(Reading time: 32 - 63 minutes)

லேசாய் விழிகலங்க அமர்ந்திருந்தாள்  மித்ரா.. ஷோபாவின் வாழ்வில் நிகழ்ந்த  கொடுமை அவள் மனதை ரணமாக்கத்தான் செய்தது !

" பாவம்ல அண்ணா "

" ம்ம்ம் பாவம்தான்  மித்ரா .. பட் அவங்களுக்கு நடந்தது கொடுமைதான். ஆனா அதற்கு அவங்களுடைய அஜாக்குறதையும்  ஒரு காரணம் தானே.. நான் ஆண் ஆதிக்கம் பண்ணுறவன் இல்லை .. ஆனா இப்போ நம்ம சமுதாயம் எந்த அளவுக்கு சீர்குலைஞ்சு  இருக்குன்னு பார்துகிட்டுதானே இருக்கோம் ? ஆணை விட பெண்ணுக்குத்தான் அதிகம் அநியாயங்கள் இழைக்கப் படுது! இதை சொல்லவே ஒரு ஆணாக நான் வெட்கப்படுறேன் .. அப்படி இருக்குற சூழ்நிலையில் இப்படி தெரியாதவனை நம்பி வீட்டுப்படியை தாண்டலாமா ? " .. அவன் ஷோபாவைப்  பற்றி பேசினாலும் அவன் கேள்வியில் இருந்த உண்மை அவளைச் சுட்டது! அவளும் தானே ஒரு சின்ன பிரச்னையை சரிபடுத்தாமல் வீட்டை விட்டு வெளியேறினாள்?அவள் முகத்தில் எதை உணர்ந்தானோ, இதற்கு மேல் இந்த பேச்சு வேண்டாம் என்று உணர்ந்தான் மதி.

" சரி..டைம் ஆச்சு வாங்க சிஸ்டர் " என்றபடி பேச்சை மாற்றினான். மதியழகனின் கேள்விகளுக்கு பதில் கூறியப்படி நடந்தாலும்  மித்ராவின் மனம் அவளது வீட்டைச்சுற்றியே  வந்தது.

தன் தந்தையிடம் பேசவேண்டும் போல இருந்தது அவளுக்கு. அதற்கு முன்பு எழில் எங்கே ? அவளது வீட்டின் நிலவரம் என்ன ? அது தெரிய வேணாமா ? வாங்க நாம ஷக்தி வீட்டுக்கு போகலாம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு,

" என்னங்க,...என்னங்க ?! எங்க இருக்கீங்க " என்று குரல் கொடுத்தபடி தேவசிவத்தை தேடினார் சித்ரா. மனைவி எதை சொல்ல போகிறார் என்பதை அறிந்திருந்த அவர் பொறுமையாய் பூஜை அறையிலிருந்து வெளிவந்தார் .. அன்று வழக்கத்திற்கு மாறாய் மனைவிக்கு முன்பே எழுந்தவரின் கைகளில்  மித்ராவின் கடிதம் கிடைத்தது. முதலில் ஆத்திரம் வந்தாலும், அவரது மகள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்றே தோன்றியது அவருக்கு. அவளது புதிய எண்ணிற்கு " ஐ வில் டெக் கேர் ! பீ சேவ்  !" என்று மெசேஜ் அனுப்பிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தார் அவர். அடுத்து என்ன செய்யலாம் என்று ஓரளவு யோசித்தவர், எதிர்வீட்டில் மொட்டை மாடியில் அமர்ந்திருந்த ஷக்தியை  பார்த்தார் .. அவனை நோக்கி தானாய் நடைப்போட்டன அவரது கால்கள் !

" ஷக்தி "

" மாமா "

" என்னாச்சு ? தூங்கலயா ?"

" அது... அது ஒண்ணுமில்லை மாமா " என்றவனுக்கு மித்ராவை பற்றி சொல்வதா வேண்டாமா என்ற பதட்டம். அவன் முகத்தை வைத்தே ஏதோ சரியில்லை என்று யூகித்தார்  தேவசிவம். தன்னையும் மீறி வாசலை வெறித்த ஷக்தியின்  கண்களை வைத்தே ஓரளவு நடந்ததை அனுமானித்தவர்,

" மித்ரா வீட்டில் இல்லைன்னு எனக்கு தெரியும்பா " என்றார். பதட்டமாய் அவரைப் பார்த்தான் ஷக்தி ..

" மாமா உங்களுக்குஎப்படி ??"

" என்கிட்ட சொல்லிட்டுதான் அவ போனா !"

" இந்த விஷயம் வீட்டில் ??"

" யாருக்கும் சொல்ல வேணாம் ஷக்தி ... "

" அன்புக்கு நான் சொல்லிட்டேனே மாமா " என்றான் ஷக்தி .

" இப்போ எங்க அன்பு ? "

" அவ போற பஸ்ஸை தொடர்ந்து போயிட்டு இருக்கான் "

" சரி அவ பத்திரமான இடத்துல இருக்காளான்னு பார்த்துட்டு திரும்பி வந்திட சொல்லு " என்றார் அவர் .. மேலும்,

" எனக்கொரு உதவி வேணுமே ஷக்தி " என்றார்.

" என்ன மாமா ..?"

" இல்லப்பா நீ கொஞ்சம் பைக் எடுத்துட்டு எங்கயாவது போயிட்டு விடிஞ்சதும் எல்லாரும் கண்ணுல படுற மாதிரி வீட்டுக்கு வா ! நான் வீட்டில் மித்ரா அவ ப்ரண்ட் உடைய அம்மாவுக்கு  அவசரமான உடல்நிலை சரி இல்லை .. அவளுக்கு உதவத்தான்  உன் கூட போயிருக்கான்னு சமாளிச்சிடுறேன் .. நீ வந்ததும் மித்ரா ரெண்டு மூணு நாள் அவ சிநேகிதிக்கு துணையாய் இருப்பான்னு சொல்லிடு .. மிச்சத்தை நான் பார்த்துக்குறேன் " என்றார்..அவரது பேச்சை மீராமல்  உடனே தனது பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான் ஷக்தி. இதை அறியாத  சித்ரா இளையவளை காணவில்லை என்று கூறவே பதட்டமாய் கணவரை அழைத்தார் ..

" அடடே என்னாச்சு சித்ரா .. ?  "

" மித்ராவை காணோம்ங்க  "

" அப்படியா ? சரி நீ போயி ஸ்ட்ராங்கா காபி போட்டுக் கொண்டுவா அதை குடிச்சிட்டு உடனே  கண்டுபிடிச்சிட்டு வரேன் " என்றார் தேவசிவம் அசால்ட்டாய் ..

" பெண்ணை காணோம்னு நான் வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கேன், உங்களுக்கு கேலியா இருக்கா ?  "

" அடடே எதுக்கு இவ்வளவு டென்ஷன் சித்ரா ? நமக்கு தெரியாம நம்ம பொண்ணு எங்க போகப்போறா ?"

" இல்லைங்க நான் வேற அவளை அடிச்சிட்டேன் "

" என்ன சொல்லுற ?"

" ஆமாங்க .. நேத்து அவளையும் பெரியவளையும் கை நீட்டிட்டேன் "

" நீ ஏன்டீ என் பொண்ணுங்க கிட்ட கை நீட்டின ?" என்று உறுமினார் தேசிவம்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு கணவனின் கோப முகத்தைக்  கண்ட சித்ராவும் பதறிவிட்டார்.

" நான் ஒன்னும் வேணும்னு பண்ணலைங்க, அவ ரொம்ப பிடிவாதமா ஆகுரான்னு தான் "

" அதுக்காக ? அவங்க எனக்கும் பொண்ணுங்க தான் மா ? என் பெண்களை எனக்கு அடிக்க உரிமை இல்லையா ? அப்படி இருந்தும் நான் என்னைக்காவது அவங்களை கை நீட்டி பார்த்து இருக்கியா நீ ? இவ்வளவு ஏன், இன்னைய வரைக்கும் உன்னை நான் கைநீட்டி அடிச்சிருக்கேனா ?" என்றார் அவர் ..கணவரின் கேள்வியில் வாயடைத்து நின்றார் சித்ரா..

" சின்னவளின் சிநேகிதி அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாம். பாவம் அந்த பெண்ணுக்கு துணையா நான்தான் காலையிலேயே அவளை மாப்பிளை கூட  அனுப்பி வெச்சேன்.. " என்ற நேரம் ஷக்தி வீட்டினுள் நுழைந்தான் .. மிக இயல்பாய் முகத்தை வைத்துக் கொண்டவன்

" தாராவின் அம்மா இன்னும் ஹாஸ்பிட்டலில் தான் இருக்காங்க மாமா .. நாந்தான் மித்ராவை தாரா கூட இருக்க சொன்னேன்..பாவம்  அந்த பொண்ணு பயந்து போயிருக்கு .. ஒரு ரெண்டு மூணு நாள் மித்ரா தாராவோடு இருக்கட்டும் சரிதானே ?" என்றான். சித்ராவை பொருத்தவரை மித்ரா விஷயத்தில் கணவனும் சக்தியும் முடிவெடுத்தாள்  சரியாகத்தான் இருக்கும் ..மேலும் கணவன் கோபமாக இருக்கும்போது அதை ஆட்சேபிக்க அவருக்கும் தைரியம் எழவில்லை. அதை எத்ரிபார்த்துதான் தேவசிவமும் கோபமாய் பேசுவதைப்போல நடித்தார் .. மனைவி அமைதியாய் இருப்பதை பார்த்து மனதிற்குள் தன் திட்டத்தை எண்ணி மெச்சியவர்

" சரிதான் ஷக்தி .. நீ போயி ரெஸ்ட் எடு .. உன் அத்தை பொண்ணு கொடுக்கவேண்டிய டீயை நான் கொண்டு வரேன் " என்றார்.. ஷக்தி அங்கிருந்து சென்றதும் மனைவியை பார்த்தவர்

" அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே ..அதான் கை நீட்டியாச்சே ..இனி ஏன் முகத்தை இப்படி வெச்சு இருக்க ? போ போயி டீ போடு .. நான் என் பெரிய மகளை சமாதானம் பண்ணனும் " என்றபடி வைஷ்ணவியின் அறைக்குச் சென்றார்.

வீட்டில் எந்த சலசலப்பும் இல்லாமல் பார்த்துக் கொண்டார் தேவசிவம். காவியாவும் கதிரும் லக்ஷ்மிக்கு சமையலுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று வீட்டை இரண்டாக்க இருவரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த கணவரின் அருகில் அமர்ந்தார்  லக்ஷ்மி.

"  என்னங்க அப்படி பார்க்கறிங்க ?"

" இல்லம்மா மனசு சந்தோசமா இருக்கு, பெரியவன் சின்னவன் ரெண்டு பெரும் வீடுக்கு வந்துட்டாங்க. இந்த காவியா பெண்ணும் வந்ததில் வீடே கலகலப்பா இருக்கு "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.