(Reading time: 28 - 55 minutes)

" யோ அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை மாமா " என்று.. கதிர், காவியா, முகில், எழில் , ஷக்தி என இளமை பட்டாளம் அனைவரும், ஒரே நேரத்தில் " ஹே " என்று ஆர்பரிக்க, வெட்க புன்முறுவலுடன் " பெரியவங்களின் முடிவில் எனக்கும் சம்மதம் " என்றுவிட்டு சித்ராவின் முதுகின் பின்னால் ஒளிந்து கொண்டாள் .. எங்கிருந்து வந்தது இத்தனை நாணம் ?? முறையுடன் மணந்த கணவன் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா என்ற பாடல் வரிதான் ஞாபகம் வந்தது .. " பரம்பரை நாணம் " என்பது இதுதானோ ?? வெட்கம் பரவிய அவளது முகத்தை  பார்க்க எவ்வளவோ முயன்றான்ஆதி .. தாயாரின் பின்னால் ஒளிந்து கொண்டவளின் கை விரல்கள் மட்டுமே அவனது கண்களில் தென்பட்டன !

" வெல்காம்  டு அவர் பேமிலி " என்றபடி ஆதியை ஆரத்தழுவினான் ஷக்தி .. 

ஷக்தியின்  அணுகலில் கரைந்து தான் விட்டான் ஆதி .. சிநேகமாய் புன்னகத்தவனின் மனதில் தன்னையும் மீறி ஷக்தியின் மீதி மதிப்பு பிறந்தது... " அப்போ நீங்க எனக்கு மூணாவது அண்ணாவா ?" என்ற முகில்மதி ஒற்றை பிள்ளையான ஆதியின் கண்களில் கண்ணீரை  வரவைத்தாள் .. இதெல்லாம் தூரமாய் கவனித்து கொண்டிருந்த வைஷ்ணவியின் மனதிலும் மகிழ்ச்சியின் சாரல் புன்னகையெனும் தென்றலுடன் .. !

திருமணபேச்சை தொடங்கினர் பெரியவர்கள் அனைவரும்..கதிரும் எழிலும் கல்யாண வேலையில்  ஏனைய பொறுப்புகளை பகிர்ந்துகொண்டு இருந்தனர் ..

" ஓகே நமக்கு நிறைய டைம் இல்லை கதிர் ..நான் வீட்டுக்கு போயி அப்பா அம்மாவை பார்த்துட்டு வந்துட்டு அப்படியே கல்யாண விஷயத்தையும் சொல்லிட்டு வரேன் " என்றான் .. அதே நேரம் முகில்மதியுடன்  உதவியுடன், தனது உடமைகளை பைக்குள் அடைத்து அவசரமாக வந்தாள்  காவியதர்ஷினி..

" டேய் ஹிட்லர் இருடா நானும் வரேன் " என்று தட்டுதடுமாறி முகில்மதியுடன்  அவன் காரில் ஏற வந்தாள்  காவியதர்ஷினி ..

" ஹே நீ எங்க கெளம்பற ?" அனைவருக்கும் முன்பு முதல் ஆளாய் கேள்வி கேட்டான் கதிரேசன் .. அதுவே அவளுக்கு போதுமாய்  இருக்க, மனதிற்குள் குட்டி டப்பங்குத்து ஆட்டமே ஆடினாள்  அவள் ..அவள் ஆட்டத்தை நிறுத்தியது வெகு அருகில் கேட்ட திவ்யலக்ஷ்மியின்  குரல் ..

" என்னாச்சு காவியாம்மா ? யாராச்சும் ஏதும் சொன்னாங்களா ? நீ ஏன் இப்போவே கிளம்பற " என்றார்  பரிவுடன் .. பதில் ஏதும் சொல்லாமல் அவள் தோளில்  முகம் புதைத்து நின்றாள்  காவியா ..

" போதும் போதும்..இருந்தாலும் இவ்வளோ சீன் ஆகாது காவியா !" என்று நகைத்தது அவளது உள்மனம் அல்ல, அவளது உயிர்த்தோழன் ஹிட்லர் தான் ...

" உனக்கு பொறாமையா இருக்கா ஹிட்லர் " என்று சலுகையுடன் லக்ஷ்மிஅம்மாவின் தோளில்  சாய்ந்து நின்று வினவினாள் ...

" எனகென்ன பொறாமை ? நீ லக்ஷ்மி ஆன்டிக்கு பிரின்சஸ் மாதிரின்னா , நான் நாராயணன் அங்கிள்க்கு பிரின்ஸ் மாதிரி" என்று சட்டென அவருடன் கூட்டணி அமைத்துக் கொண்டான் எழில்.. அவர்களின் பேச்சை ரசித்து கொண்டிருந்தாள் முகிலா ..அவளுக்கு எதிர்மாறாய் ஏன் என்று உணராமலே பரிதவித்தான்  கதிர்..

" என்னாச்சு தர்ஷினி ? நீ ஏன் இப்படி திடீர்ன்னு கிளம்புற ?"

" இதுக்கு ஏன்  கதிர் நீங்க என்னை பார்த்து மௌனம் பேசியது சூர்யா மாதிரி முறைக்கிரிங்க ?" என்று குறைபட்டுகொண்டவள் அவளது பாவனையில் அனைவரையுமே சிரிக்க வைத்தாள் ..

அன்பாய் லக்ஷ்மியின் கைகளை பிடித்து கொண்டவள்,

" உங்களுக்கு கல்யாண வேலை நிறைய இருக்கும் ஆன்டி இந்த நேரம், நீங்க என்னை கவனிப்பிங்களா ? இல்ல மத்த வேலைய பார்ப்பின்களா ? அதுவும் இல்லாமல் உங்க சொந்தம் யாராச்சும் திடீர்னு வீட்டிற்கு வரலாம் இல்லையா ? அவங்க நான் யாருன்னு கேட்டா என்ன சொல்விங்க ? என்னாலயும் ஒரே இடத்தில் அமைதியா இருக்க முடியாது ... நான் பண்ணுற களேபரத்தில் நிச்சயம் பல பேரு நான் யாருன்னு கேட்பாங்க " என்றாள் ...

" இதெல்லாம் ஒரு காரணமா தர்ஷினி "

" ப்ளீஸ் கதிர் .. ஒரு வாரம் தானே ? அதுவும் எனக்கு ஹிட்லரோட அம்மா அப்பாவை பார்க்கணும் போல இருக்கு ப்ளீஸ் " என்றாள் .. அவள் விழிகளை சுருக்கி ப்ளீஸ் எனவும் அவனால் எதிர்த்து பேச முடியவில்லை.. எனினும் என்னவோ ஒரு வெறுமை அவன் மனதில் சூழ்ந்தது .. அன்பெழிலனின்  குடும்பத்தை பற்றி அறிந்திருந்த ஷக்தியும்  கூட

" ராகவி ஆன்டி எப்பவும் பிசியாகத்தான் இருப்பாங்க காவியா.. அங்கிளை பார்த்துகனுமே .. அவங்களுக்கு உங்களை கவனிக்க சிரமமா இருக்காதா " என்றான் .

" அதெல்லாம் நான் மேனேஜ் பண்ணிப்பேன் ஷக்திஜீ " என்றாள்  காவியா.. அதுவரை பார்வையாளனாய் இருந்த அன்பெழிலனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது ..காவியா முடிவெடுத்துவிட்டாள்  அதனால் இனி அவளை தடுப்பது என்பது, இயலாத ஒன்று ... ஒரு பெருமூச்சுடன்

" கவலை படாதிங்க எல்லாரும் .. இந்த லூசை நான் பார்த்துக்குறேன்" என்றபடி அவளது பைகளை காரில் வைத்தான் .. முகில்மதியின்  முகம்தான் லேசாய் வாடி இருந்தது .. ஆம், காவியாவின் பெயர் சொல்லி எழில் வீட்டில் அதிக நேரம் இருக்க மாட்டானே ! மேலும் திருமண வேளைகளில் அவன் மூழ்கிவிட்டால் அவனிடம் எப்படி உரையாடுவது ? அவளது மனசஞ்சலம் காவியாவை எட்டியதோ என்னவோ

"  ஆன்டி ஒன்னு கேட்கவா " என்றாள்  லக்ஷ்மியிடம் ..

"சொல்லும்மா "

" முகில்மதியை  என்னோடு அனுப்புறிங்களா ? ப்ளீஸ் ? எனக்கும் டைம் பாஸ் ஆகும் .. இவிங் அஞ்சு மணிக்கு முன்னாடியே இவன் வந்து வீட்டில் ட்ரோப் பண்ணிடுவான் .. அதுக்கு நான் பொறுப்பு " என்றாள் ..

முதலில் கொஞ்சம் யோசித்தவர் பிறகு அவள் மனம் வாடும் பதலளிக்க மனம் வராமல் முகில்மதியை  அவர்களோடு அனுப்பி வைத்தார் .. அவ்வளவு நேரம் கெத்தாய்  நின்று கொண்டிருந்த எழிலின் கண்களிலும் கள்ளத்தனம் புகுந்து கொண்டது.. புன்னகையுடனே காரை செலுத்தியவன் வேண்டுமென்றே அந்த பாடலை உயிர்பித்து பெண்கள் இருவரின் முறைப்பை பெற்றுகொண்டான் ..

ரகசியமானது காதல் மிக மிக

ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்

ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்

சுவாரஸ்யமானது காதல்

மிக மிக

சுவாரஸ்யமானது காதல்

முகில்மதிக்கு, காவியா கதிரேசன் மீது கொண்டுள்ள காதலை பற்றி தெரியும், அதேநேரம் அவளுக்கும் எழிலுக்கும் இடையில் காதல் இருப்பது அவளுக்கு தெரியாது என்றல்லவா நினைத்திருந்தாள்  அவள் ? அதேபோல்தான் காவியாவும் .. முகில்மதிக்கு  தனது காதல் தெரியாது என்று நினைத்திருந்தாள் .. ஆனால் நம்ம ஓட்டை வாய் எழில் இருக்கும்போது இதெல்லாம் சாத்தியம் இல்லைன்னு இரண்டு பேருமே உணரவில்லை .. அதையும் உணர்த்தும் பொறுப்பை அவனே எடுத்து கொண்டான் .. ஆம், இதுதான் சரியான தருணம் என்றெண்ணி அங்கிருந்த மௌனத்தை கலைத்தான் ..

" ஹே கில்லர் "

" சொல்லு ஹிட்லர் "

" உனக்கு நான் மனசார தேங்க்ஸ் சொல்லியே ஆகணும் டீ "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.