(Reading time: 30 - 59 minutes)

ந்து…”

ஹேப்பி பர்த்டே இந்து…”

நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் இந்து…”

என் இந்திரா இந்த போட்டோவில் இருக்குறது போல எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும்…” என தன் கையில் வைத்திருந்த போட்டாவைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் வள்ளி தன் அறையினுள்

அன்று முழுவதும் அவள் அலுவலகத்திற்கு செல்லவில்லைமேலும் தனது அறையை விட்டும் வெளியே வரவில்லை….

காலையில் இந்திரபாலா, வீட்டிற்கு வந்து தன் அன்னையிடம் செல்லம் கொஞ்சியதையோ, அவர்களின் வாழ்த்தைப் பெற்றதையோ, எதையுமே வள்ளி வெளியேவந்து பார்க்கவில்லை

பாலாவைப் பார்க்க ஆவல் இருந்ததுதான் வள்ளிக்குஆனால், பாலாவின் வார்த்தை தான் இன்றளவும் வள்ளியைக் கட்டிப்போட்டு வைத்திருந்தது

என் முகத்துல இந்த நாள் மட்டும் முழிக்காதஇனி வரப்போற பிறந்தநாள் எல்லாம் என்னோட இந்த காயமும் ஆறாதுஎன்னோட இந்த வார்த்தையும் மாறாது…” என்று அன்று சொன்ன இந்துவின் வார்த்தைக்கு இன்றளவும் செவி சாய்க்கிறாள் வள்ளி

என்னைக்கு தான் என்னைப் புரிஞ்சிக்கப்போற இந்து?...” என்ற வள்ளியின் விழிகளில் நீர் கோர்க்க, அவள் மௌனமாக அந்த போட்டாவை பார்த்தாள்

வள்ளி வள்ளிஎன் கையை நீ பிடிச்சிக்கோ…” என பாலா சொல்லியதும், அவள் கையைப் பிடித்தவாறே அந்த போட்டோவுக்கு புன்னகைத்திருந்தாள் வள்ளி

ஆம்அதுதான் அவர்கள் கடைசியாக சேர்ந்து எடுத்த புகைப்படம்அதுதான் அவள் சந்தோஷத்துடன் சிரித்த கடைசி நாளும் கூட

அன்றைக்குப் பிறகு, வள்ளியின் முகத்தில் பொய் சிரிப்பு தான் இன்றளவும் உலவிக்கொண்டிருக்கிறது

வள்ளிசாப்பிட வா…” என்ற உமாவின் குரல் அவளை நனவுலகுக்குக்கொண்டு வர, இரவு 9 மணி அளவில் அறையை விட்டு வெளியே வந்தாள்

தாயுடனும், தகப்பனுடனும் சாப்பிட அமர்ந்தவள், அங்கே வந்த கஸ்தூரியையும் இந்திரனையும் பார்த்து புன்னகைத்தபடி, “வாங்கசின்னப்பாவாங்கசின்னம்மாவாங்க வாங்கஎன்ன இந்நேரத்துலசொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே…” என்றாள்

டேய்குட்டிமாஇந்த ராத்திரி நேரத்துல உன்னை தனியா நாங்க வர சொல்லுவோம்னு உனக்கு நினைப்பு வேற இருக்கா?...” என இந்திரன் கேட்கவும்,

அச்சோசாரி சின்னப்பாஉங்களுக்கு உங்க மக என் மேல ரொம்….…. அக்கறை தான்போதுமா?...” என கேட்க

வாலுவாலு…:” என்று அவளின் காதை திருகினார் கஸ்தூரி

அய்யோசின்னம்மாவலிக்குது….” என அவள் கத்த,

ஹேய்அவளுக்கு வலிக்கப்போகுதுடி விடு…” என அதட்டினார் இந்திரன் மனைவியை

சாப்பிடு கஸ்தூரி, சாப்பிடுங்க தம்பி…” என உமையாள் பரிமாற ஆரம்பிக்க,

அனைவரும் சேர்ந்து உண்டனர்

பின்னர், மெதுவாக, பேச்சை ஆரம்பித்தார் இந்திரன்

என்ன அண்ணா, என்ன சொன்னாங்க?...”

அவங்க என்ன சொல்லப்போறாங்க தம்பி?... அவங்களுக்கு என்ன, நமக்குமே விருப்பம் தானே…” என சிவநாதன் சொல்லவும், வள்ளி மெதுவாகநீங்க பேசிட்டிருங்க சின்னப்பா…” என்றபடி எழுந்தாள்

உட்காரு வள்ளிஉங்கிட்ட நாங்க கொஞ்சம் பேசணும்…” என்றார் கஸ்தூரி

கஸ்தூரி சொன்னதும் எழுந்தவள் மீண்டும் அமர, இந்திரன் நேரே விஷயத்துக்கு வந்தார்

இப்போ என்னதான் முடிவு பண்ணியிருக்க உன் கல்யாணம் பத்தி?..”

பாலாவுக்கு முதலில் முடியட்டும் சின்னப்பாஅப்புறமா…” என்று சொல்லிமுடிக்கும் முன்,

அவ விஷயத்தை வ்ருதுணன் தம்பி பார்த்துப்பார்அவளை சம்மதிக்க வைக்க வேண்டியது அவர் பொறுப்புஅவ கல்யாணம் கண்டிப்பா நடக்கும்நீ உன் வாழ்க்கையை பத்தி மட்டும் இப்போ பேசு…” என்றார் கஸ்தூரி அழுத்தத்துடன்

இல்லசின்னம்மாஇன்னும் கொஞ்ச நாள் போகட்டுமேஇப்போ என்ன அவசரம்?...”

அவசரமா?... இல்லம்மாஅவசரம் இல்லஅவசியம்…” என்றார் இந்திரன்

நல்லா சொல்லுங்க தம்பிஅப்போவாச்சும் அவ மண்டையில உறைக்குதான்னு பார்ப்போம்…” என்றார் உமா

உமாஅதான் அவங்க இரண்டு பேரும் பேசிட்டிருக்காங்கல்லநீயும் ஏன் கோபப்படுறநீ வாநாம உள்ளே போகலாம்...” என்று சிவநாதன் மனைவியிடம் சொல்ல,

இல்லங்கஅது…” என்று இழுத்த மனைவியை நீ வான்னு சொல்லுறேன்லவா…” என அங்கிருந்து அழைத்துச் சென்றார் சிவநாதன் வேகமாக

பாலா பாலான்னு அவளுக்காக உன் வாழ்க்கையில நீ பட்டதெல்லாம் போதும்இனி அவ வாழ்க்கையை வ்ருதுணன் பார்த்துப்பார்நீ கவலைப்பட வேண்டாம்நீ உன் வாழ்க்கையை மட்டும் கவனி…” என்றார் கஸ்தூரி கோபத்துடன்..

கஸ்தூரிஎதுக்கு இப்போ கோபப்படுற?... பொறுமையா சொல்லுபாவம் சின்னப்பிள்ளை தான?...” என்ற இந்திரனிடம்,

நாமளும் எத்தனை நாளா சொல்லிட்டிருக்கோம்இவ கொஞ்சமாச்சும் நாம சொல்லுறதை கேட்டாளா?... இல்லையேஇன்னைக்கு மட்டும் சொன்னதும் உடனே கேட்டுடப் போறாளா என்ன?...” என்று அவர் ஆதங்கப்படவும்,

எனக்கு இந்த கல்யாணத்துல எல்லாம் இஷ்டம் இல்ல சின்னம்மாப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க…” என்றாள் வள்ளி அமைதியாக

என்னத்தடி புரிஞ்சிக்கணும் நாங்க?... புரிஞ்சிக்கிட்ட வரைக்கும் போதும்ஒழுங்கா மரியாதையா நாங்க சொல்லுறதை கேட்குற வழியைப் பாரு…” எனவும் அவள் வலியுடன் அவரை ஏறிட்டாள்

அதில் அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்க, இந்திரன் நிலைமையை சரி செய்யும் விதம் பேசினார்

இங்க பாருடா வள்ளிஉன்னை நாங்க வேற யாருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலைஉன்னை தங்கச்சி தங்கச்சின்னு சொல்லிட்டு இருக்கார்ல வ்ருதுணன் தம்பி, அவரோட அண்ணனுக்குத்தான் உன்னை கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணியிருக்கோம்அந்த பையன் உனக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவன் மாஅவர் பேரு கூட வேலன்வீட்டுல தான் யுவின்னு செல்லப்பேர் வச்சு கூப்பிடுறாங்க…” என்று இந்திரன் சொல்ல

டவுள் நாம பொறக்கும்போதே இன்னாருக்கு இன்னார்ன்னு எழுதி வச்சிடுவாராம்நீ பொறந்தப்ப உனக்கு இந்த வேலன் தான் துணைன்னு எழுதி வச்சிட்டார் கடவுள்அதை மாத்த முடியாது உன்னாலஇவ்வளவு ஏன் உங்க இரண்டு பேரோட பேர் பொருத்தமே சொல்லலை?? நீ அவருக்காகவும் அவர் உனக்காகவும் தான் பொறந்திருக்கீங்கன்னு…” என கஸ்தூரியும் சொல்லிவிட்டு அவளைப் பார்க்க

அவள் இயலாமையுடன் கஸ்தூரியைப் பார்த்தாள்அவளின் பார்வை அவரை உலுக்க

வள்ளிம்மாநீ எங்களை சின்னப்பா, சின்னம்மான்னு கூப்பிடுறது உண்மைதானே?... உனக்கு நாங்க கெட்டது நினைப்போமாடா?...” என கேட்க

சில நொடிகள் கண்களை அழுந்த மூடி திறந்தவள், “சின்னம்மாசொல்லுங்க… நான்இப்போ என்ன செய்யணும்?...” என்றாள் அவள் அமைதியாக

அமைதியா இருந்து யோசிடாஉன் சந்தோஷம் தானே எங்களுக்கும் வேணும்…” என்று இந்திரன் சொன்னதும்,

எனக்கு கொஞ்சம் டைம் தருவீங்களா சின்னப்பா?...” என்றாள் அவள்..

அதுக்கென்னடாதாராளமா எடுத்துக்கஆனா, இத்தனை நாள் செஞ்ச மாதிரி மறுபடியும் பண்ணிடாதடாஉன் வாழ்க்கையைப் பத்தி யோசிடாஅது போதும்…” என்றார் கஸ்தூரியும்..

ஹ்ம்ம்சரி…” என்றபடி தனதறைக்குள் சென்றவளுக்கு கண்ணீர் கண்களில் நிறைந்திருந்தது

பேர் பொருத்தம் இருந்தா???... மனப்பொருத்தம் வந்திடுமா?... என அவள் தனக்குள் கேட்டுக்கொண்ட நேரம், அவள் மனமோ, மனப்பொருத்தம் இல்லையா?.... என கேட்டது அவளிடத்தில்அந்த கேள்வியில் உறைந்து போய்விட்டிருந்தாள் வள்ளி

Page 6

வள் உறைந்து நின்ற நேரம், யுவியும் அப்படித்தான் இருந்தான்…

தனதறைக்குள் சென்றவன் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் தலைதூக்கியது… மெதுவாக அவன் கண் மூடி யோசித்த போது, அவனது நினைவுகளும் அவன் அன்று இந்தியா வந்த நாளை நோக்கி பயணித்தது…

யுவி அலுவலகத்திற்கு வந்ததும் ஆர்ப்பரித்த வ்ருதுணன் யுவியினை அழைத்துச் சென்று பல பெண்கள் வேலை செய்யுமிடத்தில், “ஹ்ம்ம்.. அங்கே இருக்குறாங்கல்ல… அதுல தான் என்னோட காதலியும், மையனோட காதலியும் இருக்குறாங்க… ஹ்ம்ம்… அது யாருன்னு கரெக்டா சொல்லு பார்ப்போம்…” என சொல்லியதும்

யுவியின் பார்வை முதலில் சந்தித்தது வள்ளியைத்தான்… ஏனோ அவளைப் பார்த்ததும் அவனால் கண்களை அகற்ற முடியவில்லை… இது என்ன விதமான ஈர்ப்பென்று அவனால் உணர முடியவில்லை…

வ்ருதுணன் கேள்வி கேட்டுவிட்டு, “வள்ளியும் இங்கதாண்டா இருக்குறா… அவ யாருன்னு மட்டும் நீ கரெக்டா சொல்லிட்ட………” என்று சொல்லிக்கொண்டே யுவியைப் பார்க்க..

யுவியின் பார்வை மொத்தமும் வள்ளியிடத்தில் இருந்தது…

“ஹேய்… யுவி… நீ பார்க்குறது யாரை தெரியுமா?...” என துணா கேட்டபோது,

“நிச்சயம் அவள் உன் காதலியாக இருக்க மாட்டாள்…” என யுவியின் மனம் துணாவிற்கு பதில் சொன்ன அதே நிமிடம்,

யுவியின் இதழ்கள், “வள்ளி…” என்றது மெதுவாக…

ம்… இவள் வள்ளியாகத்தான் இருக்க வேண்டும்… உன் தங்கை என்ற உறவைத் தவிர, வேறெந்த உறவு முறையிலும் அவளை எனக்கு அறிமுகப்படுத்தி விடாதே துணா…” என்று அவன் மனம் அடித்துக்கொண்டதையோ, துடித்துக்கொண்டதையோ அவன் சற்றும் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை சிறிதும்…

“டேய்… சூப்பர்டா…” என்ற துணா யுவியை சந்தோஷத்தில் அணைத்துக்கொள்ள… அதன் பின் யுவி, பாலா மற்றும் மஞ்சரியையும் சரியாக சொல்லிவிட, மிகவும் மகிழ்ச்சி அடைந்த துணா, அவனை அழைத்துக்கொண்டு வள்ளியின் அருகே சென்று அறிமுகப்படுத்தி வைத்த போது,

யுவியின் பார்வை அவளிடமே இருந்தது சற்றும் அகலாமல்… அவள் நிமிர்ந்து பார்த்த வேளையில், இத்தனை வருடம் இறுகி கல்லாகி போயிருந்த யுவியின் அசையாத மனம் கூட ஒரு கணம் அசைந்தது போல் இருந்ததை அவனே ஆச்சரியத்துடன் உணர்ந்தான்…

இது ஏன்???.. எதற்கு என்ற கேள்வி அவனுள் எழாமல் இல்லை… ஆனாலும் நடப்பதை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருப்பதற்கு முயற்சி செய்து தோற்றுக்கொண்டிருப்பதையும் ஏற்க முடியாமல் திணறும் இந்த நிலை அவனுக்குப் புதிதாய் ஏனோ தெரியவில்லை…

ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம் இப்படித்தான் இருக்குமோ என யுவி எண்ணும் அளவிற்கு அந்த முதல் சந்திப்பு அவனை முற்றிலும் புரட்டி போட்டது…

அவன் இருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியம்???... என்ற கேள்வியே அவனை துண்டு துண்டாக்கி கூறு போட்டது…

ஆனால், அவனது மனமோ, ஆழ்கடல் போல் அவளைப் பார்த்த நொடியில் அமைதி கொள்வதை அவனாலே ஏற்கமுடியவில்லை…

இதுநாள் வரை அது கொந்தளித்தது என்ன???... இன்று இப்படி முற்றிலும் அடங்கி இருப்பது என்ன???...

எனக்குள் இருந்துகொண்டு என்னையே வதைக்கிறாயே… என்று மனதிடம் கோடி முறை அவன் சண்டை போட்டதுண்டு… ஆனால், இன்று அவன் மனமோ அவனை வதைப்பதை விட்டுவிட்டு மௌனமாக இருக்க யுவி நிலை கொள்ளாமல் துடித்தான்…

வரம் ஒன்று கை சேர வந்திருப்பது போலவும், அதை பிரியாதே என அவன் மனம் கூறுவது போலவும் எண்ணங்கள் தோன்ற அவன் அப்படியே சிலையாகி போனான்…

ந்நேரம்,

மெல்ல அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த வள்ளி, இரண்டு நாட்களுக்கு முன்னர் யுவியை சந்தித்ததை நினைவு கூர்ந்தாள்…

அவனை வ்ருதுணன் அறிமுகப்படுத்தி வைத்த போது, ஒரு சில வினாடிகளே அவன் விழியோடு இவள் விழி கலந்தது…

ஆனால், அவளுக்கோ அது விட்டுப்போன பூர்வ ஜென்ம பந்தம் மீண்டும் தொடர்ந்தது போல் இருந்தது…

திருமணமே வேண்டாம் என்பதற்கு பாலா ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம் அவள் மனம் அல்லவா?... அந்த மனமே இன்று மனப்பொருத்தம் இல்லையா?... என்று கேள்வி கேட்பதை அவளால் நம்பமுடியவில்லை…

இது ஏன்?... எதற்காக ?... என்ற கேள்விக்கும் அவளிடம் விடையில்லை…

உலைக்களமாய் கொதித்துக்கொண்டிருந்த அவளது மனம், அவனைப் பார்த்த நொடியில், சில்லென்ற பனிக்காற்றாய் மாறிய மர்மமும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை….

கடவுளே?... என்ன இது சோதனை?... என்று அவள் புலம்பிய போது, இது நீ தேடிக்கொண்டிருந்த… நீ வேண்டிய வரம்… அதை நழுவ விட்டிடாதே…. என அவள் மனம் சொல்லியதும், அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனவளாய் நின்றிருந்தாள் வள்ளி…

ஹாய்… ப்ரெண்ட்ஸ்… எல்லாரும் எப்படி இருக்கீங்க?... லாஸ்ட் வீக் நிறைய கேள்வி வந்திருக்குமே உங்களுக்கு… ஹ்ம்ம்… இந்த வாரம் கொஞ்சமாச்சும் பதில் சொல்லியிருக்கேனா நான்??..

இந்த யுவி யாரு???... வள்ளி ஏன் பாலா பிறந்தநாள் அன்னைக்கு ஆஃபீஸ் வரலை??? இந்துன்னு அன்னைக்கு அம்பிகா கோவிலில் சொல்ல வந்தது என்ன???  வள்ளி கல்யாணத்துக்கு மறுக்கிற காரணம்??? இந்திரபாலாவை இந்து சொன்னா ஏன் அவளுக்கு கோபம் வருது??? இந்த எல்லா கேள்விக்கும் இப்போ இந்த எபிசோடு படிச்சதுக்கு அப்புறம் பதில் தெரிஞ்சிருக்கும்னு நம்புறேன்…

வ்ருதுணன்-பாலா பத்தி இனி வரும் வாரங்களில் பார்க்கலாம்…

வேற எதும் கேள்வி உங்களுக்கு இருந்தா இங்க கேளுங்க…

யுவி-வள்ளி கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்களா?.. மாட்டாங்களா?... யோசிச்சிட்டே இருங்க…

நான் மறுபடியும் உங்களை அடுத்த வாரம் மீட் பண்ணுறேன்… டாட்டா…

வரம் தொடரும்…

Episode # 06

Episode # 08

{kunena_discuss:866}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.