(Reading time: 28 - 55 minutes)

" தேங்க்ஸ் " என்ற மீனா அவனை பார்த்து வசீகரமாய் சிரித்துவிட்டு போக அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது .. தன்னவள் தனக்காக பொறாமையில் பொங்குவதில் இன்பமாய் உணர்ந்தான் மதி ..வேண்டுமென்றே

" என்னாச்சு பேபி ??" என்றான்

" மது , நான் அந்த காலத்து சரோஜா தேவி இல்லை ... நீ வேற பெண்ணை சைட் அடிச்சா வாயை பொத்தி அழுவதற்கு .. கொலையும் செய்வாள் தேன்நிலா  ..தெரிஞ்சுக்கோ " என்று சன்ன குரலில் மிரட்டினாள்  அவள் ..

" ஐயோ குட்டிம்மா ..அந்த பொண்ணு தானே என்மேல விழுந்துச்சு "

" அவ உன்மேல விழுந்தாலும், நீ அவ மேல விழுந்தாலும், அம்மி விழப்போறது என்னவோ உன் தலையில்தான் மதுக்கண்ணா  " என்று அவள் செல்லமாய் மிரட்ட

" ஆன போதும் இந்த ஆத்துக்காரி ரொம்ப

கண்ட்ரோல் பண்ணா கண்ட்ரோல் ஆகாதுடீ " என்று பாடிக்கொண்டே அவளது கன்னத்தை கிள்ளி  சிரித்தான் மதி ..

பெரியோர்கள் அனைவரும் அனைத்தும் சரியாக நடக்கிறதா என கண்காணித்து கொண்டிருந்தனர். மணமகள் அறைக்கு விரைந்திருந்தாள்  சங்கமித்ரா .. அன்பெழிலனை தேடிக் கொண்டே வந்தவரிடம் சென்றாள்  முகில்மதி ..

" என்னாச்சு மாமா ?"

" அன்பு எங்கம்மா ?"

" அவங்க, காவியாவை கூட்டிகிட்டு வர போயிருக்காங்க "

" மித்ரா வந்தாச்சும்மா ...அவளை சமாளிக்க அன்பும் இருக்கணும்னு நினைச்சேன் ..இதுக்குத்தான் நான் அப்போவே சொன்னேன் காவியா நம்ம வீட்டிலேயே இருக்கட்டும்னு "

" டென்ஷன் ஆகாதிங்க மாமா .. அவங்க எல்லாரும் எப்பவோ கிளம்பிட்டாங்க ..இன்னும் பத்து நிமிஷத்துல இங்க இருப்பாங்க " என்று அவள் சொல்லி கொண்டிருக்கும்போதே அன்பெழிலன் கார் வாசலில் நின்றது .. முகில்மதியின்  நீலநிற பாவாடை தாவணிக்கு ஏற்ப அவன் நீலநிற கதர்  சட்டையும் வேஷ்டியும் அணிந்திருந்தான் .. வாசலுக்கு விரைந்த முகில் அவனை ஆசையாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு காவியாவை அணைத்து  கொண்டாள் ..

" ரொம்ப அழகா இருக்கீங்க அண்ணி " என்றாள்  ரகசியமாய் .. அவள் அண்ணி என்று அழைத்ததில் ஏதோ உலகையே வென்றுவிட்டதை போல கர்வமும் மகிழ்வும் கொண்டாள்  காவியதர்ஷினி .. ஒரு அர்த்தமுள்ள பார்வையை இருவரும் பரிமாறிக் கொள்ள  எழிலின் முகத்தில் புன்முறுவல் பூத்தது..

காதலும் சரி நட்பும் சரி, எதிரெதிர் துருவங்களில் இருந்தாலும் ஒரு மனிதனின் இன்வாழ்வுக்கு இவை அஸ்திவாரம். காதலுக்குள்ளும் அழகான நட்பு இருக்கிறது . நட்பிற்குள்ளும் தூய்மையான காதல் இருக்கிறது .. இந்த கூற்று உண்மை என்றால் நட்பும் காதலும் சந்தித்து கொள்ளும் நிலையென்ன ? தனக்கே முன்னுரிமை கேட்டு காதல் நிற்குமா ? அல்லது நட்பும் தான் அமைதியாய் ஒதுங்கி நிற்குமா ? காதலுக்காக நட்பை துறந்தவரும் நட்புக்காக காதலை இழந்தவரும் பலர்.. அப்படிபட்ட இக்கட்டான சூழ்நிலையில் காதலும் நட்பும் கைகோர்த்து கொண்டால் ? இல்லை, கட்டி அணைத்துக்  கொண்டால் ? அப்படி ஓர் அற்புதமான காட்சியை கண்டுதான் மனதிற்குள் சிலிர்த்தான் அன்பெழிலன்.அவனையும் மீறி, அவனது நினைவுகள் ஒருவாரம் பின்னோக்கி சென்றன.

அன்று மொட்டைமாடியில் திருமணத்தை பற்றி முடிவெடுத்துவிட்டு தேவசிவம், ஷக்தி, அன்பெழிலன் மூவரும் வீட்டில் அனைவரிடமும் தங்களது முடிவை சொல்ல விரைந்தனர் .. அதே நேரம் வைஷ்ணவியின் செல்போன் சிணுங்கியது.. அவ்வளது நேரம் இறுகிய மனநிலையில் இருந்தவள், அவனது பெயரை பார்த்ததுமே பெரிதாய் புன்னகைத்தாள்.

" குட் மோர்னிங் பாஸ் ..என்ன காலையிலேயே போன் ?" என்றாள்  அவள்.. அவள் பாஸ் என்று அழைக்கவும் " இவ திருந்தவே மாட்டா " என்று மானசீகமாய் அவளை திட்டுக் கொண்டே பதிலளித்தான் ஆதி என்கிற ஆதிஷ்வர்!

" எத்தனை தடவை சொல்லுறது வையூ... ஆபீஸ் ல தான் நான் உனக்கு பாஸ் .. அதை தவிர்த்து நாம எப்பவும் ப்ரண்ட்ஸ்  தான்னு ! எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டியா " என்றான் ..

ஆதிஷ்வர், வைஷ்ணவியின் காலேஜில் சீனியராய் இருந்தான்.. இயல்பிலேயே அமைதியான அவள் மீது அவனுக்கு பார்த்ததுமே ஓர் ஈர்ப்பு உருவாகியது .. அதைவிட அவளிடம்நட்பு பாராட்ட விரும்பியவன் கல்லூரி வாழ்க்கையில் அவளுக்கு நல்ல நண்பனாகவே மாறி போனான் .. படிப்பு முடிந்ததுமே தந்தையில் நிறுவனத்தில் பொறுப்பேற்ற ஆதிக்கு அடுத்த இரண்டு வருடங்கள் வைஷ்ணவியை தினமும் சந்திக்க முடியாமல் மிகவும் கடினமாகவே இருந்தது.. அவள் படிப்பு முடியும் வரை காத்திருந்தவன், அடுத்தநாளே அவளை போனில் அழைத்தான் ..

" ஸ்டடிஸ்  முடிஞ்சிருச்சே,அடுத்து என்ன செய்ய போற வையூ ?"

" ரிசால்ட் வர்றவரை அம்மா சாப்பாட்டை ஒரு பிடி பிடிச்சிட்டு வீட்டுலையே இருக்க வேண்டியதுதான் "

 என்றாள்  அவள் .. அவனோ அந்த வாய்ப்பை சாதகமாய் பயன்படுத்தி அலுவலக வேளையில் தனக்கு உதவும்படி  அவளை கேட்டுகொண்டான் .. முதலில் மறுத்தவள் பிறகு அவனுக்கு உதவி செய்ய ஒப்புக்கொண்டாள் .. இப்படியே தொடர்ந்தது வைஷ்ணவியின் நட்பும், ஆதியின் மனதில் நேசமும் .. இதுதாங்க ப்ளாஷ்பேக் .. இபோ ஆதி என்ன சொல்றார்ன்னு கேட்போம் ..

" ஓகே ஓகே கோபப்படாதிங்க ஆதி ..காலையிலேயே போன் பண்ணிட்டிங்களே என்ன விஷயம் ?"

" ஹ்ம்ம் பேச்சை மாத்துரியா நீ ? சரி ஓகே .,.. இல்லை இன்னைக்கு என் அம்மா அப்பாவுக்கு கல்யாண நாள் "

" வாவ் ..நான் விஷ் பண்ணினதா சொல்லிடுங்க "

" ம்ம்ம்ம் நான் ரெண்டு பேருக்கும் புது டிரஸ் எடுத்துட்டு அப்படியே அம்மாவுக்கு ஏதாச்சும் நகை வாங்கலாம்னு நினைச்சேன் வையூ ...நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா ? நானே வந்து வேணும்னா பிக் அப் பண்ணிக்கிறேன் வையூ ..நோ சொல்லாதே ப்ளீஸ் " என்றான் அவள் எப்படியும் முடியாது என்று சொல்வாள் என்று யூகித்து ..

" எதுக்கு ப்ளீஸ் போடுறிங்க ஆதி .. அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள்ன்னு சொல்றிங்க ..இந்த சின்ன விஷயத்துக்கு கூட நான் ஹெல்ப் பண்ணலைன்னா எப்படி ? "

" ஹே சூப்பர் .. அப்போ நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்க வரேன் " என்றான் ஆதிஷ்வர் ..

" ஆனா இன்னைக்கு என்னால முடியாது ஆதி .. வீட்டுல கல்யாண பேச்சு நடந்துகிட்டு இருக்கு .. அதுனால இன்னைக்கு கண்டிப்பா முடியாது " என்றவளுக்கு தெரியவில்லை அவள் சொன்ன செய்தி அவன் மனதில் இடியாய் இறங்கியது என்று ..

" கல்யாணமா யாருக்கு ?"

" தங்கச்சிக்கு "

" என்ன வையூ இவ்வளோ இயல்பா சொல்லுற ? என்கிட்ட நீ சொல்லவே இல்லையே "

" எனக்கே இப்போதானே சொல்லுறாங்க "

" விளையாடுறியா நீ ?"

" நிச்சயமா இல்லை ஆதி .. சில காரணங்களினால் அவசரமா எடுத்த முடிவு "

" உனக்கு தானே முதலில் கல்யாணம் பண்ணனும் ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.