(Reading time: 46 - 92 minutes)

தன்பின் வரிசையாக பர்வதம்-செல்லம்மாப்பாட்டி, ராஜசேகர், ராசு-செல்வி, கோதை-சுந்தரம், தினேஷ்-காவ்யா, அனு-ஷ்யாம், என அனைவரின் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டனர் மூன்று புதுமண ஜோடிகளும்…

ஆதியோ மூன்று தம்பிகளையும் அணைத்து தன் வாழ்த்தை தெரிவித்தான்… சாகரியும் மூன்று தோழிகளையும் அணைத்து தன் வாழ்த்தை தெரிவித்தாள் கணவனைப் பின்பற்றி...

பின் மண்டபத்தில் வைத்து நடந்த அனைத்து வைபங்களிலும் மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும் பங்கேற்றனர் மூன்று ஜோடிகளும்…

தினேஷ்-காவ்யா, அனு-ஷ்யாம், ஆதர்ஷ்-சாகரிகா ஆறு பேரும், புதுமண ஜோடிகள் ஆறு பேரையும் கிண்டல் கேலி செய்து புதுமண தம்பதிகளை வெட்கப்பட வைத்துக்கொண்டிருந்தனர் அழகாக…

அவர்களின் கேலியிலும், சீண்டலிலும் நேரம் இறக்கைக்கட்டிக்கொண்டு பறக்க, மாலை நேரப்பொழுதில் வீட்டிற்கு அழைத்து வந்தனர் புதுமண ஜோடிகளை…

ஆசை காதலனைக் கைப்பிடித்த திருப்தியில், முகம் எங்கும் சந்தோஷத்துடன் கணவனுடன் சேர்ந்து வலது கால் எடுத்து வைத்து தான் வாழப்போகும் வீட்டினுள் செல்லும் தருணம், ஆண்கள் மூவரும் வலது கை நீட்ட, அதில் தனது வலது கையை வைத்து புன்னகை மாறாமலே உள்ளே சென்றனர் பெண்கள் மூவரும்…

பின்னர், சடங்குகள், சம்பிரதாயங்கள் என அனைத்தும் ஒருவழியாக முடிய, ஷ்யாமும், தினேஷும் வந்து மாப்பிள்ளைகள் மூன்று பேரையும் அழைத்துச்சென்று வீட்டின் முன்பக்கத்தில் அமர வைத்து பேசிக்கொண்டிருந்தனர் சுந்தரம், ராஜசேகர், ராசு மற்றும் ஆதர்ஷுடன் சேர்ந்து…

குளிர்ந்த காற்று மென்மையாக படர ஆரம்பிக்க, சூரியன் முழுவதும் மறைந்து நிலவு வானில் உலவ ஆரம்பித்தது…

ஏண்டி… நேரா தான் இருந்து தொலையேண்டி… என்று மயூரியை அதட்டிக்கொண்டிருந்தாள் அனு…

நீ என்னதான் சொன்னாலும் இவங்க கேட்கமாட்டாங்க அனு… விடு… என்றாள் காவ்யா…

அதெப்படிடீ விட முடியும் காவ்யா???

ஆமா அனு… இதுநேரம் வரை நாம சொல்லிப்பார்த்துட்டோம்… இனி நமக்கு இங்கே என்ன வேலை???... இனி இவங்க பாடு… இவங்களை கட்டிகிட்ட நம்ம தம்பிங்க பாடு… என்று சிரித்தாள் காவ்யா…

ஹாஹா… சரியா சொன்னடி… பாவம் நம்ம தம்பிங்க… என்றாள் அனு முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு…

பதிலுக்கு சிரித்த காவ்யா, அப்போதுதான் கவனித்தாள், மூவரின் முகமும் சற்றே பயத்தை தெரிவிக்க…

ஹேய்…. என்னடி… என்ன ஆச்சு?... என்று காவ்யா கேட்க…

அண்ணி… வந்து… வந்து… என்று மைத்ரி இழுக்க…

ஷன்வி, இல்ல அண்ணி, அது வந்து என்று சொல்ல வந்தவள் அவர்கள் இருவரின் முகத்தையும் பார்த்துவிட்டு அமைதி காக்க,

மயூரி சட்டென்று, இல்ல அண்ணி, உங்க தம்பிங்க பாவம்னா, உங்களோட இத்தனை வருஷமா வாழ்ந்துட்டிருக்கிற எங்க அண்ணன்மார்கள் நிலைமையை யோசிச்சு பார்த்தோம்… பாவம் தான்ல எங்க அண்ணன்ங்க… இரண்டு ராட்சஸிங்களையும் வச்சு சமாளிச்சிருக்காங்களே… இத்தனை நாள்… என்றபடி சோகமாகவும், கொஞ்சம் பயந்தபடியும் கையை முகத்தில் வைத்துக்கொண்டு பேசிய மயூரியின் முதுகில் ஒன்று போட்டாள் காவ்யா…

அவளைத் தொடர்ந்து அனுவும் ஒரு அடி போட, மயூரி வலியில் கத்தினாள்…

ஸ்…. ஆ…. அண்ணி… வலிக்குது… என்று மயூரி சொல்ல..

வலிக்கட்டும்… நல்லா… என்றபடி இருவரும் மேலும் மேலும் அடிக்க…

சந்தேகமே இல்லை… இரண்டு பேரும் ராட்சஸிங்க தான்… என்ன அடி அடிக்கிறீங்க… என்றாள் ஷன்வி சற்றே ஆச்சரியத்துடன்…

அடிப்பாவி… உன்னை… என்றபடி அவளை அடிக்க போன அனுவை தடுத்த காவ்யா, இதுக்கு மேல இவளுங்களை இங்க பேச விடுறது தப்பு… அதனால… என்ற காவ்யா அனுவைப் பார்க்க…

அதுதான் சரி காவ்யா… வா… என்றபடி மூன்று பேரையும் அறையை விட்டு வெளியே இழுத்துவந்த நேரம்,

காவ்யா, என்னோட சார்ஜர் எங்கே?... என்றபடி அங்கே வந்தான் தினேஷ்…

அங்கே தானங்க இருக்கு… நல்லா தேடிப் பாருங்க… என்றாள் காவ்யா…

தேடிட்டேன்… ஆனா, அங்க இல்ல… நீ வந்து எடுத்துக்கொடு… எனக்கு அவசரமா பேசணும்… ப்ளீஸ்… என்றபடி தினேஷ் கெஞ்ச…

அவன் கெஞ்சுவது பொறுக்காதவள், சரிங்க… நீங்க போங்க… நான் இப்போ வந்திடுறேன்… என்றாள் அவள்….

அவனும் சரி என்று சென்றபின், ஷ்யாம் வந்து அனு, என்னோட க்ரீன் கலர் ஃபைல் எங்கே வச்சிருக்கிற?... ஆடிட்டர் கேட்டார்… என்றபடி அங்கே வந்தான் அவன்…

அங்கே தான் இருக்கு… என்ற அனு… ஷ்யாமைப் பார்க்க…

நீயே வந்து எடுத்துக்கொடுத்துடேன் அனு… ப்ளீஸ்… என்று அவன் கெஞ்ச…

ஹ்ம்ம்… சரிங்க… நீங்க போங்க… நான்வரேன்… என்றவள் அவனைப் போக சொல்லிவிட்டு காவ்யாவைப் பார்த்தாள்..

அப்போது கோதை வந்து, என்னம்மா, ரெடியா?.. என்று கேட்க… ரெடிம்மா… என்றபடி காவ்யாவும் அனுவும் சொல்ல… சரிம்மா… நீங்களே அழைச்சிட்டுப்போங்க… என்றபடி சொல்லிவிட்டு அவர் அகல…

அம்மா… ஒரு நிமிஷம்… சாகரி எங்கே?... என்று அனு கேட்க…

அவ கீழே நந்து சித்து அபியோட பேசிட்டிருக்கிறாம்மா… நீங்க இவங்களை அழைச்சிட்டு போங்க… நான் அவளை கூட்டிட்டு வரேன்… என்றபடி கோதை சென்றுவிட்டார்…

இந்தாங்கடி… இதைப் பிடிங்க… என்றபடி பால் டம்ளரை கையில் கொடுத்து அவர்களை அறைக்குள் தள்ள,

அவர்களோ அண்ணி… ப்ளீஸ் என்று கெஞ்ச…

பாருடா… இவ்வளவு நேரம் அலம்பல் பண்ணிட்டு இப்போ என்ன ப்ளீஸ் என்று இருவரும் கேட்க…

அண்ணி… என்று அவர்கள் தயங்க…

ஹேய்…. லூசுப்பொண்ணுகளா… என்ற காவ்யாவும், அனுவும் அவர்களை அணைத்து சிரித்து அறைக்குள் அனுப்பி வைத்தனர் மெதுவாக…

ஹப்பாடா… அலை அடிச்சு ஓய்ந்த மாதிரி இருக்கு அனு… என்றாள் காவ்யா அனுவிடம்…

உண்மைதான் காவ்யா… ஒரு வழியா நம்ம வேலை முடிஞ்சது… என்று சிரித்த அனுவிடத்தில்,

இன்னும் முடியலைடி… என்றாள் அவள்..

என்னடி சொல்லுற?... என்ற அனுவிடம், இன்னொரு அலை அங்கே கீழே இருக்கே… அதையும் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தாகணுமே…

ஆமால்ல காவ்யா… ஆனா, அந்த வேலையை அம்மா பார்த்துப்பேன்னு சொன்னாங்களே…

அது சரிதான் அனு… பாரு… இத்தனை நேரம் வாய் பேசிட்டிருந்த அவங்க மூணு பேரும் அறை வாசலில் வைத்து தயங்கினதைப் பார்த்த தானே… இவளும் சின்னப்பொண்ணு தானே… நாம சாகரி கூட இருக்க வேண்டியது அவசியம் தானே… என்ற காவ்யாவின் கேள்விக்கு ஆம் என்று தலை அசைத்தாள் அனு…

சரி… சித்து, நந்து, நேரமாச்சு… போய் படுங்க… என்றவள், அபி நீயும் தூங்க போ…. என்று சொல்லிக்கொண்டிருந்த போது, ஆமாடா, நேரமாச்சு வாங்க தூங்கலாம் என்றபடி மூன்று பேரையும் முன்னே செல்ல சொல்லிவிட்டு அங்கே வந்த பர்வதமும், செல்லம்மாப் பாட்டியும் நீ தூங்கலையா சாகரி?....… என்று கேட்க…

இல்ல பாட்டி, வந்து என்று அவள் இழுக்க…

நாங்க பார்த்துக்கறோம் பாட்டி… நீங்க போய் தூங்குங்க… என்றபடி வந்த காவ்யாவும், அனுவும், அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, சாகரியை இடுப்பில் கையை வைத்துக்கொண்டு முறைத்து பார்க்க.. அவள் பயந்து நின்றாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.