(Reading time: 15 - 29 minutes)

ல்லிசை ஷார்டா என் ஐ…எண்ணை…ஏன் நாங்கல்லாம் உங்கள பெட் நேம் வச்சு கூப்ட கூடாதா?”

“நேம் சகிக்கலை…”

“சட்டியில் இருந்தா அகப்பையில் வந்துட்டு போகுது….இருக்ற பெயர தான கூப்ட முடியும்….?”

“உனக்கு என்ன தான் வேணும் சதீஷ்…?”

“ரொம்ப அலட்டிக்காம ரெஸ்ட் எடு…”

கிளம்பிப் போய்விட்டான்.

அவன் சென்ற அடுத்த நொடி உள்ளே ஓடி வந்தார் ஒரு நர்ஸ் “ அந்த சதீஷ் சார் எங்க..?’ என்றபடி.

“ஏன் சிஸ்டர்…?”

“போய்ட்டாரா…?” திரும்பி ஓடினார் அந்த நர்ஸ். பதிலே சொல்லவில்லை.

சற்று நேரத்திற்கு பின் நவ்யா அறைக்குள் வந்தாள்.

அன்று இரவு இவளுடன் தங்கிய நவ்யாவிடம் சதீஷ் வந்து போனதை சொன்னாள் நல்லிசை. இதையெல்லாம் பேசும் அளவிற்கு இதற்குள் ஒரு நட்பு பூத்திருந்தது இருவருக்கும். மதுரனுடன் இரு பெண்களுக்கும் இருந்த உறவு நிலை காரணம்.

“அவன் ஒரு பெக்யூலியர் கரெக்டர்….கண்டிப்பா நல்லவன்னு தோணலை…..விலகியே இரு “என அட்வைஸ் செய்தாள் நவ்யா.

அன்று இரவு விழிப்பு வந்தது நல்லிசைக்கு. அறைக்குள் படுத்திருக்கவே ஒரு மாதிரியாய் ஒரு உணர்வு.

நவ்யா அருகிலிருந்த அட்டென்டர் பெட்டில் தூங்கிக் கொண்டு இருந்தாள். அவளை எழுப்ப மனம் வரவில்லை நல்லிசைக்கு.

மெல்ல எழுந்து அறைக்கு வெளியில் வந்தாள்.

காரிடாரில் ஒரு ஓரத்தில் கிடந்த நாற்காலியில் மதுரன். தீவிரமாக புத்தகங்களை குடைந்து கொண்டிருந்தான்.

கையிலிருந்த வாட்சில் மணி பார்த்தாள். 1.47 என்றது அது.

படிப்ஸ்…

மெல்ல அவனருகில் சத்தமின்றி சென்றாள். அவனருகில் இருந்த நாற்காலியில் இவள் அமரும் போதுதான் திடுக்கென கவனித்தவன் முக பாவத்தில் மாற்றம்.

மாட்டிகிட்டேனேன்னு முழிக்கியா மதுர் பையா

“என்ன பார்ட் டைம் ஜாப்  பார்க்கிற மாதிரி தெரியுது….?”

அவன் அருகில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்தபடி கேட்டாள். தன் கண் பார்வையை அதில் நிறுத்திக் கொண்டாள்.

“அது..இல்ல…நவ்யா இங்க தங்குறதா சொன்னா….” சமாளித்தான்.

“ஓ நவ்யாக்காக தானா….” நம்பிட்டேன்

 “அப்டின்னு இல்லை….ரெண்டு கேர்ள்ஸ் தனியா இருக்கீங்களேன்னு…”

ஹை பேச்சுக்கு கூட என்னை விட்டு கொடுக்க முடியலையே காதல் டெம்பரரி சாமியார்…..

கையிலிருந்த அவன் புத்தகம் கருத்தில் பட்டது. க்ரூப் ஒன் ப்ரிபர் செய்கிறான் போலும். வாவ்….சீக்கிரம் வேலைக்கு போகனும்னு சொன்னத இவ்ளவு வேகமா இம்ப்ளிமென்ட் செய்றதுன்னா

“2 நாள்லயா இவ்ளவு படிச்சுடீங்க….?”

சட்டென திரும்பிப் பார்த்தான்.

குறும்புப் புன்னகையுடன் இவள்.

“இல்ல…2 மந்த்ஸா ப்ரிபேர் செய்துகிட்டு இருக்கேன்….”

ஆகா 2 மாசமா சைட் அடிக்கேன்னு எவ்ளவு அழகா சொல்றடா நீ….

“ஐ பி எஸ் ஆ ஐ ஏ எஸ்சா எது எய்ம் மதுர்…?”

ரசனையாய் அவளைப் பார்த்தான் ஒரு நொடி. அவளது மதுர் என்ற அழைப்பு அவனுக்குப் பிடித்திருக்கிறது என இவளுக்குப் புரிகிறது. கூடவே கொள்ளை போவதாய் ஒரு உணர்வு…பார்வையை அவனிடமிருந்து சற்றே விலக்கிக் கொண்டாள்.

“ஐ ஏ எஸ்தான் எய்ம் செய்றேன்….பட் எது கிடச்சாலும் ஜாய்ன் செய்துப்பேன்….”

“உங்களுக்குன்னு ஸ்பெசிபிக்கா எதுவும் ஆசை இல்லையா…?” அவனுடைய வருங்கால ஜாப் ஸட்டிஸ்ஃபாக்க்ஷனை நினைத்து தான் இவள் கேட்டது.

“இருக்குதே” அவன் பதிலின் தொனியும் இவள் மீதிருந்த அவன் பார்வையும்….

அன்பை அனுபவிக்காமல் வளர்ந்தவளில்லை நல்லிசை….அவள் அப்பாவின் உலகம் இவள். ஆனால் இவன் அன்பு அதனிலும் மேலாய்….

இவள் பார்வை தடுமாற்றத்தை உணர்ந்தான் போலும்….

“தூங்கலையா இசை?”

ம்இடத்தை காலி செய்றியான்னு கேட்கிற….

“தூக்கமே வர மாட்டேங்குது…..ஒரே ஹெட் ஏக்….” கிண்டலாக சொல்லிவிட்டு ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.

அவனிடம் பதில் ஏதும் இல்லை.

“அப்போ தலைவலிக்றப்ப நவ்யாவோ யாரோ நல்லா தலைய அமுக்கிவிட்டாங்க….தலைவலி பறந்து போயிட்டு…பட் இப்ப நான் செய்து பார்த்தேன் எபெக்டே இல்லை….”

அவன் முகமெங்கும் விரவி இருந்தது ஒருவித புன்னகை.

“ஒகே குட் நைட்   கே டி எஸ்”

ஒரு நொடி விழிவிரிய இவளைப் பார்த்தான்.

“யாரையோ காதல் டெம்பரரி சாமியார்னு நவ்யா சொன்னாங்க…” எழுந்து அறைக்குள் வந்து படுத்துக் கொண்டாள்.

உண்மையிலேயே தலைவலி முனுக் முனுக் என்றிருந்தது.

தன் நெற்றியை தானே மாசாஜ் செய்தபடி கண்மூடி படுத்திருந்தாள். மெல்ல வந்து அமர்ந்தது ஒரு கரம் இவள் நெற்றியில்.

சட்டென கண் திறந்து பார்த்தாள். எதிரில் அந்த நர்ஸ்.

“இதெல்லாமாவா செய்வீங்க…?”

“சிலர் கேட்டுகிட்டா செய்வோம்…” அவர் பதில் இவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“யார் கேட்டுகிட்டாங்க…?” இவள் கேட்கும் முன் முந்திக் கேட்டது மதுரன். நர்ஸ் வருவதைப் பார்த்து இவனும் உள்ளே வந்திருக்கிறான். அப்படியானால் உண்மையில் இந்த நர்சிடம் கேட்டது யார்?

“ உங்க சதீஷ் அண்ணா…..”

ஹான்..?

அடுத்து நர்ஸ் சொன்ன விஷயத்தின் சாரம்சம் இதுதான். சதீஷின் ரத்தவகை ஏ1பி நெகடிவ். யாருக்கென்றாலும் இந்த ரேர் ப்ளட் க்ரூப் ரத்தம் தேவைப் பட்டால் சதீஷ் நேரம் காலம் பாராமல் உதவ வருவான். மேலும் சிகிச்சைக்காக பொருளாதார வகையில் உதவி தேவைப்படும் எந்த குழந்தைக்கும் உதவுவான். இன்று கூட அப்படி ஒரு குழந்தைக்கு ரத்தம் தேவைப் பட்டபோது எதிர்பாராத நேரத்தில் அழைக்காமலே இவளைப் பார்க்க வந்திருந்தான் சதீஷ்….அதனால் தான் அவனை தேடி ஓடி வந்தார் இந்த நர்ஸ்….வெளியே காத்திருந்தவனிடம் உதவி கேட்டு ரத்தம் பெற்று அந்த குழந்தையும் சிகிச்சை பெற்று இப்பொழுது நன்றாக இருக்கிறதாம்.

அவன் தன் தங்கைக்கு என கேட்டுக் கொள்ளும் போது “நான் இதை கூட செய்யமாட்டேனாமா?” என்றார் அந்த நர்ஸ்.

குழம்பிப் போனாள் நல்லிசை.

அண்ணனா…? அதுவும் இந்நேரம் அந்த சதீஷ்க்கு இங்கு என்ன வேலை? அவனுக்கு இவளிடமிருந்து என்ன வேண்டும்?

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:878}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.