“வா.............................வ்வ்வ்வ்...... இப்போ விஷயம் தெரிஞ்சா என்ன செய்வாங்க வினு...?”
“இனிமே என்ன செய்துர முடியும்...? இதுக்கும் சேர்த்து கல்யாணம் தான் செய்து வைக்க முடியும்...”
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே....
யாரும் கண்டு பிடிக்கட்டுமே.......
தன்னாலே...”
எம் எம் உற்சாகத்தில் பாட
க்ரீச் க்ரீச்....
திரும்பவுமா...?
மெல்ல கண் திறந்து பார்த்தாள் மிர்னா.
எல்லாம் நன்றாய்தான் இருக்கிறது.
“வியன்...?”
“டயர் பஞ்சர்”
“எதிர்ல ஒரு கார் வருது பாருங்க...அதை நிப்பாட்டுங்க....”
“நீ இப்டி எதாவது செய்வன்னு நினைச்சுதான் நான் வந்தேன்....”
கவின் வந்து நின்றான்.
இருவரும் அவன் காரில் ஏற
சர்ச்சுக்கு சற்று முன்னால் காரை நிறுத்தி...”இப்டியே இறங்கி ஓடிப்போய்டு சர்ச்சுக்கு.....கொஞ்சம் லேட்டா மிர்னாவை கூட்டிட்டு வாரேன் நான்.....பொண்ணு வர்றப்ப நீ உள்ள இருக்கனும்....” தம்பியை அனுப்பி வைத்தான் கவின்.
“கவின்...நீ அண்ணன் இல்லடா...அதுக்கும் மேல....”
“நான் பட்ட இன்பம் உனக்கும் கிடைக்கனுமே...எவ்ளவு நாள்தான் நீயும் தப்பிப்ப...போய் கல்யாண கடல்ல விழு....”
மிர்னா சர்ச் வாசலில் இறங்கும் போது வியன் உள்ளே காத்திருந்தான்.
சபை சாட்சியாக திருமண உறுதிமொழிகளை மணமக்கள் எடுத்து, திருமணத்தை ரிஜிஸ்டரில் பதிய, அதோடு திருமண முறைமகள் நிறைவு பெற, சபையை விட்டு இருவரும் வெளியேறினர். பூமழைத்தூவினர் சபையினர்.
தன் பூச்சென்டை பின்புறமாக மிர்னா எறிய திருமணமாகாத பெண்களுக்குள் அதை யார் பிடிப்பது என போட்டி...
யார் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு அடுத்து திருமணம் நடைபெறும் என்பது ஒரு விளையாட்டு.
பலரும் ஆர்வமாய் முயல, எறிந்த நபர் நம் எம் எம் ஆயிற்றே ஏதோ ஒரு கோணத்தில் செண்டு பறந்து.. விலகி நின்ற ஆண்கள் கூட்டத்தில் இருந்த வியனின் பால்ய நண்பன் தீபக்கை தொட்டு தெறித்து, இக்களேபரத்தில் கலக்காமல் தூரத்தில் நின்ற வென்யாவின் கையில் போய் விழுந்தது.
“ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்”
கூட்டம் ஆரவரித்து வென்யாவை கலாய்த்து முடித்த பின் அவளிடமாக வந்தான் தீபக்...”ஹாய் வென்யா...ஐம் தீபக்....வென்யா தீபக்...நேம் நல்லாவே மேட்ச் ஆகுதே...என்ன சொல்றீங்க...”
“ஹலோ...ரொம்ப கனவு காணாதீங்க சார்....எனக்குன்னு ஒரு லட்சியம் இருக்குது...அதை அடையும் வரை நோ...” அவள் பேசி முடிக்கவில்லை...
“வித் ப்ளசர் வெய்ட் செய்றேன்...துணையா இருந்து ஜெயிக்க வைக்கிறேன்.....லாங் ஜம்பா...ரன்னிங்கா...எது உங்க ஈவன்ட்...?” ஆவலாய் கேட்டான்
‘நீங்க வேற...6 அரியர்ஸ்....அதை க்ளியர் செய்தால் தான்....”
வாய்விட்டு சிரித்தான் ....
“பரவாயில்லை....என் வைஃப் படிப்பில் சூரப்புலியா இருக்கனும்னு அவசியம் இல்லை...ஐ லவ் யூ...”
“என்னது உதை வாங்காம போக மட்டீங்க போல...நான் 10த் டீச்சர்.. என் க்ளாஸ்ல 9த்ல ஃபெயில் மார்க் வாங்ன ஸ்டூடண்ட்ஸ் 6 பேர் இருக்காங்க....அவங்களை டெக்னிகலி அரியர்ஸ்னு சொல்லுவோம்...அவங்க பப்ளிக் எக்ஸாம் க்ளீயர் செய்தாதான்...”
“அம்மாடியோவ்...என் காதலுக்கு இப்டி ஒரு சோதனையா....?”
அன்று இரவு வியனுடைய கிராமத்து வீட்டில் வியனும் அவன் மனைவியும். அனைவரும் விழா முடிந்து கிளம்பிச்சென்றாயிற்று. இவர்கள் இருவர் மாத்திரமாக ஒரு நினைவுடன்...
பீச் பிங்கிற்கு மென் ஆரஞ்சு பார்டர் புடவையில் முழு அலங்காரத்தில் இருந்தவள்
“10 மினிட்ஸ்ல..”
உள்ளறைக்கு சென்றாள். திரும்பி வரும்போது....முன்பு முதல்முறை அவன் காண உடுத்தி இருந்த பாவாடை தாவணியில் இருந்தாள்...
அவன் இதைதான் இன்றைய இரவிற்கென முன்பு ஆசைப்பட்டதும், அதை மனம் ஒத்த மனையாள் கண்டுபிடிக்கட்டும் என்று குறிப்பிட்டதும்...
விசிலடித்தான் வியன்...
என் அப்ளிகேஷன் புரிஞ்சு அதை இவ்ளவு பெர்ஃபெக்டா நிறைவேத்தி... அவளிடமாக சென்றவன் அவள் தலையிலிருந்து தோள் தொட்ட மல்லிகை சரத்தில் ஒன்றை பற்றினான்.
முகம் குனிந்து கொண்டாள் அவள்.
அவள் நாடியில் ஒற்றை விரல் வைத்து உயர்த்தினான்.
அவன் முகம் பார்க்க மறுத்த இமைகள்...
“ஹேய்....என்னாச்சு...நான் தான?” ஆசை நிரம்பிய ஆண் குரலில் அவன்
“ம்...அது வந்து....” தயங்கும் பெண்மை
“என்னனாலும் கேளு...” காதல் குழைவு..
“அது...”
“ஒன்னும் நினச்சுக்க மாட்டேன்...என்னடா?” கரிசனைக்கு வந்திருந்தான் மனைவியின் தயக்கம் கண்டு
“முன்னாலயே முடிவு செய்து வச்சிருந்தேன்...”
“சொல்லு கண்டிப்பா செய்வோம்.....” ஆசையும் காதலும் அரை அரை பகுதி...
“இது முக்கியமான நேரம் தானே...”
“ரொம்பவும்...”
“என் பாடுற டேலண்டைப் பத்தி நீங்க பாப்புலராக்கினதுக்காக, உங்க முன்னால முக்கியமான நேரத்துல முக்கால் மணி நேரம் பாடுவேன்னு ஒரு சபதமே எடுத்திருந்தேன்....இப்போ அதை நிறைவேத்த போறேன்.....” முழு குறும்புடன் பொரிந்தவள் கணவனைக் காண்டு கண்சிமிட்டினாள்.
“ஆன்.............”
அரண்டு போய் பார்த்தான். முழுசா மூனு நிமிஷம் பாடவே இதுவரைக்கும் இயற்கை அனுமதிக்கலை...இதுல முக்கால் மணிநேரமா...?
“மினு...இது ரொம்ப பழைய வீடு...தலமுறை பல கண்டதும் கூட...அடுத்த தலைமுறையும் இதை பார்க்கனுமே...அதைப் பத்தி கொஞ்சம் யோசியேன்...”
“அதெல்லாம் தெரியாது பாட்டு பாடத்தான் போறேன்......”
“சரி...பாடு...வேற வழி....”
“வாங்க ஸ்விங்க்ல ஆடிட்டே பாடலாம்...”
“என் பொண்ணும் அந்த ஸ்விங்ல உட்கார்ந்து ஆடி பார்த்திரனும்னு எனக்கு ஒரு ஆசை இருக்குது...அதனால அதை விட்டுடு...கட்டில் புதுசுதான்...அங்கயே போயிடலாம்..”