(Reading time: 20 - 40 minutes)

வெண் புகை படர்ந்து வானத்தை மறைத்து குளு குளு தென்றல் காற்று மேனியெங்கும் தழுவி, லேசாக நடுங்க வைக்கும் குளிர் உடலை தொட்டுச் செல்ல, அந்த நதிக்கரையின் மேல் நின்று கைகளை பரபரவென்று தேய்த்துக்கொண்டிருந்தான் ஆதர்ஷ்...

தண்ணீரில் கைகளை விட்டு அலைந்தவன், அதன் சுகத்தில் லயித்தான்... இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டிருந்தவன் கண்களை மேலும் அசைக்க முடியாத வண்ணம், நீரில் ஒரு முகம் தெரிந்தது... அது சாட்சாத் அவனின் காதலி முகம் தான்...

நதி நீரில் அவள் உருவம் பிம்பமாய் தெரிந்தது... அவனுக்கு ஏனோ உவகையாய் இருந்தது... தன் காதலி கடல் இளவரசி மட்டுமல்ல, நதியும் தானோ என்ற கேள்வியும் அவனுக்குள் எழுந்தது... நதியும் இவளும் ஒன்று தான்... அதன் காரணம் அவன் அறியாததா என்ன?...

தான் என்றுமே அந்த நதியின் கரை தான் என்று எண்ணிக்கொண்டான்...

எல்லோரும் அமர்ந்து பேசி சிரித்து மகிழ்ந்த வேளை, ஆதியை பாட சொன்னார்கள் அனைவரும்... அவன் சரி என்று தலை அசைக்க, அவன் கையில் ஒரு கித்தார் கொடுத்தனர்...

அதை இசைத்தபடியே அவனும் பாடினான் அழகாய் அவனின் காதலியை மனதில் நினைத்தவாறு நதிக்கரையின் அருகில் நின்று கொண்டு...

“தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா...”

என்று அவன் ஆரம்பிக்கும்போதே அபி எழுந்து ஆட ஆரம்பிக்க, குட்டி குட்டி ஜதியை அபி மறந்துவிட, ரிகா அவளுக்கு சைகையில் நியாபகப்படுத்தினாள்.... நீ தான் நல்லா பரதம் ஆடுவியே ரிகா... நீயும் ஆடேன்... என்று கோதை கேட்க அவளுக்கு மறுக்க தோன்றவில்லை... அனைவரும் உற்சாகப்படுத்த, தன் துப்பட்டாவை எடுத்து சேலையாகக் கட்டிக்கொண்டு, ஆட ஆரம்பித்தாள்...

“நதியே நதியே காதல் நதியே...

நீயும் பெண் தானே...

அடி நீயும் பெண் தானே...

ஒன்றா இரண்டா காரணம் நூறு...

கேட்டால் சொல்வேனே...

நீ கேட்டால் சொல்வேனே...”

அவன் குரலுக்கு அவள் ஆடினாலா இல்லை அந்த வார்த்தைகளுக்கு அவள் ஆடினாலோ யாருக்கும் தெரியவில்லை... அவளை விட்டு மற்றவர்களால் கூட பார்வையை அசைக்க முடியவில்லை... எனில் ஆதர்ஷின் நிலையை கேட்கவா வேண்டும்???...

“தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா...”

மீண்டும் அபி எழுந்து அந்த தீம்தனனாவிற்கு மட்டும் ஆட, அனைவரும் குட்டிப்பெண்ணை கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்கள்...

“நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ...

சமைந்தால் குமரி... மணந்தால் மனைவி... பெற்றால் தாயல்லோ...

சிறு நதிகளே... நதியிடும் கரைகளே... கரைதொடும் நுரைகளே...

நுரைகளில் இவள் முகமே...”

வரிகளை அனுபவித்துப் பாடினான் ஆதர்ஷ்... ஆம்... அவனின் சீதையும் ஆறு, கடல் அனைத்தையும் உள்ளடக்கியவள் தானே...

“தினம் மோதும் கரை தோறும்... அட ஆறும் இசை பாடும்...

ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே...

கங்கை வரும் யமுனை வரும்... வைகை வரும் பொருணை வரும்...

ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே...”

என்று ஹரி, அவ்னீஷ், முகிலன் ஆகிய மூவரும் பாடிக்கொண்டு, ஆடிக்கொண்டிருந்தனர்... ஆதிக்கு சற்று ஓய்வு கொடுக்கிறார்களாம்... ஹ்ம்ம்...

ஆனால் சாகரி மட்டும் ஆடுவதை நிறுத்தவில்லை... அழகாக ஆதர்ஷ் இசைக்கு நடனமாடினாள்... அந்த நேரம் சட்டென்று அவள் பிரிவு நினைவு வர, அதன் பின் அவளைச் சார்ந்த ஒவ்வொன்றும் நினைவு வர,

“காதலி அருமை பிரிவில்... மனைவியின் அருமை மறைவில்...

நீரின் அருமை அறிவாய் கோடையிலே...

வெட்கம் வந்தால் உறையும்... விரல்கள் தொட்டால் உருகும்...

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே...

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம்... ஓஹோ...

தண்ணீர் கரையில் முடிக்கிறோம்... ஓஹோ...”

இதில் ஓஹோ மட்டும் சத்தமாக போட்டனர் நம்ம முகில், ஹரி, ஈஷ் டீம் காதருகில் ஒரு கையை வைத்து மறுகையை காற்றில் சுழற்றியபடி...

அடுத்த தீம்தனனாவை ஆதியுடன் சேர்ந்து மூவருமே பாடி ஆடி, அபியை தூக்கி சுற்றினர்...

சாகரியின் அபிநயம் அவளுக்கு கலை சேர்க்க, ஆதர்ஷ் மெய்மறந்து பாடினான்...

“வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே...

வளைவுகள் அழகு...

உங்கள் வளைவுகள் அழகு...

ஹோ... மெல்லிசைகள் படித்தல்... மேடு பள்ளம் மறைத்தல்...

நதிகளின் குணமே...

அது நங்கையின் குணமே...”

அவள் அவனை நிமிர்ந்து பார்த்து வெட்கம் கொள்ள, ஆதர்ஷ் தன் கட்டுப்பாட்டை இழந்தான் முற்றிலும்... அவளுக்கு சற்றே இடைவெளி விட்டு நின்றவன்,

“தேன் கனியில் சாராகி... பூக்களிலே தேனாகி... பசுவினிலே பாலாகும் நீரே...

தாயருகே சேயாகி... தலைவனிடம் பாயாகி... சேயருகே தாயாகும் பெண்ணே...

பூங்குயிலே பூங்குயிலே... பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்...

நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக்கூடும்...”

உண்மையில் ஆதர்ஷ் கரைந்து தான் போனான் அவளிடத்தில் கொஞ்சம் கூட மிச்சமில்லாது...

சட்டென்று அனைத்தையும் மறந்து அப்படியே நின்றவன், அவளை மட்டும் பார்த்து, இருகை விரிக்க, அவள் செய்வதறியாது சிலையென நிற்க, மற்றவர்கள் அனைவரும் கேள்வியுடன் ஆதர்ஷைப் பார்க்க, ஹரியின் ஆதி என்ற அழைப்பில் சுயநினைவுக்கு வந்தவன், அனைவரின் பார்வையும் தன் மேல் இருப்பதைக் கண்டு கொண்டவன், விருட்டென்று நதியின் புறம் திரும்பி கொண்டு,

“நதியே நதியே காதல் நதியே

நீயும் பெண் தானே... அடி நீயும் பெண் தானே...

ஒன்றா இரண்டா... காரணம் நூறு..

கேட்டால் சொல்வேனே... நீ கேட்டால் சொல்வேனே...”

என்று அவன் பாடவும், அவனையும் இழுத்துக்கொண்டு தீம்தனனா பாடி ஆடி முடித்தனர் நம்ம மூவர் டீம்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.