(Reading time: 46 - 92 minutes)

தோ இருக்கு… என்றபடி கணவன் கேட்ட ஃபைலைத் தேடி கண்டுபிடித்து அவனின் முன் கொண்டு அனு நீட்ட,

அவன் அதை வாங்கி ஒரமாக வைத்துவிட்டு நிதானமாக அவளைப் பார்த்தான்…

என்ன என்று அவள் புரியாமல் பார்க்க, அவளிடம், ஃபைல் எல்லாம் சும்மா… உன்னை இங்கே வர வைப்பதற்கு தான் இந்த ஃபைல் சீன் எல்லாம்… என்று அவன் இலகுவாக கூற,

அவனை இடுப்பில் கை வைத்து முறைத்தவள், எதற்கு இப்படி பண்ணீங்க… என்று கேட்க, அவன் அவள் கைப்பிடித்து இழுத்து இதற்குத்தான் என்றான் அவளை இடையோடு சேர்த்து அணைத்தபடி…

ஷ்… ஷ்யாம்… என்ன இது விடுங்க… என்று அவள் விலக முயற்சிக்க,

எதுக்கு விடணும்?... கல்யாண பிசியில் மேடம் என்னை கவனிக்கவே இல்லை… கொஞ்சமும்… போதாதக்குறைக்கு ஆடிப்பாடி வேற என் முன்னாடியே என்னை உசுப்பேத்துற… இத்தனையும் செஞ்சுட்டு நீ பாட்டுக்கு போயிடுற… நம்மளையே நினைச்சிட்டு ஒருத்தன் இருக்கானேங்கிற நினைப்பு கொஞ்சமாச்சும் உனக்கு இருக்கா??? என்று கேட்ட கணவனை அசையாமல் நின்று பார்த்திருந்தாள் அனு….

என்னை இப்படி பார்த்தா என்ன அர்த்தம்…?... என்று அவன் கேட்க… அவள் கலகலவென்று நகைத்தாள்…

அவளின் சிரிப்பில் தொலைந்தவன், அனு… என்று ராகம் பாட,

அவனின் கைப்பிடித்து முத்தம் கொடுத்தவள், என் செல்ல ஷ்யாம்… உங்களுக்கு மட்டும் தான் என் நினைவு இருக்கா?... எனக்கு இல்லையா?... இந்த மூன்று நாளும், எவ்வளவு அழகா இருந்தீங்க தெரியுமா?... என் மனசு உங்களை தான் சுத்தி சுத்தி வந்துச்சு… அத்தனை பேர் இருக்குற இடத்தில், நான் வந்து உங்களிடம் இப்படி கொஞ்ச முடியுமா என்றவள் அவனை இன்னும் நெருங்க அவனுக்கு பேச்சே வரவில்லை…

சரி… பொறுப்பா ஒரு அண்ணியாகவும், அக்காவாகவும், வேலை எல்லாம் முடிச்சிட்டு வந்து என் ஷ்யாமைப் பார்க்கலாம் என்று நினைச்சிட்டிருந்தேன்… அதற்குள் அவசரமா உங்களுக்கு?... இதில் என் நினைப்பு உனக்கு இருக்கா கொஞ்சமாச்சும் என்ற கேள்வி வேறு… என்று அவள் முறுக்கிக் கொள்ள, அவன் இப்போது அவளிடம் கெஞ்சினான்…

ஹேய்… அனு டார்லிங்க்… சாரிமா… என்றவன் உன்னிடம் முக்கியமான விஷயம் ஒன்று பேசணும்… அதற்காகவும் தான் உன்னை இங்கே வர வைத்தேன் சீக்கிரம் என்றான் அவன்…

என்னங்க என்ன விஷயம் என்றவளின் கைப்பிடித்தவன்,

நான் சொல்லுறதை எப்படி நீ எடுத்துப்பன்னு எனக்கு தெரியலை அனு… என்றவன், தன் மனதினுள் யோசித்ததை நிதானமாக அதே நேரம் கோர்வையாக சொல்ல ஆரம்பித்தான்…

மாமா-அத்தை, அப்பா-அம்மா, ராஜசேகர் மாமா, பர்வதம்-செல்லம்மாப்பாட்டி, தினேஷ்-காவ்யா, அப்பறம் உன் தம்பிங்க நாலுபேரும் அவங்க ஜோடிகளும்… எல்லாரும் சேர்ந்து ஒன்னா இருக்கலாம் அனு… என்றவன் அவளைப் பார்க்க…

அவள், அது எப்படி ஷ்யாம் முடியும்?... எல்லாரும் இங்கே எப்படி இருப்பாங்க?... என்று கேட்க…

இங்கே இல்லடா… சென்னையில்… நாம் தங்கிக்கலாம்… அங்கே இருந்து அவரவர் தொழில்களை கவனித்துக்கொள்ளலாம்… நம்ம மேனேஜர் பொறுப்பில் இங்கே கம்பெனியை விட்டு விட்டு நாம் சென்னை போகலாம்… மாதம் இருமுறையோ ஒருமுறையோ இங்கு வந்து நான் பார்த்துக்கொள்கிறேன் நிலவரத்தை… இதுவரை எல்லாரும் பிரிந்திருந்தது போதும் அனு… இனி எல்லாரும் சேர்ந்து இருக்கலாம்… நீ என்ன சொல்கிறாய்?... என்று மனைவியின் பதிலை எதிர்பார்த்தவனாய் ஆவலோடு அவளைப் பார்க்க

அவளோ சற்றும் தாமதிக்காமல் அவனை அணைத்துக்கொண்டாள்…

ஹேய்… என்ன அனு… என்னாச்சு… என்று கேட்ட கணவனை முறைத்தவள், எதும் ஆனால் தான் இப்படி அணைச்சுக்கணுமா? இல்லன்னா எதும் செய்யக்கூடாதா என்று கேட்க…

ஹேய்… அதெல்லாம் ஒன்றுமில்லைம்மா… நான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் இப்படி திடீரென்று செய்தவுடன் ஒன்றும் புரியவில்லை… அதான் என்றான் அவன், அவள் இன்னும் பதில் சொல்லாமல் இருப்பதை நினைத்துக்கொண்டே…

மக்கு ஷ்யாம்… உங்களை என்ன தான் பண்ணுறது?... நீங்க சொன்ன விஷயம் எனக்கும் பிடிச்சதனால தான் நான் இப்படி உங்களை கட்டிப்பிடிச்சிட்டு இருக்கேன்… இப்போவாச்சும் புரியுதா மக்கு புருஷா???... என்று கேட்டவளை, அள்ளி அணைத்துக்கொண்டான் இறுக…

தேங்க்ஸ் டார்லிங்க்… தேங்க் யூ சோ மச்… என்றவன் அவளுக்கு மாறி மாறி முத்தங்கள் கொடுக்க…

போதும்… போதும்… விடுங்க… தூக்கம் வருது… மூணு நாளா தூக்கமே இல்லை… என்றவள் அவனை விட்டு விலக…

ஹேய்… என்ன சொன்ன தூக்கம் வருதா?... என்றவன் அவளைப் பாவமாக பார்க்க…

பின்னே நீங்க மட்டும் தேங்க்ஸ் சொல்லலாமா?.. என்று அவள் கோபமாக கேட்க…

ஷ்… இவ்வளவுதானா?... சாரிம்மா… இனி சொல்லலை… என்றவன் கரங்கள் அவளை இழுக்க, விருப்பத்துடன் கணவனின் கரங்களில் தன்னை ஒப்படைத்தாள் அவள்…

என்னப்பா சேகர்… நீ இந்த நேரத்துல இங்க நடந்துட்டிருக்கிற?... என்னாச்சு… என்று கேட்ட பர்வதத்திடம்,

இல்லம்மா… கல்யாணம் முடிஞ்சது… இனி எல்லாரும் அவங்க அவங்க வேலையைப் பார்க்க பிரிந்து போயிடுவாங்கல்ல… ஹரி மும்பைக்கு கிளம்பிடுவான், ஆதி வெளிநாட்டுக்கு போயிடுவான், முகிலன் பெங்களூருக்கு போயிடுவான், அவ்னீஷ் எங்கே போவான்னு அவனிடம் தான் கேட்கணும்… ஷ்யாம் இங்கே தான் இருப்பான்… தினேஷ் சென்னைக்கு போயிடுவான்… இப்படி எல்லாரும் தனித்தனியா போயிடுவாங்களே… அதை நினைச்சேன்.. மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு… அதான் இப்படி இந்த ராத்திரி நடந்துட்டிருக்கேன் அடுத்து என்ன செய்ய என்று… என்று அவர் சொல்லி முடித்த வேளை…

எதற்கு கவலைப்படணும்?... என்றபடி அங்கே சுந்தரம் வந்தார்…

கவலைப்படாமல் எப்படிப்பா இருக்க முடியும் என்று செல்லம்மாப்பாட்டி கேட்க…

அம்மா… அது நினைச்சது நடக்கவில்லை என்றால் தானே… என்றபடி கோதையும் அங்கே வந்து சொல்ல…

சரியா சொன்னீங்க அண்ணி… நாம நினைச்சது தானே நடக்கப்போகுது… எல்லாம் நம்ம பிள்ளைங்க ஒத்துழைப்பினால் தான்… என்றபடி செல்வி சிரித்துக்கொண்டே சொல்ல…

ஹேய்… ஒழுங்கா புரியும்படி சொல்லுடி… என்ற ராசு, நான் சொல்லுறேன்.. என்ன நடந்துச்சுன்னு… என்று சொல்ல ஆரம்பிக்க பர்வதம், செல்லம்மாப்பாட்டி மற்றும் ராஜசேகர் ஆகிய மூவரும் அவர் சொல்வதை கவனிக்க ஆரம்பித்தனர்…

ராஜசேகருக்கு தோன்றியது போலவே பெரியவர்களுக்கும் தோன்றவே, அவர்கள் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கையில், ஷ்யாம், தினேஷ், ஆதர்ஷ், அவ்னீஷ், முகிலன் மற்றும் ஹரீஷ் அனைவரும் பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்… அவர்களின் சிரிப்பைக்கண்டதும் கோதையும் சுந்தரமும் ஒரு மனதாக முடிவெடுத்து எல்லோரும் சேர்ந்தே இருக்கலாம் என்ற தங்களின் விருப்பத்தை ராசு-செல்வியிடம் தெரிவிக்க, அவர்களுக்கும் அது சரி என்றே பட்டது…

மேலும், அதனை பிள்ளைகள் அனைவரிடத்திலும் சென்று சுந்தரம் தெரிவிக்க, ஒட்டுமொத்தமாக அனைவரும், சந்தோஷத்தில் கூச்சலிட்டு சுந்தரத்தை கட்டிக்கொண்டனர்…

ராஜசேகர், பர்வதம்-செல்லம்மாப்பாட்டி மூன்று பேருக்கும் சர்ப்ரைஸாக சொல்லுங்கள் என்று சிறியவர்கள் பெரியவர்களிடம் எடுத்துக்கொடுக்க அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர்… மேலும், தத்தமது துணையிடம் தாங்களே இந்த விஷயத்தை சொல்லிக்கொள்வதாக ஆண் பிள்ளைகள் கூறிவிட, கோதையும் சுந்தரமும் சிரித்து அதனை வரவேற்றனர்…

செல்வியும் ராசுவும்… நல்லபிள்ளைகள் தான் என்றபடி அவர்களை தட்டிக்கொடுத்து சிரிக்க… ஆண்கள் ஆறு பேரும் ஒருவரின் ஒருவர் கைத்தட்டிக்கொண்டு உற்சாகமாக நகைத்தனர்….

என்ன சேகர்… இப்போ உன் கவலை எல்லாம் மறைந்துவிட்டதா?... என்று சுந்தரம் கேட்க… ஆமாடா என்ற சுந்தரம் ரொம்ப நன்றிடா என்றபடி நண்பனின் கைப்பிடித்துக்கொள்ள,

சுந்தரமோ நண்பனின் தோளில் கைவைத்து அவரை சமாதானப்படுத்தினார்…

கோதையும் செல்வியும், பர்வதம் மற்றும் செல்லம்மாப்பாட்டியின் அருகில் செல்ல,  வாஞ்சையுடன் அவர்கள் இருவரையும் அணைத்துக்கொண்டனர் பர்வதமும், செல்லம்மாப்பாட்டியும்…

இப்படியே என்னைக்கும் எங்க குடும்பம் சந்தோஷமா இருக்கணும்… என்றபடி ராசு வேண்டிக்கொள்ள அனைவரின் முகத்திலும் புன்னகை நிறைந்து நின்றது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.