(Reading time: 20 - 40 minutes)

கோடி கோடி ஆசைகள் இதயத்தில் உதிக்க, அவைகளோடு அவளை நெருங்கியவனிடத்தில், மீட்டிங் முடிந்தது... உங்க நேரத்தை அதிகமா எடுத்துக்கிட்டோம்... சாரி... என்றவள் விழிகள் கெஞ்ச, அவன் தன்னை மறந்தான்...

“ஆசை எல்லாம் நான் அள்ளிக்கொண்டு

வந்தேன் வந்தேன் உந்தன் வாசல்...

தர்ஷ்... மிஸ் உன்கிட்ட தான் சொல்லுறாங்க... நீ என்ன பண்ணுற... என்று அவனை கனவிலிருந்து நனவுக்கு வரவழைத்த அபி, நீ போயிட்டு ஈவ்னிங்க் வா தர்ஷ்... டாட்டா... என்றவள், மிஸ் நாம உள்ளே போகலாம் என்று சாகரியின் கையைப் பிடித்தபடி அழைத்துச் சென்றாள்...

அவள் செல்ல செல்ல அவன் மனதில் தோன்றும் இடியுடன் கூடிய மழையையும், புயலையும் அவனால் தடுக்க முடியவில்லை... மெல்ல திரும்பி நடக்க ஆரம்பித்தான்... வாழும் காலம் வரையிலும் குளிர் கொடுத்து அரவணைக்கும் மழையையும், நம்மை ஆட்டுவிக்க வரும் புயலையும் கடக்க என்னுடன் சேர்ந்தே இருப்பாய் அல்லவா சகி... என்றவன் நடந்து கொண்டே கேள்வியுடன் அவள் செல்லும் திசையை திரும்பி பார்க்க...

“புயலென்ன மழையென்னவோ கடந்திட வேண்டாமா

நானும் நீயும் வாழ்க்கை தோறும்...

அதே நேரம் அவளும் தன்னிச்சையாக திரும்பி அவன் பார்வையை சந்திக்க, அவன் நெஞ்சம் ஆனந்த கூத்தாடியது... ஒரு நிமிடம் என்றாலும் அவனிற்கு அவள் பதட்டம் குறுநகையை தோற்றுவித்தது... மெல்ல அவள் இதழ்கள் விரிந்து அவனை நோக்கி சிரித்தது...

அவ்வளவு தான் ஆதர்ஷிற்கு குதித்து ஆட வேண்டும் போல் இருந்தது... நிறைந்த மனதுடன் பள்ளியை விட்டு வெளியேறி காரில் அமர்ந்தான்...

உதடுகள் தானாக பாடலை முணுமுணுத்தது...

“மீண்டும் மீண்டும் ஓயாமல் காதல் நெஞ்சை அள்ளும்...

நீயே எந்தன் சுகவாசல்...

கல்லும் முள்ளும் கண்டாலும் உண்மைக் காதல் வாழும்...

உன்னில் நானே கண்ட வேதம்...

பனிப்பூவாய் என்மேல் விழுந்தாய்... உயிரே உறையுதடி...

இதற்கும் மேலாக ஆசைகள் வந்து கவிதையில் சேருதடி...

என் கவிதையில் சேருதடி...

முகிலனிடம் மயூரியை வர சொல்லிவிட்டு, அடுத்து என்ன செய்வது, ரிகா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று சிந்தித்தவாறு காரை ஓரமாக நிறுத்திவிட்டு சீட்டில் சாய்ந்து கண் மூடியவன், நேரம் காலம் தெரியாமல் யோசித்துகொண்டிருந்தான்...

சரி வீட்டிற்கு போய் ஆதியிடம் ஸ்கூலுக்கு போக வேண்டாம் என்று சொல்லலாம் என்று காரை எடுத்தவன், மணி பார்க்க அதிர்ச்சியில் சடன் பிரேக் போட்டு நிறுத்தினான்...

ஓ...ஷிட்... என்றபடி முகிலனுக்கு போன் செய்தான்...

டேய்... முகிலா... நீ எங்க இருக்குற?..

என்னடா ஹரி... நான் வீட்டில் தான் இருக்கேன்... ஆமா நீ ஏண்டா இவ்வளவு பதட்டமா பேசுற?... நான் மயூரிகிட்ட பேசிட்டேன்டா... சீக்கிரம் வந்துடுவாடா...

அதில்லை மச்சான்... ஆதர்ஷ் எங்க இருக்கான்... அவன் ஸ்கூல் போகலை தானே?...

லூசாடா டாக்டர் நீ... அவன் எப்பவோ அபியோட ஸ்கூலுக்கு போயிட்டான்...

போச்சுடா... எல்லாம்... என்ற ஹரி அப்படியே அமைதியாகி விட்டான்...

என்னடா சொல்லுற?... புரியும்படி சொல்லு...

இல்ல முகிலா... உங்கிட்ட சொன்னேன்ல ரிகாவோட மாற்றம் பற்றி...

ஆமா... அதுக்கென்ன இப்போ?..

அதுக்கென்னவா?... அவளை மட்டும் ஆதர்ஷ் இப்ப பார்த்தான்னு வை, இன்னும் உடைஞ்சி போயிடுவாண்டா... நீ வாடா சீக்கிரம் நாம ஆதர்ஷை போய் பார்க்கலாம்... ஆமா... அவன் இப்போ ஆபீசில் தானே இருப்பான்..?

ஆமாடா ஹரி.. அங்கே தான் இருப்பான்... நான் இன்னும் பத்து நிமிடத்தில் அங்கே இருப்பேன்...

பதறி அடித்துக்கொண்டு இவர்கள் இருவரும் அங்கே அவனுக்காக காத்திருக்க, ஆதர்ஷோ, அவளின் புன்னகை ஒன்றையே மனதில் நினைத்துக்கொண்டு தன் நண்பர்கள் இருவரையும் கடந்து சென்றான் தனக்குள் சிரித்துக்கொண்டே...

அய்யய்யோ மச்சான்... நம்ம ஆதி, இப்படி ஆயிட்டானேடா... அம்மாவுக்கு இப்போ என்னடா பதில் சொல்லுறது... - முகில்

டேய்... கொஞ்சம் சும்மா இருடா நீ முதலில்... -ஹரி

ஆமாடா... டாக்டர் நீ என்னையே சொல்லு... முதலில் அதோ போயிட்டிருக்கானே அவனை முதலில் தடுத்து நிறுத்து...

வந்து தொலைடா பேசாமல்... என்றான் ஹரி... அதன்பின் கிட்டத்தட்ட ஓடினார்கள் இருவரும் ஆதர்ஷின் பின்...

டேய்... நில்லுடா... மச்சான் என்று கூக்குரலிட்டு அழைத்ததற்கும் திரும்பாதவனை பக்கத்தில் சென்று பிடித்து உலுக்கினர் இருவரும்...

என்னடா சொல்லுங்க... என்றான் அவன் அப்போதும் சிரித்துக்கொண்டே...

உனக்கென்னடா ஆச்சு... ஏண்டா இப்படி தனியா சிரிச்சிட்டிருக்க... – முகிலன்.

என்னென்னம்மோ ஆச்சுடா.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மச்சான்... என்றவன் இருவரையும் அணைத்துக்கொண்டான்...

என்னடா சொல்லுறான் இவன்?... உனக்கெதும் புரியுதா என்று முகிலன் ஹரியை கேட்க, அவன் பொறுமையாக இரு என்று கண்ஜாடை காட்டிவிட்டு, உன் சந்தோஷத்திற்கு காரணம் என்ன மச்சான்... சொல்லலாம் என்றால் சொல்லு... என்றான் ஆதியிடம்...

ஹ்ம்ம்... அதுவா... என்று நினைத்தவன் இதழ்களில் மீண்டும் புன்னகை எட்டிப் பார்த்தது... கண் மூடி சில மணி நேரத்திற்கு முன் நடந்தவற்றை  அசை போட்டவன், அவள் தன்னைப் பார்த்து சிரித்ததை கூறினான் மகிழ்ச்சியுடன்...

அதைக்கேட்டவர்களின் முகத்தில் ஈயாடவில்லை... நடப்பது நிஜம் தானா என்ற கேள்வி எழுவதையும் அவர்களால் தடுக்க முடியவில்லை...

அப்படின்னா ஆதி... அவளுக்கு எல்லாம் நியாபகம் வந்துட்டா?.... என்ற முகிலனின் கேள்விக்கு

அது தெரியலைடா... ஆனால், அவ முகத்தில் தெரிந்த அந்த சந்தோஷம் போதும்டா... எனக்கு... அவ அழாமல் சிரித்தாளே அதுவே எனக்கு போதும்டா நிஜமா... என் சீதை சிரிச்சிட்டா டா முகிலா... உன் தங்கை சிரிச்சிட்டா டா ஹரி... அவ சிரிச்சப்போ நீ பார்க்கணுமே, அய்யோ, என்னை அப்படியே கொன்னுட்டாடா... அவ்வளவு அழகுடா என் சீதை... என்று உளமாற ரசித்து கூறியவன், நான் சந்தோஷமா இருக்கேண்டா... என்றபடி சென்றுவிட்டான்...

ஒரு கையால் தலை கோதியபடி, விசிலடித்துக்கொண்டே சென்றவனைப் பார்த்துக்கொண்டு வந்த அவ்னீஷிற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை... காலையில் அவனை பார்த்த போது வலித்த உள்ளம் இப்போது காணாமல் எங்கே தான் போனதோ அவனுக்கே தெரியவில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.