(Reading time: 22 - 44 minutes)

நாம டெக்னிகலி எங்கேஜ்டு மதுர்….கேன் யூ பிலிவ் இட்….அப்பா உங்களை பேசுறப்ப மாப்ளைனுதான் சொல்றார் தெரியுமா?”

தன் மகிழ்ச்சி மனதிலிருந்தது என எல்லாவற்றையும் சிறிது நேரம் அருவியாய் கொட்டினாள் நல்லிசை. அவளை இமை தட்டாது ரசனையாய் பார்த்திருந்தான் மதுர்.

“எப்பவும் நீ இப்டியே சந்தோஷமா இருக்கனும் குட்டிமா….”

“உங்க கூட தான இருக்கப் போறேன் இப்டியேதான் இருப்பேன்….”

என்ன நினைத்தானோ தன் மொபைலில் அவளது அப்பா அவனுடன் நடத்திய உரையாடலை வாய்ஸ் ரிகார்டரில் பதிவு செய்து வைத்திருந்ததை அவளை கேட்க வைத்தான்.

நல்லிசைக்குத் தான் ஒருமாதிரி ஆகிவிட்டது.

அப்பா இவளிடம் சொல்லிய வெர்ஷன் இதுவல்ல. வரதட்சணை கேட்கிறான் பண ஆசை பிடித்தவன் என்ற ரீதியில் எதையும் சொல்லி இருக்கவில்லை எனினும்,

“நான் அவர்ட்ட மகன்ட்ட பழகுறமாதிரி நெருங்கி போறேன் அவர் விலகி விலகி பேசுறார்…மருமகன் மூலமா மகன் கிடைப்பான்னு நினைச்சேன்….அது இல்லனு ஆகிட்டு….அவருக்கு நம்ம லிசி மட்டும்தான் வேணுமாம் நாம தேவையில்லை போல….அதான் நாமளும் கொஞ்சம் விலகியே நடந்துகிடனும்னு முடிவு செய்திருக்கேன்….நம்ம பிள்ள சந்தோஷம்தான நமக்கு முக்கியம்”

இப்படி அவர் இவள் முன் இவள் அம்மாவிடம் அலைபேசியில் தெரிவித்திருந்தார்.

ஆனால் இங்கோ மதுரனை தூர விலக்கி நிறுத்தி இருப்பது அவராக இருந்திருக்கிறது. அதுவும் பொருளாதார பேதம் தான் காரணமென அப்பட்டமாக தெரிகிறதே….

“சாரி மதுர்….இப்டி இருக்கும்னு நினைக்கவே இல்லை….என்னால நீங்க எவ்ளவு…”

“ஹேய்…நான் ஒன்னுமே சொல்லலியே….”

“இருந்தாலும் இது தப்பு….அதுவும் என்ட்ட வந்து வேற மாதிரி…..”

“தெரியும்டா….அததான் சொல்ல வந்தேன்…நடந்ததை நான் சொல்லி இருந்தா நீ நம்பியிருப்பியா? உணர்ச்சிவசப்படாம ஜெனியூனா யோசிச்சுப்பாரு…”

நல்லிசைக்கே தெரிகிறது அவள் மதுரன் எதையோ தவறாக புரிந்து கொண்டு பேசுகிறான் எனதான் நினைத்திருப்பாளே தவிர, அவள் அப்பாவை இப்படி என அவளால் ஒத்துக்கொண்டிருக்க முடியாது.

மதுரனுக்கு அப்பா மேல் ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கை இல்லை என்ற விஷயமும், இவளுக்காக எதையும் செய்யும் இவள் அப்பாவின் குணமும் அவளை அப்படித்தான் எண்ண வைத்திருக்கும்.

“சாரி மதுர்…” அவனிடம் ஒத்துக்கொண்டாள்.

“நீ உங்கப்பாவோட அன்பை இத்தனை வருஷம் அனுபவிச்சுருக்க, என்னை பத்தி எதுவுமே தெரியாது….அப்டிங்கிறப்ப நீ அப்டிதான் நினைக்க முடியும்…பட் என் காதல் நிஜம்…..என் உயிரைவிட மேலா நான் ஒரு மனுஷ உயிரை நேசிக்றேனா அது உன்னை மட்டும்தான்…..”

இதை அவன் சொல்லிவிட்டு ஒருகணம் பேச்சை நிறுத்தி இவள் முகம் பார்த்தான். ஐ லவ் யூ வால் வெளிப்படுத்த முடியாத ஆயிரம் கோடி காதல் அந்த ஒற்றைப் பார்வையில் இருந்தது.

“மதுர் ஐ ட்ரஸ்ட் யூ பா” அவள் இதை சொல்லும்போதே எந்த அளவுக்கு என்று மன சாட்சி கேள்வி கேட்கிறது. இப்பொழுதுதானே அவள் அப்பாவின் வார்த்தைகளை அவனை விட அதிகமாக நம்பி இருந்தாள்.

“ப்ளீஸ்டா அதை மட்டும் விட்றாதடா கண்ணம்மா” இவள் பலவீனம் அறிந்தும் அவன் கேட்கிறான்.

“என் காதலை உனக்கு புரிய வைக்றமாதிரி இப்ப சூழ்நிலை வேற இல்லை….இதை எதுக்கு சொல்றேன்னா யார் எதை சொன்னாலும், எது எப்டியா இருந்தாலும் நான் உனக்காக வருவேன்…அதனால எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமா இரு….”

“அப்பா நம்மள பிரிச்சுடுவாங்களோ மதுபா?” திடீரென பயம் கவ்விக்கொண்டது நல்லிசையை. யாரையும் எதையும் நம்பி காத்திருக்க விருப்பமில்லை.இப்படியே இவனோடு போய்விட்டால் என்ன?

“உங்கப்பா ப்ளான் முழுசா தெரியலை….இவ்ளவுக்கும்பிறகு உன்னை பெங்களூர்ல படிக்கவிட சம்மதிச்சு இருக்கிறத பார்த்தால் கொஞ்சம் நம்பிக்கை இருக்குது…..”

“ஐ லவ் யூ மதுர்…” அழ தொடங்கி இருந்தாள் பெண்.

“ப்ளீஸ்டா ஜஸ்ட் ஃப்யூ மந்த்ஸ் எல்லாத்தையும் க்ளியர் செய்துட்டு வந்துடுவேன் குட்டிமா…. எப்பவும் சந்தோஷமா இருக்கனும்னு சொன்னேனே…”

“காலேஜ்ல அப்பப்ப பார்க்க வரனும்…”

“ட்ரை பண்றேன்….பட் நவ்யா உன் கூட டச்ல இருப்பா…”

“என்ன மாப்ள கிளம்புறீங்களா?” செல்வநாதன் வந்துவிட்டார். அதன்பின் அவளிடம் எதையும் பேசிக் கொள்ள முடியவில்லை விடை பெற்றான் மதுரன்.

ப்பா சொன்னபடியே அதன்பின் பெங்களூர் மாற்றி வந்துவிட்டார். கத்தி மிரட்டி காரியம் சாதித்தார் என்று இல்லை. ஆனால் மகளை அவர் தான் கல்லூரி கூட்டி சென்று கூட்டி வந்தார்.

மதுரன் சாமியார் மோட் ஆன் செய்யப்பட்ட ரோபாவாய் கடமை ஆற்றிக் கொண்டு இருந்தான். அந்த செய்தி கூட நவ்யா வழிதான் தூது.

அப்பாவுக்கும் நவ்யா மதுரனின் உறவுகாரி என தெரிந்திருந்தது. ஆனாலும் அவள் இவள் வீட்டுக்கு வருவதையோ இவளும் அவளுமாக சந்திப்பதையோ அவர் தடுக்கவே முயலவில்லை. நாத்தனாரை கைக்குள்ள போட்டுகிறதும் நல்லதுதான் என்றார் அவர்.

மேலும் இரண்டு மாதம் கடந்திருந்தது.

ஒருவிதமான நம்பிக்கை வளர்ந்திருந்தது அனைவருக்குள்ளும். குறைந்த பட்சம் அப்படி தோன்றியது நல்லிசைக்கு.

கண்காணிப்பு இல்லை என்றாலும் மதுரன் இவளை சந்திக்க வரமாட்டான் என அப்பா புரிந்து கொண்டார் போலும். இவளை கண்கொத்தி பாம்பாக கவனிப்பதை சற்று குறைத்துக் கொண்டார்.

இவளுக்கோ அப்பாவிற்கு மதுரனை பிடிக்கவில்லை எனினும் கல்யாணத்தை நிறுத்த அவர் முயலவில்லை என தோன்ற தொடங்கி இருந்தது.

ஆக சற்று நிம்மதியாகவே இருந்தாள்.

இதில் அன்று இவள் வகுப்பு தோழி ஒருத்தியின் அக்காவின் திருமண வரவேற்புக்கு  சென்றிருந்தாள் நல்லிசை. அந்த விழாவிற்கு நவ்யாவும் வந்திருந்தாள். விழா முடிந்து இரவு இருவருமாக இவளது காரில்தான் கிளம்பினர். அடை மழை வேறு.

அப்பொழுது இவள் மொபைல் சிணுங்க இணைப்பை ஏற்றால் சதீஷ். காஸ்ட்லி ப்ரதர் ரொம்ப நாளைக்கு பிறகு பிக்சர்ல வந்தார்.

“ஹேய் எண்ணை, கோடிஹல்லி ஃஸ்டேஷன் பக்கத்துல மரம் விழுந்து ரோடு ப்ளாக்…..நீ ஓல்ட் மெட்ராஸ் ரோட்ல இருந்து டைரக்டா ப்ரிட்ஜ் ஏறிடு…..” இணைப்பை துண்டித்திருந்தான்.

நவ்யாவை ஃபாலோ பண்றதை இன்னும் இவன் விடலை போல….என்ற நினைப்பு வந்தாலும் இருந்த மழைக்கும் காற்றுக்கும் அவன் வார்த்தையை அலட்சிய படுத்தவும் விருப்பம் இல்லை.

அவன் சொன்ன ப்ரிட்ஜில் ஏறி இறங்கினாள். முன்னால் சென்ற கார்களும் லாரிகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சற்றே சாலையை விட்டு விலகிச் செல்வதை பார்த்தவள் அங்கு ஏதேனும் பொருள் சாலையில் விழுந்து கிடக்கும் என நினைத்து அவ்விடம் நெருங்க வேகத்தை குறத்தாள்.

அருகில் செல்லவும் தெரிந்த உண்மை உயிரை உலுக்கியது. சாலையில் ரத்த வெள்ளத்தில் விழுந்துகிடந்தது ஒரு மனிதன். அருகில் அவன் கார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.