(Reading time: 20 - 40 minutes)

ந்த நாள் இனிமையாக கழிய, மெல்ல வீடு திரும்பினர் அனைவரும்... ரிகா, ஷன்வி மற்றும் பாட்டி மூவருடன் கோதை குடும்பத்தினரும் வீட்டிற்குள் நுழையும்போது அவளை வரவேற்றாள் ஒரு பெண்...

அதிர்ச்சியின் உச்சக்கட்டத்தில் சாகரி இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாதவாறு அவளின் அறைக்குச் சென்று விட்டாள்...

கோதை, சுந்தரம், அனு, ஷியாம் அபி, செல்லம்மாள் பாட்டி அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, ஆதி,ஹரி,முகில்,ஈஷ் நால்வரும் பின்புறம் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர்...

அப்போது சாகரி எனக்கு தான் தெரியாதுன்னு சொல்லுறேனே... உங்களை... திரும்ப திரும்ப தெரியும்னு வாதாடினீங்கன்னா என்ன அர்த்தம் என்றவாறு தோட்டம் பக்கம் வந்தவள் அங்கிருந்த நால்வரில் ஹரிஷைப் பார்த்து ஓடி வந்தாள்...

ப்ளீஸ் அண்ணா... நீங்களாச்சும் சொல்லுங்க... எனக்கு இவங்களை தெரியலை நிஜமா... அதை சொன்னாலும் இவங்க நம்ப மாட்டிக்கிறாங்க... என்று அழாத குறையாத சொன்னவளை ஹரீஷ் பரிதாபத்தோடு பார்க்க...

ஆதர்ஷோ கோபமாக முகிலனைப் பார்த்தான்...

முகிலனின் பார்வையும் அதை கண்டுகொள்ள, நான் என்ன செய்தேன் என்ற தோரணையில் அவன் சகஜமாக பார்க்க...

நீதானே மயூரியை வரவைத்து இப்படி என்னவளை அழவைக்க முயற்சிக்கிறாய்... என்று அவன் கொலைவெறியோடு பார்க்க... முகிலனோ ஆமாம்... அதற்கென்ன?... என்பது போல் ஆதியை பார்ப்பதை தவிர்த்தான்...

மயூரி... அவளுக்கு உடனே எல்லாம் நியாபகம் வந்திருந்தா உங்கிட்ட மறைக்க முயற்சி பண்ணமாட்டாம்மா... அவளைக் கொஞ்ச நாள் தனியா விடு... அவளுக்கு நிச்சயம் நினைவு வரும்... என்று ஹரி மயூரியிடம் சொல்ல,

மயூரியோ, அவளுக்கு நினைவு வரலையா?... ஓஹோ.... அப்படியா?... என்னை  நினைவில்லையா... சரி கொஞ்சம் அவளை இந்த பக்கம் பார்க்க சொல்லுங்க... என்றவள் கை காட்டிய திசையில் பார்த்த ஆதர்ஷும் சாகரியும் சிலையாகி போயினர் சில நிமிடங்கள்...

இன்னைக்கும் சஸ்பென்சா?... என்ற உங்கள் அனைவரின் குரல் எனக்கு கேட்கிறது... இருந்தாலும் புது வருட ஆரம்பத்தில் சஸ்பென்ஸ் வைக்கலைன்னா உலகம் நாளைக்கு என்னை நிறைய சொல்லிடுமே... அதான்...

புத்தாண்டு அதுவும் உங்க எல்லாரையும் சந்திக்க வேண்டுமென்று நினைத்தேன்.. அதனால் தான் வழக்கமாக திங்கள் தோறும் பதிவுசெய்யும் நம்ம காதல் நதியில் கதையை இன்று பதிவு செய்கிறேன்...

இன்னைக்கு கொடுத்துட்டீங்க... அப்போ இந்த வார திங்கட்கிழமை கதை இல்லையான்னு நீங்க கேட்குறது எனக்கு புரியுது... கவலையேப் படாதீங்க.. கண்டிப்பா திங்கள் அன்றும் கதை உண்டு...

வருடத்தில் முதல் நாள் சந்தோஷமா இருக்கணும் இல்லையா... அதனால் இந்த வார கதை கொஞ்சம் காதல் கலந்து கொடுத்திருக்கிறேன்... ஹ்ம்ம்... இப்போ கதைக்கு போகலாம்...

மயூரி கை காட்டின இடத்தில் என்ன இருக்கிறது???.. ஏன் அதிர்ச்சியானாங்க இரண்டு பேரும்?... என்று அடுத்த வாரம் சொல்கிறேன்... மீண்டும் அடுத்த வார சீதை-ராம் காதல் நதியில் சந்திக்கலாம்...

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

தொடரும்

Go to episode # 19

Go to episode # 21

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.