(Reading time: 26 - 52 minutes)

ன்னும் ஆகாது அத்தை… வ்ருதுணன் சாருக்கு எதுவும் ஆகாது… அழாதீங்க அத்தை… சொன்னா கேளுங்க…” என்று அம்பிகாவை சமாதானம் செய்து கொண்டிருந்தாள் வள்ளி…

“இவனுக்கு மட்டும் ஏன் வள்ளி இப்படி ஆகுது?...” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார் அம்பிகா…

அப்போது, அங்கே வந்தனர், துர்கா, விஸ்வ மூர்த்தி, வில்வ மூர்த்தி ஆகிய மூவரும்….

துர்காவைக் கண்டதும், அம்பிகா அவரை சென்று அணைத்துக்கொண்டார்…

“அழாதக்கா… துணாவுக்கு எதுவும் ஆகாது… சொல்லுறேன்ல நம்பு…” என துர்காவும் தமக்கையை சமாதானம் செய்ய…

“யுவி… நீ போய் டாக்டரைப் பார்த்துட்டு வாடா…” என மூர்த்தி சகோதர்கள் சொல்ல, யுவியும் “அழாதீங்க துணாம்மா… நம்ம துணாவுக்கு ஒன்னும் இல்லை… ஒன்னுமே இல்லை…” என சொல்லிவிட்டு, “நீ பார்த்துக்கோ தேவிம்மா…” என தாயிடமும் கூறிவிட்டு டாக்டரைத் தேடிச் செல்லுகையில், மையனும், மஞ்சுவும் அங்கே வந்தனர்…

“யுவி….” என்ற கூச்சலுடன் மையன் யுவியிடத்தில் சென்று, “துணா எப்படி இருக்குறாண்டா?.. அவனுக்கு ஒன்னும் இல்லதான?.. சொல்லுடா… ஒன்னும் இல்லதான?...” என கேட்டுக்கொண்டே இருக்க,

“அவனுக்கு ஒன்னுமே இல்லை… நீ வா… எங்கூட…” என மையனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு டாக்டரைத் தேடிச்சென்றான் யுவி…

“நீ எப்படி வள்ளி இங்க?...” என மஞ்சு வள்ளியைப் பார்த்து கேட்க,

“அவதான்ம்மா என் பையனை இங்க சேர்த்ததே…” என்றார் அம்பிகா…

“மனசுக்கு சரியில்லை மஞ்சு… அதான் கோவிலுக்கு போயிட்டு வரலாம்னு நினைச்சு போயிருந்தேன்… வர்ற வழியில் ஒரு வேன் தறிகெட்டு ரோட்டுல வந்துச்சு… எதிரே வந்த அத்தனை வண்டி மேலயும் மோதுற மாதிரியே வந்துச்சு… அப்போதான் ஒரு கார் மேலயும் அதே போல மோதப் பார்த்துச்சு… காரை ஓட்டினவர், வேன் மேல மோத கூடாதுன்னு காரை ஒடித்து திருப்பினதுல, கார் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாயிடுச்சு… ஆனா, அந்த வேனை ஓட்டிட்டு வந்த ஆள் ஓடிட்டான்…”

“எல்லாமே கண் இமைக்குற நேரத்துல நடந்து முடிஞ்சிட்டு… கூட்டம் கூடுச்சே தவிர, யாரும் காரில் வந்தவருக்கு அடிப்பட்டுச்சான்னு பார்க்கலை… உதவியும் செய்யலை… நான் வேகமா அங்க போய் பார்த்தப்போ தான் தெரிஞ்சது… காரில் வந்தது  வ்ருதுணன் சாருன்னு…” என வள்ளி சொன்னதும்…

“நல்ல வேளை அப்போ நீ அங்கே இருந்த… இல்லன்னா என்ன ஆகியிருக்கும்னு நினைக்கவே பயமாயிருக்கு வள்ளி…” என்றாள் மஞ்சுவும் படபடப்பு குறையாமல்…

“இல்ல மஞ்சு… நான் மட்டும் அங்கே இல்ல அப்போ… நிறைய பேர் இருந்தாங்க… ஆனா, யாருக்கும் உதவி செய்யத்தான் மனசு இல்லை கொஞ்சம் கூட… அப்போதான் ஆம்புலென்ஸ் வர லேட் ஆகும்னு சொன்னாங்க போனில்… எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலை… சரி.. முடிஞ்ச வரை சீக்கிரம் வந்துடுங்கன்னு போனில் சொல்லிட்டு திரும்பினேன்… துணா சாரோட அண்ணன் வந்தார் அங்கே கடவுள் மாதிரி… அவர் மட்டும் இல்லன்னா நினைச்சுப் பார்க்கவே முடியலை மஞ்சு…” என்ற வள்ளியின் கண்கள் யுவியைத் தேடி அலைந்தது சில நொடிகள்…

அலைந்த அவள் விழிகளுக்கு தரிசனம் கொடுப்பது போல், அங்கே வந்து நின்றான் யுவி…

“துணாம்மா… துணாக்கு ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டார்... தலையில லேசான அடி தான்… கால் தான் கொஞ்சம் ஃப்ராக்ச்சர் ஆகியிருக்காம்… ரெஸ்ட் எடுத்தாலே பூரணமா குணமாகிடுவானாம்… நீங்க அழாதீங்க…” என மையன் சொல்லிவிட்டு அம்பிகாவைப் பார்க்க, அவர் உடனே வ்ருதுணனைப் பார்க்க வேண்டுமென்று சொன்னார்…

“போகலாம் துணாம்மா… டாக்டர் வரட்டும்… கொஞ்சம் பொறுமையா இருங்க…” என யுவி சொல்லிக்கொண்டிருக்கும்போது, பாலா அங்கே வந்தாள்…

யார் இருப்பதையும் பொருட்படுத்தாமல், நேரே வ்ருதுணன் இருந்த அறைக்குள் நுழைந்தாள் பாலா… அவளை யாரும் தடுக்கவும் இல்லை… தடுக்க முயற்சிக்கவும் இல்லை… அவள் போவதையேப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தனர் அனைவரும்…

மையன் துணாவிற்கு விபத்து என்று சொன்னதும், உயிரே போனது போல் துடித்தாள் பாலா… “எது நடக்க்கூடாது என்று நான் நினைத்தேனோ அது நடந்தே விட்டதா?... என் விதுனை நான் இழக்கப்போகிறேனா?... இல்லை… அவருக்கு எதுவும் ஆகியிருக்காது… ஆகியிருக்காது…” என நூறு முறை தனக்குள் சொல்லிக்கொண்டவள், மையன் மஞ்சுவிடம் சொன்ன மருத்துவமனையின் பெயர் அறிந்ததும், அங்கிருந்து அகன்றுவிட்டாள் அவள் யாரிடமும் சொல்லாமல்…

நேரே கோவிலுக்கு சென்றவள், அவனுக்காகப் பிரார்த்தித்துவிட்டு மருத்துவமனைக்குள் வந்தாள்…

அறையினுள் வந்தவள், அவன் தலையில் கட்டுடனும், காலில் பலத்த காயத்துடனும் படுத்திருப்பதைக் கண்டு அப்படியே நின்றுவிட்டாள்…

“உனக்கு ஏதோ நடக்கப்போகிறதென உள்ளம் கூவுகிறது

சில நாட்களாய் ஏனிந்த படபடப்பு??? பயம்???

இனம் புரியாத அழுகை??? எதற்காக???

தெய்வத்தின் முன்னிலையில் பலமுறை பிரார்த்தித்தேன்

வீம்பு, பிடிவாதம் இதையெல்லாம் விடுத்து

உன்னிடமே கூறினேன்

பத்திரமாய் இரு என

விடிய விடிய விட்டத்தைப் பார்த்து கண்ணீரில் கரைந்தேன்

பொழுதுப் புலரும் வேளையில் துயில் கொண்டேன்

கனவுக்குள் நீ தோன்றுகிறாய்….

சுற்றிலும் மரம், அடர்ந்த காடாய் தெரிகிறது

நீ மட்டுமே தூரத்தில் தெரிகின்றாய்

சத்தமாய் என்னை அழைத்து என்னருகே ஓடி வருகிறாய்

பக்கம் வந்து இரு கரம் நீட்டி வா என அழைக்கிறாய்

கண் நிமிர்ந்து நெருக்கத்தில் உனைப் பார்க்கிறேன்

ஐயோஎன்ற கூக்குரலுடன் கண் விழித்தேன்

படுக்கையை விட்டு

வியர்வைத் துளி நெற்றி முழுதும்

இதயத்தின் துடிப்பு காதிற்குக் கேட்கிறது

ஆம்நிமிர்ந்து பார்க்கையில் உன் உடம்பெல்லாம் இரத்தம்

சிலையென சமைந்த கைகள் உன்னைத் தொட எண்ணுகையில்

மாயமாய் மறைந்து போனாய்

இந்த கனவிற்கு என்ன அர்த்தம்???”

என காலையில் எழுந்ததிலிருந்து தனக்குள் ஆயிரம் முறை என்றாலும் கேட்டிருப்பாள் இந்த கேள்வியை… ஆனால் பாவம் அவளுக்கு விடைதான் தெரியாதிருந்தது… இப்போது அந்த விடை தெரிந்துவிட்டதென்று அவள் மகிழ்வதா?... இல்லை உயிராக நேசிப்பவனை இழக்கப் பார்த்தேனே என அழுவதா?... எதுவும் தெரியாமல் நின்றிருந்தவளின் விழிகள் நீரை சிந்தியது மழமழவென…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.