(Reading time: 26 - 52 minutes)

து நானா இருந்தாலுமா?..” என்ற குரல் வந்த திசையை நோக்கி திரும்பியவளின் கண்கள் சந்தோஷத்திலும், கண்ணீரிலும் நிறைந்திருந்தது…

அவளது மனமோ, “உன் விதுன் வந்துட்டான்… போ… உன் காதலை சொல்லு… உன்னை மட்டும் தான் பிடிக்கும்னு சொல்லு போ…” என எடுத்துக்கொடுக்க… அவள் அசையாமல் இருந்தாள்…

“இவர்தான் உனக்கு நாங்க பார்த்திருக்குற மாப்பிள்ளை… பிடிச்சிருக்கான்னு பார்த்து சொல்லு… இந்த தடவை கண்டிப்பா நீ பிடிக்கலைன்னு சொல்லமாட்டேன்னு எங்களுக்கு நல்லா தெரியும்…” என கஸ்தூரி சொல்ல,

“அம்மா….” என்றபடி அவரை அணைத்துக்கொண்டாள் பாலா…

மகளின் ஸ்பரிசம் வெகு நாள் கழித்து கிடைத்ததில் அந்த தாயுள்ளம் ஆனந்தம் கொண்டது மிக…

சில மணித்துளிகள் கழித்து அவளிடமிருந்து விலகியவர், “போ இப்போவாச்சும், பிடிச்சிருக்குன்னு அவர்கிட்ட சொல்லு… போ…” என சொல்ல… அவள் அங்கேயே நின்றாள்…

வள்ளியும், மஞ்சுவும், “அப்பாடா….” என்று அப்போதுதான் நிம்மதியாக மூச்சே விட்டனர்…

“சரி… வாங்க… நாம போகலாம்…” என உமா சொல்ல, மற்ற அனைவரும் கிளம்பினர்… பாலாவையும் அவளது விதுனையும் விட்டுவிட்டு…

காதல் வந்த நொடியை விட, அதை சொல்லுவதில் தான் இருக்கிறது அதன் ஆழமும், உயிர்ப்பும்…

தனது மனதின் உயிர்ப்பை அவள் எப்படி வார்த்தைகளில் கோர்த்து சொல்லுவது என்று யோசித்துக்கொண்டிருந்த போது, அவனே அவளருகில் வந்தான்…

“என்னை கல்யாணம் பண்ணிப்பியா பாலா?... என்னைப் பிடிச்சிருக்கா உனக்கு??...”

அவன் நேரடியாகவே கேட்க, அவள், அவன் விழிகளை பார்த்த வண்ணம், தலை அசைத்தாள் மெதுவாக…

அவள் சம்மதம் சொன்னதில் அவனுக்கு உலகம் தன் வசமானது போல் இருந்தது… உண்மைதானே, தான் விரும்பும் பெண், தன்னை விரும்புகிறாள் என்று அவளே சொல்லக் கேட்டால், எந்த ஆண்மகனுக்குத்தான் உலகம் தன் வசமாகாது???...

மைனா… நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… என் தங்கச்சிக்கு கல்யாணம் நடக்கபோகுதே…” என்று தனது மகிழ்ச்சியை மஞ்சரியிடத்தில் வெளிப்படுத்திக்கொண்டிருந்தான் மைவிழியன்…

அவனது ஆர்ப்பாட்டத்தை எதுவோ போல் பார்த்தவள் பேசாமல் இருந்தாள்…

“மைனா… நான் உங்கிட்ட தான் பேசிட்டிருக்கேன்… நீ ஏன் எதுவும் பேசமாட்டிக்குற?..”

“என்ன பேசணும்?... ஏன் பேசணும்?...”

“என்ன நீ இப்படி பதில் சொல்லுற?...”

“வேற எப்படி பதில் சொல்லுவேன்னு எதிர்ப்பார்க்குறீங்க?... நானும் பார்த்தாலும் பார்த்தேன்… உங்களை மாதிரி சுயநலவாதியை பார்த்ததே இல்லை…” என்றவளின் முகம் பற்றி திருப்பியவன்,

“என்ன சொன்ன நீ?... இப்போ?...” என்று அழுத்தமாக கேட்க…

“ஏன் எனக்கென்ன பயமா?... நீங்க சுயநலவாதி… உங்க தங்கை வாழ்க்கை மட்டும் நல்லா இருக்கணும்னு நினைக்குற பக்கா சுயநலவாதி… நீங்க எங்கிட்ட என்ன சொன்னீங்க?.. முதலில் துணா-பாலா, அப்புறம் யுவி-வள்ளின்னு சொன்னீங்க தான?... நானும் வந்ததிலிருந்து பார்க்குறேன்… என் தங்கச்சிக்கு கல்யாணம் நடக்கப்போகுது, என் தங்கச்சிக்கு கல்யாணம் நடக்கப்போகுதுன்னு சும்மா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்குறீங்க… அப்போ வள்ளி யாரு… அவ கல்யாணம் நடக்க எதுவும் செய்யணும்னு உங்களுக்குத் தோணவே தோணாதா?...” என்று அவள் ஆற்றாமையுடன் கேட்க…

அவனும் அவள் சொன்னதில் என்ன சொல்ல என்று தெரியாமல் தான் போனான்… பாலாவிற்கு திருமணம் என்று சந்தோஷம் கொண்டதில், வள்ளியையும், யுவியையும் அவன் மறந்து தான் போனான் சிறிது நேரம்… அதை இப்போது மஞ்சரி சுட்டிக்காட்டியதில் அவனுக்கு அவள் மேல் இருந்த காதல் மேலும் அதிகரித்தது..

“சாரிடா… சந்தோஷத்துல மறந்துட்டேன்… பட்… இப்போதான் எனக்கு ஒன்னு தோணுது… நாம சரியான ஜோடின்னு…” என்று அவன் சொல்ல…

அவள் இப்போது அவனை முறைக்க ஆரம்பித்தாள்…

“முறைக்காத மைனா… நான் நிஜமாத்தான் சொல்லுறேன்… புருஷன் நான் மறந்தாலும் பொண்டாட்டி நீ நினைவு வச்சிருக்கியே… இதுபோதாதா வாழ்க்கைக்கு?...” என்று அவன் சிரித்துக்கொண்டே கேட்க… அவள் அவனை அடித்தால் என்ன என்று யோசித்தாள்..

அவளின் எண்ணத்தைப் புரிந்து கொண்டவன், “சரி, சரி, ஐடியா யோசிக்கிறேன்… நீ முறைக்காத… யுவி துணா மாதிரி கிடையாது மைனா… அவன் ரொம்ப வித்தியாசமானவன்… அவன் மனசுல என்ன இருக்குன்னு கண்டுபிடிக்குறது ரொம்ப கஷ்டம்… ஆனாலும், முயற்சி செய்து பார்ப்போம்… சரிதானா?...” என்று கேட்க… அவளும் சரி என்றாள்…

பின் நினைவு வந்தவனாக, “மைனா… அவனுக்கும் வள்ளிக்கும் இன்னைக்கு நிச்சயதார்த்தம்ன்னு சொன்னாங்க தான… அப்போ அவங்க இரண்டுபேருக்கும் இந்த கல்யாணத்துல சம்மதமா?...” என கேட்க…

“அது தெரியாம தான் நான் என்ன செய்யுறதுன்னு அப்போ இருந்து யோசிச்சிட்டிருக்கேன்…” என்றாள் அவளும்…

“நீ சொன்னதை வச்சு பார்த்தப்போ, வள்ளி இத்தனை நாள் கல்யாணத்தை தள்ளிப் போடுறதுக்கான காரணமே பாலா தான்… இப்போ வள்ளி ஆசைப்பட்ட மாதிரி பாலாவுக்கு கல்யாணம் நடக்கப்போகுதே… அப்புறம் வள்ளி சம்மதிக்குறதுல என்ன பிரச்சினை வரப்போகுது… நீ வள்ளிக்கிட்ட பேசிப்பார்த்தியா?...”

“இல்லை…”

“ஒகே… யுவி எங்கூட தான் வந்தான்… ஆனா இப்போ ஆளைக் காணோம்… நான் போய் யுவியை தேடுறேன்… நீ போய் வள்ளியைத் தேடு… சரியா?...” என்றபடி அவன் செல்ல, அவளும் அங்கிருந்து சென்றாள்…

நான் ஆசைப்பட்டப்படி வ்ருதுணன் அண்ணனுக்கும், இந்துக்கும் கல்யாணம் முடிவாயிட்டு… ரொம்ப சந்தோஷம்… மஞ்சுவும் அவளோட ஒரே வீட்டுல வாழப்போறா மைவிழியன் சாரை கல்யாணம் பண்ணிட்டு… உனக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலை… ஆனா, இப்போ எனக்கு இருக்குற சந்தோஷம் அவங்க வாழ்க்கை முழுமைக்கும் இருக்கணும்… அதுக்கு நீ தான் துணையா இருக்கணும்… சரியா முருகா?...” என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தாள் வள்ளி…

“துணா விரும்பின வாழ்க்கை அவனுக்கு இன்னைக்கு கிடைச்சிட்டு… மையனும் அவன் ஆசைப்பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப்போறான்… நிஜமாவே என் தம்பிங்க வாழ்க்கையில நீ நல்லது நடத்தி வைச்சிட்ட முருகா… உனக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னே தெரியலை… எனக்கு ரொம்ப சந்தோஷம்… இந்த சந்தோஷம் அவங்க வாழ்க்கை முழுதும் கூடவே இருக்கணும்… அந்த ஒரு உதவி மட்டும் எனக்கு செய் முருகா?... சரியா?...” என்று அதே நேரத்தில் சந்நிதிக்கு வந்து வேண்டிக்கொண்ட யுவியும் கேட்டுக்கொள்ள,

முருகரோ, தன் துணைவியரோடு அவனைப் பார்த்து புன்னகைத்தார்…

“தனக்கென்று வேண்டிக்கொள்ளாமல், தன் வாழ்க்கை இப்படி இருக்கிறதே… அதற்கு என்ன வழிதான் நீ காட்டப்போகிறாய் என்று கேட்காமல், தன்னுடைய தம்பிகளுக்காகவும், தங்கைக்காகவும், தோழிக்காகவும் வேண்டிக்கொண்ட அந்த இரு உள்ளங்களையும் இணைத்து வைத்தால் தான் என்ன சுவாமி…” என்று முருகனின் முதல் துணைவி அவரைப் பார்த்து கேட்க..

முருகரோ, “அப்போ இந்த வள்ளியை இந்த வேலனோட சேர்த்து வச்சிடணும்னு சொல்லுற?... ஹ்ம்ம்… சரிதான்… ஆனா, தெய்வா… அவன் என் நாமம் கொண்டவனாயிற்றே… அதுவும் என் சாயலில் இருப்பவனும் கூட… அதனால், அவனுக்கும் என்னைப்போலவே இரண்டு பரிசை அல்லவா நான் கொடுக்க ஆசைப்பட்டேன்… நீ இப்படி பெருந்தன்மையாக ஒரு பரிசே போதுமென்று கூறுகிறாய்… அதுவும் உன் தங்கை வள்ளியின் பெயர் பரிசே போதுமென்று…” என்று புருவம் உயர்த்திக் கேட்க…

“சுவாமி… போதும் உங்கள் விளையாட்டு… நடந்ததை நாங்களும் அறிவோம்… அதனால் இதற்கு மேலும் அவர்கள் இருவரையும் தவிக்க விடாமல் இணைத்து வையுங்கள் திருமண பந்தத்தில்… அந்த வேலனுக்கு இரண்டு பரிசையும் தாங்கள் கொடுக்கத்தானே போகிறீர்கள்… பின் என்ன?... அக்காவின் பெயர் மட்டும் தவறியது போல் பேசுகிறீர்கள்?... என்ன தெய்வானை அக்கா?.. சரிதானே நான் சொன்னது?...” என்று இருவரிடமும் கேட்டார் அந்த முருகனின் துணைவி வள்ளி…

“நிஜம்தான் வள்ளி… நீ சொல்லுவதும் சரியே…” என்ற தெய்வானை, முருகனிடம், “சுவாமி, வள்ளி என்ற பரிசை இப்போது கொடுத்து விடுவீர்கள் கண்டிப்பாக… எனில் அந்த இன்னொரு பரிசு?... எப்போது அவனுக்கு கொடுப்பீர்கள் ஐயனே?...” என்று மெதுவாக கேட்க…

“ஆம்… சுவாமி… எனக்கும் ஆர்வம் தாங்கவில்லை… எப்போது சுவாமி கொடுப்பீர்கள் இன்னொரு பரிசை?...” என்று வள்ளியும் கேட்க…

“பொறுத்திருந்தால் உங்களுக்கே தெரிந்துவிடப்போகிறது… அதற்குள் உங்கள் இருவருக்கும் என்ன அவசரம்?... நான் ஒருவன் உங்கள் இருவரிடத்திலும் மாட்டிக்கொண்டு முழிப்பது போதாதா?... இந்த வேலனும் மாட்டிக்கொண்டு முழிப்பதைப் பார்க்க உங்கள் இருவருக்கும் எவ்வளவு ஆர்வம்?...” என சொல்ல..

“என்ன சொன்னீர்கள் சுவாமி?...” என்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்க… முருகரோ, “சரிதான்… இன்று எனக்கு நாள் நல்ல நாள்தான்… அர்ச்சனைக்கு தயாராக நேரம் நெருங்கிவிட்டது போலும்…” என்றெண்ணி சிரித்துக்கொண்டார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.