(Reading time: 57 - 114 minutes)

முகம் சிவந்து வந்தது அவளுக்கு “போடா..”

மெல்ல அருகில் வந்தான்.

ஆயிரம் பூக்கள் அவளுக்குள்.

தரை ஆராயும் விழிப் பார்வை.

“அன்னைக்கு ஹாஃப் சேரில செமயா இருந்த...”

“ம்”

“அன்னைக்கே ஒரு முடிவுக்கு வந்துட்டேன்...”

“ம்?”

“மனம் ஒத்த மனையாளே அதை கண்டுபிடிச்சா சந்தோஷம்...அப்டு யூ...”

அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் சொல்ல வருவது புரிந்தது. சீக்கிரம் செய்வோம்.

“இப்போ நீ கேட்ட விஷயம்....நம்மள மட்டும் இங்க விட்டுட்டு மொத்த குடும்பமும் ஊரை காலி செய்தாச்சு நேத்து நைட்டே...”

“ஆன்..?”

“கவின் செகண்ட் இன்னிங்ஸ்...ஸ்காட்லண்ட் ட்ரிப்.. நம்ம இன்டியன் மேரேஜ் அரேஞ்ச்மென்ட்க்காக என் மாமனார் குடும்பமும் உன் மாமனார் குடும்பமும்...பேக் டு பெவிலியன்...நாம எப்போ இன்டியா போகனும்...? திரும்பி கலோனா...ரியோவா..எங்க செட்லாக போறோம்னு  நீ தான் டிசைட் செய்யனும்...எதாவது ஒரு ஆஃபீஸ் நான் இன்சார்ஜ் எடுக்கனும், அடுத்ததை ஆன்ட்ரூ எடுப்பார்...”

அவனது இப்பொழுதைய இந்த பழகுமுறையும் பிடித்திருக்கிறது, இது திரும்ப விரும்பினாலுல் கிடைக்காத ஒன்று. ஆனால் அவன் ஹாஃப் சேரி ஆசை அறிந்த பின் அதை வெகுவாக தள்ளிப் போடவும் விருப்பம் இல்லை.

 “இன்னைக்கு நைட்டே கிளம்பிடுவமா...?” அவளுக்குள் ஒரு திட்டம் ஓரளவு உருப் பெற்றிருந்தது.

“என் கூட தனியா இருக்க அவ்ளவு பயமாவா இருக்குது...?”

“ஏன் அங்க போனதும் இனி நம்மை தனித் தனியா பிரிச்சு வச்சிடுவாங்களா என்ன? எப்டியும் நைட் உங்க கூட தனியாதான இருக்கனும்...?”

“யாருக்கு தெரியும்..?”

“ஹை இந்த ஐடியா கூட நல்லா இருக்கே....” அவள் திட்டத்திற்கு முழு உருவம் கிடைத்தேவிட்டது.

“என்ன நல்லா இருக்குது நோ வே...எதுனாலும் என் பக்கத்துல இருந்துட்டு செய்தா போதும்...ஒரு வருஷம் வெய்ட் செய்துருக்கேன்...பக்கத்து ரூமுக்கு கூட தனியா விடமாட்டேன்..”

அதையும்தான் பார்த்துருவோம் பி.கே...ஜில் ஜில்னு எனக்கு ஒரு ரொமாண்டிக் வெட்டிங் வேணும்..இங்கதான் இருந்த டென்ஷன்ல சான்ஸை மிஸ் செய்துட்டேன்...அடுத்த சான்ஸையும் விடுறதா இல்லை...உன் ஆசையையும் என் ஆசையையும் ஒரே நேரத்தில நிறைவேத்திடுவோம்...ஐ லவ் யூடா

“என்னங்க நீங்க...ஆகஸ்டுக்கு இங்கதான் பெஸ்ட்னு சொல்லிட்டு...ரூமைவிட்டு அசைய கூட மாட்டேன்றீங்க...கிளம்புங்க...சைட் சீயிங் போலாம்” வேரி கவினை எழுப்பிக்கொண்டு இருந்தாள்.

“இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்க குல்ஸ்....ரூமைவிட்டு என்னை எங்கயும் கிளப்ப முடியாது...” திரும்பி படுத்தான் கவின்.

“அதையும் தான் பார்ப்போமே....எனக்கு ஒரு சூப்பர் டெக்னிக் அத்தை இப்பதான் சொல்லி கொடுத்தாங்க...மிர்னுவோட இன்வென்ஷனாம்...அது எப்டின்னா...கொதிக்க கொதிக்க முதல்ல காஃபிய ஆர்டர் செய்யனுமாம்...”

அவசரமாக எழுந்து உட்கார்ந்தான் கவின்.

“நான் உடனே வியன்ட்டயும் என் அப்பாட்டயும் பேசணும்....முதல்ல உங்க மூவர் கூட்டணிய கலைச்சாகனும்...”

“அதெல்லாம் நடக்கிற காரியம் கிடையாது...அத்தைக்கு நான்னா ரொம்பவே செல்லம்..”

கொஞ்சம் சீரியஸானது கவினின் முகம்.

“குல்ஸ் அம்மாவுக்கு நானும் வியனும் ஒன்னுதான்...அது மாதிரிதான் நீயும் மிர்னாவும்....”

“அதெல்லாம் தெரியுமே..எனக்கு அவங்கட்ட செல்லம் ஜாஸ்தி...அவ கூட சேர்ந்து அவள மாதிரியே அதிகமா குறும்பு செய்வாங்க......இது கூட புரியாம உங்கள மாதிரியா நாங்க...1% அதிகமா பிடிக்கும்னு அடிச்சுப்போம்னு நினச்சீங்க....”

“ஹேய்...என்ன நினச்சுட்ட நீ...என்னைவிட வியனை எங்கம்மாவுக்கு அதிகமா பிடிக்கனும்னுதான் நானும் நினைப்பேன்..அதே மாதிரி வியனும் என்னைதான் அம்மாவுக்கு அதிகமா பிடிக்கனும்னு  நினைப்பான்...”

ஒரு கணம் அவனைப் பார்த்தவள் “ தப்பா நினைக்கலை கவிப்பா...ஆனா நிஜமாவே புரியலை... இவ்ளவு தூரம் அவங்கள விட்டுகொடுக்காம பேசுற நீங்க  வியன் ஃபினான்ஸியலி கஷ்டப்படுறப்ப அவங்களுக்கு ஏன் ஹெல்ப் செய்யலை....மிர்னு ஃபினான்ஸியலி கஷ்டப்பட்டோம்னு சொல்றப்ப எனக்கு எவ்ளவு கஷ்டமாயிட்டு தெரியுமா?”

“என்ன நீ இப்படி வேற நினச்சுகிட்டு இருக்கியா?  எல்லா பிஸினஸ்ல இருந்தும் ஃபண்டை ஃப்யூயல் ஃபாக்ட்டரிக்கு  டைவர்ட் செய்திருந்ததால ஓவர் ஆல் நம்ம ஃபினான்ஸ் டைட்...சோ ஸ்பின்னிங் டிபார்ட்மென்ட் எம் டி யா சேலரியை எனக்கு ஏற்கனவே குறச்சிருந்தேன்...அந்த சேலரி என்னோடதுங்கிறதுங்கிறதால அதுல இருந்து முடிந்த வரை வியனுக்கு அனுப்புனேன்...பட்..அவங்க 3 பேரா ட்ரிப் போகவேண்டிய இருந்தது... அதோட மிஹிர்கான சேலரின்னு....  அந்த அமௌண்ட் அவஙளுக்கு பத்தலை...அப்பாவோட எதையும் வாங்க மாட்டேன்னு சொல்லி இருந்தான் வியன்...அதான்”

“எனக்கு ரொம்ப குழப்புது கவிப்பா...அப்டின்னா எனக்கு மட்டும் அவ்ளவு அமௌண்ட் என் அக்கவ்ண்ட்ல டிபாசிட் செய்து வச்சிருக்கீங்க...?”

“ம்...அது நம்ம எல்லா பிஸினஸ்லயும் உன்னை என்னோட  பாட்னரா இன்க்ளூட் செய்திருக்கில்லையா.....அதனால வர்ற அமௌண்ட் அது...வியன் அவனோட  பாட்னர்ஷிப்பை தான் டினை செய்திருந்தான்...இனி அவன் மிர்னு ரெண்டு பேரும் பார்ட்னர்ஷிப்ல வந்துருவாங்க...எந்த ப்ராப்ளமும் இருக்காது...”

“இதை எப்பப்பா செய்தீங்க..? “

“என் பெர்த் டே அன்னைக்கு...என் பேர்ல இருந்த ப்ராப்பர்டி எல்லாத்தையும் நம்ம பேருக்கு மாத்தினேனே... என் ஃப்ரெண்ட்ஸ் விஜயும் சாமும் கூட வந்திருந்தாங்களே... அப்பதான் இதையும் செய்தேன்....”

அதிர்ந்துபோய் நின்றாள் வேரி....

“எப்ப உன்னை கல்யாணம் செய்தேனோ அப்பவே என் வேர்முதலா உன்ட்ட எல்லாத்தையும் கொடுத்திடனும்னு முடிவு செய்ததுதான்...”

அன்று டாகுமெண்ட்ஸை படிக்காமல் சைன் செய்தது அவன் மட்டுமல்ல இவளும்தான் என்பது இவளுக்கு இப்பொழுதுதான் புரிகிறது...

ஆக அன்றைய இவனின் ஆனந்தம் எதற்காய் இருந்திருக்கிறது..? இவள் அதை என்னவாய் புரிந்துகொண்டு என்னவெல்லாம் செய்துவிட்டாள்.....??

அவன் மார்பில் சரணடைந்தாள்

“என்னோட வேரும்.. அது ஓடும் நிலமும் நீங்கதான் கவிப்பா....என் அஸ்திவாரம்..”

“இன்டியன் மேரேஜ் என் இஷ்டப்படின்னு சொன்னீங்கள்ல...அப்படின்னா என்னை இப்பவே அங்க கூட்டிட்டு போங்க...” மிர்னாவின் திட்டம் புரியாமல் கோரிக்கையை அன்றே  நிறைவேற்றி வைத்தான் அவளது ஆசைக் கணவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.