(Reading time: 32 - 63 minutes)

" ன் அப்படி கேட்குறிங்க ?"

" ரொம்ப சிம்பல் அண்ணா ..நான் இதுக்கு முன்னாடி டாக்டர் மேடமை பார்த்தது இல்லை .. போன்ல கூட நான் இனியாவான்னு கேட்டவரை நல்லாத்தான் பேசினாங்க .. ஆனா நேரில் பார்த்ததும்தான் கொஞ்சம் கோபம் ., கண்டிப்பா இதுக்கு ஷோபா அக்கா காரணமா இருப்பாங்களோன்னு தோணுது"

" உங்க மேல கோபமா இருப்பது நிலா மட்டும் இல்ல ..நானும்தான் !"

" நீங்களா ? என்மேலயா ? ஏன் நான் என்ன பண்ணினேன் ?" என்று புரியாமல் விழித்தாள்  சங்கமித்ரா ..

" பின்ன, கூடப்பிறந்த அக்கா இப்படி கர்ப்பிணி பெண்ணாக இருக்கும்போது கூட உங்களுக்கு அவங்களை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு தோனலையே ! செல்பிஸ் ஆ இருக்கலாம் ..ஆனா அதுக்குன்னு இப்படியா ?" என்றான் மதியழகன்.

" எனக்கு புரியல ! கூடப்பிறந்த அக்காவா ?? "

" ஆமா, நீங்க ஷோபாவுடைய தங்கச்சி ... ஹே ஒன் செகண்ட் ..  நீங்க ஷோபாவுடைய தங்கச்சி இல்லையோ ?" என்றான் மதி, தெளிவாய்.

" இல்லையே அண்ணா, நான் சங்கமித்ரா இனியாவுடைய ப்ரண்ட் .. நானும் இனியாவும் சேர்ந்துதான் படிச்சோம் . இப்போ கொஞ்ச நாள் இனியாகூட தங்கிட்டு போக வந்தேன் "

" எனக்கு இப்போ புரியுது மித்ரா. நிலா, உங்களை ஷோபாவுடைய தங்கச்சின்னு நினைச்சு தான் அப்படி கோபமா நடந்து இருப்பா "

" ஷோபா தங்கச்சி யாரு ? அவங்க மேல டாக்டருக்கு என்ன கோபம் ?" என்று வினவினாள்  சங்கமித்ரா. அவளது கேள்வி அவ்வளவு சுலபம் என்றாலும்,பதில் சொல்ல தன்னால் முடியுமா ? இது சரிதானா? என்று யோசித்தான் மதியழகன். மித்ராவும் மௌனமாய் அவனது முகத்தை பார்த்து அமர்ந்திருந்தாள் . அவளது கேள்வியான பார்வைக்கு பதில் சொல்வது தனது கடமைதான் என்று தோன்றியது அவனுக்கு .

" இதை பத்தி நான் உங்ககிட்ட ஷேர்  பண்ணுறது எந்த அளவுக்கு சரியான விஷயம்னு தெரியல சிஸ்டர் . ஏன்னா இது  ஷோபாவின் பெர்சனல் லைப்  விஷயம். அவங்க அனுமதி இல்லாமல் பேசுறது தப்பு.. ஆனா எனக்கு நிலா முக்கியம். காரணம் இல்லாமல் நிலா மீது உங்களுக்கு தப்பான பார்வை வந்திட கூடாது. ஒருவேளை நீங்க ஷோபாவின் தங்கை இல்லன்னு தெரிஞ்சா நிலா உங்ககிட்ட அவ கோபத்தின் காரணத்தை தன்னிலை விளக்காமாக சொல்லுவா இல்லையா ? அந்த மாதிரி நான் தேன்நிலாவுக்காக பேசறேன் " என்றான் மதியழகன்.

யார் அவன் என்று முழுதாய் தெரியாதபோதும் மித்ராவிற்கு மதியழகனின் மீது மதிப்பு பெருகியது. அவனைப் பார்த்த முதல் நொடியிலிருந்து இப்போதுவரை அவன் தேன்நிலாவை விட்டுக்கொடுக்காமல் பேசியது அவளுக்கு  பிடித்திருந்தது. கடிவாளமிட்ட அவள் மனதோ ஒரு நொடியில் ஷக்தியின்  முகத்தை கண்முன் நிறுத்தியது . அவனும் அப்படித்தானே? இன்றுவரை தன்னை யாரிடமாவது விட்டுக் கொடுத்து பேசி இருக்கானா ? தினம் ஏதும் பரிசுகள் தந்து, இனிக்க இனிக்க பேசினால்தான்  நேசமா  ? இல்லையே ! துன்பம் நெருங்கும் வேளையில்  தூண் போல துணை இருப்பது தானே தூய்மையான அன்பு ? அதை அவன் மறுக்காமல் அவளுக்கு என்றும் வழங்கினான் அல்லவா ?

" ஷக்தியும்  எனது இதயமும் ஒன்றுதான்!

இரண்டுமே எனக்காக எப்போதுமே துடிக்கும்

இரண்டும் இல்லாமல் என்னால் வாழ முடியாது

நமக்காக துடிக்கும் இதயத்தை, நாம் நினைத்து பார்த்து ரசிக்கிறோமா ? அல்லது இதயமும்தான் என்னைப்  பாரேன் என்று  சமிக்ஞை செய்கிறதா ? இருந்தாலும் அது இல்லாமல் நம்மால் வாழ முடியுமா ?

அவனும் அப்படித்தானே ? எனக்காக துடிக்கிறான் .என் ஸ்வாசத்தில்  கலந்திருக்கிறான் .. அவன் மௌனமாய் இருந்துவிட்டால் அவனது நேசம் புரியாமல் போய்விடுமா ?" மனதிற்குள்ளே அவனுக்காக பேசிக்கொண்டிருந்தது அவள் மனம்..

" டேய் ஷக்தி மாமா, உன் அத்தை பொண்ணு உன்னை வீட்டு தூரமா இருந்தாலும் உன்னை நினைச்சு நினைச்சே காதல்  கிறுக்கி ஆகிடுவேன் போலடா .." என்று மானசீகமாய் அவனுடன் பேசினாள். மதியழகனோ அவளது அமைதிக்கு அர்த்தம் புரியாமல் அந்த மௌனமான சூழ்நிலையை கலைத்தான் ..

" ஆர் யூ ஓகே மித்ரா "

" ம்ம்ம் எஸ் அண்ணா ... சாரி ..எது சிந்தனையில் இருந்துட்டேன் ... சொல்லுங்க அண்ணா ! ரொம்ப பெர்சனல்ன்னா நீங்க சொல்ல வேணாம்.எனக்கு எது தெரிஞ்சா போதுமோ அதை மட்டும் சுருக்கமா சொல்லிடுங்க "என்றாள். அதுவே சரியென்று மதியழகனுக்கும் தோன்ற, ஷோபாவை பற்றி பேசத் தொடங்கினான். (ஷோபாவிற்கும்  நம்ம கதைக்கும் நிறைய பிணைப்பு இல்லை என்றாலும் சமூகத்தில் நடக்கின்ற ஒரு சம்பவத்தை உங்கள் கண்முன் வைப்பதற்காகவே இந்த  குட்டிகதை !)

"  பொதுவா டாக்டருக்கும் பெஷனுக்கும் இருக்குற உறவுகளில் கூட ஓர் எல்லைக்கோடு  இருக்கு. பட் ஷோபா கொஞ்சம் ஸ்பெஷல். இப்போ  அவங்க உயிரோடு இருக்க காரணம் தேன்நிலா  தான்! அவங்க தற்கொலை முயற்சி பண்ணி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனப்போதான் தேன்நிலா அவங்களை பார்த்தா"

" தற்கொலையா ?"

" ம்ம்ம் ஆமா அதுவும், அவங்க ப்ரெக்னன்ட்ஆ இருக்குறாங்கன்னு  அவங்களுக்கே தெரியும் "

" ஏன் இப்படி பண்ணினாங்க ?"

" காதல் தான் !"

ஒரு கனத்த மௌனம் நிலவியது அங்கு. அதற்குள் தன்னை சமாளித்து கொண்டனர் இருவரும்.

" காதல் எப்போதுமே தப்பான விஷயம் இல்லைதான் மித்ரா .. ஆனா நாம யாரை விரும்புறோம் என்பதுதான் முக்கியம். ஷோபாவின் கெட்ட  நேரமா, அல்லது அவங்க காதல் மீது இருந்த   கண்மூடித்தனமான நம்பிக்கையா தெரியலை அவங்க காதலிச்சவன் நல்லவனே இல்லை. ஷோபா அவங்க வீட்டுக்கு முதல் பெண். அவங்க வீட்டில் எப்பவுமே அவங்களுடைய தங்கச்சிக்கு தான்  பாசமும் அங்கிகாரமும் அதிகம். அதனால, ஷோபாவிற்கு  அவங்க குடும்பம் மேல அவ்வளது பிணைப்பு இல்லாம போச்சு . அதுவே  அவங்க இவனை நம்புறதுக்கு காரணாம அமைஞ்சிருச்சு. அவங்க காதல் விஷயம் வீட்டில் தெரிஞ்சு, அம்மா அப்பாவின் பேச்சை கேட்குற நிலைமையில் இல்லாத ஷோபா, வீட்டை விட்டு அவனை நம்பி வெளியேறிட்டாங்க !"

 ".."

" அந்த ராஸ்கல் ஷோபாவின் காதலை  சாதமாக்கி, ஏமாத்திட்டு போய்ட்டான் " என்றவனின் குரல் அவனையும் மீறி கடினமானது.

" .."

" என்னதான் பொண்ணு தப்பு பண்ணாலும் அவ திரும்பி வரும்போது மன்னிச்சு ஏற்றுக்கவும்  பெரிய மனசு வேணுமோ ? ஷோபாவிற்கு  அவ வீட்டுலையே இடம் இல்லாமல் போச்சு. அவங்க தங்கச்சியை காரணம் காட்டி தயவு செஞ்சு கண் கானா தூரம் போயிட்டுன்னு  பெத்தவங்களே சொல்லிட்டாங்க. ப்ரண்ட்ஸ் உம்  அவங்களை சேர்த்துக்கவில்லை .. அப்போதான் இனியாவுடைய அப்பா ஷோபாவை சந்திக்க நேர்ந்தது. அந்த ராஸ்கல் மேல கேஸ் போடலாம்னு  எவ்வளவோ சொல்லியும்  ஷோபா கேட்கலை.. இனியாவும் அவ குடும்பமும்தான் ஷோபாவுக்கு ஆறுதல் அளிச்சாங்க.. அப்போதான் அவங்க ப்ரெக்னன்ட்ஆ இருக்காங்கன்னு தெரியவந்தது.. இனி வாழரதில்  அர்த்தமே இல்லைன்னு தற்கொலை முயற்சி எடுத்தவங்க கிட்ட  தேன்நிலா தான்  பேசி புரியவெச்சா. உங்க தப்புக்காக, இந்த பூமிக்கு வரவேண்டிய உயிரை கொன்னுடாதிங்க ,.. நிறைய  கஷ்டங்களை  சந்தித்து வளர்ந்த பலபேர் இன்று சமுதாயத்தில் நிமிர்ந்து நிற்கவில்லையா ? நாளைக்கு உங்க பிள்ளையும் அப்படி சாதிக்க வேணாமா ? உங்க குழந்தையின் வாழ்க்கை முடிக்கிற தைரியத்தை உங்களுக்கு யாரு கொடுத்ததுன்னு   கேட்டா.. நிலாவும் இனியாவும்தான் ஷோபாவுக்கு பக்கபலமா இருந்தாங்க. இப்போ அண்மையில் தான் ஷோபா அவங்க தங்கச்சியை பார்த்ததாகவும் அந்த தங்கச்சி  முகம் கொடுத்து கூட பேசலைன்னு அவங்க வருத்தப்பட்டாங்க .. அந்த தங்கை தான் நீங்கன்னு நினைச்சு நிலா கோபப்படுட்டா ..ஐ எம் சாரி  ஓன் ஹேர் பிஹால்வ் " என்றான் மதியழகன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.