(Reading time: 30 - 59 minutes)

விஸ்வ மூர்த்தியும், வில்வ மூர்த்தியும் இரட்டை சகோதரர்கள்… அவர்கள் திருமண வயதை எட்டிய போது, அக்காள்-தங்கைகளான அம்பிகாவையும், துர்காதேவியையும், மூர்த்தி சகோதர்களின் பெற்றோர்களுக்குப் பிடித்துவிட, விஸ்வ மூர்த்திக்கு அம்பிகாவையும், வில்வ மூர்த்திக்கு துர்காதேவியையும் பேசி முடித்து, திருமணமும் நடத்தி வைத்தனர்…

அதன் பிறகு இரு சகோதர்களும் இணைந்து தொழிலில் முன்னேறினர்… சமூகத்தில் நல்ல உழைப்பாளிகள் என்ற பெயரெடுத்த அவர்கள் தங்களது இல்லற வாழ்க்கையிலும் நல்ல கணவர் என்ற பெயரெடுத்தனர் மனைவியின் மீது கொண்ட காதல் மூலம்…

துணாவிற்கும், மையனுக்கும் ஒரே வயது தான்… ஆனால் யுவி அவ்விருவருக்கும் மூத்தவன்…

“என்னங்க… என்ன யோசனையா இருக்கீங்க?...”

“அது வந்து அம்மு…” என்று இழுத்த விஸ்வ மூர்த்தி பிள்ளைகள் அருகில் இருப்பதை உணர்ந்து மனைவியைப் பார்க்க…

அம்பிகாவும் அதனைப் புரிந்து கொண்டு, “யுவி,துணா,மையா.. வழக்கமான உங்க மீட்டிங்க் ஸ்பாட் அங்கே உங்களுக்காக வெயிட் பண்ணுதுடுடா… நீங்க இன்னும் அங்கே போகலையா?...” என கேட்க…

“ஹ்ம்ம்… போகணும் துணாம்மா…” என்று சொல்லியவனின் கண்களில் துர்காவும் வில்வமூர்த்தியும் சைகையில் பேசுவது பட்டது…

“நீங்க போங்க… நான் பின்னாடியே பழம் கட் பண்ணி எடுத்துட்டு வரேன்…” என்றார் துர்கா…

“ஆமா… எங்க மேல உள்ள அக்கறையில இதை சொல்லுறீங்களா?.. இல்ல எங்களை விட்டு எதுவோ தனியா ப்ளான் போடுறதுக்கு எங்களை அனுப்புறீங்களா?...” என மையன் கேட்க..

“டேய்… அரட்டை…. இரண்டும்தாண்டா… இப்போ அதுக்கு என்னாங்குற நீ?....” என துர்கா கோபமாக சொல்லவும்…

“அது சரி… நடத்துங்க… எஞ்ஜாய்…” என்று பெரியவர்களிடத்தில் சொன்னவன், “டேய்.. இன்னும் என்னடா உட்கார்ந்திருக்கீங்க… வாங்க போகலாம்…” என துணாவையும் யுவியையும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்…

“இந்த மையன் இருக்கானே… சரியான ஆள்.. எப்படி நாம பேசினாலும் கண்டுபிடிச்சிடுறான்… இவனை வச்சிகிட்டு ஒரு விஷயம் கூட பேச முடிய மாட்டிக்குது…” என்று வில்வ மூர்த்தி சற்றே குறைபட,

“அவனை எதும் சொல்லலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதே…” என்றார் துர்கா சற்றே கோபமாக…

“சரி சரி… தேவி… நம்ம பையனை குறை சொல்ல நான் எதும் சொல்லலை… ஆனா, இவனோட கண்டுபிடிப்பு நம்ம யுவி விஷயத்துல மட்டும் மிஸ் ஆகிடுது… யுவியை நினைச்சா தான் அடுத்து என்ன செய்யுறதுன்னே தெரியலை…” என வில்வ மூர்த்தி சற்றே வருத்தம் காட்ட…

“அவனைப் பத்தி பேசுறதுக்குத் தானே நாம இப்போ அவங்களை விரட்டி விட்டிருக்கோம்…” என்ற அம்பிகாவை மற்ற மூவரும் பார்த்தனர் அமைதியாக…

ங்கே தோட்டத்தில்…

“எப்படி யுவி?... எப்படி?... கரெக்டா சொன்ன நீ?...” என்ற வ்ருதுணனின் கேள்விக்கு யுவி பதில் சொல்லும் முன்னமே முந்திக்கொண்டு மையன் பதில் சொன்னான்…

“உண்மையை தானே சொல்லியிருக்கான்… நீ ஒரு பெரிய குரங்குன்னு…”

“டேய்… நான் சீரியஸா பேசிட்டிருக்கேன்… இடையில புகுந்து கலாய்ச்ச…. மகனே… நீ அவ்வளவுதான் சொல்லிட்டேன்…” என துணா முறைக்க,

“ஓகே…ஓகேடா… கூல்… யூ ப்ரொசீட்…” என்ற மையன் யுவி என்ன சொல்லப்போகிறான் என அவனையேப் பார்த்தான்…

அவனோ அமைதியாக இருந்தான் எதுவுமே சொல்லாது…

“யுவி… சொல்லுடா… நான் உங்கிட்ட பேரு மட்டும் தானே சொன்னேன்… பார்க்க எப்படி இருப்பாங்கன்னு கூட சொல்லலையே… பின்ன எப்படி நீ கரெக்டா சொன்ன?.. மற்ற இரண்டு பேரையும் நீ சொன்னப்போ சந்தோஷமா இருந்துச்சு… ஆனா இது தான் வள்ளின்னு சொன்ன பார்த்தியா முதலில்?.. அத தாண்டா என்னால நம்பவே முடியலை.. எப்படிடா அது???” என துணா மீண்டும் ஆச்சரியத்தில் கேட்க…

“டேய்… யுவி… அவன் தான் கேட்குறான்ல… நீ பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்?...” என மையனும் கேட்கவே…

அதற்கு மேலும் பதில் சொல்லாமல் இருப்பது முறையல்ல என்றெண்ணி யுவி “ஹ்ம்ம்… தோணுச்சுடா…” என்றான் ஒற்றை வார்த்தையில்…

“என்னடா சொல்லுற?... புரியலை……” என்றான் துணா…

“ஏனோ மஞ்சரியையும், பாலாவையும் பார்த்த போது அவங்க தான் உங்க ஜோடியா இருப்பாங்கன்னு தோணுச்சு… அதே மாதிரி வள்ளியைப் பார்த்தப்போ அவங்க உன் தங்கச்சியா இருப்பாங்கன்னு தோணுச்சு… அதான்…” என்றான் இலகுவாக….

“ஓ… சரிடா… ஆனா, பாலாவும், மஞ்சரியும் உனக்கு தங்கை போல தான்.. அதனால நீ அவங்க இரண்டு பேரையும் வா போ ன்னு சொல்லலாம்டா…” என்றான் துணா சந்தோஷத்துடன்…

“அடிங்க…  பாலா எனக்கு மட்டும் தான் முத தங்கச்சி… யுவிக்கு இரண்டாவது தான்…” என்றான் மையன் அவசரமாக…

“ஹாஹா… லூசு...” என திட்டினான் துணா மையனை…

பதிலுக்கு முறைத்த மையன், “ஓ… நீ மட்டும் வள்ளியை உன் செல்ல தங்கைன்னு சொல்லலாம்… நான் பாலாவை சொன்னா மட்டும் லூசு பட்டமா எனக்கு?... அடேய்… எந்த ஊர் நியாயம்டா இது?...” என கோபம் பொங்க கேட்க…

“சரிடா… கோபப்படாத… யுவி தங்கச்சி இனி மஞ்சரி… அதே மாதிரி உன் தங்கச்சி பாலா… சரிதானா?...” என துணா பொறுமையாக கேட்க…

மையனோ அமைதியாக இருந்தான்…

“என்னடா… பாலா உன் தங்கச்சின்னு தான் நான் சொல்லிட்டேனே… அப்புறம் ஏன் சந்தோஷப்படாம அமைதியா இருக்குற?... என்னாச்சுடா குரங்கு?...”

“….”

“டேய்… ஒருத்தன் இங்க பேசிட்டிருக்கேன்ல… நீ பாட்டுக்கு கனவு காண போயிட்டன்னா என்ன அர்த்தம்?...” என மையனைப் பிடித்து துணா உலுக்க,

“இல்லடா… யோசிச்சிட்டிருக்கேன்…” என்றான் மையன்…

“யோசனையா?... அப்படி என்ன ராக்கெட் விடுற யோசனையை துரை செஞ்சீங்க இப்போ???” என துணா நக்கலாக கேட்க…

“இல்லடா… என் மஞ்சரி யுவிக்கும், உன் பாலா எனக்கும் தங்கச்சின்னா, அப்போ உன் தங்கச்சி வள்ளி, யுவிக்கு என்ன வேணும்னு யோசிக்கிறேண்டா…”

மையன் மெதுவாக ஆர்ப்பாட்டமே இல்லாது சொன்ன பதிலில் யுவி அதிர்ச்சியடைந்தான் என்றால், துணாவோ ஒரு நிமிடம் என்றாலும் பேச்சற்று போனான்…

யுவி மெதுவாக எதுவும் சொல்லாமல், தான் எதையும் கேட்காததை போன்று சற்று தள்ளி கிடந்த நாற்காலியில் சென்று அமர்ந்து விட, துணாவின் மனதில் முதன் முதலாய் புதிதான யோசனை வந்தது…

“என்னடா… துணா… நான் எதும் தப்பா சொல்லிட்டேனா?...” என மையன் கேட்க…

சிறிது நேர யோசனைக்குப் பின், “இல்லடா இப்போதான் நீ உருப்படியா ஒரு நல்ல வார்த்தை சொல்லியிருக்க…” என்றான் துணா சிரித்துக்கொண்டே…

“டேய்… நீ அப்போ… முடிவு பண்ணிட்ட போல?...” என்றான் மையனும் புன்னகையுடனே…

“ஹ்ம்ம்… ஆமாடா… எனக்கு இத்தனை நாள் இந்த யோசனை வரவே இல்லடா… இனி எல்லாம் நல்ல படியாவே நடக்கும்டா… எனக்கு அந்த நம்பிக்கை வந்துட்டுடா…”

“வள்ளிக்கு தான் கல்யாணத்துல இஷ்டம் இல்லையே… பின்ன எப்படி துணா?...”

“மையா… அவ மறுக்குறதுக்கான காரணம் உனக்கும் தெரியும்தான?... அப்புறம் என்னடா?...”

“அடப்பாவி… அத தாண்டா நானும் கேட்கறேன்… நீ அதை சரி பண்ணுறதுக்கு ஒரு முயற்சியும் செஞ்ச மாதிரி எனக்கு தெரியலையேடா… அதுதானே இப்போ பிரச்சினையே…”

“இல்லடா… சீக்கிரமே வள்ளி ஒகே சொல்வா… அவ மறுக்குறதுக்கான காரணம் மேல தான் இனி என் முழு கவனமும்….” என்றான் துணா உறுதியுடன்…

“என்னமோ… சொல்லுற… ஹ்ம்ம்.. சரி பண்ணுவன்னு நம்புறேண்டா துணா…” என மையன் சொல்லி முடிக்கும்போது அம்பிகாவின் குரல் கேட்டது மூவரையும் உள்ளே வர சொல்லி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.