(Reading time: 46 - 92 minutes)

ம்மாகிட்ட உன்னை நாங்க பார்த்துக்கறோம்ன்னு சொல்லிட்டு இப்போதான் அவங்களை தூங்க சொல்லிட்டு உன்னைத் தேடி வந்தா, நீ சின்னப்பிள்ளைங்க கூட கதை பேசிட்டிருக்கிற?... என்றாள் அனு கோபமாக..

அதானே… நல்லா கேளு… அனு… என்ற காவ்யா சாகரியைப் பார்த்து அங்கே ஒரு ஜீவன், உனக்காக காத்துக்கொண்டிருக்கிறது என்ற எண்ணம் கொஞ்சமாச்சும் உனக்கு இருக்காடீ???... என்று கேட்க…

அவள் மௌனமாக இருந்தாள்…

வாயைத் திறந்து எதாவது பேசுடி…. என்ற அனுவிடம், இல்ல அண்ணி, குட்டீஸ் பேசிட்டிருந்தாங்க… அதான்… என்று அவள் இழுக்க…

அவங்ககிட்ட பேசுற நேரமாடி இது?... என்று முறைத்த அனுவிடம்,

சாரி அண்ணி… என்ற சாகரி முகத்தில் உண்மையான வருத்தம் இருந்தது…

அட லூசுப்பொண்ணே… முகம் வாடிப்போச்சே… ஒரு சொல்லுக்கே… நான் சும்மா விளையாண்டேண்டி… என்ற அனு, அவளை அணைத்துக்கொள்ள, சாகரி சிரித்தாள்..

குட்…. இப்படித்தான் சிரிச்சிட்டே இருக்கணும் என்றவள், போகலாமா என்று கேட்க… அவள் சரி என்று தலை அசைத்தாள்…

அவர்கள் மூவரும் சென்று கொண்டிருந்த போது, சாகரி ஒரு நிமிடம் அண்ணி… என்றாள்..

என்ன சாகரி?... ஏன் நின்னுட்ட?... என்று காவ்யா கேட்க… சாகரியின் கண்களோ பூஜையறையைக் காட்டியது…

இப்போ அங்கே?... என்று இழுத்த காவ்யாவிடத்தில், அமைதியாக இரு என்று கை காட்டிய அனு, நீ போயிட்டு வா சாகரி… நாங்க இங்கே வெயிட் பண்ணுறோம்… சீக்கிரம் வந்துடு… என்றபடி அங்கே இருந்த சோபாவில் காவ்யாவுடன் அமர்ந்தாள் அனு…

அப்போது காவ்யாவிடம், ஆதர்ஷ் பூஜையறையில் கொண்டு வந்து வைத்த சிலையை பற்றி கூறினாள் அனு…

பூஜையறையில், கை கூப்பி தொழுதவள், கண்கள் நிறைய அந்த ராம்-சீதா உருவ சிலையைப் பார்த்தபடி நின்றாள்…

என்றோ தான் வரைந்து கொடுத்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்து, அதை பூஜையறையில் வைத்து பூஜித்து, அணுதினமும் உறங்கும் முன்னும், எழுந்த பின்னும், அதனை தரிசித்து தொழும் தன் கணவனுக்கு என்ன செய்து தன் அன்பை நிரூபிக்க என்று அவள் எண்ணிய வேளை,

பதில் கிடைச்சிட்டு சீதை….. என்ற தன்னவனின் குரல் அருகில் கேட்க,

சட்டென்று திரும்பியவளின் பார்வை ஆதர்ஷின் முகத்தில் நின்றது…

சிரித்தவண்ணம் அவளருகில் வந்தவன், எப்பவும், ராமனோட சீதையை இங்க வந்து ராமனோட ஜோடியா பார்த்துட்டு போவேன்… அப்ப எல்லாம் எனக்குள்ளேயே கேட்டிருக்கேன்… என்னைக்கு என் சீதையோட வந்து உங்களைப் பார்க்கப் போறேன்னு… இன்னைக்கு எனக்கு அதற்கு பதில் கிடைத்திருக்கு… என் சீதை என்னருகில்… என் மனைவியா… நினைக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குடா…. என்றவன் அவளைப் பார்க்க…

ஏற்கனவே என்ன செய்து தன் அன்பை கணவனிடத்தில் காட்ட என்று யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு இப்போது பேசுவதற்கு வார்த்தைகள் கூட வராமல் போனது…

இமைக்காமல் தன்னவனைப் பார்த்தவள், சட்டென்று திரும்பி, கடவுளிடம், என்னவரின் முகத்தில் இந்த புன்னகை என்றும் நிறைந்திருக்க வேண்டும்… என் காலம் முழுவதும் அவரை நான் சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் ஸ்ரீராமா… அதற்கு நல்வழி காட்டு… என்று வேண்டிக்கொண்டவள் திரும்பி அவன் முகம் பார்த்த போது, அங்கே அனுவும் காவ்யாவும் இருந்தார்கள்…

என்ன மாப்பிள்ளை தம்பி… இந்த பக்கம்… என்று கேட்ட காவ்யாவிடம்,

ஒன்றுமில்லை அண்ணி…. சாமி கும்பிட வந்தேன் என்றான் ஆதர்ஷ்…

சாமி கும்பிட்டாச்சுல்ல… அப்போ கிளம்பு… என்றாள் அனுவும் உடனே…

சரிக்கா… என்றவன், சாகரியைப் பார்த்து விடைபெறும் பாவனையில் தலைஅசைத்துவிட்டு செல்ல…

சாகரி போகலாமா… என்றபடி காவ்யா கேட்க… சரி என்று அவளும் தலை அசைத்தாள் அமைதியாக…

சாகரியைத் தயார் செய்து, அவள் கையில் பாலை கொடுத்து ஆதர்ஷின் அறைக்குள் அவளை அனுப்பி விட்டு,

ஷ்…அப்பாடி… எல்லா வேலையும் முடிஞ்சது என்ற அனுவிடம், எங்கேடீ முடிஞ்சது… அண்ணன் ஃபைல் கேட்டாங்களே மறந்துட்டியா?... என்று காவ்யா சொல்ல…

அய்யய்யோ… ஆமால்ல… நான் மறந்தேபோயிட்டேன் என்றவளைப் பார்த்து சிரித்த காவ்யாவிடம்,

என்ன சிரிப்பு வேண்டியிருக்கு மேடம், தினேஷ் அண்ணன் உன்னிடம் சார்ஜர் கேட்டதாக எனக்கு நினைவு… அங்கே எப்படியோ??? என்று அனு கேலி பண்ண, இம்முறை இருவரும் சேர்ந்தே சிரித்தனர்…

என்னங்க இன்னும் தூங்காமல் என்ன பண்ணுறீங்க?... என்று கேட்ட கோதையை அமைதியாகப் பார்த்த சுந்தரம்,

நமக்கும் இப்போதான் கல்யாணம் முடிந்ததுபோல் இருக்கு… அதற்குள் நம் பிள்ளைகளின் கல்யாணமும் முடிந்துவிட்டது…. நம் வாழ்விலும் பெரிய பிரச்சினைகள் வரத்தான் செய்தது… நாம் அதையெல்லாம் சமாளித்து வாழ்வில் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்… அதுபோல் நம் பிள்ளைகளும் இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்பதை நினைத்தாலே, மனம் ஒரு நிலையில் இருக்க மாட்டேன் என்கிறது கோதை…

சிறுபிள்ளைகள் வேறு… எது நடந்த போதிலும் ஒன்றாக நின்று சமாளிக்கும் பக்குவம் அவர்களுக்கு உண்டு தான்… ஆனாலும், எந்த வித பிரச்சினைகளும் வராமல் இருக்க வேண்டுமே… அதுதான் யோசனையாக இருக்கிறது… என்றார் சுந்தரம்…

அவரின் கையைப் பிடித்துக்கொண்ட கோதை, அவர்கள் கூட இனி வரும் வாழ்க்கையை தைரியமாக வாழப் பழகி கொள்வார்கள்… ஆனால், நீங்கள் தான் பயப்படுகிறீர்கள் சின்னப்பிள்ளை மாதிரி… என்றவர்,

நம்மை விட நம் பிள்ளைகள் புத்திசாலிகள்… அதுமட்டுமில்லாமல், நம் காலத்திற்குப் பிறகு ஆதர்ஷ் அவர்களை வழிநடத்தி செல்வான்… அதில் எனக்கு ஐயம் ஏதுமில்லை… திருமண வாழ்க்கை என்பது சந்தோஷமும், பொறுப்பும் நிறைந்தது… நம் பிள்ளைகள் சந்தோஷமாகவும், அதே சமயம் தங்களுக்குண்டான பொறுப்பிலிருந்து விலகாமலும் வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது… என்று கூற,

சுந்தரம் மனைவியை புரிந்துகொண்டவராக பார்த்தார்… மனதிலிருந்த சஞ்சலத்தை ஒரு நொடியில் அகற்றி விட்ட மனைவியை வாஞ்சையுடன் பார்த்தார் அவர்…

இனி நம் பேரப்பிள்ளைங்களை எப்படி வளர்த்து ஆளாக்குவதுன்னு மட்டும் யோசிச்சா போதும்… இல்லையா கோதை என்று கேட்க,

சரியா சொன்னீங்க என்றவர், கணவரின் தோள் சாய்ந்து கொண்டார் நிறைவுடன்… சுந்தரமோ தோள் சாய்ந்த மனைவியை பாசத்துடன் அணைத்துக்கொண்டார் காதல் மிக…

என்ன செல்வி தூங்காமல் இங்கே நின்று வானத்தை எதற்கு பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்ற கணவரின் குரல் கேட்டு விழிகளில் இருந்து வழிந்த நீரை துடைத்துக்கொண்டார் செல்வி…

அதற்குள் அருகில் வந்துவிட்ட ராசு, மனைவியின் கண்ணீரைக் கண்டுகொண்டு என்ன வென்று கேட்க,

இந்நேரம், ஜனா அண்ணனும் தாமரை மதினியும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே… என்று மனதிற்கு தோன்றியது… எனக்கே தோன்றியது என்றால், சாகரிக்கு நிச்சயம் தோன்றியிருக்குமே… அதை நினைத்தேன் கண் கலங்கிவிட்டது…  என்றார் அவர் வருத்தம் மிக…

நீ சொல்வதும் உண்மைதான் செல்வி… என்னதான் சாகரி வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் மனதில் அவளுக்கும் ஓர் மூலையில் அந்த வருத்தம் இருக்கத்தானே செய்யும்… ஆனால், இனி அவளுக்கு அது கூட இருக்கக்கூடாது… அதுதான் அவளுக்கு அப்பாவும் அம்மாவுமாக நாம் இருவரும் இருக்கிறோமே… அவளுக்கு வேண்டியதை இனி பெற்றவர்களாக நாம் செய்வோம்… தினேஷ் நம் பையன், சாகரியும் நம் பெண்… அதை மனதினுள் பதிய வை… இனி கண் கலங்க மாட்டாய்… என்று ராசு அழுத்தம் திருத்தமாக சொல்ல, கணவரின் தோள் சாய்ந்து விசும்ப ஆரம்பித்தார் செல்வி..

ஹேய்… லூசு அழாதேடி… என்றவர், மனைவியை தட்டிக்கொடுத்து சமாதானப்படுத்த, செல்வியோ, கணவனின் உறுதியான வார்த்தைகளில் மனம் நிறைந்து போனவராய், அவரை அணைத்துக்கொண்டார் காதலுடன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.