(Reading time: 10 - 20 minutes)

ரியாக அந்த நொடியில் வீடு வாசலில் ஒலித்தது அந்த குரல் மாதும்மா.......

வாசலுக்கு ஓடினாள் மாதங்கி. அவர்கள் வீட்டு கேட்டை பிடித்துக்கொண்டு அங்கே நின்றிருந்தாள் ராஜி.

சரேலென கண் திறந்தார் தாத்தா அவரது பிரார்த்தனையின் சக்தியில் அவர் காலடியில் வந்து விழுந்திருக்கிறது அந்த எதிர்மறை சக்தி.!!!!!!!!!

ராஜிக்கா....... எங்கே போயிட்டீங்க???? உள்ளே வாங்க ராஜிக்கா... அவரை காணோம் ராஜிக்கா. உங்களுக்கு அவர் எங்கே போனார்ன்னு ஏதாவது தெரியுமா? பதற்றம் நிறைந்த குரலில் பேசிக்கொண்டே கொண்டே போனாள் மாதங்கி.

எதுவுமே பேசவில்லை ராஜி. அவள் கண்கள் மாதங்கியின் மீதே நிலைகுத்தி நிற்க அசையாமல் நின்றிருந்தாள் அவள். அந்த வீட்டு கேட்டை தாண்டி அவளால் உள்ளே வர இயலவில்லை.

பூஜை அறையிலிருந்து எழுந்து வெளியே வந்தார் தாத்தா. வாசலுக்கு வந்து நின்ற அவரது அவரது தீர்கமான பார்வை ராஜியை தாக்கியது. ராஜியின் உடல் நடுங்க ஆரம்பித்தது.

எல்லாம் புரிந்துதான் இருந்தது அவருக்கு. தான் நினைத்தால் சில நிமிடங்களில் அந்த அமானுஷ்ய சக்தியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அடக்கி விட முடியும் என்று தெளிவாக புரிந்திருந்தது அவருக்கு. முகுந்தன் இங்கே வருவதும் பெரிய விஷயம் இல்லை என்று தெரிந்தது

அந்த எண்ணத்துடனே கண்களை மூடியவரின் மனதிற்குள் மறுபடியும் கேட்டது அந்த பெண்ணின் அழுகுரல்.. இதயத்தை கீறும் அழுகுரல். ஏன் அந்த குரல் என்னை தொடருகிறது.???

ஒரு உயிரின் கதறல் அது. தனது நியாயமான ஆசைக்காக .காலம் முழுக்க ஏக்கத்தையும், வேதனையையும் மட்டுமே அனுபவித்த ஒரு ஆத்மாவின் தவிப்பாகவே தோன்றியது அவருக்கு.

அந்த குரல் அவருக்குள்ளே பல வித அழுத்தங்களை கொடுத்தது. ஏனோ அதை ஒதுக்கி விட முடியவில்லை. அவரால் அதற்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது தான் இறைவனின் சித்தமா?

உள்ளே வா....ம்மா ராஜி என்றார் அவளை பார்வையால் ஊடுருவியபடியே.

அதிர்ந்து பின் வாங்கினாள் ராஜி. ‘இல்லை நான் வரலை’

மாதங்கி நீ உள்ளே போ என்றார் உறுதியான குரலில்.

அவர் குரலுக்கு கட்டுப்பட்டு அவள் திரும்பி நடக்க மாதும்மா….. அலறினாள் ராஜி. இரு மாதும்மா...  அவளது பார்வை கெஞ்சலுடன் தாத்தாவை நோக்கி திரும்பியது.

மாதங்கியை என் கூட அனுப்பிடுங்க.... நான் போயிடறேன்.... இங்கிருந்து போயிடறேன்... திரும்ப வரமாட்டேன். கண்ணீர் வழிய கெஞ்சினாள் ராஜி.

திரும்பி பார்த்தாள் மாதங்கி. அவளது கெஞ்சலுக்கான காரணம் புரியவில்லை அவளுக்கு.

நான் சொல்றேன் நீ உள்ளே போம்மா.... அவள் மனதை புரிந்துக்கொண்டவராக சொன்னார் தாத்தா.

வீட்டினுள் நுழைந்தாள் மாதங்கி. அவள் பின்னாலேயே தாத்தாவும் உள்ள நுழைய, ராஜியின் கெஞ்சல் அவர்களை துரத்தியது. மாதங்கியை விட்டு என்னாலே போக முடியாது. என் மாதும்மாவை என் கூட அனுப்பிடுங்க. நான் போயிடறேன். என்னை விரட்டாதீங்க......

கண்கள் நிறைய கேள்விகளுடன் தாத்தாவை நிமிர்ந்து பார்த்தாள் மாதங்கி.

அவர் பேச பேச அவளுக்குள்ளே பல நூறு அதிர்வலைகள்.

சில நிமிடங்கள் கரைய மெல்ல வெளியே வந்தாள் மாதங்கி. ராஜியின் முன்னால் வந்து நின்றாள் அவள். மெது மெதுவாய் நிமிர்ந்தன அவள் கண்கள். சில நொடிகள் விழி மூட மறந்து ராஜியை பார்த்தபடி நின்றிருந்தாள் அங்கே நின்றிருப்பது யார் என்ற உண்மை அவளை புரட்டித்தான் போட்டிருந்தது. உள்ளம் கரைந்து போவதைப்போல் ஒரு உணர்வு. இமை மீறியது மாதங்கியின் கண்ணீர்.

ராஜி அவளை தவிப்புடன் ஏறிட்டாள். சில நொடிகளில் கண்ணீரை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள் மாதங்கி  உறுதியான குரலில் சொன்னாள் நான் உங்களோட வரேன்’

மகிழ்ச்சியின் எல்லைக்கே போனவளாக மாதங்கியின் முகத்தை கையில் ஏந்திக்கொண்டு அவசரம் அவசரமாக சொன்னாள் ராஜி ‘வரியா... மாதும்மா.... என் கூட வந்திடறியா மாதும்மா... வா... வா... நாம எங்கேயாவது போயிடலாம். வா... என் கூட வா....

ராஜியின் ஸ்பரிசத்தில் மாதங்கியின் உடலில் லேசான நடுக்கம் பிறந்தது.

நான் உங்களோட வரேன். ஆனா அதுக்கு ஒரு நிபந்தனை  நீங்க முகுந்தனை எனக்கு திருப்பி கொடுக்கணும்.

திடுக்கென நிமிர்ந்தாள் ராஜி. ‘முகுந்தனா???????’

அவர் இருக்கிற இடம் உங்களுக்கு தெரியும் தானே? அவர் பத்திரமா வீட்டுக்கு வரணும் அதுக்கப்புறம் நீங்க சொன்னது எல்லாம் கேட்கிறேன்.

ராஜி அவளை இமைக்காமல் பார்க்க, உங்களாலே முடியாதா? அப்படின்னா நான் போறேன். மாதங்கி சட்டென திரும்பி நடக்க

‘நான் அனுப்பிடறேன். முகுந்தனை அனுப்பிடறேன்’ அலறினாள் ராஜி.

திரும்பினாள் மாதங்கி. ‘என்னை அவர் இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போறீங்களா?

சரி... சரி.... வா போகலாம் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ராஜி நடக்க பட படக்கும் இதயத்துடனும், நிறைந்து போயிருந்த கண்களுடனும் அவளுடன் நடந்தாள் மாதங்கி.

சாலையெங்கும் நடு இரவின் நிசப்தம். சூழ்ந்திருந்த இருட்டில் நடந்தனர் இருவரும். மனம் முழுவதும் பரவிக்கிடந்த திகிலை தனக்குள்ளே மறைத்துக்கொண்டு பார்வையை சுழற்றியபடியே நடந்தாள் மாதங்கி.

அவ்வப்போது திரும்பி பார்த்தவளின் கண்களில் சாலையில் யாருமே தென்படவில்லை. தாத்தாவின் வார்த்தைகளின் மீதிருந்த நம்பிக்கை மட்டுமே அவளை செலுத்திக்கொண்டிருந்தது.

நீ என் செல்லம் மாதும்மா... வா... வா... நாம போயிடலாம்...’ சொல்லிக்கொண்டே மாதங்கியை தனது கைப்பிடியில் வைத்துக்கொண்டே நடந்தாள் ராஜி. அவளது நடையில் அப்படி ஒரு வேகம்....

அவளது வேகத்துக்கு ஈடுக்கொடுக்க கொஞ்சம் தடுமாறித்தான் போனாள் மாதங்கி.

வீட்டை விட்டு சிறிது தூரம் சென்ற பிறகு சட்டென ஒரு நொடி நின்ற ராஜி மாதங்கியை பார்த்து மெல்ல புன்னகைத்தாள் அந்த புன்னகை என்ன சொல்ல வந்தது என்று புரியவில்லை மாதங்கிக்கு. சிவந்து விரிந்திரிந்த அவள் கண்களை பார்க்கும் போதே மாதங்கியினுள்ளே பூகம்பம்.

மு .... முகுந்தன் எங்கே???? ஏனோ தடுமாறியது மாதங்கியின் குரல்.

முகுந்தன் வேண்டாம் மாதும்மா..... நாம போலாம் மாதும்மா..... ராஜியின் குரல் ஒரு வித மாற்றத்துடன் ஒலித்தது.

இல்லை எனக்கு அவரை பார்க்கணும்......

அவன் வேண்டாம் மாதும்மா......ராஜியின் கை இறுக அவள் மாதங்கியை பற்றியிருந்த பிடி இரும்பு பிடியாகியது  தனது கையை விடுவிக்க முயன்று தோற்றாள் மாதங்கி. அவளுக்குள்ளே பய பிரவாகம்!!!.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:781}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.