(Reading time: 28 - 55 minutes)

சாகரி இருந்த அறைக்குள் நுழைந்த ஆதர்ஷ், அவள் உதடுகள் இன்னமும் தன் பெயரை உச்சரித்துக்கொண்டிருப்பதை பார்த்து அவளருகே சென்றான்…

விழிகள் திறவாது,அவள் இன்னமும் மயக்க துயில் கொண்டிருந்தாள்…

அவளருகே அமர்ந்தவன், அவளிடம் மெல்லிய குரலில், சீதை உனக்கு ஒரு விஷயம் தெரியுமாடா… முகிலன் மயூரி திருமணத்திற்கு ராசு மாமாவே சம்மதிச்சிட்டார்டா… எல்லாரும் வெளியே சந்தோஷமா இருக்குறாங்க…. எனக்கும் சந்தோஷம் தான் அவனுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கப்போகுதுன்னு… உனக்கும் சந்தோஷம் தானேடா…?... என்று கேட்க… அவள் உளறல் நின்றுவிட்டிருந்தது…

சொல்லுடா… எதாவது பேசுடா… உன்னை விட்டு விலகவும் சொல்லுற.. விலகினா இப்படி என் நினைவோட மட்டும் அழுது புலம்பி உன் சுயநினைவை இழக்குற…. எதுக்குடி… இப்படி கஷ்டப்படுத்திக்குற… உங்கிட்ட நான் எதுவும் கேட்கமாட்டேன்னு தான் சொன்னேன்… இப்பவும் அதான் சொல்லுறேன்… ஆனா, நீ சீக்கிரம் சரியாகணும்டி… இப்படி ஒரு நிலைமையில உன்னைப் பார்க்க என்னால முடியலைடி… புரிஞ்சுக்கோடா… எனக்கு என் சீதை வேணும்… அவளோட வாழ தான் கொடுத்து வைக்கலை… அட்லீஸ்ட் அவளை ஆரோக்கியமா நல்லபடியா பார்க்கணும்… அதை மட்டும் எனக்கு செய்யுடா… என்றவன் நெஞ்சம் கலங்க அவளருகில் அமர்ந்திருந்தான் அவளைப் பார்த்தபடியே…

ஹரியும், தினேஷும் ஆதியை தேடி வந்த போது, அவன் அமர்ந்திருந்த தோற்றத்தைக்கண்டு கலங்கி போயினர்… மேற்கொண்டு என்ன செய்வது என்ற யோசித்துக்கொண்டிருக்கும்போது, நேரமாயிற்று… அம்மா… உங்க இரண்டு பேரையும் வீட்டுக்கு வர சொன்னாங்க… வாங்க போகலாம்… என்றபடி அங்கு வந்த அவ்னீஷிடம் சரி என்று தலையசைத்த ஹரீஷ், தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாகக்கூறி அங்கே இருந்து சென்ற கொஞ்சநேரத்தில், தினேஷ், தான் ஷன்வியின் வீட்டிலே இருப்பதாகக்கூறி காவ்யா, நந்து, சித்துவுடன் அங்கே தங்க முடிவெடுத்தான்… செல்லம்மாப்பாட்டியும் அது தான் சரி என்று ஒப்புக்கொண்டார்…

ஆதி எங்கே என்ற கேள்விக்கு, அவன் அப்போதே வீட்டுக்கு போய்விட்டான் எனவும், இந்நேரம் தூங்கியிருப்பான் எனவும் கூறினான் தினேஷ்…

சாகரியைப் பார்த்து பேசிவிட்டு போகிறோம் என்று பெரியவர்கள் நால்வரும் சொன்னபோது, ஷன்வி அவசரமாக புகுந்து அவளுக்கு உடம்பு சரி இல்லை அத்தை… காய்ச்சல் வேறு அடிக்கிறது… இப்பொழுது தான் தூங்குகிறாள்… அதனால் தான் அவள் இங்கே வரவும் இல்லை… என்று கூற, பெரியவர்களும் அரை மனதோடு கிளம்பினர் அவளைப் பார்க்காமல்…

அனைவரும் கிளம்பிச் சென்ற 5 வது நிமிடத்தில், ஹரீஷ் வந்தான் அங்கே… தினேஷ் அவனை எதிர்பார்த்தவன் போல், வா ஹரீஷ்… என்று சொல்ல… ஆதி எங்கே என்று கேட்டான் ஹரி…

அவன் உள்ளே தான் இருக்கிறான் சாகரியின் அறையில்… அவனை தொந்தரவு பண்ண மனமில்லை… அதான்… என்றான் தினேஷ் தயங்கியபடி…

சரி வாங்க… என்று தினேஷை அழைத்துக்கொண்டு சாகரியின் அறைக்குள் வந்தான் ஹரீஷ்…

த்து மணி தாண்டி விட்டது… ஆனாலும் அவள் உளறல் நின்றபாடில்லை… அவன் குரல் கேட்கும் தருவாயில் மட்டும் சிறிது நேரம் உளறல் நிற்கும்…. பின், மறுபடியும் உளறல் ஆரம்பித்துவிடும்…

ஹரீஷ், அவளை பரிசோதித்துவிட்டு, அவளுக்கான மருந்து நீ தான்… உன்னவளை எப்படி காப்பாற்றுவாயோ எனக்கு தெரியாது… எனக்கு என் தங்கை வேண்டும்… என் ரிகா வேண்டும்… இப்போது அவளின் உளறல் நின்றே ஆக வேண்டும்… பேசு… அவளருகில் இரு… என்றவன் ஆதிக்கு நேர் எதிரே சென்று அவளுக்கு மறுபக்கத்தில் அமர்ந்து கொண்டான்..

நிறைய பேசினான்… அவர்களின் ஒவ்வொரு சந்திப்பையும் கோர்வையாக கோர்த்து அவளிடத்தில் கூறினான்… அவள் உளறல் சற்றே மட்டுப்பட்டிருந்தது… அவர்களின் பிரிவை அவன் சொல்லவில்லை… சந்தோஷமான நிகழ்வுகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தான்….

அவள் ஒருநாள் கனவு கண்டு விழித்த போது, அவனும் அவளுக்கு போன் செய்தான் அந்த நேரத்தில் சரியாக… அப்போது அவள் அவனை பாட சொன்னாள் அல்லவா…

இப்போது அவன் அந்த நிகழ்வை சொன்னபோது, அவள் உதடுகள் பாடுறீங்களா தர்ஷ்… என்று கூற, அனைவருக்கும் ஆச்சரியம் தான்… அவன் சொன்னதை அவள் கேட்டுக்கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது… அவள் ஆழ்மனம் உறங்காது அவன் வார்த்தைகளுக்கு செவி கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டனர் அனைவரும்…

பாடுடா… அப்படியாச்சும் அவள் தூங்கட்டும் கொஞ்ச நேரம்… என்றான் ஹரீஷ்…

ஆமா… ஆதி… பாடு…. உன் வார்த்தைகளுக்கு மட்டும் தான் அவளை தூங்க வைக்கும் சக்தி இருக்கிறது… என்று தினேஷும் சொல்ல…

அதற்கும் மேல் தாமதிக்காமல், ஹரீஷ் தான் எடுத்து வந்திருந்த கித்தாரை அவனிடத்தில் கொடுத்து பாட சொல்ல, அவளின் தலையை வருடிவிட்டு பாட ஆரம்பித்தான் ஆதர்ஷ்…

தென்றலேதென்றலேமெல்ல நீ வீசு….

பூவுடன் மெல்ல நீ பேசு….

கரையின் மடியில் நதியும் தூங்கும்

கவலை மறந்து தூங்கு

இரவின் மடியில் உலகம் தூங்கும்

இனிய கனவில் தூங்கு

……

காதல் என்றால் கவலையா???…

கண்ணில் நீரின் திவலையா???…

நோயானேன்உயிரும் நீயானேன்

இரவில் காயும் முழுநிலா

எனக்கு மட்டும் சுடும்நிலா

வாராயோஎனை நீ சேராயோ….

தூங்க வைக்கும் நிலவே

தூக்கமின்றி….. நீயே வாடினாயோ

…….

மாலை வானில் கதிரும் சாயும்….

மடியில் சாய்ந்து தூங்கடா

பூமி யாவும் தூங்கும் போது

பூவே நீயும் தூங்கடா

மலரின் காதல் பனிக்குத் தெரியும்

என் மனதில் காதல் தெரியுமா???...

சொல்ல வார்த்தை கோடிதான்

உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்???...

தூங்க வைக்க பாடினேன்

நான் தூக்கமின்றி வாடினேன்…”

பாடியவன் மெல்ல அவளைப் பார்க்க, அவள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்…

மனதின் பாரம் நெஞ்சை அழுத்த, சட்டென்று அங்கிருந்து அகன்றான் அவன்….

வெளியே சென்றவன் மொட்டை மாடி கைப்பிடிச்சுவரில் சாய்ந்து நின்றான்…. அவளை தூங்க வைத்துவிட்டு அவன் தூக்கமின்றி வாடினான்….

அப்போது ஹரீஷின் கரம் அவன் தோளில் படிய, மெல்ல விழி நீரை தனக்குள் மறைத்தவன், ஹ்ம்ம்… என்னடா?... என்றான்…

உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா…. என்ற ஹரீஷ், அவள் மும்பையில் கடத்தப்பட்ட நிகழ்வை கூறினான்…

அவள் உடம்பில் காயம் மட்டும் இல்லை ஆதி, சூடும் போட்டிருக்காங்க…. கொடுமைப்படுத்தியிருக்காங்க… அவள் கை, கால், உடல், முகம் எங்கும் கை விரல்கள் பதிந்திருந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.