(Reading time: 57 - 114 minutes)

ம்....இவ்ளவு சொல்ற அதனால விடுறேன்...வந்த வழியே போங்க நம்ம வீடு வந்துடும்....இப்ப வந்துடுறேன்...”

தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடிப்போயினர் வென்யாவும் லிடியாவும்.

காத்திருந்தவன் கண் நோக்கி இருந்த திசையை தவிர்த்து, அவன் பின்புறமாக பூனை நடையிட்டு சென்றாள்.

அவன் அருகில் சென்றதும் சட்டென பின்புறமாக கை நீட்டி அவளது கையைப் பிடித்தான் வியன்.

அவனிடம் செய்ய நினைத்த குறும்பு ஒன்றும் ஞாபகமின்றி போனது.

“வாங்க மகராணி...உங்கட்ட மாட்டின எலிஸ் காலி போல...”

 “ம்...” மெல்ல உருவிக்கொண்டாள் அவனிடமிருந்து தன் கையை.

அவள் முகம் பார்த்தவன், அவள் முழு உருவத்திலும் பார்வை பதித்தான்.

பெண்மை நதி அவளுள் ப்ராவகம். அவன் மன நிலை உணர்ந்தாள்.

ஆதவனின் பார்வை தன்நிறமாக்கும் நீர்பர்ப்பை...அனுபவத்தில் உணர்ந்தாள்.

 அடர் நீல பட்டு பாவாடையில் முழ நீள ஆரஞ்சு வர்ண கட்டி சரிகை பாவாடை , ஆரஞ்சு வர்ண தாவணி, சிறு ஒட்டியாணம்...பாவடை நிற மேலாடை. தலையில் சரியும் மல்லிகை...காதிலாடும் ஜிமிக்கிகள்...ஒற்றையாய் தனியாய் ஒரு சுட்டி நெற்றியில்..

இவன் பார்வை பட பட செந்நிறம் பூசும் அவள் முகம்...பின்னணியில் நிலவு... குளிர் இரவு...

“இதை கொடுக்கனும்னு தோணிச்சு...”கையில் கொண்டு வந்திருந்தான் மல்லிகை சரங்கள்.

திரும்பி அவனுக்கு தன் பின் தலையை காண்பித்தாள்.

ஏற்கனவே தலையிலிருந்த பூவின் பின்களை எடுத்து இதை வைத்துவிட்டான்.

அவள் தோள் பிடித்து தன் புறமாக திருப்பினான்.

அவன் முகம் நோக்கி உயர மறுத்தன இவள்  இமைகள்.

அவள் உதடுகளை மெல்ல தொட்டவன் அவள் புறமாக குனிந்தான்.

கண் மூடிக்கொண்டாள் மிர்னா. சம்மதம்.

அவன் சுவாசம் உணர்ந்தது அவள் முகம்.

“நாளைக்கு....” நினைத்ததை முடிக்காமல் நிமிர்ந்து விட்டான்.

சிறு புன்னகையுடன் அடி உதடை கடித்தபடி தலை குனிந்து கொண்டாள் அவள்.

“ஆனாலும்....இதாவது” அவள் கன்னத்தில் வைத்தான் அவனது முதல் அச்சாரத்தை.

இருவருக்குள்ளும்  சிறிது நேரம் அங்கு மௌனம்..

“நேரம் ஆகுது கிளம்பு... நாளைல இருந்து எப்பவும் என் கூடதான்..”

“ம்..” கிளம்பி வந்துவிட்டாள் மிர்னா.

பின் இரவில் அலைபேசியில்

“.தூக்கமே வர மாட்டேங்குது மினு...”

“எனக்கும்”

“எதாவது பேசேன்...”

“வினு...முன்னால ஊருக்கு வாக்கு குடுத்திருக்கேன்னு நீலாம்மாட்ட கூட பேச மாட்டீங்க...இப்போ என்னடான்னா இந்த 14 நாளும்....புகுந்து விளையாடிருக்கீங்க....?”

“ம்...அப்ப நான் ஊறுக்கு வாக்கு கொடுத்து இருந்தேன்...பட் இப்போ நீ என் பொண்டாட்டி டி...உன்னை பார்க்க கூடாதுன்னு சட்டம் போட ஒருத்தர்க்கும் உரிமை இல்ல...பட் உனக்கு இந்த செட் அப் மேரேஜ்  பிடிச்சிருக்குது அதான்...உனக்கும் எனக்குமாய் ...”

“தேங்க்ஸ் பி.கே...”

“இன்னும் ...பி.கே தானா? அதுக்கு மேல ப்ரமோஷன் இன்னும் கிடைக்கலையா எனக்கு..?

“.................”

கள்ளா.....பதில் தெரிஞ்சிகிட்டே கேள்வி கேட்கிற நீ....நாளைக்கு இருக்கு உனக்கு

அடுத்த  நாள்

மிர்னா வியன் இந்திய திருமணம்.

மணப்பெண் வீடு.

“ஏய்....பொண்ணழைக்க மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்தாச்சுப் பாருங்க...”

“பொண்ணு இருக்கிற இடத்தை காண்பிங்க...”

நீலாவும் வேரியும் முன்னால் வர பின்னால் ஒரு சிறு குழு. வியனுக்கு சகோதரி முறை வரும் பெண்கள் மணமகளுக்கென மணமகன் கொடுக்கும் அனைத்து பொருட்களையும் வெவ்வேறு தாம்பளத்தில் ஏந்தியபடி...

“இந்த வீட்டு பொண்னு நீ...நீ தான் முன்னால நின்னு வரவங்களை கூட்டிட்டு போகனும்...”

வேரியைப் பார்த்து ஒருவர் சொல்ல...

“அதெப்டி...அந்த வீட்டு மூத்த மருமக....அவ மாப்பிள்ளை வீட்டுகாரங்களாதான் வரனும்...”

“அப்டின்னா கொண்டு வந்த கொழுந்தியா பட்டை தான் வீட்டு  மூத்த மருமகளுக்கே கொடுக்கனுமோ...?

கூட்டம் ஆராய்ச்சியில் ஈடுபட.. முழு பூரிப்புடன் வேரியும் நீலாவும் மிர்னாவிடம் சென்றனர்.,

டார்க் பிங்க் நிற புடவையில் முழு அலங்காரத்தில் இருந்தாள் மிர்னா.

கொண்டு வந்திருந்த தட்டுகளை கடை பரப்பினர் மிர்னாவின் சோ கால்ட் நாத்தனார் படை.

தாம்பாளத்திலிருந்த மல்லிகை சரங்களை எடுத்து மிர்னாவின் கொண்டையில் சுத்த ஆரம்பித்தார் நீலா. உதவினாள் வேரி.

“நேத்து மாதிரி இன்னைக்கும் நானே வாரேன் பூ வைக்கன்னு என் பையன் சொன்னான்....நான் தான்..”

புரையேறியது மிர்னாவிற்கு...

இதையுமா உங்க அம்மாட்ட சொல்லனும்...சரியான பி.கே நீ

எதிர்பார்த்தவர் போல் இவள் தலையை மெல்ல தட்டினார் நீலா.

“நேத்து மல்லிகைப்பூவை அவன் முறச்சுப் பார்த்துகிட்டு இருக்கப்பவே இப்படித்தான் இருக்கும்னு கெஸ் செய்தேன்....இப்போ நீ கன்ஃபர்ம் செய்துட்ட...”

கடவுளே...

 அத்தை சூப்பர்...” ஹைபை கொடுத்தாள் வேரி தன் மாமியாருக்கு.

சுற்றிலும் சிரிப்பு சத்தம்.

“மிர்னுமா....புடவையை மாத்திட்டு சீக்கிரமா வந்துடு....பாவம் வியன் சர்ச்சில உனக்காக வெயிட் செய்துட்டு இருப்பான்...” இவளை அறையில் தனியாகவிட்டு அனைவரும் வெளியேற...

வேக வேகமாக இவள் திருமண புடைவையான வான் நிற பார்டர் கொண்ட வெண்பட்டை அணிந்தாள். உடலெங்கும் ஓடிய சரிகை கொடிகளில் வியனும் மிர்னாவும் தமிழ் எழுத்துக்களாய்.....ஆர்டர் செய்து வாங்கி இருந்தது வியன்.

பெயரெல்லாம் உருக்கொண்டு அவனாக.... ஒரு கணம் விரிந்த கற்பனையில்..

.அவசரமாக கதவைத்  திறந்தாள்.

அவன் அனுப்பி இருந்த அனைத்துப் பொருட்களையும் பயன் படுத்தி  அலங்காரங்களை முடித்துக் கொண்டு  வேகமாக காத்திருந்த காரில் இவள் ஏற..... அனிச்சையாய் இவள் பார்வை சென்றது ஓட்டுனர் இருக்கைக்கு.

அங்கு வியன். டிரைவர் உடையில்...

“வா..............” இவள் ஆரம்பிக்க

தன் வாயில் கைவைத்து காமித்தான் வியன்.

“கத்தி காமிச்சுகொடுத்ராத எம் எச்....விஷயம் வெளிய தெரிஞ்சிதோ... அவ்ளவுதான்....கொயட்டா இருக்கிறவரை ஒருத்தரும் நோட் செய்ய மாட்டாங்க...”

மெல்ல கார் நகர்ந்து ஆள் இல்லாத சாலையை அடைந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.