(Reading time: 20 - 40 minutes)

ரு வாரத்திற்குப் பிறகு,

அம்மா... இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு.. இதோ பக்கத்தில் இருக்குற இடத்திற்கு கூட்டிட்டு போறீங்க... இதுக்கு எதோ சுற்றுலா போற எஃபெக்ட் எல்லாம் கொடுக்காதீங்க... என்று சலித்துக்கொண்டே வந்தாள் அனு...

உன்னை இவ்வளவு தூரம் கூட்டிட்டுப் போறதே பெரிய விஷயம் அதைப் புரிஞ்சிகிட்டு பேசுடி முதலில்... என்றான் முகிலன் அவளை வம்பிழுத்தபடி...

ஹ்ம்ம்...கும்.... என்ன சொன்ன முகிலா நீ இப்போ?... என்றபடி தொண்டையை செருமினான் ஷ்யாம்...

அய்யய்யோ... மாமா பக்கத்தில் இருக்கும்போது அவளை கலாய்ச்சிட்டோமே... இப்போ இவர் களத்துல இறங்கிடுவாரே உடனே... ஹ்ம்ம்... ஹ்ம்ம்... இவரை இறங்க விடாம சமாளிப்போம்... என்றபடி மனதினுள் சொல்லிக்கொண்டவன்,

ஹிஹி...மாமா... நீங்க பக்கத்துல இருந்தா அக்காவுக்கு டூர் எல்லாம் எதுக்கு?... உங்களை சுற்றி வரதுக்கே நேரம் அவளுக்கு சரியா இருக்கும்... அத தான் சொன்னேன்... வேற ஒன்னுமில்லை... ஹிஹி... என்று அவன் சொல்லி முடிக்கவும், சீ போடா... அரட்டை... என்றவள் கணவணை காதல் நிரம்ப பார்த்தாள்... அவன் மட்டும் சும்மா இருப்பானா என்ன?... ஷ்யாமும் பதிலுக்கு பார்த்து வைக்க, ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. நாங்களும் இங்க தான் இருக்குறோம்... என்றான் முகிலன்...

நீ அந்த காரில் வா... என்றபடி அவனை துரத்தினார் கோதை சிரித்துகொண்டே...

கோதை, சுந்தரம், மற்றும் அபி ஒரு காரிலும், அனு-ஷியாம் ஒரு காரிலும், ஆதி, முகிலன், ஹரி, ஈஷ் ஒரு காரிலும் கிளம்பினர்...

போகும் வழியில் கோவிலுக்கு போகணும் என்று கோதை சொன்னதற்கேற்றவாறு கோவிலின் முன் வண்டியை நிறுத்தினான் ஆதி... அனைவரும் இறங்கி சாமிகும்பிட்டுவிட்டு கிளம்பும் தருவாயில், அங்கே செல்லம்மாள் பாட்டியைக் கண்டார் கோதை...

அவரிடம் நலம் விசாரித்துவிட்டு பாட்டியை வீட்டில் விட சென்றவர், அங்கே இருந்த ஷன்வியையும் சாகரியையும் கூடவே அழைத்துச் செல்ல விருப்பம் காட்டினார் கோதை.. அபியும் அவர்கள் இருவரும் வரவேண்டுமென்று அடம்பிடிக்க, வேறு வழியில்லாது இருவரும் கிளம்ப, பாட்டியையும் உடன் அழைத்துக்கொண்டு கிளம்பினார் கோதை...

இதன் பின்னனியில் ஒரு ரகசியமும் உண்டு... கோதையும் பாட்டியும் சேர்ந்து ஏற்பாடு செய்தது தான் இந்த ஊர் சுற்றிப் பார்க்கும் திட்டம்..

கோவிலில் இருந்து ஆதியையும் அனுவையும் முன்னாடியே அனுப்பிவிட்டு கோதை மட்டும் தான் இவர்களை கூப்பிட வந்தார்... இப்போது சாகரியை ஆதர்ஷ் பார்த்தால் என்ன நடக்கும்???... வாங்க நாமும் போய் பார்க்கலாம்...

டேய்... மச்சான்... எங்கடா கூட்டிட்டுப் போற நீ?... – முகில்

சுற்றிப்பார்க்க தானே போயிட்டிருக்கோம்... அப்புறம் என்னடா இது லூசுத்தனமான கேள்வி... – ஹரி...

டாக்டர் தம்பி... ரொம்ப அறிவாளி தான் நீங்க... சுற்றிப் பார்க்க போறோம்னு அபிகுட்டிக்குக் கூட தெரியும்... நான் அந்த சுற்றிப்பார்க்குற இடத்தைப் பற்றிதான் கேட்டேண்டா லூசு... - முகில்

ஓ... நீ அதை கேட்டியா?... --ஹரி

ஹ்ம்ம்... நேரம்டா... இந்த லட்சனத்துல நீ எல்லாம் டாக்டர்னு வேற ஊருக்குள்ள நம்புறாங்க... கொடுமைடா... மச்சான்... --முகில்

ஹாஹா... காமெடியா பேசுற மச்சான் நீ...

யாரு நான்.. காமெடியாவா?... அடேய்... இருக்குற கடுப்பில் கொலைகாரனா மாத்திடாத... அவ்வளவுதான் சொல்லிட்டேன்...

அட நீ ஏண்டா இவ்வளவு அலுத்துக்குற?...

பின்ன என்னடா அப்போதிலிருந்து கேட்குறேன்ல எங்கே போறோம்னு எவனாச்சும் சொல்லுறீங்களாடா?... என்று நிஜமாகவே ஆதங்கப்பட்டான் முகிலன்...

டேய்... இப்போ என்னடா பிரச்சினை உனக்கு... பேசாம வாடா... என்று சத்தம் போட்டான் ஆதி...

ஹ்ம்ம்... ஹ்ம்ம்... எனக்கென்னவோ நீ பிளான் பண்ணுற மாதிரி தெரியுது ஆதி... -முகில்

பிளானா... என்ன பிளான் அண்ணா?... –அவ்னீஷ்...

யாரு ஈஷ் தம்பியா... வாங்க தம்பி... வாங்க... என்னடா இன்னும் உங்களை காணோம்னு பார்த்தேன்... வந்துட்டீங்களா... வாங்க... - முகில்

ஹாஹா அண்ணா... எனக்கெதுக்கு மரியாதை எல்லாம்... போதும் புகழாதீங்க... வெட்கமா இருக்கு... என்றான் ஈஷ்....

டேய்... அவனை என்ன வேணாலும் செய்ய சொல்லு.. இந்த வெட்கம் மட்டும் பட சொல்லாத... தாங்க முடியலை என்னால... என்று அழாத குறையாக சொன்னவனைப் பார்த்து சிரித்தனர் மற்ற மூவரும்...

மனுஷங்களாடா நீங்க எல்லாரும்... ஒருத்தன் அழறேன்... நீங்க சிரிக்குறீங்க... அடுக்குமாடா இது உங்களுக்கே... – முகில்

பின்ன நீ பண்ணுறதெல்லாம் பார்த்தா சிரிப்பு தான் வருது... வேற என்ன செய்ய சொல்லுற மச்சான் எங்களை?... என்றான் ஹரி பெரிசாக சிரித்துக்கொண்டே...

சரியா சொன்னீங்க அண்ணா... என்று அவ்னீஷும் ஹரிக்கு சப்போர்ட் செய்ய, ஆதி தான் முகிலனுக்கு துணை வந்தான்...

டேய்... நீங்க கொஞ்ச நேரம் சும்மாயிருங்கடா... என்றவன், நீ சொல்லுடா மச்சான்... எதோ பிளான் என்று சொன்னியே... என்ன அது?... -ஆதி

நீ தான் நல்லவன் மச்சான்... ஆயிரம் அடிச்சாலும் புடிச்சாலும் ஃப்ரெண்டை காப்பாற்ற குதிச்சிட்ட பார்த்தியா களத்தில...  என் நண்பேண்டா... என்றவன் அவன் தோளில் கை வைத்து அழுத்தினான் முகிலன்...

சரி சரி... பிட் போடாம சொல்ல வந்ததை சொல்லு... என்றான் ஹரி...

பொறுக்காதே உனக்கு... நான் கொஞ்சினா... என்றவன், அது வேற ஒன்னும் இல்லடா டாக்டர், ஆதி பேசாம வா வான்னு சொன்னதை பார்த்தப்போ, எனக்கு வாராய் நீ வாராய், போகுமிடம் வெகுதூரமில்லை... நீ வாராய்... பாட்டு மனசுல வந்துச்சு... அதான்... என்று அவன் சொல்லிமுடித்தபோது,

அவ்வளவுதானே மச்சான்... ஒன்னும் கவலைப் படாதே... உன் ஆசையை நான் நிறைவேற்றுறேன்... என்றபடி காரை அந்த பள்ளத்தாக்கின் அருகே கொண்டு சென்றான் ஆதி...

கலவரத்துடன் முகிலன் அவனைப் பார்க்க, அவன் வெகு சாதாரணமாக வாராய்... நீ வாராய்... என்று பாடினான்...

டேய்.... வேண்டாம்... மச்சான்... நான் பாவம்... என்று அவன் கெஞ்சியதை யாருமே பொருட்படுத்தவில்லை... கடைசியில் அவன் மயூரியின் பெயர் எடுக்க, போனால் போகிறதென்று விட்டனர் அவனை மற்ற மூவரும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.