(Reading time: 28 - 55 minutes)

ங்களின் தவறை உணரவேயில்லையாப்பா ???... என்ற மகனின் கேள்வி தன்னை சுட்டு பொசுக்க, அவர் விழிகள் நீர் சிந்த தயாரானது…

இத்தனை வருட பிரிவில், அவர் அறிந்த வரை, முகிலன் நல்லவன், மிக நல்லவன்… எடுத்த முயற்சியாகட்டும், கால் பதித்த தொழிலாகட்டும் அனைத்திலுமே முகிலன், தான் சிறந்தவன் என்பதை நிரூபித்தான்… அதை அவர் மனம் ஒப்புக்கொண்டும், அவரது பிடிவாதம் தடுத்தது… அதை விட, மகன் தன்னிடம் பேசவில்லையே என்ற ஏக்கம் தான் அவர் முகிலனின் மேல் வெறுப்பை சுமக்க இன்றளவும் காரணமாக இருந்து வந்தது… ஆனால் இன்று மகன் தன்னிடம் பேசிவிட்டான் என்பதையே அவரால் நம்பமுடியவில்லை…

முகிலன் மாதிரி ஒரு பையன் தேடினாலும் வேறெங்கும் கிடைக்க மாட்டான்ப்பா… அதுவும் இல்லாம அவங்க இரண்டு பேரும் மனசார விரும்புறாங்க… அவங்களைப் பிரிக்கிறது பாவம்ப்பா… இத்தனை நடந்தும் அத்தையும் மாமாவும் மயூரியை தான் அவங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறாங்க… ஆனா, வார்த்தையை சிதற விட்ட நீங்க இன்னும் பிடிவாதம் பிடிச்சா, யாருக்குப்பா நட்டம்?... உங்களுக்குத் தானே…

மன்னிக்கிற குணம் என் அத்தை மாமாவான அவங்களுக்கு இருக்கும்போது, மன்னிப்பு கேட்குற குணம் என்னைப் பெற்ற என் அப்பாவுக்கு இல்லையாப்பா?...

இத்தனை நாள் நான் ஏன் உங்களை விட்டும், அம்மாவை விட்டும், மயூரியை விட்டும் பிரிஞ்சிருந்தேன்?... நீங்க பேசின வார்த்தைகளுக்காகத்தானே… இனியும் உங்க வரட்டு பிடிவாதத்தை உடும்பா பிடிச்சிகிட்டு என்னத்தப்பா சாதிக்கப்போறீங்க???... இன்னமும் நான் உங்களுக்கு வேண்டாமாப்பா?... உங்க மகனோட சிரிச்சு பேசணும்னு உங்களுக்கு தோணலையாப்பா?... என் அப்பா, அம்மா, தங்கையை விட்டு நான் இன்னும் பிரிந்து தூரத்தில் தான் இருக்கணுமாப்பா?... என்று அவன் கேட்டு முடித்த போது,

அவர் கதறலுடன் சுந்தரத்தின் காலில் விழுந்தார்… மன்னிச்சிடுங்கன்னு கேட்குற தகுதியை கூட நான் இழந்தவன் ஆயிட்டேன் மாமா… தகப்பன் மாதிரி எனக்கு கிடைச்ச உங்களை கேட்க கூடாத கேள்வி எல்லாம் கேட்டுட்டேன்… என்னை… என்னை…. உங்க குடும்பத்தோடு சேர்த்துக்காட்டாலும் பரவாயில்லை… என் பொண்ணு இங்கே தான் வாழணும்… வாழணும்…. என்று அவர் சொல்ல, சுந்தரம் அவரை எழுப்பி, என்ன ராசு நீ… சின்னப்பையனாட்டம் அழுதுட்டிருக்கிற… அதான் சொன்னியே… தகப்பன் மாதிரின்னு… என் பையன் தப்பு செஞ்சா நான் மன்னிக்காம வேற யாரு மன்னிப்பா… என்றபடி சொல்ல,

மாமா… என்றபடி ராசு சுந்தரத்தின் கையைப்பிடித்துக்கொண்டார்…

டேய்… அழாதேடா… தம்பி… ராசு… இங்கே பாரு… என்றபடி கோதையும் சமாதானப்படுத்த, ராசு தமக்கையிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்…

அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஷ்யாம் கண்களில் நீருடன் நிற்க, மெல்ல சுந்தரத்திடமிருந்து விலகிய ராசு, ஷ்யாம் கண்களில் இருந்த நீரைத்துடைக்க, அவன் அ…ப்….பா….. என்ற ஒரே வார்த்தையில் அவரை மொத்தமாக கட்டிப்போட, அவர் மகனை பாசமுடன் அணைத்துக்கொண்டார்…

மகன் தந்தையின் பாசப்பிணைப்பை கண்ட செல்வி ஆனந்தத்தில் அழ, கோதை அவரை சமாதானப்படுத்தினார்…

மெல்ல தகப்பனிடமிருந்து விலகியவன், தாயிடம் செல்ல, அந்த தாயின் கண்கள் மகனை விட்டு எங்கும் அகலவில்லை… அம்மா…………… என்றழைத்தவன் இரண்டே எட்டில் தாயை அணுகி, அவரை அணைத்துக்கொண்டான்…. செல்வியின் அழுகை அடங்க பல மணித்துளிகள் பிடித்தது… மகனின் முகம் பற்றி முத்தமிட்டவரை, அவன், தோள் சாய்த்துக்கொண்டான்…

நடந்த அனைத்தும் கனவா?... நிஜமா?... என்ற குழப்பத்தில் இருந்தாள் மயூரி… அவளை உலுக்கிய அனு, என்ன மயூரி, இப்படி பார்க்குற?... உன் கண்ணன் மாமா உனக்குத்தாண்டி… என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்க…

மயூரி கண்ணிலும் கண்ணீர்… ஷ்யாம் அதை மென்மையாக துடைத்து விட்டு, அண்ணன் வந்துட்டேன்ல… இனி அழக்கூடாது சரியாம்மா… என்று கேட்க, அவள் சரி என்று தலைஅசைத்தாள் அழுகையை நிற்கவைக்க போராடிக்கொண்டே….

டேய் தம்பி… உன் ரூட் க்ளியர்டா… ரொம்ப சந்தோஷமா இருக்கேண்டா மச்சான்… நான்… அவ்வளவு ஹேப்பிடா… என்றபடி முகிலனை தூக்கி சுற்றினான் ஆதர்ஷ்…

முகிலனுக்கு ராசுவின் வார்த்தை சிதறல்கள் எதுவும் தெரியாது… ஆனாலும் எதுவோ பெரியவர்களுக்குள் மனஸ்தாபம் அந்த கோபத்தில் தனக்கு மயூரியை திருமணம் செய்து தர மாட்டேன் என்று சொல்லிய ராசு மாமா, இப்போது தன் தவறை புரிந்து, மனம் திருந்தி, தனக்கு மயூரியை திருமணம் செய்து வைக்க சம்மதித்துவிட்டார் என்பது மட்டும் அவனுக்கு புரிய, அவனும் சந்தோஷத்தில் மிதந்தான்…

ஷ்யாமும் அனுவும் சேர்ந்தாற் போல் ராசு செல்வியிடம் ஆசீர்வாதம் வாங்க, அவர்களும் மனம் குளிர வாழ்த்தினர்…

அனு தன் மகள் அபியை அழைத்துவர சொல்லி மயூரியிடம் சொல்லிவிட, மயூரி சென்று அபியை அழைத்து வந்தாள்…

ஷ்யாம் தன் மகளைத்தூக்கி தகப்பன் கையில் கொடுக்க, அவர் தன் பேத்தியை ஆசையுடன் வாங்கிக்கொண்டார்... அவர் பேத்தியுடன் கதை பேசிக்கொண்டிருந்த வேளையில், ஷன்வி, நந்து, சித்துவை அங்கே அழைத்து வர, ராசு செல்வியைப் பார்த்த நந்துவும் சித்துவும் , தாத்தா-பாட்டி என்றழைத்துக்கொண்டு அவர்கள் அருகில் செல்ல, ராசுவும் செல்வியும் அவர்களை அணைத்துக்கொண்டனர் வாஞ்சையுடன்…

ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா… உன் திருமணத்தில் இருந்த எல்லா சிக்கலும் தீர்ந்ததும்மா… எப்பவும் இப்படியே சந்தோஷமா இரும்மா… என்று தினேஷ் சொல்ல, காவ்யாவும், இனி உங்க தங்கைக்கு நாம எல்லாம் தெரிய மாட்டோம்… முகிலன் தம்பி தான் கண்ணுக்குத் தெரிவார்… இல்ல மயூரி?... என்று கேட்க, அவள் போங்க அண்ணி…. என்ற வெட்கத்துடன் காவ்யாவின் பின் சென்று ஒளிந்து கொண்டாள்…

ஹேய்… காவ்யா…. எப்படி இருக்கே… வாங்க தினேஷ் அண்ணா… நடந்த நிகழ்வில் உங்களை நான் கவனிக்கவே இல்ல சாரி… என்று அனு சொல்ல,

அட விடு அனு… இங்கே இப்படி நடந்துட்டிருக்கும்போது நாம நலம் விசாரிக்க தோணுமா முதலில்… விடு… என்று காவ்யா சொல்ல…

தினேஷும், ஷ்யாமும் ஒருசேர தங்களைப் பார்த்துக்கொண்டனர்…

என்னப்பார்க்குறீங்க… கல்யாணத்துல நாங்க மீட் பண்ணினோம்ல…. அப்ப அறிமுகம் ஆனது தான் எங்க நட்பு… நீங்க மட்டும் தான் ஃப்ரெண்ட்ஸ்-ஆ இருப்பீங்களா?... நாங்களும் இருப்போம்ல… என்ன அனு?.... என்றபடி காவ்யா நகைக்க…

அப்படி சொல்லு காவ்யா… என்று அனுவும் ஹைஃஃபைவ் கொடுத்துக்கொண்டாள்…

ஹ்ம்ம்… இவங்க செட் சேர்ந்தது உனக்கு தெரியுமாடா ஷ்யாம்?...

இல்லடா தினேஷ்… எனக்கே இப்போதான் தெரியுது… இவங்க இவ்வளவு க்ளோஸ்ன்னு…

ஹாஹாஹா… இரண்டு பேரும் ஒன்னும் தெரியாம தான்டா இருந்திருக்கோம் இவ்வளவு நாள்… நாம எல்லாம் நல்லா வருவோம்டா… என்றபடி தினேஷ் சொல்ல….

நிஜமாவே நல்லா வருவோம்டா… என்றபடி ஷ்யாமும் சிரித்தான்…

போதும் போதும் நீங்க கொஞ்சிகிட்டது… சின்னப்பசங்க பக்கத்துல இருக்காங்கன்ற நினைப்பு உங்களுக்கு கொஞ்சமாச்சும் இருக்கா?... –அவ்னீஷ்…

யாரு நீயாடா… உனக்கு இப்போ நாங்க பேசுறது பிரச்சினையா… இல்ல உன்னை ஷன்வி கூட பேச விடாம நந்தி மாதிரி குறுக்கே நாங்க எல்லாரும் இருக்கிறோம் என்ற பிரச்சினையா?... என்று ஷ்யாம் கேட்க…

அவன்… அது… வந்து… என்று அசடு வழிந்து கொண்டே ஷன்வியைப் பார்க்க, அவளோ வெட்கத்தோடு நிலம் பார்த்தாள்…

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?... உன் ஷன்வியின் வெட்கம் பார்த்துவிட்டாய் அல்லவா?... என்று முகிலன் அவ்னீஷை கேலி செய்ய… அவ்னீஷ் புன்னகை மேலும் விரிந்தது…

அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஆதி, இதழ்களில் தோன்றிய புன்னகையுடன் வெளியே வர, அது நேரம் வரை அமைதியாக இருந்த ஹரீஷ், அவனைப்பின் தொடர்ந்தான் மெல்ல…

கோதை-சுந்தரம், ராசு-செல்வி, அனு-காவ்யா, ஷ்யாம்-முகிலன்-அவ்னீஷ், மயூரி-ஷன்வி, நந்து-சித்து-அபி-செல்லம்மாப் பாட்டி, என அனைவரும் பேசிக்கொண்டிருக்க… தினேஷ் மெல்ல ஆதியையும் ஹரியையும் தேடிச்சென்றான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.