(Reading time: 36 - 71 minutes)

டேய்… டேய்… அவனை விடுங்கடா… அடேய்… போதும்டா… விடுங்க… என்றபடி கஷ்டப்பட்டு ஆதர்ஷிடமிருந்து மூவரையும் விலக்கி விட்டனர் தினேஷும், ஷ்யாமும்…

மாமா… இப்போ எதுக்கு நீங்க எங்களை விலக்கி விட்டீங்க?... என்றான் முகிலன் கோபமாக…

இதோடா… உனக்கு ஒரு நியாயம்… மற்றவர்களுக்கு ஒரு நியாயமாடா?... இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி என்ன சொன்ன?... உன் டிரெஸ் கசங்குதுன்னு சொன்னியா இல்லையா?... இப்போ நீ மட்டும் ஆதியோட டிரெஸை கசக்கலாமா?... என்று ஷ்யாம் கேட்க…

சரியா கேட்டடா ஷ்யாம்… இவனை எல்லாம் நல்லா சாத்தணும்… என்ற தினேஷிடம்,

ஆமா…ஆமா… அடிப்பீங்க… அடிப்பீங்க… நாங்க எங்க அக்காக்கிட்ட சொல்லி கொடுத்துடுவோம்… என்றான் அவ்னீஷ் வேகமாக…

ஆமாடா… இது வேறயா?... தேவைதான் எங்களுக்கு… என்ற தினேஷ்… படுத்தாம கிளம்புங்கடா.. நேரமாச்சு என்றான்…

சரி… சரி… இருங்க… இன்னும் ஒருமுறை டச் அப் பண்ணிட்டு வரேன் என்றான் முகிலன்..

இவனை… என்றபடி ஷ்யாம் அவனையும், அவ்னீஷையும் இழுத்து செல்ல, தினேஷ் சிரித்துக்கொண்டே ஹரியிடமும், ஆதர்ஷிடமும் போகலாமா என்று கேட்க… போகலாம் என்று தலை அசைத்தான் ஆதர்ஷ்…

அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில் அமரவைக்கப்பட்டிருந்தான் ஆதர்ஷ்… அவனது கழுத்தில் தினேஷ் மாலை போட, பெரியவர்கள், அவனுக்கு நலங்கு வைக்க ஆரம்பித்தனர்…

வரிசையாக, அனைவரும் வைத்து முடிக்க, கடைசியில் வாலு மாப்பிள்ளைகள் முறை வர, அவர்களும் வந்து நலங்கு வைத்தனர்…

பின்னர், பெண்ணை அழைத்து வர சொல்ல, ஆதர்ஷின் கண்கள் தன்னவளைத் தேடி அவள் வரும் வழியில் விழி பதித்தது…

அவள் கொலுசொலி ஆதர்ஷின் காதுகளுக்குக் கேட்க, அவன் இதழ் தானாக விரிந்தது…

அவ்னீஷ் ஆதர்ஷின் முகத்தைப் பார்த்துவிட்டு, முகிலன், மற்றும் ஹரியின் காதுகளில் ஏதோ சொல்ல, அவர்கள் மெல்ல ஆதியிடமிருந்து விலகினர்…

மெல்ல தோழிகளின் துணையுடன் அடிஎடுத்து வந்தவளையே இமைக்காமல் பார்த்திருந்தான் ஆதர்ஷ்…

அவளுக்கோ, அவனை ஏறெடுத்துப் பார்க்க முடியாத நிலை… தலை கவிழ்ந்த வண்ணம் வந்து அமர்ந்தாள்…

அந்நேரம்,

கலகலக்குது கலகலக்குதுகொலுசு சத்தம் கலகலக்குதுஎன்று முகிலன் எடுத்துக்கொடுக்க

எங்கள் வீட்டிற்குள் தேவதை வந்துவிட்டாள் பார்த்துக்கோ…  - என்றான் ஹரீஷ்…

என் அண்ணன் தோள் மேலே பூமாலையாக ஆனாளே

அன்பாலே நம் வீட்டை ஆளும் ராணி ஆனாளேஎன்று அவ்னீஷ் பாட…

அதிகாலையில் சுப்பிரபாதம் கேட்கும் இனிமேல் நம்வீட்டில் தான்என்றபடி மூவரும் ஆடி பாட,

பெண்கள் மட்டும் சும்மாயிருப்பார்களா என்ன?... அவர்களும் தன் பங்கிற்கு களத்தில் இறங்கிய போது, தங்களது ஜோடிகளை பார்த்த ஆண்கள் மூவரும் மெய்மறந்து போய் நிற்க,

சுதாரித்த முகிலன், சட்டென்று,

வந்தாள் மகாலஷ்மியேஎன் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…”  என்று மயூரியைப் பார்த்த வண்ணம் பாட,

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

நீருக்குள் மூழ்கிடும் தாமரை

சட்டென்று மாறுது வானிலை

பெண்ணே உன் மேல் பிழை…” என்றான் அவ்னீஷ் ஷன்வியின் அருகில் சென்று கைகாட்டியபடி…

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

என் நினைவு தெரிந்து தான் இது போலே இல்லையே

எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்

இரவும் பகலும் சிந்தித்தேன்

இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்

இளமை இளமை வாதித்தேன்

கொள்ளை கொண்ட அந்த நிலா

என்னைக்கொன்று கொன்று தின்றதே

இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே…” என்று ஹரீஷ் மெய் மறந்து மைத்ரியிடத்தில் தொலைந்து போனவனாய் பாட,

அங்கே பெரும் சிரிப்பலை எழுந்தது…

தொடரும்

Go to episode # 29

Go to episode # 31

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.