், தோற்றத்தில் அமைதியானவள் அவ்வப்போது துடுக்கு தனமாய் பேசுவாள், எப்போதும் கண்ணில் சோகம் கொண்டவள், அதிகநேரம் வேலை செய்பவள். ஆனால் இப்படி செல்போனை தூக்கி எரியும் அளவிற்கு என்ன கோபம் அவளுக்கு ?? சிந்தனையுடன் அந்த போனை சரி செய்து அவளருகில் வந்தாள் ...

Ithanai naalai engirunthai

" தர்ஷினி ......."

அத்தனை துன்பத்திலும் கனிவான குரலில் அவன் அவளை அழைத்தது அவளின் உயிரை தொட்டது .. மின்னும் விழிகளுடன் நிமிர்ந்தாள் காவியதர்ஷினி.

" எ .... என்ன கூப்பிட்டிங்க ? "

" தர்ஷினி ?? உங்க பேரு காவியதர்ஷினி தானே ??"

" ம்ம்ம்ம் ஆமா "

" உங்க போன் " என்றபடி அவளின் செல்போனை நீட்டினான் கதிர் .. எதுவும் பேசாமல் சோர்வுடன் அதை வாங்கிக் கொண்டாள் ...

" ஏதும் பிரச்சனையா ?? "

" ..."

" உங்க விஷயத்தில் தலையிடனும்னு கேட்கல தர்ஷினி ."

" தெரியும் கதிர் " அவள் உரிமையாய் கதிர் என்று அழைத்ததும் புருவம் உயர்த்தி பார்த்தான் கதிர் ..

" சாரி உங்க பேரு கதிரேசன் தானே .. சாரி அது வந்து " என்றவளின் குரல் கம்மிவிட்டது .. கண்களை நாலாபக்கமும் உருட்டியவலை பார்த்து மிருதுவாய் புன்னகைத்தான் கதிர் ..

" ரிலாக்ஸ் தர்ஷினி .. நான் ஒன்னும் தப்பா நினைக்கல .. சரி உங்க பிரச்சனையை நீங்க சொல்ல வேணாம் .. நான் வீட்டுக்கு போக போறேன் .. நீங்களும் வர்றிங்களா ? "

" அ .... அது .... இல்ல நான் இங்கயே "

" தங்கிக்க போறிங்களா ? "

" இல்லை .. இல்லை .... "

அதற்குள் மறுபடியும் மெசேஜ் வந்தது ..

அதை படித்தவள் என்ன நினைத்தாளோ அதை அப்படியே கதிரிடம் காட்டினாள் ...

" யாரு இது .. ?"

" அத்தை பையன் "

" உங்க சொந்தம் தானே ? அப்பறம் என்ன ? "

" ..."

" இவருக்காக தான் போகாமல் இருக்கிங்களா ? "

" இவன்னே சொல்லுங்க ... அவனுக்கு மரியாதையை தான் ஒரு கேடு .. சரியான பொறிக்கி " என்று பற்களை கடித்தாள் காவியா ..

" அதான் கோபம் வருதுல .... இங்க ஏன் நிற்குற போடா நு தைரியமா சொல்லிட்டு போங்க "

" சொன்னா உடனே போற ஆளா அவன் .. சரியான டாச்சர் .. தினம் தினம் இவன் கிட்ட இருந்து செத்து பிழைப்பதே என் வேலையா போச்சி .. "

" சரி உங்க வீட்டுல சொல்லுங்க "

" .... "

" என்னம்மா ??"

" வீடு இருக்கு .. ஆனா அங்க எனக்குன்னு யாருமே இல்ல கதிர் " என்றவள் தன்னிரக்கத்தில் அழுதாள் ..

" அப்பா .. அம்மா ??"

" தவறிட்டாங்க "

சொல்லும்போதே அதிர்ந்தது அவள் உடல் .. அதை அவனும் கவனிக்காமல் இல்லை .. ஏனோ அவளின் வேதனையை அவனால் தாங்க முடியவில்லை .. கண்களை ஒரு கணம் இறுக மூடி தன்னைத்தானே ஆசுவாசப் படுத்தி கொண்டான் .. வேண்டுமென்றே பேச்சை மாற்றினான் ..

"அப்படினாத்தான் தைரியசாலியா இருப்பாங்க ... நானே ராஜா .. நானே மந்திரி மாதிரி ... நான் கூட என் குடும்பத்தோடு இருந்தப்போ கொஞ்சம் சாது தான் ... ஆனா இங்க வந்ததும் சேது மாதிரி ஆகிட்டேனே ... ஆமா உங்க அத்தை பையன் பேரென்ன ?? இராவணன் ஆ ? இல்ல கம்சனா ? "

" ம்ம்ம்ம்? நரகாசுரன் " என்றாள் விடுக்கென ..

" நைஸ் நேம் .. சரி இங்க வாங்க " என்றபடி ஜன்னலோரம் நடந்தான் கதிர் ...

" அந்த நரகாசுரனை எனக்கு இங்க இருந்தே அடையாளம் காட்டுங்க " என்றான் ..

ஆறடி உயரத்தில் பயில்வான் போல கீழே நின்றிருந்தான் ஒருவன் .. அவனை கை காட்டி

" இவன்தான் குணா .. " என்றாள் ..

" இவனா ??? ம்க்கும்ம்ம்ம் நான் கூட தனுஷ் சைஸ் ல ஒருத்தனை காட்டுவிங்க, அவனை ரெண்டு தட்டு தட்டிட்டு உங்களை காப்பாத்தலாம் நு பார்த்தா, இவனை காட்டுறிங்க ?? இவன்கிட்ட சண்டை போட்டா இன்னும் ஒரு மாசத்துக்கு நானே எழுந்திரிக்க மாட்டேன் போலவே " என்றான் போலியான பயத்துடன் .. அதை அவளும் அறியாமல் இல்லை .. கதிர் மட்டும் என்ன சுண்டைக்காயா ?? ஆறடி உயரம் இல்லை என்றாலும் சராசரி உயரம், கட்டு மஸ்தான உடல்வாகு, பெண்கள் மயங்கும் ஆண் அழகன்தான் .. அதிலும் கண்களில் தைரியத்தையே அறிதாரமாய் பூசியவன் ..

" இவனுக்கு பயம்மா ??" தனக்குள்ளேயே கேட்டு சிரித்து கொண்டாள் காவியா ..

" என்ன சிரிப்பு ??"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.