(Reading time: 36 - 71 minutes)

ண்ணா…

சொல்லுடா ரிகா… எதும் முக்கியமான விஷயமா?... ஆதிகிட்ட பேசணுமாடா?...

இல்லண்ணா… உங்ககிட்ட தான் பேசணும்… அதான் போன் பண்ணினேன்…

சொல்லுடா…

நீங்க… கொஞ்சம் ஸ்கூலுக்கு வர முடியுமாண்ணா?...

வரேண்டா… எப்படா வரணும்?....

பத்து மணிக்கு மேல வந்தா போதும் அண்ணா…

சரிடா… வரேன்…

நான் வர சொன்னேனே… ஏன் ஏதுக்குன்னு எல்லாம் கேட்க மாட்டீங்களாண்ணா?...

சொல்லுறது வேற யாரோன்னா, நீ சொல்லுற மாதிரி கேட்டிருப்பேன்… பட்… சொல்லுறது என் தங்கச்சி ஆச்சே… அதனால கேள்வியே கிடையாது… என்று சிரித்தான் ஹரீஷ்…

அவனது பாசம் புரிந்தவளாக அவளும் அமைதியானாள் சிறிது நேரம்…

பின், அண்ணா, நான், ஷன்வி, மயூரி மூன்று பேரும் பார்த்து பேசி பழகி, காதலித்து தான் கல்யாணம் பண்ணிக்கப்போறோம்… ஆனால், மைத்ரி அப்படி இல்லண்ணா… பாவம் அவ… உங்களிடம் பேச முடியலைன்னு ரொம்ப ஃபீல் பண்ணுறாண்ணா என்றவள், நேற்றிரவு நடந்ததை அவனிடத்தில் சொல்லிவிட்டு,

நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது… அவளும் சகஜமா உங்களோட பேசி பழகணும்… அவ உங்களை ரொம்ப விரும்புறாண்ணா… ஆனா, சொல்லத்தான் அவளால முடியலை… எல்லா பெண்களும் அவளின் நிலையை கடந்து வந்தவர்கள் தான்… நானும் தான்… அவளைப் பேச வைக்க உங்களால மட்டும் தான் முடியும்… நான் சொல்லுறது புரியும்னு நினைக்கிறேன் அண்ணா…

அவள் சொல்வதை கவனமாகக் கேட்டுக்கொண்டவன், ஹ்ம்ம்… புரியுதுடா… ஆனா, அவளிடம் நான் பேசினா, அவ தான் பதில் சொல்ல மாட்டிக்குறாளே…. பின்னே எப்படி அவளை பேச வைக்க?... என்று கேட்டான் ஹரீஷ்…

அய்யோ… சரியான மக்கு அண்ணா… நீங்க… என்றாள் அவள்…

டேய்… இந்த விசயத்துல நீ தான் அண்ணனுக்கு உதவி செய்யணும்… எனக்கு இந்த காதல் எல்லாம் புதிதா இருக்குடா… என்ன செய்யுறது, என்ன பேசுறதுன்னு எதுவும் புரியலைடா நிஜமா.... என்றான் பாவமாக…

அய்யோ… அண்ணா… அண்ணா… ஹ்ம்ம்… சரி… நான் சொல்லுறபடி செய்யுங்க… என்றவள், அவனை மைத்ரியிடத்தில் கல்யாணத்தை நிறுத்திடப் போகிறேன் என்று சொல்ல சொன்னாள்…

என்னடா சொல்லுற?...

காது கேட்கலையா உங்களுக்கு?...

கேட்டுச்சுடா… அதான் திரும்ப கேட்குறேன்… நிஜமாவா சொல்லுற?...

அய்யோ அண்ணா…  நான் சொல்லுற மாதிரி சொல்லுங்க… நான் வைக்கிறேன்… என்றவள் சட்டென்று அணைப்பைத் துண்டித்து விட்டாள்…

அவள் சொன்னதையே திரும்ப திரும்ப யோசித்துக்கொண்டிருந்தவன், அவள் சொன்ன அந்த ஒரு வாக்கியத்தை பற்றுகோலாகப் பிடித்துக்கொண்டு ஏற்ற இறக்கங்களுடன் மைத்ரியிடம் அவன் மனதில் உள்ளவற்றையும் பேசிவிட்டான்…

காதல் என்பது கற்று கொடுத்து வருவது அல்லவே… தானாகவே மனதில், எண்ணத்தில், செயலில், பேச்சில் கலந்திருக்கும் ஒரு உணர்வு…

ஹரீஷிற்கும் அந்த உணர்வு சிலவற்றை எடுத்துரைக்க, தானாகவே தன் மனதில் தோன்றிய வினாக்களையும் கேட்டுவிட்டான்…

அவன் சொன்னதை கேட்டவள் அப்படியே உறைந்து நின்றாள்…

அவளை மேலும் பேதலிக்கும் வண்ணம் அவனும் மேற்கொண்டு பேசினான்…

அம்மாவோட ஆசைக்காகத் தான் நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லியிருக்க… உனக்கு என்னைப் பிடிக்கலை… அதுதான் உண்மை… இனியும் நான் உன்னிடம் வந்து பேசி உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்… அம்மாவிடம் நான் சமாளித்துக்கொள்கிறேன்… உனக்குப் பிடித்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு நீ சந்தோஷமா வாழு… என்றவன் அவள் பதிலை எதிர்பார்க்காது விரைந்து நடந்தான்…

அவன் வார்த்தைகள் அவள் செவிகளில் திரும்ப திரும்ப ஒலிக்க, அவன் உருவம் அவள் பார்வையை விட்டு தூரமாய் அகல, அவள் விதிர்த்துப் போனாள்…

விரைந்து சென்று கொண்டிருந்தவனின் முன் சென்று கை மறித்து நின்றாள் அவள் மூச்சு வாங்க…

அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் அவன் பார்வையை வேறு பக்கம் செலுத்த, துடித்த உதடுகளை அழுந்த மூடி, கன்னங்களில் வழிந்த நீரைப் பொருட்படுத்தாது அவனையேப் பார்த்திருந்தாள் அவள்…

அவன் அவளை கண்டுகொள்ளாது, விலகி நடக்க முயற்சிக்க, இன்னும் ஒரு அடி நகர்ந்தீங்க… நான் இங்கேயே செத்துவிடுவேன்…. என்றாள் அவள் திக்கித்திணறி…

சட்டென்று அவள் வாயைப் பொத்தியவன், அப்படி சொல்லாதே என தலை அசைத்தான்…

அவன் கையைத் தட்டி விட்டவள், அவன் சட்டையை கொத்தாக பிடித்தாள்…

உன்னை எனக்குப் பிடிக்கலைன்னு நான் சொன்னேனாடா உங்கிட்ட?... உன்னை எப்போ பார்த்தேனோ அப்பவே உன்னை எனக்கு பிடித்துவிட்டது…. அந்த நொடியிலிருந்து மனசுக்குள் உன்னுடன் வாழ்ந்து வருகிறேன் நான்… அது தெரியுமாடா உனக்கு…

என் நேரமோ என்னமோ தெரியலை… உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு வார்த்தை வரவில்லை… அதற்காக உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று நீ எடுத்துக்கொள்வதா?...

எனக்கு தானே பேச வார்த்தை வராமல் போனது… நீ என்னிடம் பேசினாய் தானே… மேலும் மேலும் பேசி என்னை பேச வைக்க வேண்டியது தானே?... அதை விட்டு விட்டு கல்யாணத்தை நிறுத்திவிடுவேன் என்று சொல்வதா?...

யாரைக் கேட்டு அப்படி சொன்னாய் நீ?... என்னைத் தவிர, வேறொரு பெண்ணை நீ மணந்து விடுவாயாடா?... சொல்லு…. என்று அவன் சட்டையைப் பிடித்து அவள் உலுக்கினாள்…

அவன் புன்சிரிப்புடன் அவளைப் பார்க்க, அவளோ என்னடா சிரிப்பு உனக்கு?... என்னை அழ வைத்துவிட்டு?.... என்று அவன் மார் மீது குத்தினாள்…

அவன் அவள் இருகைகளையும் பிடித்துக்கொண்டு, அவளையேப் பார்த்தான்…

நீ என்னிடம் பேசிட்டடீ…. பேசிட்ட…. என்று அவன் புன்னகைக்க…

அவள் அப்போது தான் அதை உணர்ந்தவளாக, அவனிடம் இருந்து விலக முயற்சிக்க, அவன் அவள் கைகளை விடுவித்தானில்லை…

அவள் தனது கைகளை உருவிக்கொள்ள முயல, அவன் அதைப் பற்றி மென்மையாக இதழ் ஒற்றி எடுத்தான்…

அவள் அவனின் தொடுகையில் முத்தத்தில் சிவந்தாள்…

பட்டென்று அவனிடமிருந்து விலகி நின்றாள்… அவனைப் பார்க்க தயங்கினாள்…

உன்னை காதலிக்கிறேண்டி ரொம்ப…. இந்த காதல் எனக்கு புதியதுதான்… ஆனாலும் என் மனசுக்குள்ள புகுந்து என்னமோ செய்யுறடி நீ… அந்த உணர்வை எனக்கு சொல்லத் தெரியலைடி… ஆனா, நீ இல்லாம நான் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டேண்டி… என்னை உனக்குப் பிடிச்சிருக்காடீ?... என்று அவன் கேட்க…

அவள் பதில் பேசாது அவனை விட்டு தூரமாய் நடந்து சென்றாள் அமைதியாக…

அவனுக்கும் அவளுக்கும் நீண்ட தூரம் இடைவெளி இருக்கையில், உங்களை மட்டும் தான் எனக்குப் பிடிச்சிருக்கு… ரொம்ப… என்றாள் அவள் வெட்கத்துடன்…

ஸ்ரீ என்றபடி அவன் அழைக்க, அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்… அவன் கண் அசைப்போ, இல்லை கை விரிப்போ எதுவோ ஒன்று அவளை தடுமாற வைக்க, அவள் ஓடி வந்து அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்…

அவளை இறுக அணைத்துக்கொண்டவன், ஐ லவ் யூ ஸ்ரீ என்றான்…..

அவள் அவன் கண்களை விட்டு பார்வையை எடுக்காமல், ஐ லவ் யூ டூ ஹரீஷ்…. என்றாள்…

மெல்ல அவள் காதல் சொன்ன உதடுகளை தன் உதடுகளால் தழுவினான் ஹரீஷ்….

அவனின் முதல் இதழ் ஒற்றுதலில் மொத்தமாய் அவன் வசமானாள் அவள்…. நீண்ட நேர முத்தத்திற்குப் பிறகு, அவளை விடுவித்தவன் அவளைப் பார்க்க, அவளோ அவனிடமிருந்து விலகி ஓடி விட்டாள்…. அவனது சிரிப்பு அவளைப் பின் தொடர்ந்தது இதமாய்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.