(Reading time: 26 - 52 minutes)

டவுளை வணங்கி விட்டு திரும்பியவன், தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வள்ளியைப் பார்த்ததும் ஒரு கணம் அவனது இதயம் வேகமாக துடித்தது…

வழக்கமாக அவளைப் பார்க்கும் சுடிதாரில் தான் இருந்தாள்… ஆனால், இன்று ஏனோ அவள் அவன் கண்களுக்கு அழகாக தெரிந்தாள்… மிக…

அவளைப் பார்க்க கூடாதென்று திரும்பியவன் மனமோ அவளைப் பார் என ஆணையிட, அவனும் மனதுக்கும் அறிவுக்கும் இடையில் மாட்டிக்கொண்டு கடைசியில் மனதின் வழியில் செல்ல ஆரம்பித்தான்…

இதென்ன வகையான மாற்றம்?...

என்னால் நம்பமுடியவில்லையே ஏன்???...

இருந்தும் நம்ப சொல்லும் மனதை நான் என் செய்ய???...

கண்கள் அவளைப் பார்ப்பதையே விரும்புகிறதே

இந்த சுகமான தவிப்பில் மாட்டிக்கொள் என்கிறதே

மகிழ்ச்சி மனதில் ஏன் தலைதூக்குகிறது இதனால்???..

இது நான் தானா என்ற சந்தேகமும் வருவது எதனால்….!!!...

முன்பே நானும் உன்னை சந்தித்ததாய் மனம் சொல்வதும் ஏனடி பெண்ணே…”

என அவன் தனக்கு முன் சென்று கொண்டிருந்தவளைப் பார்த்து மனதினுள் கேட்க, சட்டென்று அவள் திரும்பினாள்…

அவனின் பார்வையை எதிர்கொண்டவளுக்கு முதல் நாளிலே அவன் விழியில் தான் சிக்கிக்கொண்டதை மனதிடமிருந்து மறைக்க முயன்று தோற்றாள்…

அவள் திரும்புவாள் என்று எதிர்பாராத அவனும், அவள் கண்களில் தொலைந்தான்…

விழிகளில் நுழைந்து என் இதயமெங்கும்

உன் கால்த்தடத்தை ஏனடி பதிக்கிறாய்???

கனவே காணாத என் உறக்கம், இன்று

உன்னால் தறிக்கெட்டு துயில் கொள்கிறதே ஏனடி பெண்ணே???....”

என கேட்டு முடித்த போது அவனின் கண்களுக்குள் சென்றவள், சட்டென்று அதிலிருந்து வெளிவந்தாள்…

என் இருள் ஒன்றே எனக்குப் போதுமென்று

தானே நானும் இருந்தேன்

இன்று நீயும் அதில் வந்து தங்கிக்கொள்ளவா

என ஏனடா கேட்கிறாய்?...

எனில் உனக்கும் இருள் பிடிக்குமா?...

இருளில் வசிக்கும் எனக்கு

உன் பார்வை வெளிச்சம் தான் போர்வையா???...

எனில் இது எவ்வாறு சாத்தியம்?...

கருங்கல்லாகி போயிருந்த எனது நாட்கள்

உன்னால் இன்று ஏன் மீண்டும் நகர்கிறது???”

என அவனிடம் சொல்வதாக நினைத்துக்கொண்டு தனக்குள்ளே சொல்லிக்கொண்டு நகர்ந்தவள், அவன் தன் பின்னால் வருகிறான் என்பதை உறுதி செய்து கொண்டு மெல்ல நடந்தாள்…

இதுவரை நகர்ந்த என் காலம் சென்ற வழி மலர் நிரம்பியதா?...

இல்லை இன்று நீ காட்டி செல்லும் பாதை பூவை போன்றதா பெண்ணே

விடைகள் மட்டும் தெரியாது ஏனடி போகிறது???”

என தனக்கு முன் செல்லும் அவளிடம் கேட்டவன், அப்படியே அங்கேயே நகராமல் நின்றான் அவளையேப் பார்த்துக்கொண்டு…

அவன் அரவம் இல்லாததை உணர்ந்தவள், மெல்ல திரும்பி பார்க்கையில் அவன் சற்று தூரத்தில் நகராமல் நிற்பது தெரிந்தது…

செல்லாமல் அங்கேயே நிற்பதின் மர்ம்ம் என்ன???...

சென்று விடுஎன் மௌனத்தை நான் உடைக்க மாட்டேன்

நீ செல் இங்கிருந்து…”

என அவன் விழி பார்த்து சொல்லிவிட்டு அவனின் பதிலுக்காக காத்திருந்தாள்…

தத்தளித்த என் மனதை அமைதியாக்கிவிட்டு

என்னை செல் என்று ஏனடி சொல்கிறாய்??

உன் மௌனத்திரைக்குள் நானாக வரவில்லை

ஆனால், இனி உனக்கு அந்த திரை வேண்டாமடி கண்ணே

நீ இதுவரை பூண்டிருந்த தனிமை தவம்

உனக்கு பிடித்தமானது தானா?...

என்னிடம் சொல்லித்தான் விடேன்…”

என அவன் விழிகள் கெஞ்சியது அவனுக்கே புதிதாய் தான் இருந்தது… இருந்தாலும் அவளின் கண் சொல்லும் சேதிக்காக பொறுத்திருந்தான் அவன்…

பரந்து விரிந்திருக்கும் வானமும் சொந்தமில்லாது

ஆர்ப்பரிக்கும் கடலும் சொந்தமில்லாது

எந்த பக்கம் கரை சேரவென

குழப்பத்தில் இருக்கும் மாலையும் நானே

என்றால் உன்னால் நம்பமுடிகிறதா?...”

அவள் கேட்டே விட்டாள் இறுதியில்…

அவள் விழிகளில் நிறைந்த கேள்வியைக் கண்டவன் அதற்கு மேலும் தாமதிக்காமல் அவளருகே சென்றான்…

அவன் அருகே வரவும், அவள் பின்னே நகர கூட இல்லை… தோணவும் இல்லை அது அவளுக்கு…

அப்போது…

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…

துணா-பாலா பிரச்சினை இனிதே முடிஞ்சது…

இனி யுவி-வள்ளியைப் பத்தி பார்க்கலாம்…

ஹ்ம்ம்… அப்புறம் நெக்ஸ்ட் வீக் உங்க எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு… அது சின்னதா பெருசான்னு நீங்களே படிச்சிட்டு சொல்லுங்க… சரியா ஃப்ரெண்ட்ஸ்??...

ஹ்ம்ம்… நான் மறுபடியும் உங்களை அடுத்த வாரம் மீட் பண்ணுறேன்… டாட்டா…

வரம் தொடரும்…

Episode # 08

Episode # 10

{kunena_discuss:866}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.