(Reading time: 28 - 55 minutes)

" ப்படின்னு என்ன சட்டம் இருக்கு ஆதி ? அதான் சொன்னேனே சில காரணங்களினால் தங்கச்சிக்கு சர்ப்ரைஸ் கல்யாணம் .. எப்படியும் அவளுக்கு கல்யாணம் முடிஞ்சா அடுத்த காரியமா எனக்கும் மாப்பிளை பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க ... கண்டிப்பா இன்னும் ஆறு மாசத்தில் உங்களுக்கு கல்யாண சாப்பாடு போட்டுடலாம் சரியா ?" என்றாள்  அவள் இயல்பாய் .. அவளது சந்தோஷமான மனநிலைக்கு எதிர்மாறாய் கொதித்து கொண்டிருந்தது ஆதிஸ்வரின் உள்ளம் ..

" உன் கல்யாண சாப்பாட்டுக்கு தான் நான் அலையறேனா ?"

" அச்சோ நான் அப்படி சொல்ல வரலை.. இப்போ எதுக்கு இந்த கோபம் ஆதி "

" நான் ஒன்னும் அந்த காலத்து பையன் இல்லைதான் வையூ .. பட் எனக்கு உன் மேல உள்ள அக்கறை இப்படி யோசிக்க வைக்கிறது .. ரொம்ப சின்ன காரணத்துக்காக உனக்கு முன்னாடி உன் தங்கச்சி கல்யாணம் பண்ணி வைக்கலாம் ..பட் அது உன் எதிர்காலத்தை பாதிக்க வாய்ப்பு இருக்கு .. அப்படியே நீ சொல்ற மாதிரி அடுத்து உனக்கு உடனே கல்யாணம் பண்ணி வெச்சாலும், வரபோறவர் உன்னை புரிஞ்சுக்கணும் இல்லையா ? ஏன் இவ்வளவு அவசரம் ?? எனக்கு எதுவும் சரியா படல " என்றான் ...

வைஷ்ணவியோ அவனது அக்கறையில்  நெகிழ்ந்து தான் போனாள் .. இருந்தும் அதை காட்டி கொள்ளாமல்

" உங்க அக்கறைக்கு தேங்க்ஸ் ஆதி .. ரொம்ப சந்தோசம் இப்படி ஒரு நண்பன் எனக்கு கிடைச்சதுக்கு ... ஆனா நீங்க ஒன்னு யோசிக்கணும் .. ஒரு நண்பன் நீங்களே என் வாழ்க்கையை பற்றி இவ்வளவு யோசிக்கும்போது, என்னை பெத்தவங்க எனக்காக கொஞ்சம் கூட யோசிக்காமலா முடிவெடுப்பாங்க ? நிச்சயம் அவங்க எனக்கு நல்ல மாப்பிளை பார்த்து நல்ல படியா என் வாழ்க்கை அமையும் .. அவங்க யாரை கை காட்டி கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் நான் சந்தோஷமா ஏத்துப்பேன் " என்றாள் ..

" என்ன சொன்ன வையூ ??"

"  என் அம்மா அப்பா யாரை கைகாட்டி கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் நான் சந்தோஷமா ஏத்துப்பேன் " என்றாள்  வைஷ்ணவி தெளிவாய்..

" சரி குட் ... நான் அப்பறமா பேசறேன் "

" என்ன ஆதி , திடீர்னு போன் வைக்கிறிங்க ? ஏதாச்சும் அதிகமா  பேசிட்டேனா ? "

" ச்ச்ச்ச  அப்படி எல்லாம் இல்லை வையூ .. எனக்கொரு முக்கியமான வேலை இருக்கு ..அதான் " என்றவன் அவள் பதிலுக்கும் காத்திராமல்  போனை வைத்தான் .. அடுத்த இரண்டு மணி நேரத்தில் தனது பெற்றோர் சங்கரன்- சிவாங்கி இருவருடன் பெண் கேட்க வந்துவிட்டான் ஆதிஷ்வர்.. அவனை அங்கு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது வைஷ்ணவியின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது .. வைஷ்ணவியின் நண்பன் என்ற முறையில்  தேவசிவனுக்கும் ஆதியை தெரியும் என்பதால் தன் மகளை கேள்வியாய்  பார்த்தார் .. அவள் முகத்தில் இருந்த அதிர்ச்சியை மனதில் குறித்து கொண்டார் அவரும் ..

லக்ஷ்மி, நாராயணன், தேவசிவம், சித்ரா, கதிரேசன், ஷக்தி, முகில்மதி, எழில், வைஷ்ணவி அனைவரும் புடைசூழ அனைவரின் முன்னிலையிலும் தன் விருப்பத்தை நேரடியாய் சொன்னான் ஆதி..

" அங்கிள், எனக்கு வைஷ்ணவியை ரொம்ப பிடிச்சிருக்கு, நான் அவங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைபடுறேன் " என்றான்.. அனைவரும் வைஷ்ணவியை பார்க்க, அவளோ துளைக்கும் பார்வையுடன் ஆதியை பார்த்தாள் .. அவளது பார்வையை எதிர்கொள்ள தயங்கவில்லை ஆதிஷ்வர்..

" வைஷ்ணவியை யாரும் கேள்வியாய்  பார்க்க வேணாம் .. உங்க எல்லாருக்கும் எப்படி இப்போதான் என் மனசுல இருக்குறது தெரியுமோ அதே மாதிரிதான் வையூவிற்கும்.. நான் என் மனசுல என்ன இருக்குன்னு இதுவரை வையூகிட்ட சொன்னது இல்லை .. " என்றான் தெளிவாய் .. அவன் கொடுத்த விளக்கத்தில் கொதித்து கொண்டிருந்த மனம் கொஞ்சம் தணிந்து போவதை உணர்ந்தாள்  வைஷ்ணவி..

" வையூவிற்கு காதல் திருமணத்தில் பெரிதாய் எந்த அபிமானம் இல்லைன்னு  எனக்கு தெரியும் .. அவளுக்கு பிடிக்காததை செய்ய எனக்கும்  எப்பவுமே விருப்பம் இருந்தது இல்லை. அதனால்தான் சரியான நேரத்துல அம்மா அப்பாவோடு பெண் கேட்க வரணும்னு நினைச்சேன் .. அப்பா அம்மாகிட்ட எதையும் மறைக்கிற பழக்கம் எனக்கில்லை அங்கிள் .. அவங்களுக்கு என் மனசில் உள்ளது எப்பவோ தெரியும் " என்றபடி தன் பெற்றோரை ஒரு முறை பார்த்தான் ஆதி.. தன்னை சுற்றி இருந்த அனைவரின் பார்வையிலும் ஒரு மரியாதை கூடி இருப்பதை கண்டுக்கொண்டான் ஆதி ..எனினும் அவனது எண்ணம் முழுக்க வைஷ்ணவி மேல்தான் .." என்னை வெறுத்திடாதே  வையூ " என மனதிற்குள் சொல்லிக்கொண்டான் ..

மீண்டும் சொல்ல வந்ததை தொடர்ந்தான் ஆதிஷ்வர்.!

" வைஷ்ணவிக்கு நீங்க கல்யாண பேச்சை ஆரம்பிக்கும்போது அம்மா அப்பாவோடு உங்க சம்மதத்தையும் கேட்டு வையூவை கைப் பிடிக்கணும்னு நினைச்சேன் அங்கிள் .. இன்னைக்கு எதார்த்தமா வையூவிற்கு கால் பண்ணி பேசினபோதுதான் , உங்க சின்ன பெண்ணுக்கு கல்யாண ஏற்பாடு செய்த்திருப்பதா  கேள்வி பட்டேன்.. "

" தப்பா எடுத்துக்க வேணாம் சம்பந்தி, இப்படி அவசரமா கல்யாணம் பேச வரோம்னு நினைக்க வேணாம் .. இதில் நீங்க உங்க ரெண்டு பெண்களின் வாழ்க்கையை பத்தியும் யோசிச்சு முடிவெடுக்கனும்னு தான் நாங்க சீக்கிரமா இங்க வந்தோம். வைஷ்ணவியை விட்டுட்டு மித்ராவுக்கு மட்டும் கல்யாணம் பண்ணினா, அதில் பாதிக்கபடுறது மித்ராவின் பெயரும்தான் " என்றார் ஆதியின் தாயார் சிவாங்கி. அவரது ஒற்றை வசனமே அவர்களுக்கு பல விவரங்களை எடுத்து சொல்லின .. " சம்பந்தி " என்ற வார்த்தையில் ஆதி- வைஷ்ணவி திருமணத்திற்கு தங்கள்  சார்பில் முழு சம்மதம் என்பது தெள்ளத் தெளிவானது.. சங்க மித்ராவை மித்ரா என்று விளித்தது, அவருக்கு அவர்களின் குடும்பத்தை பற்றி நன்றாகவே தெரியும் என்பதை விளக்கியது .. மேலும் வைஷ்ணவி- சங்கமித்ரா இரு பெண்களின் மீதும் அவர்கள் கொண்ட அக்கறையும் மிக தெளிவாய் புரிந்தது..

இரு குடும்பத்தாருமே மனம் விட்டு கலந்தாலோசித்து கொண்டிருந்தனர்.. சித்ரா வந்தவர்களுக்கு காபியை தாயாரித்து வைஷ்ணவியிடம் அனுப்பி தனது சம்மதத்தை பார்வையாலேயே தன் கணவருக்கு தெரிவித்தார்.. தன்னை சுற்றி நடப்பது எல்லாமே கனவு என்பது போல இருந்தது வைஷ்ணவிக்கு.. அவளது பொறுமைக்கும் அமைதிக்கும் கிடைத்த வரமா ஆதி ? என்று அவளது உள்மனம் கேள்வி கேட்டது.. காபி பரிமாறிவிட்டு அமைதியாய் பார்வையை சுழலவிட்டாள்.. ஷக்தி உட்பட அனைவரின் கண்களிலும் மகிழ்ச்சி மற்றும் திருப்தியின் சாயல்.. ஆதியின் முகத்தில் மட்டும் கொஞ்சம் பரிதவிப்பு.. தன்னையும் மீறி சிரித்துவிடுவாளோ என்று பயந்து வேறு புறம் முகத்தை திருப்பி நின்றாள்  வைஷ்ணவி.. சில மணி நேரங்களிலே அங்கு உறவெனும் பாலம் மிகப்பெரிய அஸ்திவாரத்துடன் உருவாகி கொண்டிருந்தது..

" எங்களுக்கு இது முழு சம்மதம் இருந்தாலும் வாழப்போறது எங்க பொண்ணுதான் .. அதனால் எனக்கு வைஷ்ணவியின் சம்மதம் ரொம்ப முக்கியம் " என்றவாறே மகளின் முகத்தை பார்த்தார் தேவசிவம்.. வைஷ்ணவியோ  ஆதியின் முகத்தை பார்த்தாள் .. அவன் செய்கையின் மூலம் " போனில் சொன்னதை நினைத்து பார்" என்றான் ..

சற்று முன்பு , "  என் அம்மா அப்பா யாரை கைகாட்டி கல்யாணம் பண்ணிக்க சொன்னாலும் நான் சந்தோஷமா ஏத்துப்பேன் " தான் சொன்னதை நினைவு கூர்ந்தவள், அப்போது அவன் அக்கேள்வியை கேட்டதின் காரணத்தை புரிந்து அவனை மனதிற்குள் பாராட்டினாள் ..

அவளது மௌனத்தை சம்மதம் என்று ஏற்றுகொள்ளாமல் அவளையே அனைவரும் பார்த்து கொண்டு நின்றனர்..

" உனக்கு இஸ்டம் இல்லைன்னா பரவாயில்லை வைஷூ ..எதுவா இருந்தாலும் மனசு விட்டு சொல்லும்மா .. இவன் தேவதாஸ் மாதிரி சுத்துவானொன்னு கவலை படாதே " என்றார் ஷங்கர் வேண்டுமென்றே .. அவர் எதிர்பார்த்தது போல சட்டென பதில் வந்தது வைஷ்ணவியிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.