(Reading time: 46 - 92 minutes)

முகிலனின் அறைக்குள் வந்த மயூரி அவனைக் காணாது தேட ஆரம்பித்தாள்…

அந்த நேரம் அவளைப் பின்னிருந்து இரு கரம் அணைத்துக்கொள்ள, மாமா… என்றபடி அவன் கரம் விலக்கியவள், அவனது முகம் பார்த்தாள்…

மயில்ன்னு உனக்கு பேர் வைச்சது தப்பே இல்லடி… என்ன அழகா இருக்கேடி வண்ண மயிலாட்டம்?... காலையில் மயில் போல் ஒயிலாக நடந்து வந்து மணமேடையில் என் பக்கத்தில் வந்து அமர்ந்ததிலிருந்து இதை உன்னிடம் சொல்லத்தான் காத்துக்கொண்டிருந்தேன்… ப்ச்… எங்கே அதற்கு நேரமும் தனிமையும் தான் கிடைக்கவே இல்லை கொஞ்சம் கூட….

ஹ்ம்ம்… இந்த மாமாவை பிடிச்சிருக்கா முறைப்பொண்ணு?... என்று அவன் கேட்க…

இந்த மாமனோட மனசு மல்லிக்கைப்பூ போலே பொன்னானது

இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது

குற்றால குளுமையும் கூடி வருது

சந்தோஷ நினைப்பொரு கோடி வருது

சொல்ல வார்த்தை ஏதுமில்லை…”

என்று அவள் பாட அவன் காதலோடு அவளைப் பார்த்திருந்தான்…

மயூ… இவ்வளவு காதலாடீ என் மேல?... என்ற அவனின் கேள்விக்கு,

என் முகில்மாமா மேல எனக்கு கொள்ளை காதல் தான்… இப்போ அதுக்கு என்னாங்குறீங்க… என்றபடி அவள் எதிர்கேள்வி கேட்க…

அதற்கு ஒன்றுமில்லைடி… என் செல்லமே… உன் வாயால நீ சொல்லுறதை கேட்க சந்தோஷமாயிருக்கு… அதான் கேட்டேன்… என்றவன், நியாபகம் வந்தவனாக ஆ… சொல்ல மறந்துட்டேண்டி… இனி நாம எல்லாரும் ஒன்னா தான் இருக்கப்போறோம்… என்று சொல்ல…

என்ன முகில் சொல்லுறீங்க?... எல்லாரும்னா?... என்று அவள் குழப்பமாய் கேட்க….

அவன் அவளுக்கு சொன்னான் அனைத்தையும்… அவன் சொல்வதைக் கேட்டு முடித்தவள், அய்யோ நிஜமாவா முகில் சொல்லுறீங்க… சூப்பர்… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு… என்றபடி அவனை கட்டிக்கொண்டு சொல்ல… அவனுக்கு இப்போது வார்த்தைகள் வராமல் போனது…

என்ன முகில்… நான் சொல்லிட்டிருக்கேன்… நீங்க எதும் சொல்லமாட்டிக்குறீங்க… என்றபடி பேசிக்கொண்டே போனவள் அவனைப் பார்க்க…. அவன் சிலையென நின்றிருந்தான்…

முகில் மாமா… என்னாச்சு… என்றவள் அவனை அசைக்க… அவன் நினைவு வந்தவனாக, இப்படி நீ ரொம்ப பக்கத்தில் வந்து கட்டிப்பிடிச்சு சொன்னா, நான் ஊமையாகி போகாம வேற என்னடி பண்ணுவேன்… என்று அவன் சொல்ல… அவள் முகத்தில் வெட்கம் குடிகொண்டது அழகாய்…

அதனை ரசித்தவன், அய்யோ… மயூ… கொல்லுறியேடி… என்றவன் அவளைத்தூக்கி சுற்ற, அவள் முகில் விடுங்க… என்று கெஞ்சினாள்…

நோ… முடியாது… மயூ… என்றவன், அவளை மெல்ல கீழிறக்கினான்…

அவன் மெல்ல அவளை அணைக்க, அவள் மயங்கினாள்…  அவள் மயக்கம் அவனை மேலும் வதைக்க, அவளை இறுக அணைத்தான்…

அவள் தனது கைகள் இரண்டையும் அவன் கழுத்தை சுற்றிப் போட, இப்போது மயங்குவது அவன் முறையானது…

ஹேய்… என்னடி செய்யுற?... என்றவனின் குரல் உள்ளே போக…

ஆ…. தெரியலையா…. என்று சிரித்தபடி கேட்க…

இல்லை… என்றான் அவன் பாவமாக…

ஹ்ம்ம்… காதல் செய்யுறேன்… என்றவள், மெல்ல நிமிர்ந்து அவனின் நெற்றியில் முட்டி, என் முகில் கண்ணா, நீங்க எவ்வளவு சமத்து தெரியுமா?... என அவனது இரு கன்னங்களிலும் முத்தங்கள் பதித்து என் செல்லம் நீ… என் ராஜா நீ… என்றவளை அதற்கு மேலும் பேச விடாது ம…….யூயூயூயூ………………. என்று அவள் இதழோடு இதழ் சேர்த்தான் முகிலேஷ்…

இந்தாங்க உங்க சார்ஜர்… இதைத் தானே தேடினீங்க… என்றபடி அதை தினேஷின் கைகளில் கொடுத்துவிட்டு நகர முயன்றவளை தடுத்தான் தினேஷ்…

என்ன என்று புருவம் உயர்த்தி கேட்டவளிடம், ஏண்டி நேற்று காலையில் அழுத?... என்று கேட்டான் தினேஷ்…

சாகரியின் திருமணத்தில் நடந்ததை பற்றி கணவன் கேட்கிறான் என்று புரிந்து கொண்டவள், அங்கே மட்டும் என்னவாம்… நீங்களும் தானே அழுதீங்க… என்றாள் அவனைப் பார்த்துக்கொண்டே…

அவளுக்கு நான் அண்ணன்… அதனால் தான் கண் கலங்கிட்டேன்… உனக்கு அவள் தங்கை இல்லை தானே… என்று அவன் கேட்க…

அவள் எனக்கு தங்கை இல்லை தான்… ஆனால், என் தினுவோட தங்கையாச்சே… என்றவளை காற்றுக்கூட புக விடாமல் இறுக பற்றி அணைத்துக்கொண்டான் தினேஷ்…

அவன் அணைப்பினில் சற்று நேரம் இருந்தவள், பின் விலக முயற்சிக்க, அவன் விடவில்லை…

தினு… என்னாச்சு… என்று அவள் கேட்க…. என் மேல உனக்கு கோபமே வராதாடீ?... என்று அவன் கேட்டான்…

எதற்கு கோபம் வரணும்?... என் தினு என்ன தப்பு செய்தார்?... என்று கேட்டவளிடம்,

இப்போ உங்கிட்ட அவ உனக்கு தங்கை இல்லைன்னு சொன்னேனே… என்று அவன் எடுத்துக்கொடுக்க…

என் தினு பற்றி எனக்கு நல்லா தெரியும்… என் தினு என்னிடம் விளையாட ஆசைப்பட்டால் இப்படி தான் பேசுவார், அது மட்டும் இல்லாமல், கல்யாண வேலையில் என் தினுவை நான் கவனிக்கவே இல்லை… அதெல்லாம் சேர்ந்து தான் இப்போ என் தினுவை அவ உன் தங்கை இல்லைன்னு என்னிடம் பேச வைத்தது… இதெல்லாம் எனக்கு தெரியாதா என்ன?... என்று சிரித்தவள், அவனது தலைமுடி கோதி விட்டு, நெற்றியில் இதழ் பதிக்க…

கவி…. என்றவன் அவளது முகமெங்கும் முத்தமிட்டான்…

சில நிமிடங்களுக்குப் பிறகு, தினு… போதும்… உங்களுக்கு மூச்சு முட்டப் போகுது… விடுங்க… என்று அவனிடமிருந்து அவள் விலக, அவன் பிடி உடும்பாய் இருந்தது…

கவி… ப்ளீஸ்…. என்றவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டவள், என்ன தினு ஆச்சு… ஏன் இப்படி இமோஷனலா இருக்குறீங்க?... என்று கேட்டாள்…

மனைவியின் கணிப்பை கண்டு சிரித்தவன், சொல்லுறேன்… வா… என்றபடி அவளை கட்டிலில் அமர வைத்துவிட்டு அவள் மடியில் படுத்துக்கொண்டான்…

சொல்லுங்க என்றவளின் விரலோடு விரல் கோர்த்துக்கொண்டவன், சாகரிக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிட்டு கவி… அவளுக்கு இனி எல்லாம் நல்லதே நடக்கும்… ஆனாலும் அவளுக்கு அப்பா, அம்மா, இல்லாத சோகம் கொஞ்சம் கூட தெரியக்கூடாதுன்னு நான் நினைச்சிட்டிருந்தேன்… அப்போ தான் சுந்தரம் அப்பா எங்க கிட்ட வந்து எல்லாரும் ஒன்னாவே இருக்கலாம்ன்னு சொன்னார்… எனக்கு அந்த நிமிடம் என்ன சொல்லுறதுன்னே தெரியலை… என் தங்கையோட ஒரே வீட்டில் இனியும் இருக்கப்போறதை நினைச்சு எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு கவி… இப்பவும் அது இருக்கு கவி… அது மட்டும் இல்லாமல், இந்த வாலு பசங்க, வீட்டுப் பெரியவங்க, தங்கச்சிங்க… அப்புறம் என் நண்பன் ஷ்யாம் என்று எல்லாரும் ஒரே வீட்டில் இருப்பது போல் நினைத்துப் பார்க்கவே சந்தோஷமா இருக்கு கவி… அந்த சந்தோஷத்தை உங்கிட்ட எப்போ பகிர்ந்துப்போம்ன்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன்… இப்போ சொல்லிட்டேன் கவி… உனக்கு சம்மதமா கவி… என்று அவன் கேட்க…

என் தினு சொல்லி என்னைக்காவது நான் மறுத்திருக்கேனா?... என் தினுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம் தான்… எல்லாரும் ஒன்னா இதே போல இருக்கணும்னு எனக்கும் ஆசையாதான் இருந்துச்சு… ஆனா, அது இப்போ நிஜமாவே நடக்கும்னு நினைக்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு தினு…. என்றாள் அவளும்…

ஹ்ம்ம்… எல்லாரும் சேர்ந்து இருந்தா, அனு கூட நீ நல்லா ஜாலியா அரட்டை அடிக்கலாம்ல என்னை கழட்டி விட்டுட்டு… என்று அவன் கேட்க… அவள் முறைத்து அவனைப் பார்த்தாள்…

ஆமா… அவளோட அரட்டை தான் அடிக்கலாம்… உங்களை தான் இப்படி அடிக்க முடியும் என்று அவனை அடிக்க… அவன் ஹேய்… கவி… என்று அவள் அடிப்பதை தடுத்து அவளை அப்படியே மெத்தையில் தள்ளினான்…

தினு… கண்ணா… வேண்டாம்... என்று அவள் சொல்ல, அவன் கவி என் செல்ல பொண்டாட்டிடீ நீ… என்றபடி அமைதியாக அவள் இதழ் தேடி குனிந்தான்…

இருவரின் இதழ்களும் ஒன்றோடு ஒன்று காதல் சொல்லிக்கொள்ள, அங்கே அடுத்து வார்த்தைகளுக்கு வழி இல்லாமல் போனது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.