(Reading time: 15 - 29 minutes)

ண் திறக்க முடியவில்லை. ஆனால் காதில் ஏதோ காற்றிடைப்பட்ட குரலாய் ஒரு ஒலி…

“ நீங்க ஜென்ட்ஸ்லாம் இப்படித்தான்….உங்க பக்கத்தை மட்டும் தான் பார்ப்பீங்க….அந்த பொண்ணு மனசுக்கு எப்டி இருக்கும்….அவ பக்க நிலை என்ன எதையும் யோசிக்க மாட்டீங்க…..சரியான செல்ஃபிஷ் கோஷ்டி…” ஒரு பெண் குரல் சற்று விலகி இருந்து வசை பாட மயிலிறகாய் இவள் நெற்றியை வருடுகிறது இவள் மீது இருக்கும் அக் கரம்.

அப்படியானால்? இவளை யாரோ ஒரு ஆண் தொடுகிறானா? பாசமாய் என்றாலும்…மறுப்பாய் இவள் தலையை விலக்க நினைக்கத்தான் முடிகிறது. தலையை அசைக்க கூட முடியவில்லை.

“நான் ஒருத்தி சொல்லிகிட்டே இருக்கேன்…நீ என்ன மௌனமா மனசுக்குள்ளயே டூயட் பாடிட்டு இருக்க…? இசை விழிக்கவும் ஒழுங்கு மரியாதையா உன் விஷயத்தை சொல்லு….பாவம் நீ தான் இப்டி செய்துட்டியோன்னு அவ எவ்ளவு உடஞ்சு போயிருந்தா இப்டி உடம்புக்கு முடியாம போயிருக்கும்…?”

குரல் நவ்யாவின் குரல் போல் இருக்கிறது.

அப்படியானால்? இங்கிருப்பது மதுரனா?

உடலுக்குள் உயிர் பாய்கிறது. கண்விழிக்க மட்டுமல்ல கதகளி ஆட கூட பலம் வருகிறது. ஆனால் இவள் இப்பொழுது விழித்தால் அவன் பதில் தெரியாமலே போக கூடும்.

“ஆனாலும் நீ ரொம்ப ஓவர் மது….நீ எல்லாம் கல்யாணமே செய்ய மாட்ட, ஒரு சைன்டிஸ்ட் சாமியாராத்தான் போவன்னு அசைக்க முடியாத நம்பிக்கை வச்சுருந்தேன்….இப்ப பாரு இப்டி காதல் கப்பல் விடுறது மட்டுமில்லாம என் முன்னாலயே டூயட் வேற…”

இவள் நெற்றியில் இருந்த கரத்தில் எந்த மாறுதலும் வரவில்லை. ஆனால் இவளுக்குள் ஆயிரம் அலை. பாசமாய்த் தான் என்றாலும் தொடுகையின் காரணம் காதல் என்றாகும் போது….அவன் காதலை இவள் முழுவதுமாய் புரிந்த அந்த நொடி…..

“என்ன நீ என்னை லூசு மாதிரி தனியா பேச விட்டுட்ட..? எதுக்கு நீ இசைட்ட சொல்ல இவ்ளவு யோசிக்ற? அவளை முதல் நாள் பார்த்தப்பவே நீ ப்ளாட்டுன்னு எனக்கு தெரியும்….அன்னைக்கு மியூசிக் ப்ரோக்ராம்க்கு பிறகு அவ  மனசுலயும் நீ இருக்கன்னு நல்லாவே தெரியுது….அப்புறம் என்ன…? சொன்னால் கண்டிப்பா ஒத்துப்பா மது…”

“…………………….”

“லவ் பண்ண முடிஞ்ச சாமியாருக்கு அதை சொல்ல தைரியம் வரலையோ…?”

“……………………….”

“இப்போ என்ன விஷயம்னு நீ சொல்ல போறியா…? இல்ல இசை எழும்புனதும் நானே விஷயத்தை போட்டு உடைக்கட்டுமா?

“ப்ச்….மெதுவா பேசு நவ்யா…அவ விழிச்சுடப் போறா….” தென்றலாய் அவன் குரல். தூள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருக்கிறது நல்லிசைக்கு.

“பார்றா….அவ விழிக்கனும்னு தான் மது ட்ரீட்மென்ட் எல்லாம் கொடுத்தாங்க…”

“ அவ தான் இப்ப மயக்கத்துல இல்ல…தூங்கதான் செய்றான்னு சொன்னாங்கல்ல…”

“க்கும்…நடத்து நடத்து..விழிச்சு எந்திரிச்ச பிறகு இதையும் சேர்த்து போட்டு கொடுப்பேன்…”

“நீ உத வாங்கப்போற….அவட்டல்லாம் இதை இப்பல்லாம் சொல்ல கூடாது….. நான் கூட அன்னைக்கு லைப்ரரில வச்சே அவட்ட சொல்லனும்னு தான் நினைச்சேன்….பட் அப்புறம் சூழ்நிலை அமையலை….பட் இன்னைக்கு அங்க ப்ரின்சிபால் சொல்றப்பதான் தெரியும் அவ ஃபாஅமிலி பேக்ரவ்ண்ட். அவ வீட்டு சூழ்நிலைக்கு அவ அப்பா கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க போறது இல்லை…”   

“ எடு நீ….முதல்ல அவ மேல இருந்து கைய எடு….உடைக்கப் போறேன் உன் கைய….அவ அப்பா ஒத்துக்க மாட்டார்னு சொல்லிட்டு இப்ப என்ன டூயட் வேண்டி கிடக்கு….போ…போய் உன் சாமியார் தொழிலை கண்டின்யூ பண்ணு…..கழுவுறதுக்கு நிறைய கோனிகல் ஃப்ளாஸ்க்‌ஸும் டெஸ்ட் ட்யூப்ஸும்  லேப்ல குவிஞ்சு கிடக்குதாம்….”

அவனும் கையை எடுத்துக் கொண்டான்.

“தப்பா ஒன்னும் தொடலை….ஆன்டிபயாடிக் எடுத்துகிட்டா எனக்கு ஹெட் ஏக் வரும்…அவளுக்கு ஐவில வேற கொடுத்ருக்காங்க….அதான்…”

மௌனம் சில நொடி. என்ன நடக்கிறது என புரியவில்லை இசைக்கு. ஆனால் மனதில் காதல் காலம்…

மீண்டும் அவனே தொடர்ந்தான்.

“ சும்மா முறைக்கிறதை நிறுத்து…..இப்பதான் சொல்ல மாட்டேன்னு சொல்றேன்….எப்பவுமே சொல்ல மாட்டேன்னு சொல்லலை…இந்த ஹோர்டிங்ஸ் வச்சது யாரோ தெரியலை…..ஆனா வச்சவனுக்கு எங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்குற இந்த விஷயம் தெரிஞ்சு இருக்குது….அது அவனுக்கு பிடிக்கவும் இல்லைபோல….இதுல இப்போ நாங்க பேசி பழகினா….கண்டிப்பா இதை ப்ரச்சனையாக்க அவ அப்பாட்ட போட்டு கொடுப்பான்……ஒரு ஸ்டூடண்டா உங்க பொண்ண எனக்கு தாங்கன்னு நான் அவர் முன்னால போய் நிக்க முடியாது நவ்யா…..எனக்குன்னு ஒரு இன் கம் வேணும்…நான் ஒரு ஜாப்க்கு போய்கிறேன்… வேலை கூட இல்லாத ஒரு பையனுக்கு எந்த நல்ல அப்பா பொண்ணு கொடுப்பாங்க?

 தென் அவ அப்பாட்ட பேசிப் பார்க்கலாம்…சம்மதிச்சா அவர் சம்மதத்தோட கல்யாணம் செய்துப்போம்….இல்லனாலும் கல்யாணம் செய்துப்போம்…..பட் அவளை பார்த்துக்கிற அளவு நான் ரெடி ஆகாம சும்மா காதல் கத்தரிக்கான்னு சுத்றதெல்லாம் முட்டாள்தனம்….இதுக்கெல்லாம் ஒரு 3 வருஷம் ஆகும்….அதுக்குள்ள அவளுக்கு இந்த ஆசையெல்லாம் மாறிப் போச்சுன்னா….மாறிப் போகப்போற ஆசைக்காகல்லாம் ஏன் அவ லைஃபை இப்டி தலைகீழா மாத்தனும்….?மாறலைனா மூனு வருஷத்துல இந்த காதலோட பலம் புரிஞ்சிருக்கும்…பின்னால இதுக்காக எதை இழக்க வேண்டி இருந்தாலும்…அது வொர்த்னு தோணும்….நோ கம்ப்ளயிண்ட்ஸ்…… “

“நீ நல்லவன் மது… நல்ல காதல் சாமியார்….இல்ல இல்ல…..டெம்ப்ரரி சாமியார்…..” நட்பும் நக்கலுமாய் நவ்யா பேச

இசைக்குள் எழுந்து உட்கார எது தருணம் என்ற ஒரு சிந்தனை.

வேகமாக எழ நினைத்தாலும் மனம் உணர்ந்தது போல் உடலில் பலமில்லை போலும். மெல்ல எழுந்து உட்கார்ந்து திரும்பிப் பார்த்தால் அருகில் இருந்த இருக்கை காலியாக இருந்தது.

“ஹேய்…என்ன நீ இப்டி அடிச்சு பிடிச்சு எழுந்துகிற….? மெதுவா மெதுவா….”

நவ்யா தான் ஓடி வந்து பிடித்தாள்.

“நீங்க எப்டி…இங்க..?” 

“ஹாஸ்டலுக்கு நீ ஒழுங்கா ரீச் ஆகிட்டியான்னு ஃபோன் செய்து கேட்டப்ப உனக்கு உடம்பு முடியலைனு தெரிஞ்சுது…சோ….”

யார் கேட்டது என நல்லிசை நவ்யாவிடம் கேட்கவில்லை.

நல்லிசைக்கு டைஃபாய்டு பாசிடிவ் என ரிப்போர்ட் வந்திருந்ததால் இன்னும் இரண்டு நாள் மருத்துவமனையில் இருக்கட்டும் என்றனர் மருத்துவர் குழு.

நவ்யாதான் உடனிருந்து பார்த்துக் கொண்டாள்.

அன்று மாலை ஏற்கனவே ஜுர வேகம் அதிகமாக இருந்த நேரம் இவள் சுருண்டு படுத்திருக்க பக்கத்தில் எதோ அசைவு உணர்ந்து விழித்துப் பார்த்தால் சதீஷ் அமர்ந்திருந்தான்.

“நீ ஏன் இங்க வந்த? நான் தான் நடிப்பு தேவையில்லைனு சொன்னனே…..”

“ஆக சண்டை போடுற அளவு தெம்பு வந்தாச்சு போல….தென் நோ ப்ராப்ளம்…” கிளம்ப எத்தனித்தான்.

“அந்த ஹோர்டிங்ஸ் வச்சது நீ தான….?”

“உன்னை சுத்தி நடக்கிற அத்தனைக்கும் நான் தான் காரணம்னு நீ நினைச்சுகிட்டா அதுக்கு என்ட்ட எந்த அப்ஜெக்க்ஷனும் இல்ல… பை த வே….டேக் கேர் எண்ணை….”

“ எண்ணையா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.