(Reading time: 28 - 55 minutes)

ன்ன!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! என்ன சொல்லுற ஹரீஷ்… என்ற ஆதி கோபத்தில் முகம் சிவக்க கேட்டான்..

உண்மைதான் ஆதி, அவளுக்கு மருந்து போட்ட நர்ஷ் சொன்ன விஷயம் தான் இது… ஆனால், இவ்வளவு நடந்தும் இதில் ஆறுதலான ஒன்று, அவள் உயிரோடு இருப்பது தான்… மேலும், அவள் பெயருக்கேற்றவாறு பவித்ரமானவள் தான்டா… அவள் உடம்பில் ஆயிரம் காயங்கள் இருந்த போதிலும், அவள் சீதை தான்… அவளை சித்திரவதைப் படுத்திய விரல்கள் அனைத்தும் ஒரு பெண்ணின் விரல் தடங்கள்…. ஆனால் அது ரிகாவுக்கு தெரியவில்லை… அது ஒரு ஆணின் விரல் தடங்கள் என்று தான் அவள் மனதில் பதிந்திருக்கிறது…

என்ன சொல்லுற ஹரீஷ்?... என்று அங்கே வந்த தினேஷும் அதிர்ச்சியடைய… ஹரீஷ் தான் இருவரையும் தேற்றினான்…

அப்போது தான், தினேஷ், அவள் சென்னையில் கடத்தப்பட்ட நிகழ்வையும் கூறினான்…

இந்த முறை ஹரீஷும், ஆதியும் என்ன!!!!!!!!!!!!!!!!!!!!!! என்று ஒரே நேரத்தில் கத்த,

ஆமா, ஆதி, அவ ஒரு நாள் ஊருக்கு போயிருக்கான்னு உங்கிட்ட சொன்னேன் உனக்கு நினைவிருக்கா… அப்போ அவ உண்மையில் ஊருக்கு போகலை… அவளைக் கடத்தியிருக்காங்க… என்றவன் அந்த நாட்களில் நடந்தவை அனைத்தையும் கூற, ஆதி துடித்து போனான்…

ஆதி மேலும் உடைந்து போக, ஹரீஷ், அவனிடம் நடந்ததை மாற்ற முடியாது ஆதி… அவளை இந்த  நிலைக்கு ஆளாக்கினது யாரென்று முதலில் நாம் கண்டுபிடிக்கணும்டா… அதற்கு ஒரே வழி… ரிகா தான்…

எப்படி ஹரீஷ் முடியும்?... அவ தான் எதுவும் சொல்லமாட்டிக்கிறாளே… பின்னே எப்படி அவளிடமிருந்து தகவல் பெற முடியும்?... என்று தினேஷ் கேட்டபோது,

மயூரி ஆதர்ஷிற்கு போன் செய்தாள்… ஆதர்ஷ் அதை ஹரீஷிடம் கொடுத்தான் மௌனமாக எதுவும் பேசாமல்…

சொல்லும்மா… மயூரி… நான் ஹரீஷ் பேசுறேன்…

அண்ணா.. ஆதர்ஷ் அண்ணா எங்கே?...

அவன் தூங்கறான்மா… நீ சொல்லுமா என்ன விஷயம்?...

அவள் சொன்னாள்… அதைக்கேட்டவன் அவசரமாக உள்ளே ஓடினான்.. பின் ஆதர்ஷிடம், மச்சான், ரிகா வாழ்வின் ரகசியம் கிடைத்துவிட்டதுடா… எனவும், ஓய்ந்திருந்த ஆதி எழுந்து என்ன சொல்லுறடா என்று ஹரியை உலுக்க, சீக்கிரம் சொல்லு ஹரீஷ்… என்று தினேஷும் அவசரப்படுத்த,

இது தான் அது… என்றவாறு கையில் இருந்த டைரியைக் காட்டினான் ஹரீஷ்…

இது…. உன்னை சேர வேண்டியது… நீ விரும்பும் என் தங்கையை போல… என்று அவனிடம் அந்த டைரியை கொடுத்து படிக்க சொன்ன ஹரி, இதைப் படிக்கும் உரிமை உனக்கு மட்டும் தான் இருக்கிறது என்று சொல்ல… அதை வாங்கியவன் மெல்ல வருடியவாறு டைரியின் முதல் பக்கத்தை படிக்க ஆரம்பித்தான்…

அவனை முதல் நாள் சந்தித்தது முதல் அனைத்தையும் அதில் எழுதி இருந்தாள் அவள்… வீட்டை விட்டு, மயூரியை விட்டு விலகுவது வரை…

அடி நெஞ்சை யாரோ இறுக்கிப்பிழிவது போல் உணர்ந்தான் ஆதர்ஷ்… இதயமே துடிப்பதை நிறுத்தியது போல், மனதின் கணம் தாங்காதவனாய் அப்படியே சரிந்து அமர்ந்தவனிடத்தில் பேச்சும் இல்லை, மூச்சும் இல்லை…

என்னாச்சுடா???... ஆதி… ஆதி… என்று ஹரீஷ் அவனை உலுக்க, அவன் அப்படியே தரையில் அமர்ந்திருந்தான்...

தினேஷ்… ஆதியை பேச சொல்லுங்க… என்று ஹரீஷ் தினேஷிடம் கெஞ்ச… அவனும் சேர்ந்து ஆதியை பேச வைக்க முயற்சிக்க, அவனோ, சிலையாய் இருந்தான்…

எதாவது பேசித்தொலைடா… என்று ஹரீஷ் அவனை கோபத்தில் கேட்க…. அவன் மௌனமாக அவளின் டைரியில் அவள் தனியாக நொந்து வெந்ததை, உயிருக்கு மேலாக நேசித்தவனை பிரிய நேர்ந்த கதையை எழுதியிருந்த பக்கங்களை எடுத்து  நீட்டினான்…

இதை நான் எப்படி???... என்று கேள்வி கேட்டவனை, ஆதி ரத்தமென சிவந்திருந்த விழிகளுடன் ஏறிட, ஹரியும் தினேஷும் சட்டென்று அதை வாங்கி படிக்க ஆரம்பித்தனர்…

படித்து நிமிர்ந்த போது அவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்……. ஹரி நனவுக்கு வர, சில நிமிடங்கள் பிடித்தது… மெல்ல அதை அவனிடம் கொடுத்தவன், அவங்களை சும்மாவிடக்கூடாதுடா ஆதி… எப்படியெல்லாம் செஞ்சி, அவளை ஏமாற்றியிருக்காங்க… ஆனா அதை புரிஞ்சிக்க விடாம அவளை பாடாய் படுத்தியிருக்காங்கடா….அவங்களை சும்மாவிடக்கூடாதுடா… என்று ஹரி கோபத்தில் பற்களை கடிக்க…

ஆமா ஆதி… அவளை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவங்களை நாம சும்மா விடக்கூடாதுடா… அவங்க மும்பையில் வைத்து இவளை கடத்தினப்போ நல்ல வேளை ஹரி கையில் அவள் கிடைத்தாள்… அதனால் நம்மால்  அவளை மாற்றிடமுடியும்டா… என்று தினேஷ் சொல்ல,

முடியாது… என்றான் ஆதி…

என்னடா சொல்லுற… என்ற ஹரியை வலியோடு பார்த்தவன், இது அவளோட பழைய டைரி… எனக்கு தெரிந்து அவளுக்கு இந்த பழக்கம் இன்னும் போகலை… உன்னை சந்தித்த பின், அவ எழுதினதும் இப்போ அவ எழுதிட்டிருக்குறதும் அவ டைரியில் நிச்சயம் இருக்கும்… அந்த டைரி இருந்தா தான், அவளை நம்மால முழுதா குணப்படுத்த முடியும்… என்றவனை நிதானமாகப் பார்த்த ஹரி…

ஒரு நிமிஷம்டா… என்றபடி உள்ளே சென்றான்… அவளின் அறையில் தேடி தேடி பார்த்தவனின் கையில் கடைசியில் அந்த டைரி கிட்டியது…

அதை எடுத்துக்கொண்டு ஆதியை தேடி வந்தவன், இதையும்படிடா… என்று சொல்ல, அவன் படிக்க ஆரம்பித்தான்…

படித்தவன் அதை ஹரி கையில் கொடுத்துவிட்டு, சாகரியைப் பார்க்க சென்றான்… அவள் உறங்கிக்கொண்டிருந்தாள்…

அவளைப் பார்த்ததும் அவள் பட்ட வலி, வேதனை, காயம், துன்பம்… என அனைத்தும் கண் முன்னே வர, அவன் விழிகள் மடமடவென நீர் சிந்தியது…

என் சீதை…. என்ற வார்த்தையை கூட அவனால் சொல்ல முடியவில்லை… தொண்டை அடைத்தது மிக…

வாய் விட்டு அவளின் முன் அழவும் அவனுக்கு துணிவில்லை… அவன் மெதுவாக கரம் நீட்டி அவளின் தலையை வருடினான்… அவள் அசைந்தாள்…

சட்டென்று ஆதிக்கு தன்னை மீறி அழுகைவர, வாய் மூடி பின்னே நகர்ந்தவன் ஹரி மேல் மோதி நிற்க, ஹரி அவனை அணைத்துக்கொண்டான்….

ஆதர்ஷ் மெதுவாக அவனிடமிருந்து விலகி அவளருகில் சென்றான்… அவளுடன் இருந்த சில நாட்கள் மனதை தொட்டுச் செல்ல, அதனுடன் அவனும் பின்னோக்கி சென்றான்….

நாமும் செல்வோம்…..

அடுத்த வார திங்கட்கிழமை அவளை கடத்தியவர்களை சந்திக்கலாம்… ஆனால் அதற்கும் முன், இந்த வார கதையினால், கொஞ்சம் உங்கள் அனைவரின் மனதையும் குழப்பி, வருத்தப்பட வைத்துவிட்டேன் அல்லவா… அதற்காக, வரும் பொங்கல் அன்று சாகரி-ஆதர்ஷ் சேர்ந்திருந்த போது நடந்த சில இனிமையான நிகழ்வுகளோடு உங்களை மீண்டும் சீதா-ராம் காதல் நதியில் சந்திக்கிறேன்…

தொடரும்

Go to episode # 21

Go to episode # 23

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.