(Reading time: 32 - 63 minutes)

" ப்பா ..சொல்லுங்கப்பா ..எப்படி இருக்கீங்க ?"

" ...."

" நானும் நல்லா இருக்கேன்பா .. "

" ..."

" நாளைக்கா ??"

" ..."

" சரி வரேன் பா "

" .."

" நல்ல விஷயமா ? என்ன விஷயம் அப்பா ?"

" ..."

" கல்யாணமா ?"

"..."

" பொண்ணு வைஷு  அக்காவா ?"

" ..."

" ஷக்தி மாமா ??"

".."

" ஓ  அவருக்கும்  சம்மதமா ?" ..அதே நேரம் தேவசிவம் அருகில் வந்த சக்தியின் குரல் அவளுக்கு தெளிவாக கேட்டது ..

" மாமா மணி ஆகுது ... டிரஸ் எடுக்கனும்ல வாங்க " என்றான் .. அவன் குரலில் இருந்த உற்சாகம் அவளை தூள் தூளாய் நொறுக்கியது...

" ஆங் ..அப்பா என்னப்பா கேட்டிங்க ??"

" .."

" ம்ம் சரி அப்பா ..வரேன் " என்றபடி போனை வைத்த சங்கமித்ரா மயங்கி விழாத குறையாய் அமர்ந்திருந்தாள் ..

" என்னாச்சு டீ " என்ற நிலா பலமுறை கேட்டும் பதில் இல்லை.. மீண்டும் அவளை உலுக்கி என்னாச்சு என்று வினவவும்

" போச்சு டீ ..எல்லாம் போச்சு என் சந்தோஷத்தை நானே அழிச்சுகிட்டேன் .. எல்லாம் முடிஞ்சு போச்சு " என்று பிதற்றினாள் .. அவள் அருகில் அமர்ந்து பேசினாள் தேன்நிலா .. முதலில் என்னாச்சுன்னு சொல்லு சங்கு ..!

கொஞ்சம்தயங்கிவள்  இப்போதைக்கு தனக்கு துணை இவள் மட்டும்தான் என்று உணர்ந்து நடந்தது அனைத்தையும் கூறினாள் ...அழுது ஓய்ந்து அமர்ந்திருந்தாள்  சங்கமித்ரா ..

" முட்டாளா நீ ? இவ்வளவு காதலை வெச்சுகிட்டு உனக்கு இப்போ என்னடி பிரச்சனை? ஷக்தி கேட்டபோதே சரின்னு சொல்லி தொலைச்சிருக்கலாம் ல  ? நீயெல்லாம் என்னதான் படிச்சியோ போ ? சரி இப்போ இப்படியே உட்கார்ந்து இருக்க போறியா ? வா உடனே உன் ஊருக்கு போகலாம் " என்று அவசரபடுத்தினாள்  தேன்நிலா ..

" வேணாம் "

" என்ன வேணாம் ? பளார்ன்னு அறைஞ்சா தெரியும் .. ஒழுங்கா வா சங்கு "

" வந்து ?? வந்து என் அக்கா கல்யாணத்தை நானே நிறுத்தனுமா ? "

".."

" அப்படி நிறுத்தினா எனக்கும் ஷோபா அக்காவின் தங்கச்சிக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிடும் "

" ப்ச்ச்ச் அது வேற , இது வேற "

" எல்லாம் ஒண்ணுதான் தேனு .. நடந்த எல்லாதுக்கு நான்தானே காரணம் ? என் ஷக்தியை  நான்தானே உதறிட்டு போனேன் ? எனக்கு இந்த தண்டனை தேவைதான் .. இனி தினமும் வாழ்க்கை முழுக்க நான் அவனை நினைச்சு அழனும் அதான் விதி "

" உன்கிட்ட பேசி எந்த பயனுமே இல்லை .. நானே உன் ஊருக்கு போறேன் ..வந்தா வா இல்லன்னா போ " என்று நடந்தவளின் கைகளை பிடித்தாள்  சங்கமித்ரா ..

" என் மேல சத்தியமா நீ இந்த விஷயத்தில் எதுவும் செய்ய கூடாது  "என்றாள் . " எனக்கு சத்தியம் மேல எந்த நம்பிக்கையும் இல்லை சங்கமித்ரா .. ஆனா உனக்கு இருக்குன்னு தெரியும் ..அதுனால நான் எதுவும் செய்யல " என்ற நிலா கோபமாய் அந்த அறையை விட்டு சென்றாள் .. அந்த வெளிச்சமான அறைக்கு எதிர்மாறாய்  இருண்டு இருந்தது மித்ராவின் மனம்.. இடைவிடாது அழுதவள் அப்படியே உறங்கியும் போனாள் .. அதே நேரம் நிலாவை அழைத்தான் மதி ..

" ம்ம்ம் சொல்லு மது "

" என்னாச்சு மேடம் .. குரலே சரி இல்லையே .. "

" அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல "

" உன்னை எனக்கு நல்லா தெரியும் பேபி .. வீணா பொய் சொல்ல ட்ரை பண்ணாதே " என்றான் அவன் கேலியாய் .. முதலில் அவனை திட்டிவிட தான் நினைத்தாள்  நிலா .. பிறகு அது தவறென்று உணர்ந்தவள் மித்ராவை பற்றி மொத்தமும் சொன்னாள் ..

" என்ன கொழுப்பு பார்த்தியா மது ? எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டு என்கையை கட்டிப் போட்டுட்டா "

" ஹா ஹா ஹா "

" என்ன சிரிப்பு "

" நான் என்பதும் நீயல்லவோ தேவ தேவி ? இனி நான் என்பதும் நீ அல்லவோ தேவ தேவி ? தேவலோகம் வேறு ஏதோ தேவி இங்கு உள்ளபோது ? வேதம் ஓது  !"

" யோவ் நான் இங்க கொலைவெறியில் இருக்கேன் உனக்கு டூயட் கேட்குதா ?"

" ஹா ஹா மை டியர் மக்கு பொண்டாட்டி .. உன்னை ஒரு விஷயம் டிஸ்டர்ப் பண்ணும்போது இந்த மாமன் சும்மா இருப்பேனா? அதான் நீயும் நானும் ஒண்ணுன்னு பாடி காட்டினேன் ... "

"சரி இப்போ சார் பெருசா என்ன பண்ண போறீங்க ?"

" ஹே பேபி, உன் ப்ரண்ட்  நீ எதுவும் பண்ண கூடாதுன்னு உன்கிட்டதான் ப்ராமிஸ் வாங்கினா...ஆனா என் தங்கச்சி இந்த  அண்ணன் எதுவும் பண்ண கூடாதுன்னு ப்ராமிஸ்  வாங்கலையே .. சோ ... "

" சோ ??"

" மித்ரா எங்க இப்போ ?"

" ரூம்ல தூங்குறா ... இன்னும் சாப்பிட கூட இல்லை "

" நல்லாதா போச்சு .. நீ போயி சத்தமே இல்லாம அவ செல்போன் எடுத்து எனக்கு ஷக்தி இல்லன்னா அவன் ப்ரண்ட்  அந்த பையன் பேரு என்ன ? ஆங் அன்பெழிலன் அவங்க நம்பரை எனக்கு மெசேஜ் பண்ணு மிச்சத்தை நான் பார்த்துக்குறேன் " என்றான் ..

" முடியுமா மது ?"

" என் குட்டிமாவுக்காக எதுவும் என்னால் முடியும் !" என்றான் மதி .. அவன் சொன்னது போலவே ஷக்தி மற்றும் எழிலின் தொலைப்பேசி எண்ணை  அனுப்பி வைத்தாள்  தேன்நிலா ..அடுத்த அரைமணி நேரத்தில் நிலாவை அழைத்து  சில விஷயங்களை கூறினான் மதியழகன்.

மறுநாள்,  இருவரும் சங்கமித்ராவை சமாதனபடுத்தி காரில் சிவகங்கைக்கு புறப்பட்டனர் ..அழகிய பட்டுடை உடுத்தி உற்சாகமாய் இருந்தாள்  தேன்நிலா ..  மதியழகனும் பட்டு வேஷ்டி சட்டையில் கவரும் வண்ணம் இருந்தான். வழியில் நகைக்கடையில் சில பரிசுகளை வாங்கிவிட்டு புறப்பட்டனர் .. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் மனநிலையில் மித்ரா இல்லை .. ஷக்திக்கும்  அவள் அக்காவிற்கும் திருமணம் என்று தெரிந்த அந்த நொடியே அவளது உலகம் ஸ்தம்பித்து விட்டது ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.