" ம்ம் சரி ... "
" நேரம் காலம் இல்லாமல் கிடைக்கிற நேரத்தில் எல்லாம் சேட் பண்ணுறதே வேலையா இருந்தேன் நான் .. அப்படி பேசும்போது, அண்ணா ரெண்டு பெரும் வெளி ஊரில் வேலை செய்யிறாங்க, நான் ரொம்ப தனிமையா உணருறேன் அப்படின்னு பழகினவங்க கிட்டலாம் சொல்லுவேன் .. அவங்க, என்கிட்டஉரிமையாய் பேசுற விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது .. அதனாலேயே என்னைபத்தி எதையும் தயங்காமல் ஷேர் பண்ணிகிட்டேன் ..இதுதான் என் இராண்டாவது தப்பு " என்றாள் ..
" அடுத்தது போட்டோ.... பேஸ்புக்ல ப்ரண்ட்ஸ் எல்லாரும் போட்டோ போடுறாங்கன்னு நானும் என்னுடைய போடோஸ் எல்லாம் போட்டிருந்தேன் "
" சோஷியல் நெட்வர்க் ல இந்த மாதிரி விஷயங்களில் ஜாக்கரதையா இருக்கணும்னு சொல்வாங்களே மதிம்மா ! "
"அது இப்போ புரியுது அண்ணி , அப்போ புரியலை ... அதன் விளைவு என் ஐடி ப்ரண்டா இருந்த ஒரு ராஸ்கல் என் ஸ்கூல் அட்ரஸ் கண்டுபிடிச்சு வந்து, லவ் பண்ணுறேன் அதுஇதுன்னு வல்கரா பேசினான் .. அவனுக்கு என் அண்ணனுங்க இங்க இல்லைன்னு தெரியும் .. அப்பாவும் அப்போதான் ஹார்ட் ஆபரேஷன் முடிஞ்சு குணம் ஆகிட்டு இருந்தார் .. ஆக எனக்குன்னு கேள்வி கேட்க யாரும்மில்லைன்னு அவன் தெரிஞ்சுகிட்டான் .. ! " என்றவளின் கண்களின் கண்ணீர்த்துளி .. அதற்கு மேல் அமைதியாய் இருக்க முடியாமல் காரிலிருந்து பின்னால் சீட்டில் வந்து அமர்ந்தான் எழில் .. வலது புறம் காவியா, இடதுபுறம் எழில் அவர்களின் நடுவில் அமர்ந்திருந்த முகில்மதிக்கு கண்ணீர் அதிகமானது .. அவளது கரங்களை தனது கைக்குள் வைத்துக் கொண்டாள் காவியா .. எழிலும் அவளை தோளில் சாய்த்து கொண்டு தட்டி கொடுத்தான் ..
" இவ சின்ன பொண்ணு காவியா ..அவளுடை அப்பாவித்தனத்தை அந்த ராஸ்கல் பயன்படுத்திக்க பார்த்தான் ..விடுவேனா நான் ..? எனக்கு ஆரம்பத்தில் இருந்தே முகிலாவை ரொம்ப பிடிக்கும் ..என்னை அதிகமாய் ஈர்த்ததே அவ ஷக்தி மேல வைச்சிருந்த அன்புதான் .. நேரடியாய் நான் முகிலாவுக்கு துணை இல்லன்னாலும் மித்ரா மூலமா அவளை பற்றி அடிக்கடி தெரிஞ்சுப்பேன் . பலநாள் அவள் பத்திரமா இருக்காளான்னு தெரிஞ்சுக்க அவளுக்கே தெரியாமல் பின்தொடர்ந்திருக்கேன் . அப்போதான் அந்த ராஸ்கல் என் கண்ணில் பட்டான் .. என் மாமா போலிஸ்ன்னு உனக்கு தான் தெரியுமே .. அவர்கிட்ட சொல்லி யாருக்கும் தெரியாமல் இதை சரி பண்ணிட்டேன் " என்று தோழிக்கு பதில் சொன்னவன் முகில்மதியை சமாதபடுத்த முயன்றான் ..
காவியா உடனே " எஸ்கியுஸ் மீ " என்றபடி காரை விட்டு இறங்கினாள் ..
கண்ணீருடன் நிமிர்ந்தாள் முகிலா..
" அய்யோ அண்ணி தப்பா எடுத்துகிட்டாங்களா எழில் ?"
" ஹா ஹா அவளா ? "
" நான் உன்னை சமாதானபடுத்தனுமாம் .. அதுக்குதான் மேடம் ப்ரைவசி கொடுக்கிராலாம் "
" அதுக்கா ?"
" ஆமா ... ஒருவேளை நான் உனக்கு கன்னத்தில் ஏதாவது கொடுத்துதான் கண்ணீரை நிறுத்துவேன்னு அவ நினைசிருப்பாளோ ? " என்றான் அவன் விஷமமாய் ..
" அய்யே போங்கப்பா " என்றவள் இயல்பாய் மாறி இருந்தாள் ... அதை எதிர்பார்த்துதான் அவனும் அப்படி பேசினான் ... ஒருவழியாய் அவளை சமாதானப்படுத்திவிட்டு காவியாவையும் காரில் ஏற்றிவிட்டு தனது வீட்டிற்கு சென்றான் எழில் ...
தொடரும்
{kunena_discuss:777}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.