(Reading time: 36 - 71 minutes)

கோதை… அம்மாடி அந்த தட்டை எடுத்துவைம்மா…

இதோ வரேன்ம்மா… என்றபடி கோதை பர்வதத்திடம் அந்த தட்டை கொடுத்தார்…

அதை வாங்க தயங்கிய பர்வதம், நான் எப்படிம்மா?... என்று சொல்ல, இந்த வீட்டிற்கு பெரியவங்க நீங்க தான்… நீங்களும் செல்லம்மா அம்மாவும் முன்னாடி நின்னு தான் இந்த கல்யாணத்தை நடத்தி கொடுக்கணும்… இது உங்க பேர பிள்ளைங்க கல்யாணம்… அவ்வளவுதான்… என்றபடி தட்டை பர்வதத்திடம் கொடுத்துவிட்டு, இன்னொரு தட்டை எடுத்துக்கொண்டு செல்லம்மாப்பாட்டியிடம் சென்றார்…

பர்வதம் மறுப்பு தெரிவித்தது போலவே, செல்லம்மாப் பாட்டியும் மறுப்பு தெரிவிக்க, அவரிடம் சொன்ன அதே பதிலை இவரிடமும் சொல்லிவிட்டு சென்று விட்டார் கோதை…

பர்வதம் தயங்கியபடியே சென்று சாகரியிடம் அந்த தட்டை கொடுத்து அதில் இருந்த உடையை அணிந்து கொண்டு வர சொன்னார்… அவள் அவரின் காலில் விழுந்து வணங்கினாள்… நல்லாயிரும்மா…. என்னைக்கும் நிறைவா சந்தோஷமா தீர்க்காயிசா வாழணும்… என்று வாழ்த்தினார் பர்வதம்….

அதே போல், செல்லம்மாப்பாட்டியும் ஆதர்ஷிடம் சென்று புதுத்துணியை கொடுக்க, அவனும் அவரின் காலில் விழுந்து வணங்க, அவரும் பேரனை நிறைந்த மனதுடன் ஆசீர்வாதம் செய்தார்…

சுந்தரம் ஷ்யாமிடம், மாப்பிள்ளை… நாளைக்கு என்று கேட்பதற்குள் எல்லாம் தயார் மாமா… நீங்க எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம்… என்று சொல்ல…

ஆமா மாமா… நாங்க பார்த்துக்கறோம்… என்றபடி அங்கே தினேஷும் வர, சுந்தரம் இருவரையும் பார்த்துவிட்டு, கண் மூடி இமைத்தார்….

சுந்தரம், நீ இங்கே தான் இருக்கிறாயா?, இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு… பிள்ளைங்க ரெடி ஆயிட்டாங்களா இல்லையான்னு தங்கச்சியைப் பார்த்துட்டு வர சொல்லுடா… என்றபடி ராஜசேகர் அங்கு வந்தார்…

அடடா… அதுதானே முதல் வேலை… அதை மறந்துட்டோமே நாம… என்றான் தினேஷ்…

என்ன வேலையைடா சொல்லுற?... – ஷ்யாம்…

வேற என்ன வேலை நம்ம வாலு மாப்பிள்ளைகளை தயார் செய்யுற வேலைதான்… என்ற தினேஷ், சீக்கிரம் வாடா.. போய் பார்ப்போம்… என்ன பன்ணிக்கிட்டு இருக்குறானுங்களோ… தெரியலை… எனவும்,

ஆமாப்பா, முதலில் அவங்களைத் தயார் பண்ணுங்க… போங்க… என்று சுந்தரமும், ராஜசேகரும் அனுப்பி வைத்தனர் அவ்விருவரையும்…

ஏலே… கண்ணப்பா… அங்க பாரு வாசலில் கூட ஒரு வாழை மரத்தை கட்டு… ஏலே, முருகா.. அங்கே என்னலே நின்னு வேடிக்கைப் பார்த்திட்டிருக்குற?, விருந்து ரெடி ஆயிட்டான்னு போயி பாருல… என்றபடி ராசு ஒவ்வொருவரையும் வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்….

என்னப்பா… எதும் வேலை ஆகணுமா?... சொல்லுங்க நாங்க செய்யுறோம்… என்றபடி அந்த வழி போய்க்கொண்டிருந்த தினேஷ் கேட்க,

அவனைப் பின் தொடர்ந்து ஆமாப்பா… எதும் வேலை இருந்தா சொல்லுங்க… நாங்க செய்யுறோம்…. நீங்க ஏன் இங்கே கால் வலிக்க நின்னுகிட்டிருக்கீங்க?... என்று ஷ்யாமும் கேட்க…

நம்ம வீட்டு கல்யாணத்துல, நாம தானப்பா முன்னாடி இருந்து எல்லாம் செய்யணும்… என்றார் ராசு..

அதை தான், நாங்க செய்யுறோம்னு சொல்லுறோம்… நீங்க போய் சுந்தரம் மாமாகூட பேசிட்டிருங்க… ராஜசேகர் அப்பாவும் அங்கே தான் இருக்குறாங்க… போங்க… என்ற தினேஷ்,

அவர் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல, தான் கவனித்துக்கொள்வதாக சொல்லி அவரை அனுப்பி வைத்தான்… பின்னர், ஏலே… முத்து, இங்கே வா என்றவன், அவனிடம் ராசு செய்ய சொன்ன வேலையை செய்ய சொல்லி முடித்துவிட்ட பின்னரே அங்கிருந்து அகன்றான் ஷ்யாமுடன்…

டேய்… இப்போ இந்த வேலையைப் பார்த்தது பெரிய விஷயம் இல்லடா… அங்கிருக்கிற வாலு மாப்பிள்ளைகளை தயார் பண்ணுறது தான் பெரிய விஷயம்டா… என்றான் ஷ்யாம்…

நீ சொல்லுறது உண்மைதாண்டா… ஆனா, நாம அந்த சேவையை செய்து தானே ஆகணும்.. என்று சிரித்துக்கொண்டே தினேஷ் சொல்ல…

கண்டிப்பாடா… வேற வழியே கிடையாது… நாம அதை செய்தே ஆகணும்…. என்றான் அவனும் சிரித்துக்கொண்டே…

அந்த நேரம் பார்த்து, காவ்யாவும்-அனுவும் அவர்களின் எதிரே தூரமாய் செல்ல, தினேஷின் கண்களும் ஷ்யாமின் கண்களும் சந்தித்துக்கொண்டன….

ஹ்ம்ம்… இப்போ அதை விட ஒரு பெரிய சேவை ஒன்னு பாக்கி இருக்கேடா ஷ்யாம்… என்று தினேஷ் சொல்ல…

ஹாஹா… சரியா சொன்னடா தினேஷ்… சரியா பத்து முதல் பதினைந்து நிமிஷத்துல நம்ம வேலையை முடிச்சிட்டு இங்கே ஆஜர் ஆகிடணும்.. டீலாடா?

டீல்டா ஷ்யாம்…. என்றான் தினேஷும்…

காவ்யா நீ போய் அந்த பூத்தட்டை எடுத்துட்டு வந்துடு… வாண்டு பொண்ணுங்க தயார் ஆகிருக்க மாட்டாளுங்க… நீ சீக்கிரம் வா… நான் முன்னாடி போறேண்டி… என்று சொல்லியபடி அனு முன்னே செல்ல, காவ்யாவோ பூத்தட்டை எடுக்க சென்றாள்…

வேகமாக நடந்து கொண்டிருந்த அனுவின் கைப்பிடித்து இழுத்து ஒரு அறைக்குள் நுழைந்தான் ஷ்யாம்…

ஷ்யாம்… என்ன பண்ணுறீங்க…. யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க… கையை விடுங்க முதலில்… விடுங்க…

அவள் சொல்லிக்கொண்டேயிருக்க, அவன் சற்றும் கேட்டானில்லை…

ப்ளீஸ்… ஷ்யாம்… விடுங்க… என்று அவள் கெஞ்ச… அவன் அவளையேப் பார்த்தான்…

என்ன இப்படி பார்க்குறீங்க?... என்ற அவளின் கேள்விக்கு, இன்னைக்கு இந்த இளஞ்சிவப்பு வண்ண புடவையில ரொம்ப அழகா இருக்குற அனு நீ…. அதும் மேற்கத்திய முறையில் கட்டியிருக்கிற விதம் ரொம்ப நல்லா இருக்கு… என்றவன் அவளை இடையோடு சேர்த்து அணைக்க…

அவள் அவனை வெட்கத்தோடு பார்த்துவிட்டு, உங்களுக்கும் இந்த ஷெர்வானி ரொம்ப நல்லா இருக்கு ஷ்யாம்… ரொம்ப ரொம்ப அழகாயிருக்கீங்க… என் க்யூட், ஸ்மார்ட் ஷ்யாம்… என்றவள் அவனை அணைத்துக்கொண்டு அவன் மார்பில் ஒன்றி போனாள்…

அப்படியா… அப்போ இருக்குற இந்த கொஞ்ச நேரத்தை வீணடிக்க வேண்டாம் பேசி… என்றவன், அவள் என்ன என்று பார்க்கும் முன்னரே அவள் முகம் நோக்கி குனிந்து தன் வேலையை இனிதே செயல்படுத்த துவங்கினான்…

இங்கே தான இருந்துச்சு… எங்கே போச்சு… இந்த பூத்தட்டு… சே… வச்சா வச்ச இடத்துல இருக்குதா?... என்றபடி புலம்பிக்கொண்டே தேடியவள், பூத்தட்டு மெத்தை மேல் இருப்பதை பார்த்துவிட்டு இதை யார் இங்கே கொண்டு வைத்தது என்றெண்ணியபடி எடுக்க முயன்ற போது, அவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டான் தினேஷ்…

அவன் ஸ்பரிசம் உணர்ந்தவள் தினு கண்ணா… என்ன இது?... இந்த நேரத்துல… யாராவது வந்துடப் போறாங்க தினு…. என்று சொல்ல…

வரட்டும்டி… பரவாயில்லை… என்றவன் அணைப்பை மேலும் இறுக்க…

அவள் அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு திரும்பி அவன் முகம் பார்த்தாள்…

அய்யோ… என் தினுவா இது?... ஷெர்வானியில் எவ்வளவு ஹேண்ட்சமா இருக்கேடா நீ… என் செல்லம் என்றவள் அவன் கன்னத்தில் இதழ் பதிக்க… அவன் ப்ச் என்றான்…

என்னாச்சு… என் தினுக்கு இன்னைக்கு… ஹ்ம்ம்ம்… என்றவள் அவனின் கழுத்தில் தன் இருகைகளையும் மாலையாய் கோர்த்து அவன் விழிகளுக்குள் பார்க்க…

கவி… ரொம்ப அழகா இருக்கடி… இந்த இளஞ்சிவப்பு வண்ண புடவை உனக்கு ரொம்பவே அம்சமா இருக்குடி… என்று சொல்ல..

ஹ்ம்ம்… இப்போ அதுக்கு என்ன பண்ணனும்?... என்று அவள் புருவம் உயர்த்தி கேட்க…

ஒன்னும் செய்ய வேண்டாம்… இப்படியே கட்டிப்பிடிச்சிட்டே இரு… அது போதும்டி கவி… என்றான் அவளை அணைத்தபடி…

நான் போகணுமே தினு… உங்க தங்கைகளை ரெடி பண்ணனும்ல… என்று சொல்ல… நானும் தான் போய் உன் தம்பிங்க எல்லாரையும் ரெடி பண்ணனும்… என்றான் அவனும் சட்டென்று…

தினு….. என்றவள் அவன் முகம் பற்றி முத்தங்கள் பதிக்க, அதற்கும் மேல் பொறுமை இல்லாதவனாக அவன் அவள் இதழோடு இதழ் சேர்த்தான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.