(Reading time: 57 - 114 minutes)

ன்னைக்கு டெல்லியில் ஃபர்ஸ்டைம் வேர்ல்ட் ரெக்கார்ட் செய்த தெரியுமா அப்ப இருந்து நேத்து ஒலிம்பிக்ல வின் பண்ண வரைக்கும் எத்தனையோ தடவை.....அதுவும் நேத்து உங்கம்மாட்ட கோபப்பட்டு நீ வாக்கிங் போனியே....ஐ வாண்ட் டு பீ அலோன்னு...எப்டி இருந்துது தெரியுமா எனக்கு....”

எழுந்து நின்று அவளை தன்னுள் புதையும் வண்ணம் அணைத்திருந்தான்.

அடிமனதின் அத்தனை அலையும் அலைக்கழிப்பும் காணாமல் போனது அவளுள். அவளுக்கே அவளுக்கான உலகம், புயல் புகா மறைவிடம்  இது என புரிந்தது.

“இதுக்கு கூட கல்யாணம் வேணுமே....”  அவன் சொல்ல

“சாரிப்பா...மாத்தி புரிஞ்சி தப்பா நினச்சுட்டேன்....” இப்பொழுது மனம் திறந்து மன்னிப்பு கேட்டுவிட்டாள்.

“இட்’ஸ் ஓகே டா”

“முன்னமே மேரேஜ் செய்திருக்கலாம்...இவ்ளவு கூட கஷ்ட படாம ஜெயிச்சிருப்போம்....” இப்பொழுது தன் மனம் உணர்வதை சொன்னாள்.

“மின்னியை மன்னிக்க முடிஞ்ச உனக்கு....இவனுக்கு இதுதான் முக்கியமாக போய்ட்டுன்னு என்னைப் பார்த்து நேத்து தோணுனதும்...உன் அம்மாவைக்கூட மன்னிக்க முடியாமல் போய்டுதான...?

.நம்ம ரெண்டு பேருக்குள்ளயும் சின்னதா ப்ரச்சனையானாலும் அது நம் மன வலிமையை ரொம்பவும் பாதிக்கும் மேரேஜ்ல...ஆனா அது வந்த வேகத்துல அடங்கியும் போயிரும்... ஸ்டில்... அதுக்கு இடைப்பட்ட நேரத்தில உன் பெர்ஃபாமன்ஸ் பாதிக்கப்படுமில்லையா...?.....நேத்து நைட் இருந்த மூட்ல காம்படிஷன் அட்டென் செய்திருந்தா எப்டி இருந்திருப்ப....?......நாம பேசி பழகாம இருந்தப்ப இப்டி எதுவும் ப்ரச்சனை வரலை பார்த்தியா...?”

அப்பொழுது பேச தொடங்கியவர்கள் தான். எந்த சூழலில் என்னவெல்லாம் நினைத்தார்கள் என

மீண்டும் “பசிக்குது வினு...”

“எனக்கும்தான்....இரு என்ன இருக்குன்னு பார்க்கிறேன்...” என இவர்கள் உரையாடலுக்கு இடைவேளையிட்டு போது மணி இரவு 1.

ஃப்ரிஜிலிருந்த ஃபாஸ்டரிக்கு அவள் ஆசைப்பட்டாலும் “இத்தனை மணிக்கு இதெல்லாம் சாப்பிடலாமா?” என அவள் தயங்க...

“ஒன்ஸ் இன் அ வைல் ஒன்னும் தூக்கிட்டு போய்டாது” என அவளை சமாதனபடுத்தி அவள் அதையும் இவன் ஒரு  ஃப்ளேவர்ட் மில்க்கையும் முடித்துவிட்டு மீண்டும் மெத்தையில் போய் விழுந்தவர்கள் தங்கள் உரையாடலை விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்க....

“எனக்கு தூக்கம் வரலை...பட்...ரொம்ப லேட்டாயிட்டு.....தூங்கலாம் எம் எச்....”

அவன் சொன்ன போது மணி 3.

தன் கற்பனை மிர்னா மஹராணியாகிய எம் எம் பற்றி இவள் சொல்லி கதையை தொடர....

ஒரு வழியாக இவர்கள் துயில செல்லும் போது மணி காலை 5.30.

துயிலில் விழுந்த பெண்மனம் இருந்தது இவ்விதம்.....

என்னை தந்தேன் வேரோடு என வந்தவன்,

என் வேர் தாங்கும் நிலமானான் எப்போது?

அறியேன் நான்.

அறிகின்றேன்

என் வேர் வரை அறிந்தவன் இவன் தான்

இவன் தான்

இவன் ஒருவன் தான்.

காதலும் காமமும்

கடலளவு தாபமும்

கணவனே உன்னோடு மட்டும்தான்...

திருமணம் முடிந்து மணமக்கள் முதலில் கிளம்பிச்சென்றாலும்...விருந்தினர் அனைவரையும் வழி அனுப்பிவிட்டு,  கவின் வேரி விடைபெற இரவாகிவிட்டது.

கவின் காரை சென்று நிறுத்திய இடத்தைப் பார்த்த வேரிக்கு ஒன்றும் புரியவில்லை. ஏர்போர்ட்.

“யாரும் கெஸ்ட்ட ரிசீவ் செய்ய வந்திருக்கமாபா...?”

“பேச்சு மாற கூடாது குல்ஸ்...ஸ்காட்லண்ட் வாரேன்னு சொன்ன......நீ ஊருக்குபோனதும் விஷுவலி சேலஞ்ட் குழந்தைகளுக்கு எதோ செய்ய போற....கரெக்டா சொல்லிட்டனா...? இப்போ கிளம்பு.....க்லாஸ்கோ க்கு நைட் ஃப்ளைட்...”

“ஆங்....சும்மா ஒரு ஃப்ளோல எதோ ஸ்காட்லண்டுன்னு சொன்னேன்....”

“சும்மா சொன்னாலும் சூப்பராத்தான் சொல்லிருக்க... ஆகஸ்ட்ல பெஸ்ட் ஹனிமூன் டெஸ்டினேஷன் அதானாம்...” கண்சிமிட்டினான்.

றுநாள் விழிப்பு வந்தபோது மிர்னா மெல்ல கண்திறந்து பார்த்தாள் கடிகாரம் மணி மதியம் 1.30 என்றது.

அம்மாடியோ...எல்லாரும் என்ன நினைப்பாங்க..

துள்ளி எழுந்தாள்.

அருகில் தூங்கிக் கொண்டிருந்த வியனை பிடித்து உலுக்கினாள்.

“என்ன..என்னாச்சு மினு...?” பதறி எழுந்தான் அவன்.

‘டைம் பாருங்க...”

“இதுக்குதானா..? க்ளாக்ல பார்க்க தெரியலைனா மொபைல்ல பாரு .....” திரும்பி படுத்தான்.

தூக்குத்துல கூட இந்த வாய் இவ்ளவு நீளுதா...?

பக்கெட் தண்ணியில் அவனுக்கு ஒரு திடீர் அபிஷேகம்...

முகத்தை சற்று துடைத்துக் கொண்டு திரும்பி படுத்தான்.

“சின்ன வயசில அம்முவும் கவினும் என்னை இதுக்கு  ட்ரெய்ன் செய்துட்டாங்க...வேற எதாவது புதுசா கண்டுபிடி..”

அடுத்த தலையணையை எடுத்து முகத்தின் மேல் வைத்துக்கொண்டு தூக்கத்தை தொடர முயன்றான்.

“இதுக்கெல்லாம் ரெடியாகாம எம் எம் ஐ கல்யாணம் செய்திருப்பேனாமா?”

“ரூம் நம்பர் 77 ல இருந்து கால் பண்றேன்...சூடா கொதிக்க கொதிக்க ஒரு ஃப்ளாஸ்க் காஃபி வேணும்...” மிர்னா இன்டர்காமில் ஆர்டர் செய்ய

அலறி அடித்து எழுந்தான் வியன் “.ஹஸ்பண்டை காஃபி குடுத்து எழுப்புவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கிறேன்...இப்படி காஃபிய கவுத்து எழுப்புற டெக்னிக்....எங்கயோ போய்ட்ட மிர்னு நீ....”

“ஹை...நீங்கதான் உலகத்திலேயே சூப்பர் ஹஸ்பண்ட்...வைஃப் நினைக்கிறதை அப்டியே கண்டுபிடிச்சுடீறீங்களே...நீலாம்மா சொன்னாங்க...எதையும் கரெக்டா கண்டுபிடிச்சு விலகிடுவீங்க...துணிஞ்சு ஊத்தலாம்னு...”

“ஹான்.....இனிமே நீ  எங்க அம்மா கூட சேராத....எனக்கு ரொம்ப கஷ்டம் போல...”

“ஹி..ஹி ..அதெப்டியாம்...இது தலைமுறையா தொடரும் பாரம்பரியமாம்...என்னால தடைபட கூடாது பாருங்க...”

“கவின் ஏன் என் ரூம்ல வந்து படுத்தான்னு இப்போதான்  எனக்கு புரியுது...”

“ஐயோ....முதல்ல வேகமா கிளம்புங்க...அப்புறம் வச்சுகிடலாம் இந்த ஆராய்ச்சிய...மணி 1.30 ஆகுது...எல்லோரும் எதாவது நினச்சுபாங்க...” ஞாபகம் வந்தவளாக அவசரப் படுத்தினாள்.

“என்ன நினச்சுபாங்கன்னு முதல்ல சொல்லு...அப்புறமா எல்லோரையும் சமாளிக்கிறது எப்டின்னு சொல்லித்தாரேன்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.