(Reading time: 57 - 114 minutes)

மெல்ல பேசு தாயி....சத்தம் கேட்டு ஒளிஞ்சிகிட போறாக...பக்கத்துல போய் பார்ப்போம்...நிக்றது யார் வீட்டு மக்கனு...” கிசுகிசு குரல்கள் அருகில் வர.

அவசர அவசரமாக மிர்னாவை அருகிலிருந்த வைக்கோல் போரில் வியன் திணித்து வைக்க, அதே நேரம் கவினும் வேரியும் அங்கு வந்து சேர...அந்த பெண்களும் வந்து சேர்ந்தனர்.

இயல்பாய் இவர்கள் மூவரிடமும் நலம் விசாரித்துவிட்டு அப்பெண்கள் விலக..

“என்னடா கிராமத்து கல்யாணத்தை பயங்கரமா என்ஜாய் செய்ற மாதிரி இருக்குது....முதல்ல மிர்னுவ வெளிய வரச்சொல்லு வைக்கோல் அரிக்க போகுது...” கவனித்திருக்கிறான் கவின்

“அரிக்கட்டும் அரிக்கட்டும் அவ ஐடியா தான நல்லா அரிக்கட்டும்...”

ஆனாலும் அவசரமாக மிர்னாவின்  கையை பிடித்து வெளியே இழுத்துவிட்டான்....

“ஐயோ...கைய விடுங்க...யாராவது பார்த்தா இன்னும் 10 நாளைக்கு கல்யாணத்தை தள்ளி வச்சுடப் போறாங்க...”

அவசரமாக அவள் கையை உதறினான் வியன்.

“அப்டியாடா கவின்...அப்டி வேற எதாவது சட்டம் இருக்கா என்ன..?” பதறிப் போனான்...

மிர்னா உட்பட மூவரும் வாய்விட்டு சிரிக்க உண்மை புரிந்து முறைத்தபடி அங்கிருந்து சென்றுவிட்டான் வியன்.

நாள் 4

நேற்றைய நிகழ்ச்சிக்கு பிறகு இப்பொழுதுவரை வியன் மிர்னாவின் அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. ஸ்விட்ச் ஆஃப். வேரியிடம் இதை சொல்லி கேட்கலாம் என்றால் மனது மறுக்கிறது. இவர்களுக்குள் சண்டை என்று அவள் நினைத்து வருந்துவாளே..

நாள் 5

இதற்கு மேல் தாங்காது. அட்டாக்...

இரவு கவிழ தொடங்கிய பிறகு யார் கண்ணிலும் படாமல் வியனது வீட்டின் பின் பகுதியை அடைந்தாள்.

“சின்னவருக்குதான் உடம்பு முடியலை.....மத்தபடி எல்லாம் நல்லாதான் இருக்குது..” யாரோ ஒரு பெண் மற்றவரிடம் பேசுவது காதில் விழ பின் கதவை திறந்து அவசர அவசரமாக உள்ளே வந்தாள். சமையலறை...

“யேய்....பின் வாசல்ல ஏதோ சத்தம் கேட்குது..என்னன்னு பாருங்க...குரங்கு எதுவும் உள்ள வந்துடப்போகுது....”

நீலாவின் குரலை தொடர்ந்து காலடி சத்தம்...

யாரும் என்னமும் நினச்சுட்டு போங்க...எனக்கு என் வியன் வேணும்....

இருட்டில் இவள் வேகமாக வீட்டின் உள் திசையைப் பார்த்து நடக்க...

தன்ட்...நேருக்கு நேர் ஒரு மோதல்..

“ஷ் ஆ...” நெஞ்சை பிடித்துக்கொண்டு இவள்..

“யேய்...நீதானா அந்த குரங்கு குட்டி... “ என ஆரம்பித்த வியன்....”சாரிடாமா...ரொம்ப வலிச்சுட்டா...” என்றபடி இவளை தன்னோடு அணைத்திருந்தான்.

ஒரு கணம் உலகம் மறந்து போனது அவளுக்கு.

“விடுங்க....முதல்ல விடுங்க...நான் உங்க மேல ரொம்ப கோபமா இருக்கேன்....”

“ஆனா நான் உன் மேல இப்போ ரொம்ப குளு குளுன்னு இருக்கேன்....”

“ஏன் போனை ஆஃப் செய்து வச்சிருக்கீங்க...?” அவன் பிடியில் இருந்து விடுபட்டிருந்தாள்.

“அது கீழ விழுந்து உடஞ்சிட்டு...இங்க என்ன உடனே வாங்கவா முடியுது..?”

“என்ட்ட பேசனும்கிறதுக்காக நீங்க மதுரை போய்ட்டு வந்திருக்கலாம்...”

“போகனும்னு நினச்சேன்... எதோ பந்த்தாம்...நாளைக்கு கண்டிப்பா வாங்கிருவேன்... “

“உங்களுக்கு உடம்பு சரி இல்லைனு சொல்லிகிட்டாங்க...”.

“இல்லையே..... நான் நல்லாதான் இருக்கேன்..அதுவும் இப்போ டபுள் டிரிப்ளா நல்லா இருக்கேன்...”

“சின்னவருக்குத்தான் உடம்பு முடியலைனு ...பேசிகிட்டாங்களே”

“அது களஞ்சியம் அக்காவா இருக்கும்.....அவங்க மாடோட கன்னுகுட்டிய அப்டித்தான் பேசுவாங்கா”

“போங்க.....”

“ஆக இன்னைக்கு அடிச்ச ஜாக்பாட்டுக்கு நான் அவங்களுக்குதான் தேங்க் செய்யனுமா?”

“வினு போதும் வினு இந்த கேம்...இப்பவே நிறுத்திடலாம்....”

“ஹேய்...எம் எச்...என்னாச்சுடா....? ஆசைப் பட்டுதான ஆரம்பிச்ச....இப்போ ஏன்?  பாதில விடுறது எம் எம் பழக்கமே கிடையாதே...”

“இல்ல நீங்க கோபமா இருக்கீங்க.....என்ட்ட பேசவும் இல்லைனு.....வேரிட்ட கூட கேட்க முடியலை....மனசுக்கு...ரொம்ப கஷ்டமாகிட்டு...”

குரல் பிசிற அவன் மார்பில் சாய்ந்தாள்.

“சீ...இதுக்கு போயா அழுதுட்டு இருக்க... அப்ப உன்னை சும்மா சீண்டறதுக்காக கோபம்ங்கிற மாதிரி வந்தேன்...” அணைத்திருந்தான் அவன்.

“தெரியும்...”

“அப்புறம் போன் இல்ல...அவ்ளவுதான்....”

“இருந்தாலும் போதும்...”

“ஹ ஹா இனிமே நாம இந்த விளையாட்டை நிறுத்தனும்னா நாம வீட்டை விட்டு ஓடிப் போனாதான் உண்டு.....எலோப்பிங்......கல்யாணம் செய்த பிறகும் எலோப் செய்ற த்ரில் வேணும்னா இத நிறுத்திடலாம்...”

“ஹான்...”

“இன்னும் கொஞ்சம் நாள்தான் ஜாலியா என்ஜாய் பண்ணு...எப்டினாலும் தினம் உன்ட்ட நான் பேசிறுவேன்.. ஓகே வா?”

“ம்”.

“சின்னவனே இன்னும் ரொம்ப நேரம் கிட்சன் பக்கம் யாரும் வராம அம்மாவால பார்த்துக்க முடியாது....கொஞ்சம் இடம் மாறிக்கோங்களேன்...பின்னாலதான் எவ்ளவு பெரிய தோட்டம் இருக்குதே...எதுக்கு இங்கயே நின்னுட்டு இருக்கீங்க...?”

நீலாவின் குரல்...

வெட்கம் பிடுங்கித் தின்றது மிர்னாவை...

“அதுமா....அங்க பூச்சி எதுவும் இருக்குமோன்னு...”

“ஓ...அப்டினா அவ வீட்டுக்கு போறப்ப தனியா அனுப்பாதடா...”

நாள் 6

அடுத்து மிர்னாவின் பெற்றோருக்கு சகோதர சகோதரிகள் முறை வருவோர்....குடும்பம் குடும்பமாக வந்து ஒவ்வொரு நாளும் அரிசி கூட்டம் கொண்டாடி செல்ல வெளியூரிலிருந்து அவர்கள் வந்து சென்றதால் காலை முதல் இரவு வரை அவர்களுடன் நேரம் கழிப்பதில் சென்றது மிர்னாவின் பகல்கள்.

நாள் 10

மதுரை, வெட்டிங் ஷாப்பிங்.

“ஹையோ நீங்க வருவீங்கன்னு யாருமே சொல்லலை...” ஆரவரித்தாள் மிர்னா.

“சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னுதான் சொல்லாமல் வந்தேன்டா...உன் வெட்டிங் ஜுவல் என் சார்பா எங்க வீட்ல உள்ளவங்க வாங்கனுமாம்...என்னை பொறுத்தவரை இதையெல்லாம் நானே தான் செய்யனும்..சோ வந்துட்டேன்...அதோட வெட்டிங் அப்ப நீ யூஸ் செய்ற ஃபூட் வேர்ல இருந்து ஹேர் பின்ஸ் வரை  எல்லாம் நாங்க தரனுமாம்.....சோ இன்னைக்கு ஃபுல் டே நாம ஷாப்பிங் தான்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.