(Reading time: 28 - 55 minutes)

"வன் எதற்கு இப்போ சம்மந்தமே இல்லாமல் நன்றி சொல்லுறான்? ஒருவேளை அவங்க காதல் விஷயம் எனக்கு தெரியும்ன்னு முகிலாவுக்கு சொல்ல ட்ரை பண்ணுறானோ ? " என்று ஓரளவு அவனது திட்டத்தை யூகித்திருந்தாள்  காவியா .. அதனால் அவளும் அவனுடன் பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள் ..

" எதுக்குடா தேங்க்ஸ் ?"

" ம்ம்ம்ம் , உன் பெயரை சொல்லி நான் அடிக்கடி என் மாமியார் வீட்டிற்கு வர உதவினதுக்கும், இப்போ என் தேவதையை என் மாளிகைக்கு அழைச்சிட்டு போக காரணமாய் இருந்ததுக்கும் " என்றான்... முகம் வெளுக்க இருவரையும் பார்த்தாள்  முகில்மதி .. சில நாட்களாகவே அவளுக்கு இந்த சந்தேகம் இருக்கத்தான் செய்தது .. கில்லர்- ஹிட்லர் என்று நட்பு பாராட்டிகொள்ளும் இருவரும் தத்தம் காதல் விஷயத்தை பற்றி பகிராமலா இருப்பார்கள் என்று .. லேசாய் தயங்கி முகில்மதி காவியாவை பார்க்க அவளோ

" சோ கியூட் .. எப்படி கண்ணை உருட்டிகிட்டு மான் குட்டி மாதிரி பார்க்குற ? உன்னை பார்த்து இவன் மயங்காமல் இருந்தால்தான் அதிசயம் " என்றாள் ... காவியாவின் இயல்பான அணுகலில் முகிலாவின் சுவாசம் சீரானது ... அடுத்து கண்களை அகல விரிக்க போவது தான்தான் என்று உணராமல் அடுத்த வசனத்தை எடுத்து விட்டாள்  காவியா ..

" சும்மா தேங்க்ஸ் எல்லாம் சொல்ல கூடாது ஹிட்லர் .. உங்க கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு நீங்க ரெண்டு பெரும் பாத பூஜை பண்ணனும் "

" ஓஹோ உன் சப்பாணி காலுக்கு பாதபூஜை கேட்குதா?" என்றான் எழில் கிண்டலாய் .. முகிலாவும் அவன் கேட்ட விதத்தில் களுக்கென சிரித்து  காவியா கஷ்டபட்டு காட்டியா கோபப் பார்வையை பெற்றுகொண்டாள் ..

" ஆனா நீ சொல்றது சரிதான் கில்லர் "என்றான் எழில்

"இப்போ என்னடா சொல்ல போற நீ ?" என்று அசுவாரஸ்யமாய் அவள் பார்க்க

" முகில்மதியின்  இரண்டாவது அண்ணிக்கு  நாங்க பாதபூஜை பண்ணலைன்னா யாரு பண்ணுவா " என்றதும் இப்போது விழிகள் இரண்டும்  தரையில் உருண்டுவிழும் அளவிற்கு விழிப்பது காவியாவின் முறையானது ..

இப்போது காவியாவின் முகம் பார்க்கவும் பொங்கி வந்த சிரிப்பை மறைப்பதற்கு பெரும்பாடு பட்டாள்  முகில்மதி .. அவளது முகம் ஆச்சர்யத்தை காட்டாமல் இருக்கவுமே எல்லாம் தனது நண்பனின் லீலை என்று புரிந்துகொண்டாள்  காவியதர்ஷினி ..

"எட்டப்பா எல்லாம் உன் வேலை தானா ? " என்று அவன் முதுகிலே இரண்டடி வைத்தாள் ... உரிமையாய்  அவனை அடித்துவிட்டு தயக்கமாய்  முகில்மதியை  பார்த்தாள்  அவள் .. முகிலாவோ

" அண்ணி, அவர் எப்பவும் உங்களுக்கு ஹிட்லர் தான் ..அவரை அடிக்கிறதுக்கு முழு உரிமையும் உங்களுக்கு இருக்கு .. நீங்க இவரை எவ்வளவு அடிக்கிரிங்கன்னு நான் கணக்கு வெச்சு கதிர் அண்ணாவுக்கு திருப்பி கொடுத்துருவேன் .. இதுதான் கிவ் அண்ட் டெக் பாலிசி " என்றாள் ..

" ச்ச வேணாம் முகில் .. கதிர் பாவம் " என்று உடனடியாய் அவளிடம் இருந்து சிபாரிசு வந்தது ...

" இது இது இது இதைதான் நான் எதிர்பார்த்தேன் .. இப்போதான் கேலி கிண்டல்ன்னு காரே கலை கட்டுது .. உங்கள் இருவரிடையே இருக்கும் பிணைப்பை வலுப்படுத்த யாம் ஆடியே திருவிளையாடலே இது " என்று நாடக பாணியில் உரைத்தவன் இம்முறை இருவரிடமுமே அடிவாங்கி கொண்டான் ..

ஒருவழியாய் மூவரின் சிரிப்போசை அடங்கியதும் நாம ரொம்ப நாளாக கேட்டுகொண்டிருந்த ப்ளாஷ்  பேக் சீனை ஆரம்பித்து வைத்தாள்  காவியா ...

" சரியான வாலு இவன்.. நீயும் வாலுதான் முகில் ஆனா இவன் அளவுக்கு இல்லையே ... எப்படி உனக்கு இவன் மேல லவ் வந்திச்சு ? மித்ராவுக்கு ப்ரண்ட்  ஆகுறேன்னு சொல்லி உன் மனசை கலவாடிட்டானா ?" என்று கேட்டாள் .. அவளது கேள்வியில் எழில்- முகில் இருவரின் பார்வையுமே சங்கமித்து கொண்டது..

" அது " என்று எழில் ஆரம்பிக்க ,

" நானே சொல்லுறேன் எழில் " என்றாள்  முகில்மதி.. அவள் பார்வையில் எதையோ உணர்ந்தவன் அமைதியாய் சாலையில் கவனம் செலுத்தினான் .. அன்றைய நாட்களை அசைப்போடது அவனது மனம் ..

" எழில் எவ்வளவு நல்ல நண்பரோ அந்த அளவு நல்ல துணைவன் அண்ணி ... அவர் மட்டும் இல்லன்னா நான்  எப்படி இருந்திருப்பேன்னு தெரியலை... "

"  ஹே என்ன உன் குரல் ரொம்ப கம்மிருச்சு ? கஷ்டமான ப்ளாஷ்  பெகன்னா  வேணாம்மா "

" இட்ஸ் ஓகே எனக்கும் சொல்லனும்போல தோணுது " என்றாள்  முகில்மதி ...பார்வையினாலேயே அவளுக்கு சம்மதம் தந்து அமைதியாய் இருந்தாள்  காவியா ..

" எழில், மித்ரா அண்ணிக்கு  சின்ன வயசில் இருந்தே ப்ரண்ட் ... அதனால் அவரை எனக்கும் சின்ன வயசில் இருந்தே தெரியும் ... அண்ணியுடன் சேர்ந்து நானும் அப்பப்போ எழிலோடு பேசினாலும்கூட எனக்கு அவர் மேல அதிக நேசமும் அன்பும் வந்தது 3 வருஷம் முன்னாடி இருந்துதான்..."

" எனக்கு எங்க வீட்டுலையே ஷக்தி அண்ணாதான் எல்லாமும் .. கதிர் அண்ணாவிட எனக்கு ஷக்தி அண்ணா மேலதான் பாசம் அதிகம் .. அண்ணாவுக்கும் என் மேல ரொம்ப அன்பு .. அவர் வார்த்தையால் சொல்லலைனாலும், அவரை புரிஞ்சுகிட்டா அவரது அன்பை புரிஞ்சுக்கிறது அவ்வளவு கஷ்டம் இல்லை .. "

" ம்ம்ம்ம் இன்னைக்கு ஆதி கூட, ஷக்தியை பற்றி புகழ்மழையா பொழிஞ்சார் " என்று ஆமோதித்தாள் காவியா ..

" ம்ம்ம்ம் அண்ணா, வேலை விஷயமா துபாய் போனதும் அதில் ரொம்ப பாதிக்க பட்டது மூணு பேருதான் .. அம்மா, மித்ரா அண்ணி, நான் ! அம்மாவை சமாதான படுத்த அப்பா இருந்தார்... அண்ணிக்கு  அண்ணனும் எழிலும் இருந்தாங்க .. நான் என் தனிமையை போக்கிக்க கதிர் கூட வம்பு பண்ணுறது சண்டை போடுறதுன்னு இருந்தேன் .. ஷக்தி அண்ணா துபாய் போன ஆரம்ப காலத்தில் எனக்கு எழில் மேல காதல் எதுவும் இல்லாததால் நான் அவர்கிட்ட மனசுவிட்டு பேசணும்னு நினைக்கல "

" ம்ம்ம்ம் புரியுது "

" அப்படி இருக்கும்போதுதான், கதிரும் சென்னைக்கு வேலை விஷயமா போறேன்னு கிளம்பிட்டான் ... எனக்கு ரொம்ப தனிமையா இருந்துச்சு .. அப்போ எனக்கு டீனேஜ் தானே அண்ணி ? அந்த நேரத்தில் தான் நானும் என் ப்ரண்ட்ஸ்  உம்  பேஸ்புக்கில் மெம்பர்ஸ் ஆனோம் " என்றவளின் குரலில் லேசாய்  தடுமாற்றம்.. மெல்ல நிமிர்ந்து எழிலின் முகம் பார்க்க, அவன் காரை சாலையோரம் நிறுத்தினான் ..

" என்னாச்சு ஹிட்லர் ?"

" இட்ஸ் ஓகே கில்லர் .. நாம இதை பேசி முடிச்ச பிறகு நான் காரை எடுக்குறேன்" என்றான் .. நிச்சயம் அவன் இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கும் என்று உணர்ந்தவள் அமைதியாய் இருந்தாள் .. லேசாய் தயக்கம் மேலோங்க நடந்ததை சொல்ல தொடங்கினாள்  முகில்மதி ..

" " பேஸ்புக் " ஒரு புது உலகம் மாதிரி இருந்துச்சு அண்ணி .. அதுவும் ஒரு அறிவு முதிர்ச்சி இல்லாத கத்தியில் நடக்கும் பருவத்தில் இருந்த எனக்கு  புதிதாய் தோன்றும் விஷயங்களில் ஆர்வம் எழுந்தது சகஜம்தானே ? என் தனிமையை போக்கி கொள்வதற்கும்  இது நல்ல வழின்னு தோணிச்சு .. யாரு எவர் ? தெரிஞ்சவரா தெரியாதவரான்னு யோசிக்காமல் நிறைய ப்ரண்ட்ஸ்  சேர்த்துகிட்டேன் .. எனக்கு இத்தனை ப்ரண்ட்ஸ்  இருக்காங்கனு நாங்க ப்ரண்ட்ஸ் குள்ள பெருமை பேசிப்போம் .. அதுக்காகவே நிறைய நண்பர்களை எட் பண்ணேன் ..அதுதான் நான் பண்ணி முதல் தப்பு .. "

" தப்புகிப்புன்னு பேசாதே முகிலா "

" என்னை பேச விடுங்களேன் எழில் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.