(Reading time: 36 - 71 minutes)

ஹேய்… நாம கொஞ்சிகிட்டது போதும்… இங்கே ஒரு ஆள் மிஸ் ஆகுதே… என்ற மயூரி, ஷன்வி மற்றும் சாகரியின் கைகளைப் பிடித்தபடி இழுத்துச்சென்றாள் வீட்டின் பின்பக்கம்…

இங்கே பாருடி… ஒன்னு பேசு… இல்ல சும்மா இரு… இப்படி என்னையும் படுத்தாதே…. ஆசை இருந்தா பேசி தொலையேண்டி… அதுக்கு ஏண்டி தூங்க விடாம என் உயிரை எடுக்குற?... உன் அலம்பல் தாங்கலடி எனக்கு இந்த பதினைஞ்சு நாளா… அவர் வர்றப்ப பேசாம ஊமையா இருக்குறது… அவர் போன பின்னாடி அய்யய்யோ பேசலையேன்னு ஃபீல் பண்ணுறது… உனக்கு இதே வேலையா போச்சுடி… அவர் வந்த இரண்டு தடவையும் நீ இப்படி தான் செஞ்சே…

இன்னைக்கு இரண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும் எனக்கு… ஒன்னு… நீ இப்போவே பேசணும்… இல்ல பேசாம அமைதியா தூங்கணும்… எப்படி வசதி?... என்று தன் நிழலை பார்த்து தானே கேட்டுக்கொண்டிருந்தாள் மைத்ரேயி தன் இடுப்பில் கைவைத்தபடி…

பாவம்டி நான்… நான் இப்படி எல்லாம் இருந்ததே இல்ல தெரியுமா?... எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு ரொம்ப… ஆனா, பேசணும்னு நினைச்சா தான் முடியலை… இந்த வார்த்தைகளுக்கு ஏன் தான் இந்த ஓரவஞ்சனையோ?... அவர் என்னிடம் பேசும்போதெல்லாம் எங்கேயாவது காணாமல் போயிடுதுங்க… சே… என்றவள், அதை குறை சொல்லி என்ன பிரயோஜனம்… உனக்கு எங்கடி போச்சு புத்தி?... நீ பேச வேண்டியது தானே… ?... நீ பேசாம இருந்துட்டு ஏண்டி வார்த்தை மேல பழி போடுற… என்று தன்னையே நொந்து கொண்டவள்,

இன்னைக்காச்சும் பேசிடுடி… ப்ளீஸ்… பாவம் நான்… என்றவள் தன் கையில் இருந்த செல்போனை பார்த்துக்கொண்டே இருந்தாள்…

எப்படி பேசுறது அவர்கிட்ட?... இந்நேரத்தில பேசலாமா?... ஹ்ம்ம்… தப்பா நினைச்சுப்பாரோ?... பெரியவங்க வேற நேரம் கழித்து பேச வேண்டாம்னு சொன்னாங்களே… இப்போ என்ன பண்ணுறது?... என்று அவள் யோசித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருந்த போது, மிருதுவான காற்று அவள் மேல் பட, அவளுக்கு அது சுகமாய் இருந்தது… தன்னை மறந்து அதில் அவள் காணாமல் போன நேரம்,

தூது செல்ல ஒரு தோழி இல்லை என்று

துயர் கொண்டாயோ தலைவி…”

என்று ஷன்வி பாடியபடி அங்கே நின்றிருந்தாள்…

சட்டெனத்தோன்றிய வெட்கத்துடன், மைத்ரேயி ஓட முயல, மயூரி அவளை வழி மறித்துப் பிடித்துக்கொண்டாள்…

துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கொண்டாயோ தலைவி….”

என்று மயூரியும் பாட, மைத்ரேயியோ முகத்தை மறைத்துக்கொண்டாள்…

மைத்ரி… இங்க பாரு… என்ற சாகரி… ஹேய்… அவளை கலாய்க்காதீங்கடி… சும்மா இருங்க… என்று பேச… மைத்ரேயி அமைதியாக இருந்தாள்…

அவள் கரம் மெல்ல சாகரி விலக்க, அவளோ,

அன்று சென்றவரை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி

தென்றல் தொட்டதடிதிங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி….”

என்று பாட, பெண்கள் மூவரும் ஓஹோ போட்டனர்…

ஹேய்… உன்னை போய் அமைதின்னு நாங்க நினைச்சு வாங்க போங்கன்னு எல்லாம் கூப்பிட்டோம்… பட் நம்ம எல்லாருக்கும் ஒரே வயசு அப்படிங்கிறதுனால, வா, போ ன்னு சகஜமா எனக்கு கூப்பிட வந்துட்டு… அப்படியே எல்லாரும் அதை ஃபாலோ பண்ணிகிட்டாங்க…

அன்னைக்கே, இந்த மயூரி தான் சொன்னா, ஆள் பார்க்க நம்ம ரகம் போல தான் இருக்கான்னு… அப்போவே எனக்கு உன் மேல டவுட் தாண்டி… ஆனா, இப்போதான தெரியுது… நீ சரியான கேடி நம்பர் ஒன் என்று… என்று ஷன்வி பேச…

போடி… எனக்கு அவரைப் பார்த்தா பேச்சே வர மாட்டிக்குது… நான் என்ன பண்ண?... என்று மைத்ரி முகத்தை சிறியதாய் வைத்துக்கொண்டு கேட்க…

இப்படி உன் நிழலைப் பார்த்து உன்னையே திட்ட மட்டும் வாய் வரும்.. பேச வராதா?... ஏண்டி இப்படி இருக்குற?... என்றாள் மயூரி…

இல்ல மயூரி… அவர் கிட்ட பேச ஆசையாதான் இருக்கு… ஆனா, பேசணும்னு நினைச்சாலே, வார்த்தை எல்லாம் காணாம போயிடுது… ஒன்னுமே வரமாட்டிக்குது… நான் என்ன பண்ண?... என்றாள் மைத்ரியும்…

அது சரி… உனக்கு ரேவதி மேடம் பரவாயில்லை போல… அவங்களுக்காவது காற்றாவது வந்துச்சு… உனக்கு ஒன்னுமே வரலையேடி… என்றாள் சாகரி சட்டென்று…

சூப்பர் சாகரி… நீ இப்போதான்… நம்ம கூட்டணின்னு நிரூபிச்சிருக்க… என்று அவள் கைப்பிடித்து குலுக்கினாள் ஷன்வி…

ரொம்ப சரியா சொன்ன ஷன்வி… நீ… என்று மயூரியும் சொல்ல…

சரி… சரி… நம்ம புகழ் அப்பறம் பாடிக்கலாம்… முதலில் இவளுக்கு ஹெல்ப் பண்ணலாம்… என்ற சாகரி, நீ இப்போ அமைதியா போய் தூங்கு… நாளைக்கு காலையில் அண்ணாகிட்ட நீ பேசுறதுக்கு நான் பொறுப்பு என்றாள்…

எப்படி?.... என்ற மூவரின் கேள்விக்கு, அதெல்லாம் அப்படிதான்… இப்போ போய் தூங்கலாம்… வாங்க… என்றபடி அழைத்துச் சென்றாள் மூவரையும்…

மறுநாள் காலையில்,

ஹேய்… மைத்ரி… நீயும் ஸ்கூலுக்கு வருகிறாயா இன்று… உனக்கும் கொஞ்சம் நேரம் போகும்… வாயேன்… என்று சாகரி அவளை அழைத்து வந்திருந்தாள் பள்ளிக்கு…

இன்னைக்கு தான் ஸ்கூல் லீவ் ஆச்சே… இங்கே எதுக்கு கூப்பிட்டு வந்த ரிகா?... என்று கேள்வி கேட்டாள் மைத்ரி…

மைத்ரி… நீ…. என்று சாகரி பேச ஆரம்பிக்கும்போது, ரிகா இங்கே வா கொஞ்சம்… என்ற ஷன்வியின் குரல் கேட்க…

மைத்ரி… உனக்கு எதிரே தெரியுதுல்ல… அங்கே நிறைய செடி, கொடி எல்லாம் இருக்கு… அங்கே கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்துக்கிட்டிரு… நான் வந்துடுறேன்… சரியா… என்று சொல்லிவிட்டு ஷன்வியின் அறைக்குள் நுழைந்தாள் ரிகா…

ரிகா சென்றதும், செடி கொடிகளுக்கு இடையில் சென்ற மைத்ரேயி அங்கே நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்…

அப்போது அதில் ஒரு வெள்ளை ரோஜா, அவளைப் பார்த்து அழகாய் தலை சரித்து சிரிக்க… அவளுக்கு அது தன் மனதின் நாயகன் போல் தெரிய… அவள் கண்களுக்குள் அவன் முகம் வந்து போக…. அவளுக்கு அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளமெங்கும் பரவி சிதறியது…

அந்த வெள்ளை ரோஜாவை மெல்ல இரு விரலால் வருடியவள்,

உன் முகம் பார்க்கத் தோன்றினால்

பூக்களைப் பார்த்துக்கொள்கிறேன்

பூக்களின் காதில் செல்லமாய்

உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்…”  என்று ஆசை தீர அவனது பெயரை அதனிடத்தில் சொல்லி சொல்லி பூரித்தாள் அவள் வெகுவாய்…

அப்போது ஸ்ரீ என்ற அழைப்பு கேட்க, தலை நிமிர்ந்து பார்த்தவளின் எதிரே வசீகரிக்கும் புன்னகையுடன் நின்றிருந்தான் ஹரீஷ்…

அவள் அவனையே விழி அகற்றாமல் பார்க்க…

என்ன ஸ்ரீ அப்படி பார்க்குற?... இந்த பார்வை மட்டும் உங்கிட்ட மாறவே இல்ல நான் உன்னைப் பார்க்கும்போதெல்லாம்… அப்படி என்னதான்டி இருக்கு என் முகத்துல… இப்படி பார்க்குற என்னை வச்ச கண்ணு வாங்காம… ஒவ்வொரு தடவையும் நான் தான் பேசுறேன்… நீ பேசவே மாட்டிக்குற?.... ஏண்டி என்னைப் பிடிக்கலையா?... என்று அவன் கேட்டு முடிக்கும்போது அவள் தலை இடம் வலமாக அசைந்தது அப்படி சொல்லாதீங்க என…

அவளை கூர்ந்து பார்த்தவன், நீ இன்னும் என்னை யாரோ போல தான் பார்க்குற... உனக்கானவன்னு என்னை நீ நினைச்சா, நீ என்னிடம் பேசியிருப்ப… நீ நினைக்கல… அம்மா சொல்லிட்டாங்கன்னு தான் நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்க… வேண்டாம்… நான் இப்பவே போய் கல்யாணத்தை நிறுத்திட சொல்லுறேன்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.